சிவ தத்துவங்களும் உருவங்களும்

குறிப்பு: இக்கட்டுரை மணிவாசகர்.இன்என்ற வலைப்பக்கத்தில் இருந்து எடுத்தது. அந்த வலைப்பக்கம் இப்போது இயங்கவில்லை. எனவே இக்கட்டுரை தேவையென்று நினைப்பவர் இப்பதிவை தங்கள் கணினியில் சேமித்து வைக்கவும். இது அவன் திருவுரு முனைவர் அ. மா. இலட்சுமிபதிராசு இறை, உயிர், தளை என்று சைவசித்தாந்தம் கூறும் முப்பொருள்களுள் இறை ஏனையவற்றைக் காட்டிலும் பேராற்றல் வாய்ந்தது. தன்னுரிமை உடையது. உண்மை இயல்பு, பொது இயல்பு என்னும் இரண்டு இயல்புகளை உடையது. இறை தன்னையே நோக்கி நிற்கும் நிலையில் உண்மை இயல்புடையதாகும். … Continue reading சிவ தத்துவங்களும் உருவங்களும்

சுருக்க அநுட்டானவிதி – ஆறுமுகநாவலரவர்கள்

உ கணபதி துணை. சுருக்க அநுட்டானவிதி யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலரவர்கள் செய்தது. இது மேற்படியார் மருகரும், மாணாக்கரும், வித்துவசிரோமணியுமாகிய ந. ச. பொன்னம்பலபிள்ளையவர்கள் மாணாக்கர் சுவாமிநாதபண்டிதரால் சென்னபட்டணம் தமது சைவவித்தியாநுபாலனயந்திரசாலையில் அச்சிற்பதிப்பிக்கப்பட்டது. பிலவங்க௵ கார்த்திகை௴ 1907 நித்தியகருமவிதி   சைவ சமய மரபிலே பிறந்தவர் எல்லாரும், எழாம் வயசிலாவது, ஒன்பதாம் வயசிலாவது, சமயதீக்ஷை பெற்று,அநுட்டானஞ் செவ்வையாகப் பழகிக்கொண்டு மரணபரியந்தம் விடாது செய்க. நாடோறுஞ் சூரியோதயத்துக்கு முன்னே நித்திரை விட்டெழுந்து கிழக்கு முகமாகவேனும் வடக்குமுகமாவேனும் இருந்து,“சிவ சிவ” என்று நெற்றியில் விபூதி தரித்து, “ஓம் கணபதயே நம:” என்று குட்டி, “ஓம் குருப்பியோ நம:”  என்று  கும்பிட்டு,சிவபெருமானை இருதயத்திலே தியானித்து ஒரு தோத்திரமாவது  சொல்லிக்கொள்க. அதன்பின் எழுந்து புறத்தேபோய், மலசலமோசனஞ் செய்து, செளசம்பண்ணி, தந்தசுத்தி செய்து, முகங்கழுவிநெற்றியில் விபூதி இட்டுக்கொள்க. நீர்நிலையை அடைந்து ஸ்நானஞ் செய்து, ஈரத்துவட்டி, நெற்றியில் விபூதி இட்டு உலர்ந்த சுத்தவஸ்திரந்தரித்துக்கொள்க. அநுட்டானபாத்திரத்தை வெள்ளையிட்டு, அலம்பி, சுத்தசலம் பூரித்து, சுத்தபூமியிலே சிறிது சலம் விட்டு, அதன்மேற்பாத்திரத்தை வைத்து, கிழக்குமுகமாகவேனும் வடக்குமுகமாகவேனும் இருந்து, விபூதி இட்டுக்கொண்டு அநுட்டானம்பண்ணுக. வியாதியினாலே ஸ்நானஞ்செய்யமாட்டாதவர், கால் கழுவி, ஈரவஸ்திரத்தினால் உடம்பெங்குந் துடைத்து, உலர்ந்தசுத்தவஸ்திரத்தினால் ஈரந்துவட்டி, நெற்றியில் விபூதி இட்டு, வேறு உலர்ந்த சுத்தவஸ்திரந்தரித்து, ஆசமனஞ்செய்துகொண்டு அநுட்டானம் பண்ணுக. அதுவுஞ் செய்யமாட்டாதவர், நெற்றியில் விபூதி இட்டு, சிவபெருமானைத்தியானித்து, சிவமூலமந்திரத்தை மனசிலே சிந்தித்துக்கொண்டு கிடக்க. வீட்டுக்கு விலக்காயுள்ள பெண்கள், மூன்று நாளுஞ் சிவமூலமந்திரத்தை மனசிலே சிந்தித்துக்கொண்டு, நான்காநாள்ஸ்நானஞ் செய்து அநுட்டானம் பண்ணுக. மூலமந்திரம்                 சிவமூலமந்திரம்   ------------------------------------------   நமசிவாய. தேவிமூலமந்திரம்  -----------------------------------------    உமாதேவயை நம: விக்கினேசுரமூலமந்திரம் ------------------------------    கணபதயே நம: சுப்பிரமணியமூலமந்திரம் -----------------------------    சரவணபவாய நம: சூரியமூலமந்திரம்  -----------------------------------------    சிவசூர்யாய நம:   பதினொருமந்திரம்       ஓம் ஈசாநாய நம: ஓம் தற்புருஷாய நம: ஓம் அகோராய நம:                         இந்த ஐந்தும் பிரம மந்திரம். ஓம் வாமதேவாய நம: ஓம் சத்தியோசாதாய நம: ஓம் இருதயாய நம: ஓம் சிரசே நம: ஓம் சிகாயை நம:                          இந்த ஆறும் அங்க மந்திரம் ஓம் கவசாய நம: … Continue reading சுருக்க அநுட்டானவிதி – ஆறுமுகநாவலரவர்கள்

