பகவத்கீதை – பதினெட்டாம் அத்தியாயம் – மோக்ஷ ஸந்யாஸ யோகம்– 10


*ஞானத்தேடல் பதிவு எண்: 096 நாள்: 08.12 2022*

*பகவத்கீதை – பதினெட்டாம் அத்தியாயம் மோக்ஷ ஸந்யாஸ யோகம் – 10*

சுலோகம் 64: மறைபொருளுக்கெல்லாம் மறைபொருளான என்னுடைய மேலான ரகசியமான உரையை மீண்டும் கேள். எனக்கு நீ மிகவும் உற்ற நண்பனாக இருக்கிறாய். ஆகையால், மேலான நன்மை பயக்கும் என்ற கருத்தோடு, இந்த உரையை நான் உனக்குக் கூறுவேன்.

‘அர்ஜுனா! இந்த இரஹஸ்யார்த்தங்கள் எல்லாவற்றிற்கும் ‘பக்தியோகம்’ அத்யந்தம் உத்தமம் என்று முன்பே சொன்னேன். மீண்டும் அவ்விஷயமாகவே சிறந்ததான ஒரு வார்த்தை உனக்குச் சொல்லுகிறேன். ஏனென்றால் நீ எனக்குப் பிரியமானவன்; என் பக்தன்; என் ஸிஷ்யன்; ஆகவே உன் க்ஷேமத்தை நான் விரும்புகிறேன். பரமரஹஸ்யமான வாக்யத்தை உனக்குச் சொல்லுகிறேன். கேட்பாயாக.’

இதற்குமுன் பகவான் சொன்னவை யாவும் மறைபொருள்களே! பரமம் குஹ்யதமம்; உத்தம குஹ்யதமம்; ராஜகுஹ்யம்; பரமம்வச:; இங்கும் ஸர்வ குஹ்யதமம் என்கிறார். ஏனென்றால் பகவத் பிரபாவங்கள், குணங்கள், ஸ்வரூபம், பெருமை, ஆளுமை, அவன் எங்கும் நிறைந்தவன் என்ற உண்மைகளை நாத்திகளுக்கும், தீயோர்க்கும் என்றும் சொல்லக் கூடாதவை. நம்பிக்கை உள்ளோர் மட்டுமே அறியத்தக்கவை.

புற உலகின் அமைப்பு இன்றும் பலருக்கு மறைபொருள்களாகவே இருக்கின்றன! அதைப் போல் தெய்வீக மாண்பும் மறைபொருளாகவே இருக்கின்றது. அனைவர் அகத்திலும் மறைந்திருக்கும் நல்லுறவினன் நம் பெருமான். இயற்கை நிகழ்ச்சிகளை சான்றாக இருக்கின்றன.

உயிர்களை உய்விக்கவே இறைவனருள் இயங்குகிறது. இங்கே பகவான் உபதேசிக்கும் கொள்கைகள் மிகவும் ஆழமானவை! அவை ஜீவனுக்குச் சிறப்பை அளிக்கவல்லவை. அர்ஜுனனின் விருப்பப்படியேதான் கீதோபதேசம் நடைபெறுகிறது. ‘சிரேயசைப் பெற வேண்டும்’ எனத் தொடக்கத்தில் கண்ணனிடம் விண்ணப்பித்தான் அர்ஜுனன். அதன் விளைவாகவே கீதை உதயமாயிற்று! கீதா தத்துவங்கள் உலகப் பொக்கிஷம்.

HAVING ENDOWED EACH SOUL with free will, God will never force anyone to choose Him over lesser desires. But His love is eternal, pursuing His errant children always—from incarnation to incarnation, age after age. Like the mother cow who runs after her straying calf, He follows His offspring with watchful solicitude, ever calling and coaxing them to return to Him.

God’s love toward His children is unconditional because He feels responsible for having sent them out from Him into the delusion and misery of this world. If they see through false worldly lures and look to Him — above all, if they love Him, the Giver, in preference to His material gifts— they return to Him by the power of their virtue. Even in the darkest hours of human decline, when transgressors have become extremely entangled in delusion by repeated performance of wrong actions, God comes through liberated masters or other great incarnations to enlighten and redeem those who repent. Such is the love of God for all His children, even the sinful and those who love Him not. Never does He punish even the continuously erring ones with eternal damnation; somehow, in some way, the unseen God —the Maker, and therefore the Wielder, of the law of cause and effect— helps all men to come back to Him.

