பகவத்கீதை – பதினெட்டாம் அத்தியாயம் – மோக்ஷ ஸந்யாஸ யோகம்– 11


*ஞானத்தேடல் பதிவு எண்: 097 நாள்: 08.12 2022*

*பகவத்கீதை – பதினெட்டாம் அத்தியாயம் மோக்ஷ ஸந்யாஸ யோகம் – 11*

சுலோகம் 67: உனக்குக் கூறப்பட்ட இந்த ரகசியமான கீதோபதேசத்தை ஒருபோதும் தவம் இல்லாதவனுக்குச் செல்லக்கூடாது; பக்தியில்லாதவனுக்கும் சொல்லக்கூடாது; கேட்க விரும்பாதவனுக்கும் சொல்லக்கூடாது. எவன் என்னிடம் குறை காண்கிறானோ, அவனுக்கு ஒருபொழுதும் சொல்லக்கூடாது.

எனவே இந்த ஸாஸ்த்ரத்தை யார் யாருக்குப் போதிக்கலாம்? கேட்போருக்கு என்ன தகுதி இருக்க வேண்டும்? எனத் தீர்மானிக்க நான்குவித மாசுடையோருக்கு உபதேசம் பண்ணக் கூடாது என்றும் அர்ஜுனனுக்குத் தடை விதிக்கிறார்.

தவமில்லாதவன்; பக்தியற்றவன்; நாத்திகவாதிகள்; தொண்டு புரியாதவர்கள்; இறைநிந்தை செய்பவன்; ஆகிய இவர்கள் மாசுள்ளவர்கள்; இவர்களுக்குச் சொல்லக்கூடாது மட்டுமன்று, இவர்களுடன் எதுவுமே பேசக்கூடாது.

ஸ்வதர்மத்தைக் கடைப்பிடிப்பதில் கொஞ்சம் குறை இருப்பினும், பிற மூன்று குறைகள் இல்லாவிடின், அவருக்குக் கீதை கேட்கத் தகுதி இருக்கிறது.

கீதையைக் கேட்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள் கேட்கத் தகுதி பெற்றவர்களே.

SPIRITUAL TRUTHS ARE SACRED, not to be offered indiscriminately to gross materialists who abuse or malign their sanctity. Any individual who is extremely identified with the body as the be-all and end-all of existence is a gross materialist; devoted to sense pleasures and possessions, he has no yearning for soul knowledge. Through lack of any true understanding, materialists denounce God; or may otherwise condemn Him for all the ills of the world, never recognizing man’s responsibility, through misuse of free choice, for his own miseries.

Jesus similarly admonished that one should not cast pearls before swine; that is, one should not bestow spiritual wealth on the unappreciative.

சுலோகம் 68: எந்த மனிதன் என்னிடம் உயர்ந்த பிரேம பக்தியைச் செய்து, இந்த உயர்ந்த ரகசியமான கீதா சாஸ்திரத்தை என்னுடைய பக்தர்களுக்குச் சொல்வானோ, அவன் என்னையே அடைகிறான். இதில் சந்தேகமில்லை.

‘பக்தி சிரத்தையுடன் கீதை ப்ரவசனம் பண்ணும் அந்த உத்தமமான பக்தனை விட எனக்கு ப்ரீதிகரமான காரியத்தைச் செய்யக் கூடியவன் மனிதர்களுள் எவனுமே இல்லை! இந்த பூமியில் கீதாப்ரவசனம் பண்ணுபவனைக் காட்டிலும் எனக்கு மிகவும் பிரியமானவன் வேறு ஒருவன் இருக்கப் போவதுமில்லை.’

யாகம், தானம், தவம், ஸேவை, பூஜை, ஜபம், த்யானம் ஆகிய எல்லாமே எனக்குப் பிரியமான காரியங்கள் தான். எனினும் என் கருத்துகளை, என் பக்தர்களிடையே பிரசாரம் பண்ணி விளக்குவதுதான் எல்லாவற்றிலும் மேலானது. உயர்ந்தது. இதற்கு சமமாக நான் மகிழ்ச்சி அடையும் செயல் இந்த உலகில் வேறெதுவும் இல்லை.

இவை போன்ற காரணங்களினால் என் கருத்துகளை, எண்ணங்களை, சிரத்தாபக்தியுடன் பக்தர்களிடையே விளக்குகிற, என்னிடம் ப்ரேமை கொண்ட பக்தரே எனக்கு எல்லோரினும் இனியவர். அவர் தன்னலம் துறந்து நான் உகக்கும் காரியத்தை மட்டுமே செய்கிறார் கீதையைப் பரப்புவது பகவத்ஸேவை.

