நீண்ட விரதங்கள்

ஒவ்வொரு மதமும் எப்படித் துவங்கியது, ஏன் துவங்கியது என்பதற்குத் தெளிவான பதில் இல்லை.

இந்து மதத்துக்கு எது ஆரம்பம் என்று சொல்லவே முடியாது. மறை எனப்படும் வேதம் எனப்படும் ஆழ்ந்த அறிவு அல்லது ஞானம் இறைவனிடத்தில் இருந்து மனிதனுக்கு வந்தது என்று இந்து மத நூல்கள் சொல்கின்றன.

இறைவன் நம்மிடம் பேசுவானா, இந்து மதம் அறிவில்லாமல் சொல்கிறது என்று நினைக்கக் கூடாது.

கிறிஸ்தவ மதத்தில் இயேசுவுக்கு முன் வந்த மோசஸ் இறைவன் கொளுந்து விட்டு எரியும் (ஆனால் நெருப்பால் அழியாத) புதர் உருவில் பேசினார் என்று சொல்லப் படுகிறது.

இஸ்லாத்தில் இருபத்து மூன்று ஆண்டுக் காலத்தில் கேப்ரியல் என்ற வானவரின் மூலம் பெறப்பட்ட இறைவனின் சொற்களே குர்ஆன் என்று சொல்லப்படுகிறது.

*பாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து* என்று மாணிக்கவாகர் திருவாசகத்தில் சொல்கிறார்.

ஊனினை உருக்கியதால் உள்ளொளி பெருகியதா?
அல்லது உள்ளொளி பெருக்குவதற்கு ஊனினை உருக்க வேண்டுமா ?

உள்ளொளி பெருக்குவதற்கு ஊனினை உருக்க வேண்டும் என்று நினைக்க இடம் இருக்கிறது.

A body clogged with an overstuffing of food, of whatsoever kind, is always crowned with a stupefied brain, and tired nature demands the repose of sleep. There is also a vast difference between the psychic effect of nitrogenised food, such as flesh, and non-nitrogenous food, such as fruits and green vegetables. Certain meats, like beef, and vegetables, like beans, have always been interdicted to students of occultism, not because either of them were more or less holy than others, but because while perhaps highly nutritious and supporting to the body, their magnetism was deadening and obstructive to the “psychic man” — Madam Blavatsky, the founder of Thesosophical Society, Adyar.

நம் சித்தர்கள் மனிதன் உணவு உண்பதில் ஒரு நியமம் சொல்லி இருக்கின்றனர்.

அரை வயிறு உணவு, கால் வயிறு நீர், கால் வயிறு காலி இவைதான் ஆரோக்கிய வழி என்று சொல்லி இருக்கிறார்கள்.

வயிறு முட்ட உண்பவர் உண்டதும் உருள்வதைப் பார்க்கிறோம். உண்டதும் உறக்கம் வருவது எப்படி ? மூளையின் செயல்பாடுகள் குறைந்து அத்தனை சக்தியும் வயிற்றில் நிரம்பி இருக்கும் உணவைச் செரித்து திசுக்களுக்குள் வாங்கிக் கொள்ள, வந்து விட மூளையின் இயல்பான சிந்தனா அறிவின் செயல்பாட்டுத் திறமை குறைகிறது.

ஒவ்வொரு மதத்தில் தேவதைகளும் முனிவர்களும் உணவைக் குறைக்க சொல்லிச் சென்ற அறவுரை மிக அதிகம்.

இப்படித்தான் இந்து மதத்தில் ஒரு மண்டல (48 நாள்) விரதம், கிறிஸ்தவத்தில் (இயேசுநாதர் 40 நாள் பாலைவனத்தில் பட்டினி கிடந்த) *Lent* விரதம், இஸ்லாத்தில் குர்ஆன் வெளிப்படுத்தப் பட்ட ரமலான் மாத விரதம் இவை துவங்கி இருக்கின்றன.


© ந. கணபதி சுப்ரமணியன்,
10.04.2022

Leave a comment