பன்னிரு திருமுறைகள் யாவை

பன்னிரு திருமுறைகள் சைவசமயத்தின் பக்தி இலக்கியங்களில் முக்கியமானவை, பன்னிரு திருமுறைகள் என்னும் தொகுப்பு ஆகும். சைவ ஆகம விதிப்படி அமைக்கப் பட்டுள்ள ஆலயங்களில், இவை விதிக்கப்பட்டுள்ள முறையுடன் இன்றும் ஓதப் படுகின்றன. இத்திருமுறைகளில் மொத்தம் 18280 செய்யுள்கள் உள்ளன. முதல், இரண்டாம், மூன்றாம் திருமுறைகள் எனப்படுபவை திருஞானசம்பந்தர் தேவாரச் செய்யுள்களைக் கொண்டவை. இவை முறையே 1469, 1331, 1358 பாடல்களைக் கொண்டவை. நான்காம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் எனப்படுபவை திருநாவுக்கரசர் தேவாரச் செய்யுள்களைக் கொண்டவை. இவை முறையே … Continue reading பன்னிரு திருமுறைகள் யாவை

சிவ தத்துவங்களும் உருவங்களும்

குறிப்பு: இக்கட்டுரை மணிவாசகர்.இன்என்ற வலைப்பக்கத்தில் இருந்து எடுத்தது. அந்த வலைப்பக்கம் இப்போது இயங்கவில்லை. எனவே இக்கட்டுரை தேவையென்று நினைப்பவர் இப்பதிவை தங்கள் கணினியில் சேமித்து வைக்கவும். இது அவன் திருவுரு முனைவர் அ. மா. இலட்சுமிபதிராசு இறை, உயிர், தளை என்று சைவசித்தாந்தம் கூறும் முப்பொருள்களுள் இறை ஏனையவற்றைக் காட்டிலும் பேராற்றல் வாய்ந்தது. தன்னுரிமை உடையது. உண்மை இயல்பு, பொது இயல்பு என்னும் இரண்டு இயல்புகளை உடையது. இறை தன்னையே நோக்கி நிற்கும் நிலையில் உண்மை இயல்புடையதாகும். … Continue reading சிவ தத்துவங்களும் உருவங்களும்

