ஜீடீபீ, ஜீடிபீ

*************** நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை விட இப்போது மிகப் பெரிய கம்பெனிகளுக்கு ஊக்கம் கொடுத்து பொதுமக்கள் யாவருக்கும் ஒரு உடனடி வாழ்க்கை மாற்றமும் கொடுக்காத GDPயை மட்டும் ஏற்றிவிட்டு உலகில் பெரிய நாடாக ஆக்கவேண்டும் என்ற கவலைதான் ஆட்சி புரிவோருக்கு. GDP உயர்ந்தால் தானாகவே, இயல்பாகவே ஏழைகள் வாழ்க்கை முன்னேறும் என்பது சுத்த முட்டாள்தனமான வாதம். நம் கார்ப்பொரேட்டுகள் என்று தாமாகவே நாட்டு மக்கள் வளர்ச்சிக்கு உதவினார்கள் ? அது முற்றிலும் அரசுகளின் வேலை. இப்போதே உயர் … Continue reading ஜீடீபீ, ஜீடிபீ

ராமநவமி

முகநூல் சகோதரர் திரு PR நாகராஜன் எழுதியது :அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய ராமநவமி வாழ்த்துகள்🙏இராமன் என்ற ஒரு மனிதர் இந்த பூமியில் உண்மையில் வாழ்ந்தாரா என்ற ஆராய்ச்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு அவருடைய வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளையும், அதை அவர் எதிர்கொண்ட விதத்தையும் ஆராய்ந்து தெளிவது, தனி ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு பெரும் வழிகாட்டுதலாக அமைகிறது.மிகப்பெரிய அரச குடும்பத்தில் மூத்த இளவரசனாக பிறந்திருந்தாலும் ராமன் சந்தித்த நிகழ்வுகள் பெரும்பாலும் துன்பமயமானவை. … Continue reading ராமநவமி

நீண்ட விரதங்கள்

ஒவ்வொரு மதமும் எப்படித் துவங்கியது, ஏன் துவங்கியது என்பதற்குத் தெளிவான பதில் இல்லை. இந்து மதத்துக்கு எது ஆரம்பம் என்று சொல்லவே முடியாது. மறை எனப்படும் வேதம் எனப்படும் ஆழ்ந்த அறிவு அல்லது ஞானம் இறைவனிடத்தில் இருந்து மனிதனுக்கு வந்தது என்று இந்து மத நூல்கள் சொல்கின்றன. இறைவன் நம்மிடம் பேசுவானா, இந்து மதம் அறிவில்லாமல் சொல்கிறது என்று நினைக்கக் கூடாது. கிறிஸ்தவ மதத்தில் இயேசுவுக்கு முன் வந்த மோசஸ் இறைவன் கொளுந்து விட்டு எரியும் (ஆனால் … Continue reading நீண்ட விரதங்கள்

பிரபஞ்ச மனம்

*பிரபஞ்ச மனம்*சென்னை ப்ரெசிடென்சி கல்லூரியில் பி.எஸ்.ஸி படித்த *கணித மேதை ராமானுஜம்* ஆங்கில பரீட்சையில் தேறவில்லை. ஆனால் கணக்கு என்று வந்துவிட்டால் கணிணியைவிட வேகமாகவும் விரைவாகவும் அவரால் பதில் சொல்ல முடிந்தது.எப்படி உங்களால் இவ்வளவு சீக்கிரம் விடைகளைச் சொல்ல முடிகிறது என்று கேட்டபோது, ‘காளி கொண்டு வந்து தருகிறாள்’ என்று சொன்னார். அதையே உளவியல் வார்த்தைகளில் சொன்னால் பிரபஞ்ச மனத்திலிருந்து அவை வந்தன என்று சொல்லலாம். கிட்டத்தட்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கான - எல்லாமே முக்கியமானவை - … Continue reading பிரபஞ்ச மனம்

சிவன் சொத்து குல நாசம்

"சிவன் சொத்து குல நாசம்" என்பது பொய்யற்ற மொழிவழக்கு. சிவன் மட்டுமில்லை. எந்தக் கோவிலாக இருப்பினும் சரி. ஒரு சிறு பொருள் ஒரு கோவிலில் பெற்ற ஒரு பிரமுகர் இயல்பாக மரணம் அடையவில்லை. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் அரசகுடும்பத்தினர் வெறும் வேஷ்டியோடு சென்று, பத்மநாப சுவாமியிடம் அன்றைய வரவு செலவு கணக்குச் சொல்லி, பொருளையும் கோவிலில் கஜானாவில் ஒப்படைத்து வணங்கி, வேஷ்டியை உதறிவிட்டு தினமும் வந்தது எல்லாம் மிகவும் பொருள் பொதிந்தது. அறியாமல் செய்ததில்லை. 🙏🙏🙏 … Continue reading சிவன் சொத்து குல நாசம்

