முருகா என்றழைக்கவா

முருகா என்றழைக்கவா உள்ளே சென்றேன். கணேசன் சாமியிடம் “சார் இன்னிக்கு சீக்கிரம் வந்துட்டாரண்ணே. கொஞ்ச நேரம் இருந்து போகலாம்ல, இல்ல வேற யாரும் வர்ராங்களா” என்று கேட்டார்.சாமி, “சார் எத்தனை நேரம் இருக்கணும்னு நெனைக்கிறாரோ இருக்கட்டுமே. வேற யாரும் வர்ரதா சொல்லல்ல. ஆனா கணேசா இங்க எல்லாரும் சொல்லிட்டுதான் வராங்களா என்ன?. யாரு வந்தாலும் பரவாயில்ல. சாருக்கு சொல்லி முடிச்சபிறகுதான் அவங்க யாரா இருந்தாலும் பாப்பேன். ஒக்காருங்க சார்.” என்றார்.“சார், வீட்ல முருகனைக் கும்பிடறதா சொன்னீங்களே. நீங்களும் … Continue reading முருகா என்றழைக்கவா

நன்றிக் கடன்

விபத்து ஒரு ஞாயிறன்று காலையில் மலைமந்திர் முருகனைத் தரிசித்து விட்டு Outer Ring ரோட்டில் வீடு செல்ல பஸ் ஏறக் காத்திருந்தேன். என்னைக் க்ராஸ் செய்துகொண்டு கையில் சூட்கேஸ்ஸுடன் நடந்து சென்ற ஒரு சர்தார்ஜி சிறிது தூரத்தில் கீழே விழுந்தார். எழுந்திருப்பார் என்று நினைத்து பஸ் ஸ்டாப்பில் நின்று பார்த்தேன். எழவில்லை. ஓடினேன் அவரிடம். மயக்கமாய்க் கிடந்தார். மூச்சு வந்து கொண்டிருந்தது. ஒரு ஆட்டோக்காரரும் நான் ஓடி வரும்போது என்னுடன் மெதுவாக வந்தார். “க்யா ஹுவா சாப்? … Continue reading நன்றிக் கடன்

அரசியலுக்கும் எனக்கும் காத தூரம்

  Photo by Hans-Peter Gauster on Unsplash நாட்டில் ஓட்டுப் போடுவது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது போல என் அரசியல் சிந்தனையையும் நான் வைத்துள்ளேன். அறிவார்ந்த சிந்தனை, தன்னலம் கருதாத சேவை, பகட்டில்லாத வாழ்க்கை, மக்களை இனம் பிரிக்காத கொள்கை, நேர்மையான ஊழலற்ற செயல்பாடு, தன் சுற்றத்தார் தன் பதவிக் காலத்தில் தன்னால் பெரிய பொருள்வசதி பெறாமல் பாதுகாக்கும் கட்டுப்பாடு, பொருளாதார வசதி இல்லாதவர்களிடம் உண்மையான அக்கறை, நாட்டின் வளங்களைக் காக்கும் சீலம், தன் சொந்த வாழ்வில் … Continue reading அரசியலுக்கும் எனக்கும் காத தூரம்

தமிழ்

தமிழ் ........... தமிழைச் சரியாகப் பேசு, எழுது என்கிறார் ஒரு அறிஞர். தமிழுக்கு ர ற என்று இரண்டு, ல ள ழ என்ற மூன்று தேவையில்லை என்கிறார் ஒரு பிரபலம். சமுதாயத்தில் இருந்து தான் இலக்கியம் பிறக்கும், சரியாக எழுது பேசு என்னும் இப்பண்டிதத்தனம் இலக்கிய வளர்ச்சியைக் குறைக்கும் என்கிறார் இன்னொரு பிரபலம். நிச்சயம் இது தமிழ் வளர்ச்சிக்குக் கேடு என்று (அதாவது தங்கள் வணிக வளர்ச்சிக்குக் கேடு) ஒலி, ஒளி ஊடகங்கள் சொல்கின்றன. டிஎம்எஸ், … Continue reading தமிழ்