சுருக்க அநுட்டானவிதி – ஆறுமுகநாவலரவர்கள்

உ கணபதி துணை. சுருக்க அநுட்டானவிதி யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலரவர்கள் செய்தது. இது மேற்படியார் மருகரும், மாணாக்கரும், வித்துவசிரோமணியுமாகிய ந. ச. பொன்னம்பலபிள்ளையவர்கள் மாணாக்கர் சுவாமிநாதபண்டிதரால் சென்னபட்டணம் தமது சைவவித்தியாநுபாலனயந்திரசாலையில் அச்சிற்பதிப்பிக்கப்பட்டது. பிலவங்க௵ கார்த்திகை௴ 1907 நித்தியகருமவிதி   சைவ சமய மரபிலே பிறந்தவர் எல்லாரும், எழாம் வயசிலாவது, ஒன்பதாம் வயசிலாவது, சமயதீக்ஷை பெற்று,அநுட்டானஞ் செவ்வையாகப் பழகிக்கொண்டு மரணபரியந்தம் விடாது செய்க. நாடோறுஞ் சூரியோதயத்துக்கு முன்னே நித்திரை விட்டெழுந்து கிழக்கு முகமாகவேனும் வடக்குமுகமாவேனும் இருந்து,“சிவ சிவ” என்று நெற்றியில் விபூதி தரித்து, “ஓம் கணபதயே நம:” என்று குட்டி, “ஓம் குருப்பியோ நம:”  என்று  கும்பிட்டு,சிவபெருமானை இருதயத்திலே தியானித்து ஒரு தோத்திரமாவது  சொல்லிக்கொள்க. அதன்பின் எழுந்து புறத்தேபோய், மலசலமோசனஞ் செய்து, செளசம்பண்ணி, தந்தசுத்தி செய்து, முகங்கழுவிநெற்றியில் விபூதி இட்டுக்கொள்க. நீர்நிலையை அடைந்து ஸ்நானஞ் செய்து, ஈரத்துவட்டி, நெற்றியில் விபூதி இட்டு உலர்ந்த சுத்தவஸ்திரந்தரித்துக்கொள்க. அநுட்டானபாத்திரத்தை வெள்ளையிட்டு, அலம்பி, சுத்தசலம் பூரித்து, சுத்தபூமியிலே சிறிது சலம் விட்டு, அதன்மேற்பாத்திரத்தை வைத்து, கிழக்குமுகமாகவேனும் வடக்குமுகமாகவேனும் இருந்து, விபூதி இட்டுக்கொண்டு அநுட்டானம்பண்ணுக. வியாதியினாலே ஸ்நானஞ்செய்யமாட்டாதவர், கால் கழுவி, ஈரவஸ்திரத்தினால் உடம்பெங்குந் துடைத்து, உலர்ந்தசுத்தவஸ்திரத்தினால் ஈரந்துவட்டி, நெற்றியில் விபூதி இட்டு, வேறு உலர்ந்த சுத்தவஸ்திரந்தரித்து, ஆசமனஞ்செய்துகொண்டு அநுட்டானம் பண்ணுக. அதுவுஞ் செய்யமாட்டாதவர், நெற்றியில் விபூதி இட்டு, சிவபெருமானைத்தியானித்து, சிவமூலமந்திரத்தை மனசிலே சிந்தித்துக்கொண்டு கிடக்க. வீட்டுக்கு விலக்காயுள்ள பெண்கள், மூன்று நாளுஞ் சிவமூலமந்திரத்தை மனசிலே சிந்தித்துக்கொண்டு, நான்காநாள்ஸ்நானஞ் செய்து அநுட்டானம் பண்ணுக. மூலமந்திரம்                 சிவமூலமந்திரம்   ------------------------------------------   நமசிவாய. தேவிமூலமந்திரம்  -----------------------------------------    உமாதேவயை நம: விக்கினேசுரமூலமந்திரம் ------------------------------    கணபதயே நம: சுப்பிரமணியமூலமந்திரம் -----------------------------    சரவணபவாய நம: சூரியமூலமந்திரம்  -----------------------------------------    சிவசூர்யாய நம:   பதினொருமந்திரம்       ஓம் ஈசாநாய நம: ஓம் தற்புருஷாய நம: ஓம் அகோராய நம:                         இந்த ஐந்தும் பிரம மந்திரம். ஓம் வாமதேவாய நம: ஓம் சத்தியோசாதாய நம: ஓம் இருதயாய நம: ஓம் சிரசே நம: ஓம் சிகாயை நம:                          இந்த ஆறும் அங்க மந்திரம் ஓம் கவசாய நம: … Continue reading சுருக்க அநுட்டானவிதி – ஆறுமுகநாவலரவர்கள்

