மதம் மற்றும் தத்துவம்

சமஸ்கிருதத்தில், தத்துவம் என்பது தர்சனா என்று அழைக்கப்படுகிறது, இதன் மூலம் த்ருஷ். இதற்குப் பார் என்பது பொருள். திருஷ்டி என்பது பார்வை. பார்க்கப்படுவன எல்லாம் திருஷ்டம். பார்க்க முடியாதவை அத்ருஷ்டம் என்பதாகும். இங்கு பார்வை என்பது புறக்கண்ணையும் அகக் கண்ணையும் சேர்த்துப் பார்ப்பது. அப்படிக் கண்டு கொள்ளப்பட்டவையே தர்சனங்கள். இந்திய தர்சனங்கள் எவ்வளவோ இருப்பினும் முக்கியமானவை ஆறு. நியாயம், வைசேஷிகம், சாங்கியம், யோகம், மீமாம்சை, வேதாந்தம் எனப்படும் இந்த தத்துவங்கள் அனைத்தும் புறக்கண்ணாலும் அகக் கண்ணாலும் பார்க்கப்பட்டவை … Continue reading மதம் மற்றும் தத்துவம்

ஸ்ரீராமபிரானும் ஸ்ரீகுலசேகர ஆழ்வாரும் இணையும் நாள் இன்று

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலேநெடியானே வேங்கடவா நின்கோவிலின் வாசல்அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்படியாய்க் கிடந்துநின் பவளவாய் காண்பேனேசெடி வளர்வது போல நம் கர்மவினைகள் வளர்ந்து மலர்ந்து காயாகி, கனியாகி நம் கர்மபலனை நமக்குத் தந்துவிட தயாராகி விடும். இந்த செடி பிறவிதோறும் காயாமல் வளர்வது. நம் பார்வைக்கும் உணர்வுக்கும் எட்டாத இந்தச் செடியைப் பற்றிப் பாடுகிறார் குலசேகர ஆழ்வார்.இன்று (21.02.2024) திருநட்சத்திரம் காணும் இவர் சேரநாட்டில் மன்னராக இருந்தவர். இந்த நட்சத்திரம் புனர்பூசம்.புனர்வஸு ஸ்ரீ ராமபிரானின் அவதார … Continue reading ஸ்ரீராமபிரானும் ஸ்ரீகுலசேகர ஆழ்வாரும் இணையும் நாள் இன்று

இறைசக்தி என்பது துதிக்கப்படுவதா, ஆளப்படுவதா? Is Supreme Power to be worshipped or handled and managed?

(Context: நான் ஒரு நண்பருக்குச் சொன்ன பதில்.) கர்மாணம் என்னும் சொல் பகவத்கீதையில் வருகிறது. கர்மயோக நியதிப்படி செய்யும் செயல்கள் கர்மாணம் எனப்படும். கர்மம் என்பது செயல். செயல்களின் தொகுப்பும், எப்படிச் செய்வது என்னும் நியதியும் என்பதை வேண்டுமானால் கர்மாணம் என்னும் சொல்லால் குறிக்கலாம், ஆனால் இந்த ஆசிரியர் சாக்தகர்மாணங்கள் என்று சொல்லும் பொருள் என்ன என்று நூலைப் படித்தால்தான் தெரிந்து கொள்ள முடியும், அனேகமாக தாந்த்ரிக வித்தைகள் என்னும் பொருளைக் கொண்டிருக்கலாம். செயல்மரபை கிரியாமார்க்கம் எனவும் … Continue reading இறைசக்தி என்பது துதிக்கப்படுவதா, ஆளப்படுவதா? Is Supreme Power to be worshipped or handled and managed?

24X7 அரசியல் சிந்தனை 24X7

எல்லாவற்றையும் அரசியல் பார்வையுடன் பார்க்க முடிகிறது. எந்த ஒரு செய்தி ஆனாலும், அதில் அரசியலைக் கொண்டு வந்து விட முடிகிறது. நாட்டில் நடக்கும் நல்லது கெட்டது அனைத்துக்கும் ஒரு அரசியல் காரணத்தைக் கொண்டு வந்துவிட முடிகின்றது. ஏன் இக்காலத்தில் மனிதர்கள் இவ்வளவு முன்னேறி விட்டனர்? ஏன் சமூக ஊடகங்களில் அரசியல் மட்டுமே உச்சாணிக் கொம்பில் இருக்கிறது? விசித்திரமாய் இருக்கிறது. காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை அனைத்தையும் அரசியல் கண் கொண்டுதான் பார்க்கவேண்டும் என்னும் ஒரு … Continue reading 24X7 அரசியல் சிந்தனை 24X7

நித்யாவும் சத்யாவும் -4

(கபிலவிசாகன்) சத்யா: எங்கிருந்து எடுத்தேன் என்று கேட்டாயே நித்யா. உனது இக்கேள்வி என்னை ஒருநாள் முழுவதும் சிந்திக்க வைத்துவிட்டது. நித்யா: சாரி சத்யா, ஐ டிட்ன்ட் மீன் இட். நீ சொன்ன சம்மரி மிக அழகு. அசந்துபோனதால் நான் கேட்டுவிட்டேன். “YOUR CONSCIOUSNESS GETS A LINK TO THE UNIVERSAL CONSCIOUSNESS. THEN WISDOM FROM THE UNIVERSE ENGULFS YOU. YOU BECOME PART OF THE UNIVERSAL WISDOM. YOUR SEEDS OF … Continue reading நித்யாவும் சத்யாவும் -4