சுலோகம் 69: அந்த பக்தனைக் காட்டிலும் எனக்கு மிகவும் பிரியமான காரியத்தைச் செய்யக்கூடியவன் மனிதர்களில் வேறு எவனுமில்லை. அப்படியே, பூமியில் அவனைக் காட்டிலும் எனக்கு மிகவும் பிரியமானவன் வேறொருவன் இருக்கப் போவதில்லை.

‘பக்தி சிரத்தையுடன் கீதை ப்ரவசனம் பண்ணும் அந்த உத்தமமான பக்தனை விட எனக்கு ப்ரீதிகரமான காரியத்தைச் செய்யக் கூடியவன் மனிதர்களுள் எவனுமே இல்லை! இந்த பூமியில் கீதாப்ரவசனம் பண்ணுபவனைக் காட்டிலும் எனக்கு மிகவும் பிரியமானவன் வேறு ஒருவன் இருக்கப் போவதுமில்லை.’

யாகம், தானம், தவம், ஸேவை, பூஜை, ஜபம், த்யானம் ஆகிய எல்லாமே எனக்குப் பிரியமான காரியங்கள் தான். எனினும் என் கருத்துகளை, என் பக்தர்களிடையே பிரசாரம் பண்ணி விளக்குவதுதான் எல்லாவற்றிலும் மேலானது. உயர்ந்தது. இதற்கு சமமாக நான் மகிழ்ச்சி அடையும் செயல் இந்த உலகில் வேறெதுவும் இல்லை.

இவை போன்ற காரணங்களினால் என் கருத்துகளை, எண்ணங்களை, சிரத்தாபக்தியுடன் பக்தர்களிடையே விளக்குகிற, என்னிடம் ப்ரேமை கொண்ட பக்தரே எனக்கு எல்லோரினும் இனியவர். அவர் தன்னலம் துறந்து நான் உகக்கும் காரியத்தை மட்டுமே செய்கிறார் கீதையைப் பரப்புவது பகவத்ஸேவை.

“THE DEVOTEE WHO FEELS My omnipresent Self in the little ‘Myself’ (the soul), and from that spiritual perception (not from theoretical understanding) imparts truth to soul-seekers to help liberate them, shall be blessed by additional divine grace. He will easily remain in ecstasy within his soul, feeling there Myself as omnipresent Spirit.”

Though God transcends all misery and is all-blessed, He is conscious of the sufferings of His children, for truly He resides within them and undergoes with them the excruciating tests of delusive existence. Therefore, dearest of all men to Him is the saint who strives to free others from delusion and bring them back to the realization of their forgotten inherent divinity. Eternally dear and blessed are those who gladly endure even worldly persecution for helping others to return to the shelter of God’s protection.

சுலோகம் 70: எந்த மனிதன், இந்த தர்மமயமான, நம் இருவருடைய உரையாடலான கீதாசாஸ்திரத்தைக் கற்பானோ, அவனாலும் நான் ஞான வேள்வியினால் வழிபட்டவனாக ஆவேன் என்பது என்னுடைய கருத்து.

‘எந்த ஒரு மனிதன் இப்படிப்பட்ட தர்மமயமான நம் இருவரின் உரையாடல்களையும், கீதா ஸாஸ்த்ரத்தையும் சிரத்தையுடன் கற்பானோ, அவனாலும் நான் ஞான வேள்வியினால் வழிபாடு செய்யப்பட்டவனாக ஆராதிக்கப்பட்டவனாக ஆகிறேன் – என்பதே என் அபிப்ராயம்.’

பரமாத்மாவான என்னால் மொழியப்பட்ட ஸாஸ்த்ரம் இந்த கீதா ஸாஸ்த்ரம் அதனால் இதில் கூறப்பட்ட எல்லா உபதேசங்களும், தர்மங்கள் ஊடும் பாவுமாக நிறைந்துள்ளன. ஒருசொல் கூட தர்மத்திற்கு முரண்படவில்லை. மக்கள் இதை ஏற்றுக் கடைப்பிடிக்க வேண்டும்.

கீதையின் சுலோகங்களின் உட்பொருளைப் புரிந்து கொள்ளாமல் கீதா படனம், அன்றாடம் பாராயணம் பண்ணுவது ஆகிய இவற்றை விட பொருளுடன் சேர்த்து பொருள் உணர்ந்து நித்ய பாராயணம் பண்ணுவது சிறந்தது.

