பிரபஞ்ச மனம்

*பிரபஞ்ச மனம்*


சென்னை ப்ரெசிடென்சி கல்லூரியில் பி.எஸ்.ஸி படித்த *கணித மேதை ராமானுஜம்* ஆங்கில பரீட்சையில் தேறவில்லை. ஆனால் கணக்கு என்று வந்துவிட்டால் கணிணியைவிட வேகமாகவும் விரைவாகவும் அவரால் பதில் சொல்ல முடிந்தது.

எப்படி உங்களால் இவ்வளவு சீக்கிரம் விடைகளைச் சொல்ல முடிகிறது என்று கேட்டபோது, ‘காளி கொண்டு வந்து தருகிறாள்’ என்று சொன்னார்.

அதையே உளவியல் வார்த்தைகளில் சொன்னால் பிரபஞ்ச மனத்திலிருந்து அவை வந்தன என்று சொல்லலாம்.

கிட்டத்தட்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கான – எல்லாமே முக்கியமானவை – உரிமைகளை வாங்கிய *தாமஸ் ஆல்வா எடிசன்* கூட தன்னால் சிந்தித்து ஒரு முடிவுக்கு வரமுடியாமல் போகும்போதெல்லாம் ஏதோ ஒன்று இப்படிப்போ என்று வழி காட்டும், அந்த வழியில் சென்றால் அங்கே விடை இருக்கும் என்பதாகக் கூறியுள்ளார்.

‘நமக்கு மேல் ஒரு சக்தி உள்ளது என்ற நம்பிக்கை இல்லாதவனால் எதையுமே சாதிக்கமுடியாது. சாலையில் போகும்போது, விலைமதிப்பற்ற ஒரு பொருளை கண்டெடுத்தவன் போன்றதுதான் என் நிலை’ என்று மேதை ஐன்ஸ்ட்டீன் கூறினார்.

ரேடியம் கண்டுபிடித்த *மேரிக்யூரி*, ஆரம்பத்தில் அதற்கான வழி தெரியாமல் முயன்று தவித்து கிட்டத்தட்ட தோற்று தூங்கிப்போனபோது, தூக்கத்திலேயே எழுந்து திடீரென்று தனது சோதனைச் சாலைக்குப் போய் அந்தக் கண்டுபிடிப்புக்கான ‘ஃபார்முலா’வை எழுதி வைத்துவிட்டு மறுபடி போய் படுத்துவிட்டார்.

தூங்கிவிழித்து போய்ப் பார்த்தவர் ஃபார்முலாவைப் பார்த்து அசந்து போயிருக்கிறார்.

யார் கொடுத்தது அதை? வேறு யார், ஆண்டவன்தான். அவன்தான் பிரபஞ்ச மனம். அவன்தான் பிரபஞ்ச அறிவு. அவனே எல்லாம்.

*ஆண்ட்ரூ கார்னிகி* என்ற கோடீஸ்வரர், விமானத்தில் தூங்கிக் கொண்டிருந்தார்.

திடீரென்று விழித்த அவர் தன் பாக்கெட்டிலிருந்து சின்ன குறிப்பேட்டை எடுத்து அதில் ஏதோ எழுதிவிட்டு பின்பு மறுபடியும் படுத்துத் தூங்கிவிட்டார்.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த அவருடைய காரியதரிசிக்கு அது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

விமானத்தை விட்டு இறங்கிய பிறகு அதைப் பற்றி அவரிடம் கேட்டார்.

‘அப்படியா? நான் இடையில் விழித்து எழுதினேனா?’ என்று தெரியாததுபோல் கேட்டுவிட்டு, பாக்கெட்டிலிருந்து அந்தக் குறிப்பை எடுத்துப் பார்த்தவர், ‘அட, என் பார்ட்னரிடம் ஒரு விஷயம் பற்றி கருத்து கேட்டிருந்தேன். இப்போதுதான் சொல்லியிருக்கிறார்’ என்றார்.

அந்தப் பதிலைக் கேட்ட காரியதரிசிக்கு ஆச்சரியம் கூடியது.

ஏனெனில் ஆண்ட்ரூ கார்னிகியின் வியாபாரத்தில் அவருக்கு பார்ட்னரே கிடையாது!

‘பார்ட்னரா? யார்?’ என்று கேட்டும் விட்டார் அந்தரங்கக் காரியதரிசி.

‘தெரியாதா? ஆண்டவன்தான். அவனிடம்தான் கேட்டிருந்தேன். தூங்கும்போது சொல்லியிருக்கிறான்’ என்றார்!

பிரபஞ்ச மனத்தைப் புரிந்து அழகாகப் பயன்படுத்தியவர்!

🙏🙏🙏
*ஆல்ஃபா தியானம்* நூலில் இருந்து

Leave a comment