சிவாலய ஸேவா விதி – ஶ்ரீவத்ஸ வெ. ஸோமதேவ சர்மா

சிவாலய ஸேவா விதி ஆசிரியர்: ஶ்ரீவத்ஸ வெ. ஸோமதேவ சர்மா ஆலயம் தொழுவது சாலவும் நன்று. கோயிலில்லாவூரில் குடியிருக்க வேண்டாம் என்ற மூத்தோர் சொல் வார்த்தைஅம்ருதம். ஆலயம், கோயில் என்றால் இறைவன் இருப்பிடம். ஆன்மாக்கள் லயிக்கும் இடம் என்று பொருள். எங்கும்ஈச்வரன் இருந்தாலும் உலகத்தவருக்குத் துன்பத்தை நீக்கி, இன்பத்தைத் தர வேத மந்த்ரங்களால் பகவானது அருள்புரியும் சக்தி ஆலயத்திலேயே அதிகமாக அமைக்கப்பட்டுள்ளது. பசுவின் உடலெல்லாம் பால் இருந்தாலும் பாலாகக்கறக்கும் இடம் மடியே. அதேபோல் பகவானது அருளைக் கறக்கும் இடம் ஆலயம். காலை, உச்சிவேளை, மாலை இந்த மூன்று காலங்களே ஆலய தர்சனத்திற்கேற்ற காலம். சேவைக்குச் செல்பவர்ஸ்நாநம் செய்து மடி உடுத்தி விபூதி அணிந்து, கிடைத்தால் ருத்ராக்ஷம் அணிந்து, தேங்காய், பழம், புஷ்பம், கற்பூரம்,எண்ணெய், திரி இவைகளை அல்லது சக்திக்கேற்ற ஒன்றையாவது எடுத்துப் போகவேண்டும். தேங்காய், பழம், புஷ்பம்இவைகளை ஜலத்தினால் அலம்பி முழங்காலுக்குக் கீழ் தொங்கவிடாமல் செல்ல வேண்டும். செருப்பு, குடை, சொக்காய்இவைகளுடன் போகக் கூடாது. நடந்து போவதே நல்லது. சிவாலயத்தின் அருகிலுள்ள புண்ய தீர்த்தத்தை முதலில் கையால் எடுத்துத் தலைமீது ப்ரோக்ஷித்துக்கொண்டு பிறகுஅதில் காலைக் கழுவி ஆசமதம் செய்யவேண்டும். ஆலயம் சென்று திரும்பி வரும் வரை மனதினால் சிவனைத் தவிரவேறு எதையும் நினைக்கலாகாது. சிவநாமத்தைத் தவிர வேறு எதையும் சொல்லக் கூடாது. த்வஜஸ்தம்பத்தின் அருகேபலிபீடமும் நந்தியும் இருக்கும். அங்கே ஸாஷ்டாங்கமாக ஐந்து முறை நமஸ்காரம் செய்யவேண்டும். பெண்களுக்கு பஞ்சாங்க நமஸ்காரமே. இருகரங்கள், இரு முழங்கால்கள், மார்பு, தலை, மநஸ், வாக்கு, கண் என்பன ஸாஷ்டாங்க நமஸ்காரம். பெண்கள் முழங்கால்,தலை, மநஸ், வாக்கு, கண் என்ற பஞ்சாங்க நமஸ்காரம் செய்யவேண்டும். பலிபீடத்தினருகே நான் எனும்அஹங்காரத்தைப் பலிகொடுத்துவிட்டு நந்திகேசர் அருகே சென்று, நந்திகேச மஹா ப்ராக்ஞ, சிவ த்யாந பராயண        மஹா தேவஸ்ய ஸேவார்த்த2ம் அநுக்ஞாம் தா3தும் அர்ஹஸி || மஹா புத்தி உள்ளவரே சிவ த்யாநத்தில் ஈடுபட்ட ஓ நந்திகேச, சிவ தர்சரம் செய்ய உத்தரவு அளியும் எனக் கேட்டுக்கொண்டு விநாயகரை முதலில் தர்சிக்க வேண்டும். சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்        ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்ந உப சாந்தயே ||   வெள்ளை வஸ்த்ரம் அணிந்து எங்கும் பரவி நிற்பவரும், சந்த்ரனைப் போல் ப்ரகாசமானவரும், நாலு கை உள்ளவரும்ஸந்தோஷமான முகமுள்ளவருமான விநாயகரை ஸர்வ விக்நங்களும் அகல த்யாநம் செய்கிறேன் என்று கூறி ஐந்துமுறை குட்டிக் கொண்டு மூன்று தோபகர்ணம் போட வேண்டும். திருவும், கல்வியும், சீரும் தழைக்கவும் – கருணை பூக்கவும், தீமையைக் காய்க்கவும் – பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும், பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்.   என்று துதித்து முருகன் சன்னதிக்குப் போய் உமா கோமள ஹஸ்தாப்ஜ – ஸம்பா4வித லலாடிகம் ஹிரண்ய குண்டலம் வந்தே குமரம் புஷ்கரஸ்ரஜம். ||   பார்வதி கரபத்மத்தால் நெற்றியைத் தடவ ஸ்வர்ண குண்டலம் அணிந்து, தாமரை மாலை அணிந்திருக்கும் ஸ்கந்தனைநமஸ்கரிக்கிறேன். உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குஹனே   என்று துதித்து தேவி ஸன்னதிக்குச் செல்ல வேண்டும். சதுர்பு3ஜே சந்த்ர கலாவதம்ஸே குசோன்னதே குங்கும ராக3சோணே | புண்ட்ரேக்ஷு பாசாங்குச புஷ்பபாண ஹஸ்தே நமஸ்தே ஜகதேக மாத: ||   நாலு கைகள் உள்ளவளே! சந்த்ர கலை தரித்தவளே! உன்னதமான மார்புள்ளவளே! குங்குமம்போல் சிவந்தவளே!நாமக்கரும்பு, பாசம், அங்குசம், புஷ்ப பாணம் இவைகளைக் கரத்தில் ஏந்தியவளே! ஜகன் மாதாவே! உமக்குநமஸ்காரம்.   தநம்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வு அறியா மனம்தரும் தெய்வ வடிவம் தரும் எல்லாம் தரும் அன்பர் வஞ்சமிலா இநம்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே கநம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்ணே.   என்று துதித்து சிவ ஸன்னதிக்குப் போக வேண்டும். ப்ரம்ம முராரி ஸுரார்ச்சித லிங்கம் நிர்மல பா4ஷித சோபித லிங்கம் | ஜன்மஜ துக்க விநாசக லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் ||   ப்ரும்மா, விஷ்ணு, முதலிய தேவர்களால் பூஜிக்கப்பட்டவரும், வேதத்தால்  ப்ரகாசமானவரும், ஜநந, மரண துக்கத்தைஅகற்றுபவருமான ஸதாசிவ லிங்கத்தை நமஸ்கரிக்கிறேன். கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாக பாதத்தைத் தொழுநின்ற பரஞ்சோதி பயிலுமிடம் | வேதத்தின் மந்திரத்தால் வெண் மணலே சிவமாகப் போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே ||   … Continue reading சிவாலய ஸேவா விதி – ஶ்ரீவத்ஸ வெ. ஸோமதேவ சர்மா