கீதையைக் கற்பவனுக்கு என்னுடைய ஸகுண ஸ்வரூபம்; நிர்குண ஸ்வரூபம் (உருவமுள்ள ஸ்வரூபம், உருவமற்ற ஸ்வரூபம்) பற்றிய தத்வார்த்தங்கள் பற்றிய உண்மை மெய்யறிவு நன்றாகப் புலனாகிவிடும். கீதை படிப்பவர் தத்வமறிந்து படித்தால் அவர் ஞானயக்ஞம் பண்ணி என்னை ஆராதிக்கிறார் என்று கருதி அவரை நான் ஏற்கிறேன்.

இந்த ஞானயக்ஞம் பொருள்களைக் கொண்டு வேள்வித் தீயில் ஆஹூதி பண்ணும் த்ரவ்ய யக்ஞத்தை விட மிகவும் சிறந்தது (4/33).

எனவே மேன்மையை விரும்புபவன் முழுமனத்துடன், ஈடுபாட்டுடன் கீதையைப் பயில வேண்டும்.

எல்லா ஸாதனைகளுக்கும் முடிவான பயன் பகவானின் தத்வத்தை நன்கறிந்து கொள்வதுதான். இப்படியாக கீதா ஸாஸ்த்ரம் கற்பதன் பெருமையை எடுத்துரைத்தார் பகவான்.

சுலோகம் 71: எந்த மனிதன் நம்பிக்கையுடனும் குறைகாணாதவனாகவும் இந்த கீதா சாஸ்திரத்தைக் கேட்கவாவது செய்வானோ, அவனும் பாவங்களில் இருந்து விடுபட்டுப் புண்ணிய காரியங்கள் செய்யக்கூடிய மனிதர்கள் அடையும் சிறந்த புண்ணிய உலகங்களை அடைவான்.

“கல்வியறிவில்லாத, படிக்க இயலாத மனிதன் ஆஸ்திக புத்தியுடனும், அஹூயையற்றவனுமாய் (ஆத்ம ஐக்யத்தை உபதேசிக்கும் ஸாஸ்த்ரம் என்கிற பேரவாவோடு, பொருள் அறியாமல் செவிகளால் கேட்பவனாயினும்) அவனும்கூட, ஸகல ஸம்ஸார பந்தத்திலிருந்தும் விடுபட்டவனாய், அக்னிஹோத்ரம்’ – முதலிய புண்ய கர்மங்களை அனுஷ்டித்தவர் அடையும் புண்ய லோகத்தை அடைவான்.”

இந்த எனது கீதாஸாஸ்த்ரத்தை ஸ்ரத்தையுடன் செவிகளால் கேட்பதற்குக் கூட ருசியோ, விருப்பமோ இல்லாத மனமில்லாதவன் மனிதன் என்று சொல்லத்தக்கவனே அல்லன். அவன் பெற்ற உயர்ந்த மனிதப் பிறவி வீணே! அவன் மனித உடலுடன் வாழும் விலங்கு!

ஆகையால் கீதையைப் படிக்க வேண்டும், கேட்க வேண்டும் என்ற ருசியுள்ளவன் பேரவாமிக்கவன்தான். ‘நர:’ மனிதன் என்று பொருளாகிறது.

உண்ணும் உணவை அலட்சியப்படுத்துபவன் தன்னுடைய உடம்பு பற்றிய ஜீவிதத்தை அலட்சியப்படுத்துபவன் ஆகிறான். ஆனால் உணவுப் பொருள்களின் உண்மைத் தத்வத்தை அறிந்துணர்ந்த ஒருவன் நல்லுணவை உண்கிறான். இன்னொருவன் உணவின் உயர்தன்மையை உணராதவனாய் அதே நல்லுணவை உண்கிறான்.

அறிந்தவன், அறியாதவன் இருவருமே அந்த உணவினால் நன்மையை பெறுகின்றனர்! இருவருக்கும் கிடைக்கும் நன்மை ஒன்றே.

கீதா ஸாஸ்த்ரமும் மனிதர்களுக்கு ஓர் நல்லுணவு போன்றதே. ஒவ்வொருவரும் ஓய்வு நேரத்தில் கீதா மான்மியத்தை செவிகளால் ஆர்வத்துடன் கேட்டாலே போதும் – புண்யலோகமடைவர்.

கடவுளின் இருப்புத் தத்வத்தை நம்ப வேண்டும். ‘அவனன்றி ஓர் அணுவும் அசையா’ கீதை ஸாஸ்தரம் பகவானின் திருவாய் மொழியாகும்.

கீதா ஸாஸ்த்ரத்தை முறைப்படி பயிலாதவனாயினும் ஸ்ரத்தையுடன் செவிகளால் கேட்டாலே போதும். அவன் பாவத் தளைகளிலிருந்து விடுபட்டு மோட்சம் புகுவான் என்கிறார் பகவான்.