எங்கெங்கு காணினும் சிவலிங்கமே – முனைவர் ந. இரா. சென்னியப்பனார்

  இறைவன் தன் உண்மை நிலையில் உருவம், பெயர், தொழில் முதலிய ஒன்றும் இல்லாத நிலையில் பரமசிவன் எனப்படுவான். உலகத்துடன் தொடர்பு கொண்டு நிற்கும் பொது நிலையில் இறைவன் கொள்கின்ற அருவம், அருஉருவம், உருவம் என்ற மூவகையே வழிபாட்டிற்குரிய சிறப்பியல்புகளாகும். கண்ணுக்குப் புலப்படாத நிலை, ஞானியர் ஞானத்தால் உணரும் நிலை அருவம் ஆகும். உலக மக்கள் அனைவராலும், காணக்கூடிய நடராசர், தட்சிணாமூர்த்தி, மாதொரு பாகன் முதலியவை உருவங்களாகும். கண்ணுக்குப் புலப்படாத அருவ நிலைக்கும், கண்ணிக்குப் புலப்படும் உருவ … Continue reading எங்கெங்கு காணினும் சிவலிங்கமே – முனைவர் ந. இரா. சென்னியப்பனார்

சிவலிங்க வழிபாடு – முனைவர் ந. இரா. சென்னியப்பனார்

  சிவ வழிபாடு மிகத் தொன்மை வாய்ந்தது. பண்டைக் காலத்தில் சிவ வழிபாடு உலகு எங்கிலும் பரவியிருந்தது. அனைத்து மக்களும் சிவ வழிபாட்டை மேற்கொண்டிருந்தனர். அமெரிக்காவில் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன்கோயில் கண்டுபிடிக்கப் பெற்றுள்ளது. யு.எஸ்.மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி ( U .S. Museum of Natural History ) என்ற அமைப்பைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்த மிகத் தொன்மையான சிவன் கோவிலைப் பற்றிய செய்தியொன்று வெளிவந்துள்ளது. 23-11-1937 – இல் நியூஸ் … Continue reading சிவலிங்க வழிபாடு – முனைவர் ந. இரா. சென்னியப்பனார்

சிவஞானபோதம்  – முனைவர் ந. இரா. சென்னியப்பனார் அவர்களின் கட்டுரை

1. முன்னுரை சங்க காலத்தில் தமிழகத்தில் பண்பாடு, ஒழுக்கம், வழிபாடு சிறப்புற்றிருந்தன. அடுத்த வந்த இருண்ட காலத்தில் அவை அனைத்தும் மாறின. கி.பி. ஆறாம் நூற்றாண்டு முதல் பல்லவராச்சி தமிழகத்தில் பரவியது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் மக்களிடத்தில் மாற்றத்தை உண்டாக்கினர். சிவ வழிபாடு, சிவன்புகழ் பாடு நூல்கள் பெருகின. கி.பி.ஏழாம் நூற்றாண்டில் தென்னாட்டுக்கு வந்த யுவான்சுவாங் என்ற சீனநாட்டறிஞர் புத்தம் சமணம் செல்வாக்குப் பெற்றிருந்ததைக் குறிப்பிட்டுள்ளார். நாயன்மார்களால் புத்த சமயம், சமணசமயம் செல்வாக்குக் குறையத் தொடங்கியது. பாண்டி … Continue reading சிவஞானபோதம்  – முனைவர் ந. இரா. சென்னியப்பனார் அவர்களின் கட்டுரை

சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார்  உரை – பகுதி பதின்மூன்று