பன்னிரு திருமுறைகள் சைவம் இணையப்பக்கங்கள் பட்டியல்

பன்னிரு திருமுறைகள் சைவம் இணையப்பக்கங்கள் பட்டியல் நன்றி: https://www.shaivam.org சைவம் எனும் மேற்கண்ட இணய விலாசம் கொண்ட இணைய நிறுவனம் மாபெரும் பணியாற்றி வருகின்றது. பன்னிரு திருமுறைகளையும் ஒரே இடத்தில் தவறு நீக்கி வெளியிட்டு தமிழ் உலகிற்கும் பக்தி இலக்கிய உலகிற்கும் பெரும் சேவை ஆற்றி வருகின்றனர். இப்பட்டியல், பக்தி வேட்கை கொண்ட தமிழ் மரபினர் தேடிப் பெறுவதற்காக தொகுத்து வழங்குவதில் நான் எடுத்துக் கொண்ட சுதந்திரத்துக்காக நான் சைவம் நிறுவனத்திற்கு நான் மிகவும் நன்றியுடனும், உயர்மதிப்புடனும் … Continue reading பன்னிரு திருமுறைகள் சைவம் இணையப்பக்கங்கள் பட்டியல்

41  தீராத நோய்கள் முற்றிலும் நீங்க ஓத வேண்டிய பதிகம்

6.99 திருப்புகலூர் - திருத்தாண்டகம்௿ திருச்சிற்றம்பலம் எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ௿ எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லாற்௿ கண்ணிலேன் மற்றோர் களைக ணில்லேன்௿ கழலடியே கைதொழுது காணி னல்லால்௿ ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்௿ ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்௿ புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்௿ பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. 6.99.1 அங்கமே பூண்டாய் அனலா டினாய்௿ ஆதிரையாய் ஆல்நிழலாய் ஆனே றூர்ந்தாய்௿ பங்கமொன் றில்லாத படர்ச டையினாய்௿ பாம்பொடு திங்கள் பகைதீர்த் தாண்டாய்௿ சங்கையொன் … Continue reading 41  தீராத நோய்கள் முற்றிலும் நீங்க ஓத வேண்டிய பதிகம்