EVEN THOSE SEEKERS WHO CANNOT perceive fully through intuitive realization the deep practical lore of the Gita, but who are wholly devotional and unencumbered by any malicious agnosticism of doubt, will find that by their listening to the Gita with attention, its wisdom can free them from bad habits and inclinations toward wrong activities. Thereby they will attain good karma, and through this transformation gradually perceive within themselves the same blessed consciousness enjoyed by the saints, who actively display in their lives the Gita wisdom. Such an attentive listener and absorber of the truths in the Gita will, after death, be drawn to more beneficial astral or physical worlds, according to the karmic measure of those good qualities developed in him through having devoutly received the Lord’s words.

சுலோகம் 72: பார்த்தா! இந்த கீதா சாஸ்திரம் உன்னால் ஒருமுகப்படுத்தப்பட்ட மனத்தோடு கேட்கப்பட்டதா? (மேலும்) அர்ஜுனா! அஞ்ஞானத்தினாலுண்டான உன் மோகம் அழிந்துவிட்டதா?”

தனஞ்ஜயனே! உன் அறியாமை மதியக்கம் ஆகியவை உன்னை விட்டு அழிந்ததா?”

“அர்ஜுனா! நீ கவனித்துக் கேட்டிருந்தால், நிச்சயம் அதற்குப் பயன் உண்டு. நீ மோஹ வசப்பட்டாய்; தர்மத்தை அறியவில்லை; அறியாமையால் மனக்குழப்பம் அடைந்தாய்; உன் கடமையைச் செய்வது பாவம் என்று எண்ணினாயே! (1/36); பிச்சை எடுத்துப் பிழைப்பேன் – அதுவே சிறந்தது (2/5); சுற்றம் கொல்ல வேண்டுமா? என்றாயே? (1/45, 47); என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க உன்னால் முடியவில்லையே! அவையாவும் இப்போது அழிந்ததா இல்லையா? என் உபதேசம் கேட்ட பின்பு உன் மோஹம் அழிந்திருக்க வேண்டுமே! இப்போதும் உன் மோஹம் அழியவில்லையானால் நீ என் உபதேசத்தைச் சரியாகக் கேட்கவில்லை என்றே பொருளாகிறது” என்கிறார் பகவான்.

அஞ்ஞானத்தில் மூழ்கிவிடாமல் இந்தக் கீதையை ஸ்ரத்தையுடன் பயில வேண்டும்.

THE LORD NOW QUESTIONS ARJUNA: “Have you left your Partha state of mental weakness, having devoutly absorbed with your soul’s intuition the Spirit-wisdom that has been imparted to you? O mighty conqueror, Dhananjaya, do you feel the body-identified, ego-born delusion of ignorance gone forever from within you?”

When the yogi first perceives himself to be the omniscient soul, one with cosmic Spirit, in wonder he introspectively asks himself: “So long I have considered myself a human being! Am I now really a God-man? Am I at last free from ignorance and its dualities of cold and heat, pain and pleasure, life and death?”

சுலோகம் 73: அர்ஜுனன் கூறுகிறார் –“ அச்யுதா! உங்கள் அருளால் எனது மோகம் அழிந்தது. மேலும், என்னால் ஞான ஒளி பெறப்பட்டது. இப்பொழுது நான் சந்தேகமற்றவனாக உறுதியாக இருக்கிறேன். ஆகையால், உங்கள் ஆணையை நிறைவேற்றுவேன்.

“பரந்தாமா! தேவரீருடைய க்ருபையால் அடியேனுடைய விபரீத ஞானம் ஒழிந்தது; இயல்பான ஞானமும் பிறந்தது! தேகாதிகளே ஆத்மா என்கிற துரபிமானமும், சேதனாசேதன ரூபமான ஸகலப் பிரபஞ்சமும் பரமபுருஷனாகிய உமக்குச் சமீபம் என்கிற உண்மையை அறியாமல், மாறாக நான் நினைத்திருந்த துரபிமானமும் அகன்றது.”

நித்ய நைமித்திகமான கர்மம் – பரமபுருஷனாகிய உமக்கு ஆராதன ரூபமாக அனுஷ்டிக்கப்படுவதையுமுணர்ந்தேன். உம்மை அடைய அதுவே உபாயமாகும் எனவும் தெரிந்து கொண்டேன்.

