பைரவர்

பைரவர் நம்மை ஆட்டிப் படைக்கும் நவக்கிரக தோஷங்களை ஆட்டுவிப்பர் பைரவரே! திருப்பத்தூர், சிவகாமசுந்தரி சமேத திருத்தளிநாதர் கோயிலில் அமைந்திருக்கும் ஆதி பைரவர் சன்னதி சிறப்பு வாய்ந்தது. ஆதி பைரவரிலிருந்து, அஷ்ட பைரவரும், அஷ்ட பைரவரில் இருந்து 64 பைரவரும் தோன்றினர் என்று கூறப்படுகிறது. எல்லா கோயில்களிலும் காணப்படும் பைரவருக்கு அடிப்படையாக  ஆதி பைரவர் விளங்குகிறார். 12 ராசிகளும் இவரின் உருவபகுதிகள், நவகோள்களும் இவர் ஆளுகைக்கு உட்பட்டவை. காலச் சக்கரதாரி பைரவரே! ஜோதிட நூல்கள் இவரை, கால புருஷன் … Continue reading பைரவர்

தச திக்பாலகர்

தச திக்பாலகர்   பூர்வச்யாம் – கிழக்கில் – இந்த்ரன்  ஓம் லம் இந்த்ராயை நம: ஆக்னேயே – தென்கிழக்கில் – அக்னி ஓம் ரம் அக்னயே நம: தக்ஷிணஸ்யாம்—தெற்கில்- யமன் ஓம் யம் யமாய நம: நைர்ருத்யாம் – தென்மேற்கில் – நிருருதி ஓம் க்ஷம் நிருருதயே நம: பச்சிமாயாம் – மேற்கில் – வருணன் ஓம் வம் வருணாய நம: வாயவ்யாம்- வடமேற்கில் – வாயு ஓம் யம் வாயவே நம: உத்தரஸ்யாம் – … Continue reading தச திக்பாலகர்

வீரபத்திரர்

வீரபத்திரர் சுலோகம் துதி : ரௌத்ரம், ருத்ராவதாரம், சூதவக நயநம் ஊர்த்வ கேசம், சூதம்ஷ்ட்ரம்; பீமரூபம் கணகண வில சத் கண்ட மாலா க்வ்ருதம்; தக்ஷஸ்ய கர்வபங்கம், அஜமுக க்ருதம், வீராட்ட ஹாசோந் முகம்; வந்தே லோகைக வீரம், த்ரிபுவநமதநம் சியாமலம் வீர பத்ரம் - த்யாயாமி. சத்துருவின் நிலைமைபெற்று தக்கன் மகம் அடும் நாளில், தலைமை சான்ற பத்து உருவம் பெறும் திருமால் முதலாய பண்ணவர் தம் படிவம் யாவும், உய்த்து உருவுதனி வாள் கையுறு … Continue reading வீரபத்திரர்

கருப்பணசாமி

கருப்பணசாமி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு) இவர் பைரவர் அம்சம்; கிராமிய வழக்கில் கருப்பர் - கருப்பணன் - கருப்பண்ணன் - முனியாண்டி - சடையாண்டி - கருப்பணசாமி எனப் பலபெயர் பெறுவர். ஒரு முகமும் - இரண்டு கரங்களுமே உடையவர். வலக்கரத்தில் - கத்தி அல்லது அரிவாள் கொண்டிருப்பார். இடக்கரத்தில் - தண்டம் அல்லது கதை உமையவராக இருப்பார். முறுக்கு மீசையும் - சடாமுடியும் உடையவர். காவி உடை அணியும் வழக்குடையவர். இவர் அருகில் நாய் … Continue reading கருப்பணசாமி

விநாயகி

விநாயகி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு) இவள் விநாயகரின் அம்சமாய் அமர்ந்திருப்பவள். விக்னேஸ்வரி என்றும் பெயர் பெறுவாள். இடையூறுகளைக் களைபவள். யானைத் தலையும் அதில் கரண்ட மகுடமும் உடையவள். நான்கு கரத்தினள். முன் இருகரமும் - அபய வரதமே. பின் வலக்கரத்தில் மழுவும்; இடக்கரத்தில் பாசமும் உடையவள். இந்த பாச - ஆயுதமே இவளை அம்பிகை அம்சம் என்பதை எடுத்துக்காட்டும். இவளின் மார்புப்பகுதியே, இவளை விநாயகி என்று அடையாளம் காட்டும்; உற்று நோக்கினாலேயே - இதை உணர … Continue reading விநாயகி

வீரபத்திரை

வீரபத்திரை - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு) இவள் வீரபத்திரரின் பத்தினி. காப்புக் கடவுளாய் விளங்குபவள். சப்த கன்னியருக்கு முன்பு, முதல் இருக்கையில் அமர்ந்திருப்பவள். ஒரு தலையும், நான்கு கைகளும், மூன்று கண்களும் உடையவள். முன் வலக்கரம் அபய முத்திரையிலும், இடக்கரத்தில் முத்தலைச் சூலமும் கொண்டிருப்பாள். பின் வலக்கையில் மழுவும், இடக்கையில் மானும் உள்ளவள். சுகாசனத்தில் அமர்ந்து கன்னியர் எழுவரையும் காப்பவள். இவளின் திருவுருவ அமைப்பில், மார்புப் பகுதியைக் கொண்டே வேற்றுமையினை அறிந்து கொள்ள வேண்டும். இவளை, தக்ஷிணாமூர்த்தி … Continue reading வீரபத்திரை