39 விரோதிகளை அடக்கி வெற்றிபெற ஓத வேண்டிய பதிகம்

திருமுறை: 8/14 திருஉந்தியார் ஞான வெற்றி (தில்லையில் அருளியது) கலித்தாழிசை வளைந்தது வில்லு விளைந்தது பூசல் உளைந்தன முப்புரம் உந்தீபற ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற. 295 ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில் ஓரம்பே முப்புரம் உந்தீபற ஒன்றும் பெருமிகை உந்தீபற. 296 தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும் அச்சு முறிந்ததென் றுந்தீபற அழிந்தன முப்புரம் உந்தீபற. 297 உய்யவல் லார்ஒரு மூவரைக் காவல்கொண் டெய்யவல் லானுக்கே உந்தீபற இளமுலை பங்கனென் றுந்தீபற. 298 சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள் … Continue reading 39 விரோதிகளை அடக்கி வெற்றிபெற ஓத வேண்டிய பதிகம்

38 பிறவாமை வரம்பெற, நமச்சிவாய மந்திரத்தை எப்போதும் நினைவில் கொள்ளவும் ஓத வேண்டிய பதிகம்

திருமுறை: 7/48 இராகம்: சங்கராபரணம் பண்; பழம்பஞ்சுரம் இறைவன்: கொடுமுடிநாதர் இறைவி: பண்மொழிநாயகி 7.48 திருப்பாண்டிக்கொடுமுடி மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப் பாத மேமனம் பாவித்தேன் பெற்ற லும்பிறந் தேனி னிப்பிற வாத தன்மைவந் தெய்தினேன் கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி நற்ற வாவுனை நான்ம றக்கினுஞ்சொல்லும் நாநமச்சி வாயவே. 7.48.1 இட்ட னும்மடி யேத்து வார்இகழ்ந் திட்ட நாள்மறந் திட்டநாள் கெட்ட நாளிவை என்ற லாற்கரு தேன்கி ளர்புனற் காவிரி வட்ட … Continue reading 38 பிறவாமை வரம்பெற, நமச்சிவாய மந்திரத்தை எப்போதும் நினைவில் கொள்ளவும் ஓத வேண்டிய பதிகம்

37 இழந்த களவு, திருட்டுப் போன பொருள் மீண்டும் கிடைக்க ஓத வேண்டிய பதிகம்

திருமுறை: 7/49 இராகம்: சங்கராபரணம் பண்; பழம்பஞ்சுரம் இறைவன்: முருகாவுடையார் இறைவி: ஆவுடைநாயகி 7.49 திருமுருகன்பூண்டி 498      கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவ லாமை சொல்லித் திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்டாற லைக்கு மிடம் முடுகு நாறிய வடுகர் வாழ்முருகன் பூண்டி மாநகர் வாய் இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே 7.49.1 499      வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர்விரவ லாமை சொல்லிக் கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங் கூறை கொள்ளு மிடம் முல்லைத் … Continue reading 37 இழந்த களவு, திருட்டுப் போன பொருள் மீண்டும் கிடைக்க ஓத வேண்டிய பதிகம்

36 அம்மை, சொரி, படை போன்ற தோல்நோய்கள் நீங்க ஓத வேண்டிய பதிகம்

திருமுறை: 7/74 7.74 திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் பண் - காந்தாரம் 751 மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றும் அன்னமாங் காவிரி அகன்கரை உறைவார் அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார் சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை என்னுடம் படும்பிணி இடர்கெடுத் தானை. 7.74.1 752 கூடுமா றுள்ளன கூடியுங் கோத்துங் கொய்புன ஏனலோ டைவனஞ் சிதறி மாடுமா கோங்கமே மருதமே … Continue reading 36 அம்மை, சொரி, படை போன்ற தோல்நோய்கள் நீங்க ஓத வேண்டிய பதிகம்