கட்டுக்குடலாக நினைத்திருந்த அஞ்ஞானமும் தொலைந்தழிந்தது. ஆத்மா பிரக்கிருதிக்கு அருகாமையில், ப்ரக்கிருதியின் ஸ்வபாவமின்றி அறிவதே ஸ்வபாவமாய், பரமபுருஷனாகிற – உமக்கு ஸேஷப்பட்டு, – உம்மால் ஆளப்படுவதே ஸ்வரூபமாயிருக்கிறதென்றும் ஞானம் பிறந்தது.

அகில உலகங்கட்கும் உற்பத்தி ஸ்திதிலயங்களை லீலையாய் செய்பவராய்; எல்லாக் குற்றம் குறைகளுக்கும் எதிரான கல்யாணமே ஸ்வரூபராய்; ஸ்வபாவசித்தங்களும் அளவிலா அதிசயம் நிறைந்தவைகளுமான, ஞானம் – பலம்-ஐஸ்வர்யம் – வீர்யம்-சக்தி – தேஜஸ் முதலான எல்லாக் கல்யாண குணங்களுக்கும் பெருங்கடலாய்; ‘பரப்பிரம்மம்’ என்னும் சொல்லுக்குப் பொருளாய் இருக்கிற, பரமபுருஷரான உம்மைப் பற்றிய உண்மையை அறியும்படியான ஞானமும் பிறந்தது.

இப்படிப் பராபர தத்வங்களை உள்ளபடியே அறிந்து, பின்னர் அதை அப்யஸித்து வந்து, பரம புருஷராகிய உமக்கு நாளுக்கு நாள் ப்ரீதியை வளர்ப்பதே பயனாக, நித்யநைமித்திக கர்மங்களை அனுஷ்டிப்பதாலும், நிஷித்தங்களை ஒழிப்பதாலும், சமம்-தமம் முதலான ஆத்ம குணங்களாலும், பக்தி ஸ்வரூபமாய்ப் பரிணமித்திருக்கிற பரமபுருஷ உபாஸனையால் மாத்திரம் அடையப்படும் பொருளும், வேதாந்த விழுப்பொருளும், பரம புருஷருமான வாசுதேவரும் நீரே என்ற ஞானமும் பிறந்தது.

“அதன் பிறகு பந்துஜன ஸ்நேஹத்தால் கருணையால், மேன்மேலும் விருத்தியான விபரீத ஞானமடியாக வரும் எல்லா துக்கங்களிலிருந்தும் விடுபட்டுவிட்டேன்! ஸந்தேகங்களும் அழிந்தன! இப்போது சுகமான நிலையில் இருக்கிறேன். இனி உமது விருப்பப்படியே, திவ்ய ஸூக்தியின்படியே யுத்தம் செய்கிறேன்.”

“தேவரீரின் க்ருபையினால் அடியேன் செய்ய வேண்டியதைச் செய்தவனானேன். இனி செய்ய வேண்டிய கடமையில் மீதம் ஒன்றும் இல்லை. உமது சொற்படி உலகிற்கு வழிகாட்டும் முறையில், வெறும் நிமித்தமாக, கருவியாக இருந்து, நீர் எப்படிச் செய்விக்கிறீரோ அப்படியே அனைத்தையும் விளையாட்டாகவே செய்து முடிப்பேன்.”

த்ருதராஷ்டிர மன்னருக்கு ஸஞ்ஜயன், கண்ணன்- காண்டீபனின் உரையாடல் வடிவமான, இந்த கீதோதய ஸாஸ்த்ரத்தைத் தான் ஞானக்கண் கொண்டு நேரில் கண்ட காட்சிகளை அப்படியே எடுத்துரைத்து, கீதா ஸாஸ்த்ரத்தைப் பூர்த்தி பண்ணுகிறார் – இரண்டு சுலோகங்களில்.

ARJUNA ACKNOWLEDGES THAT IT IS principally by God’s grace as manifested through his sublime guru that he has at last regained his memory of the blessed Self. He realizes that he has awakened from a dream in which he played the part of a human ego. His doubts about the Lord’s omnipresence, fostered by incarnations of body identification, are now and forever dissolved. He stands ready to follow the advice he has received from the gracious Lord.

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.

**

*உதவி*:
(1) பரமஹம்ச யோகானந்தாவின் “GOD TALKS WITH ARJUNA” (2) சுவாமி சித்பவானந்தரின் “பகவத்கீதை” உரை; (3) ஸ்ரீராமகிருஷ்ணமடம் – பகவத்கீதை பொழிப்புரை – ஸ்ரீ அண்ணா (4) திருக்குறள், (5) புலவர் சீனி கிருஷ்ணசாமி அவர்களின் “கீதோதயம்”

Leave a comment