But even though God has divorced human beings from conscious perception of Him, still He is romancing them; and through hardships and tests is trying to persuade them to forsake their fascination with the ephemeral shadows of matter and return to His Blessedness.

After the vicissitudes of many incarnations in the lonesome wilderness of delusive creation—after lifetimes of the romance of hiding and almost meeting, of parting and eagerly being sought—man cries from the depths of his heart, “Enough!” When worldly enticements are at last deemed not worth their toll of suffering and precarious wandering in maya, and the player cries out from his core for deliverance, then the hidden God by His unseen touch melts the band of unknowing from man’s eyes of wisdom.

In telling Arjuna how much He loves him, the Lord acknowledges that, though His love shines equally on all, the devotee who empties himself of the ego’s delusions opens his being to receive in full measure the Divine Beneficence.

சுலோகம் 65: அர்ஜுனா! நீ என்னிடமே மனத்தைச் செலுத்து. என்னிடமே பக்தி கொண்டிரு. என்னையே வழிபடு. என்னையே வணங்கு. இப்படிச் செய்வதால் நீ என்னையே அடைவாய். இதையே நான் உனக்கு உண்மையென உறுதி கூறுகிறேன். ஏனெனில், நீ எனக்கு மிகவும் அன்புக்குரியவனாக இருக்கிறாய்.

‘அர்ஜுனா! எல்லாவற்றிலும் நன்மை தரும் உயர்ந்த என் சொல்லைக் கேள்; நீ என்னிடமே உன் மனத்தைச் செலுத்து; என்னிடம் மட்டுமே பக்தி கொள்; என்னையே வழிபாடு செய்; என் ஒருவனையே நமஸ்கரி; இப்படிச் செய்தால் நீ என்னையே அடைவாய்! இதை உனக்கு நான் கூறும் உண்மையான உறுதி மொழியாகக் கொள். ஏன்எனின்? நீ என் பக்தன். என் அன்புக்கு உரியவன்’.

எப்படிப் பக்தி செலுத்துவது?

இறைவன் ஸர்வ வல்லமை படைத்தவன்; அனைத்திற்கும் ஆதாரமானவன்; ஸகலமும் அறிந்தவன்; அனைவர்க்கும் அந்தர்யாமி; எங்கும், எதிலும் நிறைந்தவன்; அனைவரையும் ஆள்பவன்; வியக்கத்தக்க ஸௌந்தர்யம் மாதுர்யம்; ஐஸ்வர்யம்; (அழகு, இனிமை, ஆளுமை) முதலான நற்பண்புகள் நிறைந்தவன்; ஆழ்கடல்! இப்படி அநந்யப் பிரேமையுடன் நொடிக்கு நொடி எண்ணிப் பக்தி செலுத்த வேண்டும்.

‘அர்ஜுனா! ‘ஸத்யம் தே’ ஸத்யம் பண்ணி உனக்கு நான் சொல்லுகிறேன்’ என்கிறார் ஸத்யத்தின் உருவமான பகவான்! சூரியனிடமிருந்து என்ன கிளம்பி வருகிறது? அக்னி, வெப்பம்! வேறு ஒன்றும் இல்லையே.

ஆனால் பரமாத்மா ஸ்ரீகிருஷ்ணன் மனித உடலில் வந்து ஸத்யம் பண்ணுகிறாரே! கண்ணன் ஸத்யத்தின் வடிவமன்றோ! இங்கு அர்ஜுனனுக்கு ஸத்யமே ஸத்யம் செய்கிறது பார்த்தீர்களா?

சான்றோர்களின் வாழ்க்கை இதை ஸத்யமென்று நிரூபிக்கிறது. கண்ணன் ‘நீ எனக்குப் பிரியமானவன்’ என்பதுதான் மஹா வாக்கியம்!

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கண்நீர் பூசல் தரும் (குறள் 71/8)

பகவானை எப்படிப் பூஜிப்பது?

9/26இல் பத்ரம், புஷ்பம், பலம், தோயம், (துளசி, மலர், பழம், நீர்) இவற்றைப் பக்தியுடன் எனக்குத் தந்து பூஜித்தால் போதும். நான் ஸகுண ஸ்வரூபமாக வெளிப்பட்டு ப்ரியத்துடன் அருந்துகிறேன் என்றார்.

எந்த ஜாதியினராயினும், பகவானுக்கு ஓர் துளஸிதளம், ஒரு மலர், பழம், ஒரு உத்ருணி, ஜலம் இவற்றை அர்ப்பணம் பண்ணத் தகுதி உண்டு. வழிபடுவதில் பக்தியே உள்ளத் தூய்மையே பிரதானம்.

