கருத்துக்கும் உண்மைக்கும் இடைவெளி

இந்த இடைவெளி கொஞ்சம் என்பதில் இருந்து மைல்கணக்கில் என்பது வரை இருக்கிறது.

ஒரு பொருளைப் பற்றிய அனைத்து அறிவும் வரும் அளவுக்கு இந்த இடைவெளி குறையும்.

இந்தக் காரணத்தால் தான் நம்மிடம் பரவலாக உள்ள சில சிந்தனைகள் அவ்வப்போது மாற்றம் பெறும்.

அப்படிப் பட்ட ஒன்றுதான் பாம்புக்கு கேட்கும் சக்தி கிடையாது என்பதும்.

நம் நாட்டில் ஆதி காலத்தில் இருந்தே பாம்பு என்று நாம் அழைக்கும் நாகத்துக்கு வழிபாடு இருந்து வருகிறது.

வழிபாடு என்பதையே மூடத்தனமென்று இன்றைய சிந்தனை கூறும் அளவுக்கு நாம் முன்னேற்றம் அடைந்து வருகிறோம்.

வழிபாடு என்பது வியத்தல், மதித்தல், உவத்தல் எனப்படும் வினைகளுக்குப் பின் தோன்றும் ஒரு செயல்.

பிறரை வியக்கிறோம். இந்த வியப்பு ஒரு தொடர் போல ஆகிவிடும்போது அது வழிபாடு அளவுக்கு வளர்கிறது.

எனவே வழிபாடு என்பது இயல்பாக மற்றவரை மதிப்பது, உயர்வாக மதிப்பது என்னும் எண்ணங்கள் நிலை பெறும்போது ஏற்படக் கூடியது.

சரி, இந்த சர்ச்சையை விட்டு விடுவோம். அவரவர் பாணியில் பயணிப்போம்.

ஆனாலும் உண்மைகளை அறியும் முயற்சி பொதுவான தேவை.

சரி நாகத்தை வணங்கவேண்டாம்.

ஆனால் அதற்கு காது கேட்காது என்று நம்புவது கூட மூடநம்பிக்கை என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.

நம் நாட்டில் இசையில் கூட நாகத்துக்குப் பிடித்த, நாகம் மயங்கும் இசை என்றே ராகங்கள் உண்டு.

கர்னாடக இசையில் புன்னாகவராளி ராகம் இப்படிப்பட்டது. இந்த ராகம் தோடி ராகத்தின் சேய் ராகமாகும்.

இந்த ராகம் கருணைச் சுவையை வளர்க்கும் ராகம், இரவில் பாட சிறந்த ராகம் என்றெல்லாம் வர்ணிக்கப் படுகிறது. இந்த ராகம் பாம்புக்குப் பிடித்த ராகம். மகுடி என்னும் இசைக் கருவியில் இந்த ராகப் பாடல்கள் வாசிக்கப் படுகின்றன.

பழமையான இந்த ராகத்தைப் பின்பற்றி தமிழில் நொண்டிச் சிந்து எனப்படும் பாடல் வடிவம் ஏற்பட்டுள்ளது என்றும் சொல்லப் படுகிறது.

நாகவராளி என்பது தமிழ்ப் பண்வகைகளில் ஒன்று.

காருக்குறிச்சி அருணாசலம் அவர்களின் மகுடி என்ற நாதஸ்வரப்பாடல் இசையை விரும்பும் அனேகர் அறிந்த ஒன்று. இன்றும் கோவில்களில் உற்சவங்களின் போது விஸ்தாரமாக இப்பாடல் வாசிக்கப் படுகிறது, அங்கு உள்ள நாதஸ்வரக் கலை மக்களால்.

இறைவனே விரும்பும் இந்த ராகம் இறைவன் மேனியில் துள்ளி விளையாடும் நாகத்துக்கும் பிடித்துப் போனதில் வியப்பென்ன இருக்க முடியும்.

நம் தலைவருக்குப் பிடித்தது, பிடிக்காதது எல்லாம் இக்காலத்தில் நமக்கும் பிடிதது, பிடிக்காதது என்று ஆகிப் போகிறதல்லவா. மனிதருக்கே அடிமை செய்யும் கொள்கை பலருக்கு உண்டு.

ஆனால் ஆண்டவருக்கு அடிமையாக இருப்பது அவன் படைத்த அனைத்துக்கும் பொருளுக்கும், உயிருக்கும் மிகவும் பிடித்துப் போன ஒரு வழக்கம்.

இந்த காரணத்தால் பாம்புக்கு இந்த இசை பிடிக்கும் என நாம் நமக்குச் சொல்லிக் கொள்ளலாம்.

காது இல்லாத ஜீவனுக்கு எப்படி ஐயா இசை பிடிக்கும் என்று நம்மில் அதிக அறிவுடையோர் வினவலாம்.

எல்லா அறிவும் படித்து வருவதில்லை. பார்த்தும், கேட்டும், உணர்ந்தும் வரும் அறிவு தான் மிக அதிகம்.

இன்று சிவராத்திரி ஆகையால் பலரும் சிவனைப் பற்றிய பதிவுகள் எழுதுகிறார்கள்.

இன்று எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு அறியியல் தகவல் உங்களோடு பகிர்கிறேன். இது NATURE என்ற அறிவியல் இதழில் இருந்து வந்துள்ள செய்தி:

Researchers have dispelled the myth that snakes are deaf to airborne sound and can ‘hear’ only ground vibrations.

Snakes were placed in a soundproofed room, and sounds with different frequencies were played on speakers.

Death adders (Acanthophis), taipans (Oxyuranus) and brown snakes (Pseudonaja) tended to back away from the source of the sound.

Woma pythons (Aspidites), however, often approached the speakers — possibly because they’re large nocturnal snakes with few predators, unlike the others.

The experiment suggests that snakes can indeed hear sounds in the frequency range and volume of a human voice.

மேலும் தகவலுக்கு இந்த இணைப்பைச் சொடுக்கலாம்:

https://theconversation.com/snakes-can-hear-you-scream…

ந. கணபதி சுப்ரமணியன்

18.02.2023

Leave a comment