இலக்கு நோக்கிய பயணம்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ஓர் இளைஞன் ஒருமுறை ஒரு தத்துவவியலாளரிடம், "வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது," என்று கூறினான். அதற்கு அந்தத் தத்துவவியலாளர், சிந்தனைப்பூர்வமாக, "எதனோடு ஒப்பிடுகையில் வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது?" என்று கேட்டார். வாழ்க்கை ஓர் அற்புதமான, விலை மதிப்பிட முடியாத விஷயம்.நம்மில் பலருக்கு, இன்றைய நம் வாழ்வில், முன்பு ஒருபோதும் இல்லாத அளவுக்கு ஏராளமான வாய்ப்புகளும் சாத்தியக்கூறுகளும் பொங்கி வழிகின்றன.மனித வரலாற்றிலேயே இந்தக் காலகட்டம்தான் உயிர் வாழ்வதற்கான மிகச் சிறந்த நேரம் என்று கூறலாம்.இன்னும் சொல்லப் … Continue reading இலக்கு நோக்கிய பயணம்

புரியல்லே, புரியல்லே

இன்பமெது துன்பமெது ஒண்ணும் புரியல்லே;கற்பதுவும் நிற்பதுவும் ரெண்டும் ஒண்ணில்லே;வந்தபின்னும் திருந்தல் லைன்னா மூளை ஒன்றில்லே;உள்ளத்திலே அவனை வைத்தால் ஒன்றும் பழுதில்லே.(NGS 15012021)*** மனிதன் பண்பாட்டில் முன்னேற்றம் அடையும் அளவு அவனுக்கு இன்பம் அதிகரிக்கிறது. துன்பம் குறைந்துபோய் மறைகிறது என்னும் கொள்கை பலருக்கிடையில் இருந்து வருகிறது. பண்பாடு அடைந்தவர்களுடைய கூட்டம் நாளடைவில் அதிகரிக்குமானால் இன்பமே எங்கும் நிறைந்திருக்கும், துன்பங்கள் யாவும் தவிர்க்கப்படும் என்றெல்லாம் அவர்கள் எண்ணுகின்றனர். உலகத்தில் உள்ளவர்களுடைய பான்மையைச் சற்று நிதானமாக ஆராய்ந்து பார்த்தால் இத்தகைய கொள்கைக்கு … Continue reading புரியல்லே, புரியல்லே

ஒரு பதிவும் அதன் தாக்கமும்.

என் நெடுநாளைய நண்பர், from 1985. தொல்லியல் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். தமிழ் நாகரீகம் மண்ணில் விட்டுப் போன அடையாளங்களை தேடித் தேடி அலைந்து பல்வேறு எதிர்ப்புக்களையும் கடந்து தொல்லியல் சார்ந்த பல புதிய உண்மைகளை வெளிக்கொணர்பவர். தமிழ் நாட்டு, இந்திய ஆராய்ச்சி உலகில் தன்னை ஜாம்பவானாகக் கருதிக்கொள்ளும் இத்துறையின் அமைப்புகளில் பணிபுரியும் சிலர், அமைப்புசாராது தனிமையாக, அரசு செலவு செய்யாத (அதாவது அரசியல் சாயம் இல்லாத) பலரையும் ஒடுக்கி இவர்களின் வளர்ச்சியைத் தடுக்கிறார்கள். இவர் கண்டு … Continue reading ஒரு பதிவும் அதன் தாக்கமும்.

வாழ்க்கை

வாழ்க்கை என்பது போர்கள், தவறுகள், திருத்தங்கள் இவற்றின் ஒரு தொடர்.  …வாழ்க்கையின் ரகசியம் பலவகை அனுபவங்களிலிருந்து அறிவு பெறுவதே; போகமல்ல. ஆனால் அந்தோ ! உண்மையான அறிவு கிடைக்கத் தொடங்கும் போது நமக்கு மறு உலகிலிருந்து அழைப்பு வந்துவிடுகிறது. … நாம் செய்கின்ற பணிகளின்மீது ஒரு புயற்காற்று அடிப்பது நல்லது, அதனால் சூழ்நிலை தூயதாகிறது; நமக்கும் பொருட்கள் அனைத்தின் உண்மை தெரிய ஆரம்பிக்கிறது. உலகில் சிலர் இருக்கிறார்கள் --– ஏன், நிறையவே இருக்கிறார்கள் --- அவர்கள் தங்களுக்கு … Continue reading வாழ்க்கை

எனக்கு அந்த க்ளாஸில்தான் டீ வேண்டும்

#வாழ்க்கைப்_பாடம்... அந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், ஈ மெயில் … Continue reading எனக்கு அந்த க்ளாஸில்தான் டீ வேண்டும்