பன்னிரண்டாம் நூற்பா உரை நூற்பா :   “செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா       அம்மலம் கழீஇ அன்பரொடு மரீஇ       மால்அற நேயம் மலிந்தவர் வேடமும்        ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே”   (சிவஞான போதம்-12) உரை : இறைவன் திருவடிப் பேரின்பத்தை உடலுடன் கூடியிருக்கும்போதே பெற்றிருப்பவரைச் சீவன் முத்தர் அல்லது அணைந்தோர் என்று கூறுவது சைவ சித்தாந்த மரபு. சீவன் முத்தர் இறைவனை இடைவிடாமல் சிந்தித்துக் கொண்டே இருப்பர். அவ்வாறு இருப்பினும் அவருடைய அறிவும், இச்சையும், தொழிலும் சில … Continue reading சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார்  உரை – பகுதி பதின்மூன்று

சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார்  உரை – பகுதி பன்னிரண்டு

பதினொன்றாம் நூற்பா உரை நூற்பா :    “காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்       காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்       அயரா அன்பின் அரன்கழல் செலுமே”   (சிவஞான போதம்-11) உரை : துன்பமான பாசத்தில் கட்டுண்ட உயிர் அப்பாசத்தினின்று விடுபட்டு நீங்கும் பாசநீக்கம் முன்பு கூறப்பெற்றது. பாசத்தின் நீங்கி இன்பமான இறைவனை அடைதலைக் கூறுவது இப்பகுதி. இறைவன் எப்பொழுதும் உயிர்க்குயிராய் நின்று உதவி செய்து வருகின்றான். இறைவன் செய்யும் உதவி 1. காட்டும் உதவி 2. காணும் உதவி என இருவகைப்படும். … Continue reading சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார்  உரை – பகுதி பன்னிரண்டு

சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார்  உரை – பகுதி பதினொன்று

பத்தாம் நூற்பா உரை நூற்பா :  “அவனே தானே ஆகிய அந்நெறி       ஏகனாகி இறைபணி நிற்க,       மலம் மாயை தன்னொடு வல்வினை இன்றே”   (சிவஞான போதம்-10) உரை : பாசங்களை விட்டு நீங்கிப் பதியின் திருவடியை அடைய முயல்வதே உயிரின் நோக்கம் ஆகும். முன்பு ஏழாம் பகுதியில் சாதிக்கும் அதிகாரி உயிர் என்று கூறப் பெற்றது. எட்டாம் பகுதியில் உயிராகிய அதிகாரி செய்ய வேண்டியது உலகப்பற்று நீக்குவதாகிய சாதனம் என்பதும், பெற வேண்டியது பதிஞான அறிவு என்பதும், இறைவனே … Continue reading சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார்  உரை – பகுதி பதினொன்று

சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார்  உரை – பகுதி பத்து

ஒன்பதாம் நூற்பா உரை நூற்பா :  “ஊனக்கண் பாசம் உணராப் பதியை       ஞானக் கண்ணினில் சிந்தை நாடி;       உராத்துனைத் தேர்த்து எனப் பாசம் ஒருவத்        தண்நிழல் ஆம்பதி;விதி எண்ணும் அஞ்செழுத்தே”   (சிவஞான போதம்-9) உரை : உயிருக்குப் பசுஞானம், பாசஞானம் என்ற இருவகை அறிவு உண்டு. வேறு துணையில்லாமல் அறிய முடியாத குறைபாடு உடைய அறிவு பசுஞானம் எனப்படும். உயிருக்குத் துணைசெய்யும் கருவிகள், நூல்கள் முதலியவற்றால் உண்டாகும் அறிவு பாசஞானம் எனப்படும். இவ்விரண்டு அறிவினாலும் பதியாகிய இறைவனை … Continue reading சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார்  உரை – பகுதி பத்து

சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார்  உரை – பகுதி ஒன்பது

எட்டாம் நூற்பா உரை நூற்பா : “ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்       தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு       அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே”   (சிவஞான போதம்-8) உரை : உயிர் முன்பிறப்புக்களில் செய்த புண்ணியத்தால் இதுவரை உள்ளே நின்று உணர்த்தி வந்த இறைவன் – இப்பொழுது ஞானநெறியை அருளுவதற்காகக் குருவாக வடிவங்கொண்டு எழுந்தருளி வருகின்றான். உயிர்க்குச் சிவதீக்கை செய்து உபதேசம் செய்வான். பக்குவம் அடைந்த உயிரை நோக்கி, “அரச குமாரனாகிய நீ ஐம்பொறிகளாகிய வேடரிடத்தில் அகப்பட்டு அங்கேயே வளர்ந்து … Continue reading சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார்  உரை – பகுதி ஒன்பது