பணச் செலவின்றி, ஏழை எளிய மக்களுக்கும் இவை கிடைக்கும். சிரத்தா பக்தி, பிரேமையுடன், பகவானின் திவ்ய மூர்த்தியை பூஜிக்க வேண்டும். 9/26,28,34 சுலோகங்களின் விளக்க உரைகளில் விளக்கம் காணலாம்.

இந்த சுலோகத்தில் ‘மாம்’ என்ற சொல் பகவானைக் குறிக்கிறது. பகவானுக்கு ஸகுண நிர்குண உருவங்கள் இரண்டு. அதாவது உருவமற்றது, உருவமுள்ளது. மேலும் எண்ணற்ற ஸ்வரூபங்கள் உள்ளன. இதோ பாருங்கள்! அர்ஜுனனின் முன்னிலையில் ஸ்ரீகிருஷ்ணனின் வடிவில் தேர்த்தட்டில் அமர்ந்து கீதோபதேசம் பண்ணுகிறார்.

முன்பு இராமனாக அவதாரம் பண்ணி உலகில் ‘ஆத்மானம் மானுஷம் மன்யே’ ‘என்னை நான் மனிதனாகவே கருதுகிறேன்’ என்று ஸங்கல்பித்துக் கொண்டு தர்மத்தின் வரைமுறையை நடைமுறையில் நன்கு வகுத்துக் காண்பித்தார். துஷ்ட நிக்ரஹமும் பண்ணினார். ஸிஷ்ட பரிபாலனமும் செய்தருளினார்.

நரசிங்கமூர்த்தியாய் தோன்றி பக்தப் பிரஹ்லாதாழ்வானையும் காத்தருளினார்.

ஸர்வ வல்லமை அநந்த கல்யாண குணங்கள் நிறைந்த எம்பெருமான், எல்லோருக்கும் அந்தர்யாமியாய், எல்லாவற்றிற்கும் ஆதாரமாய் விளங்கும் அந்த புருஷோத்தமனையே ‘மாம்’ என்ற சொல் குறிக்கிறது.

ஏதாவதொரு ஸ்வரூபத்தை, சித்ரபடத்தை, திருவடிச் சின்னங்களை, பாதுகைகளை பக்தியுடன் வணங்கினால் போதும். பாவங்கள் தொலையும். மோக்ஷம் கிடைக்கும்.

அர்ஜுனா! நீ எனக்குப் பிரியமானவன். ஆகையால் நான் உனக்குப் பிரதிக்ஞை செய்கிறேன். உன்னிடம் எனக்கேற்பட்ட அளவு கடந்த பிரேமையால் உனக்கு உறுதி கூறுகிறேன். பிரதிக்ஞை செய்ய வேண்டிய அவசியமே எனக்கில்லை. உன்னுடைய நம்பிக்கையைத் திடப்படுத்துவதற்காகவே உனக்க உறுகி கூறுகிறேன்.

குறிப்பு : மஹாத்மாவான அர்ஜுனனுக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் தாமே திருவாய் மலர்ந்தருளி, தெய்வீகமான கீதோபதேசத்தைச் செய்திருக்கிறார். இஃது அர்ஜுனனின் பெருமைக்குச் சான்று.

கிருஷ்ணன் ‘ஸ்ரீமந் நாராயணன்’ அர்ஜுனன் ‘நரன்’. நரநாராயணர்கள் ஈருடலில் ஓர் உயிராய் விளங்குபவர்கள். இருவரும் ஒரே தத்வ புருஷர்கள்.

ஏஷ நாராயண: க்ருஷ்ண: பால் குநஸ்ச நர: ஸ்ம்ருத: |

நாராயணோ நரஸ் சைவ: ஸத்த்வமேகம் த்விதாக்ருதம் ||

(மஹா.உத்யோக 49/20)

A CRITICAL MIND MIGHT WONDER why God, promising the gift of Himself, is asking the already devoted Arjuna to become absorbed in Him, devoted to Him, and to perform ceremonial sacrifices to know Him, and to bow down to Him.

Further, since this counsel was prefaced in the preceding verse with:

“Again listen to My supreme word, the most secret of all,” the obvious question is, what is so profoundly secret? “Secret” means hidden, an experience of realization transcending the activities and ordinary observations of the mind and senses. Thus, this verse must be read as more than a simple formula for the single-minded bhakta. It is stating “again” the ultimate realization requisite to liberation.