கம்பியில்லாத ஜன்னல்

Photo by Javardh on Unsplash ஒரு சாதாரணமான நாள்தான் அன்று. கல்லூரியில் இருந்து வந்து தஞ்சைக்குச் செல்ல மாலை 4 மணி ரயில் வண்டியில் ஏறினேன். இன்னமும் வெயில் அடித்துக் கொண்டுதான் இருந்தது. வெயில் முகத்தில் படுபவர்கள் யாரும் முகம் சுளிக்கவில்லை.  மாலை வெயிலை ரசித்தது போல் தோன்றியது எனக்கு. கொஞ்ச நேரத்தில் திபுதிபுவென கூட்டம் ஏறியது. ஜன்னல் ஓரத்தில் வெளியில் வைத்திருந்த மடக்கிய கையை யாரோ மெதுவாகத் தொட்டது தெரிந்த்து. பூத்த மலர் தொட்டாற்போன்ற மென்மை. ஆர்வத்துடன் ஜன்னலுக்கு … Continue reading கம்பியில்லாத ஜன்னல்

கொஞ்சம் பேசலாம்

அறிவும் மனதும் நாம் உயிர்வாழ இன்றியமையாதவை. பள்ளிகளில் பாடப்புத்தகத்தை நெட்டுரு செய்து தேர்வில் தாளில் கொட்டி பள்ளிமுடிவில் பெற்ற ஒரு பட்டயத்தைக் காட்டிக் கிடைப்பதற்குப் பெயர் அறிவல்ல. நன்றாகப் படிக்கத் தெரிந்துகொண்டோம் என்று மட்டும்தான் பொருள். கல்லூரி வரையிலும் ஆராய்ச்சித் துறையிலும் கூட நன்றாகப் படிக்கத் தெரிந்து கொண்டோம் என்றுதான் பொருள். எல்லாத் திக்குகளிலும் ஒவ்வொரு நொடியும் நம்மை வந்து நிறைக்கின்ற செய்திகள், தகவல்களின் மதிப்பு அது அதன் பெயரிலேயே உள்ளது. வெறும் தகவல்கள் அறிவாக மாட்டாது. … Continue reading கொஞ்சம் பேசலாம்

இதமும் சுகமும் போனதெங்கே

கூட்டுக் குடும்பத்தைக் கூட்டாகத் தொலைத்துவிட்டுஇருவர் இருப்பதையே கூட்டுக் குடும்பம் என்று மொழிந்துஒருவர் போதுமே என்ற கொள்கை அரசுக்கு முன் நமக்குவந்துவீடொன்று கட்டிக் காரொன்று வாங்கி, பகட்டுக் காரில் பவனிவந்து பாட்டு நிகழ்ச்சி சென்றுதிகட்டும் சுகத்தில் திளைத்தெழுந்து ஓய்வெடுக்கும் வேளையில்வலுவிழந்து வலிநிறைந்து சிந்திக்கையில் மட்டும்வேண்டும் இன்னொருவர் அன்றே என்றால் எப்படி ஆளைத் துரத்தும் காலமிது, வீட்டில் ஆள் ஒன்று கூடிவிட்டால்வராத வலியும் வந்துவிட்டு உபரி ஆளை விரட்டியதும்வந்த வலியும் மாயமாகும் பொய்ப் பேசிப்பேசி பொய்பொய்யாய் வாழ்ந்து விட்டால் வந்திடுமோ … Continue reading இதமும் சுகமும் போனதெங்கே

உண்மை எது பொய்யெது ?

One could not get at the masses with arguments, proofs, and knowledge, but only with feelings and beliefs. — Wilhelm Reich நம் நாட்டில் எழுத்துப் பட்டறைகள் அதிகம். அவை இப்போது அரசியல் துறையிலும் சிறப்பாக (???) செயல்படுகிறார்கள். கட்சிகளின் எழுத்துப் பாசறைகள் அனைத்துமே நடப்பவைகளை தங்கள் மனம்போன வழியில் பின்னி வசனம் எழுதுகின்றனர். ஒரு காலத்தில் பேச்சு தேவைப்பட்ட அரசியல் செயல்களுக்கு இன்று எழுத்து தேவைப் படுகிறது. நான் … Continue reading உண்மை எது பொய்யெது ?

வேலியில்லாக் காட்டில் வேட்டைக்குப் போகும் மான்

Picture Credit : The Wandering Fawn on Visualhunt வேலிதான் எதிரி அந்த மானுக்கு துள்ளித் திரியும் பருவம் – வேலியை உடைத்தெறிந்து விட்டு பெற்ற மனங்களின் மேல் நடந்துவிட்டு இணையத்தில் முகநூலில் தேடித்தேடி துணையை நாடி முகம் மறைத்த காளையை ரசித்து தன் அந்தரங்கம் ரகசியம் உடைத்துவிட்டு அவளுமா, இன்னொருத்தியுமா நூறு மானா என்றறிந்த பின்னே அழுதுபுலம்பி ஆர்ப்பரித்து பெற்ற மனங்களை குருதி வடிக்கவிட்டு முகநூலில் முகம் புதைத்துவிட்ட தோழியும் அவளும் மருத்துவராம் மாற்றியவனும் … Continue reading வேலியில்லாக் காட்டில் வேட்டைக்குப் போகும் மான்