The deeper metaphysical meaning of this stanza is entwined with the spiritual interpretation of stanza 62, wherein Lord Krishna asks Arjuna to remember God, saying: “Tam eva saranam gaccha, ” “Take shelter in Him.”

In stanza 62, Arjuna was urged to concentrate on God as Cosmic Spirit; now he is exhorted to concentrate on God as “Myself.”

To know God as that Spirit which is the origin and end of all beings is indeed the ultimate knowledge. But knowledge of God as the All-in-All is possible only when the devotee realizes first the great “Myself”—that Spirit present within himself, as well as omnipresent in the universe.

Ordinarily, when the devotee speaks of “myself,” he has in mind his ego; but when by meditation he succeeds in uniting his ego consciousness with the intuitive consciousness of his soul, he knows what is the true “Myself.”

This is why the Lord as Krishna is now urging Arjuna to lift his mind from the plane of the senses and be absorbed in the inner “Myself” or God, whose reflected presence in the devotee is his true Self.

Unconditionally and essentially man needs God; God does not need man. God is free, perfect, almighty, and omnipresent; He consciously knows He is the Creator and Owner of all universes. So when God asks His devotee to worship Him and bow down to Him, it is not as an egotistical master, demanding His servant to be absorbed in and devoted to Him, sacrificing all his personal pleasures and continuously making obeisance to Him. Nor is God a pampered tyrant, requiring our flattery and praise to loosen His gifts on us. He is sitting in the hearts of all, knowing the motive of each human prayer. No matter if someone blames Him all day long, God does not come down from His high state to punish that person. But through the karmic law of cause and effect, whosoever holds blasphemous thoughts against God punishes himself by his own evil misunderstandings, and is attracted to the commission of similar errors against his fellow beings.

சுலோகம் 66: தர்மங்கள் அனைத்தையும் அதாவது செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் என்னிடம் அர்ப்பணம் செய்துவிட்டு, சர்ம வல்லமை பொருந்திய, எல்லாவற்றிற்கும் ஆதாரமான, பரமேசுவரனான என் ஒருவனையே சரணடைவாயாக! நான் உன்னைப் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுவிப்பேன். வருந்தாதே!

‘அர்ஜுன்! எல்லா தர்மங்களையும், எல்லா கடமைகளையும் எனக்கே அர்ப்பணம் செய்துவிடு. ஸர்வ வல்லமை பொருந்திய, அனைத்திற்கும் ஆதாரமான, பரமாத்மாவான என் ஒருவனை மட்டுமே சரண் அடைவாயாக. உன்னை நான் எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுவித்து விடுகிறேன்! வீணில் சஞ்சலம் அடையாதே’.

வாசகர்கள் தப்பர்த்தம் பண்ணிக் கொள்ளாமல் உண்மைப் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும். பகவானின் கருத்து ஆழமானது. நம்முடைய நற்புத்தியால் நன்மனத்தால் ஆராய்ந்து உணரவேண்டும். அவசரம் கூடாது.

அவரவர் வர்ணம், ஆஸ்ரமம், சூழ்நிலை, ஸ்வபாவமான இயல்பு ஆகிய இவற்றிற்கேற்ப எந்தெந்த மனிதனுக்கு ஸாஸ்த்ர முறைப்படி என்னென்ன கர்மங்கள் சொல்லப்பட்டிருக்கின்றனவோ அவை தான் ‘ஸர்வதர்மாந்’ என்பதற்கு நேர் பொருள். 12/6இல் ‘ஸர்வாணி கர்மாணி’ என்றும், 18/57இல் ‘ஸர்வகர்மாணி’ என்றும், இதையேதான் சொன்னார். இவற்றின்படி சுலோகங்களின் உரைகளில் சொன்னபடி அவை அனைத்தையும் பகவானுக்கு அர்ப்பணம் பண்ணுவதுதான் ‘த்யாகம்’.

இந்த 18ஆவது அத்தியாயத்தில் ‘த்யாகம்’ பற்றிக் கூறுகையில், 7ஆவது சுலோகத்தில் ஸாஸ்த்ரங்கள் விதித்துள்ள அன்றாடக் கடமைகளைச் செய்யாமல் விட்டுவிடுவது முறையாகாது. அறிவுக் குழப்பத்தால் அப்படித் தியாகம் பண்ணுவது தாமஸத் தியாகமாகும் என்றும் தெளிவாகவே சொன்னார்.

எனவே இங்கு ‘பரித்யஜ்ய’ என்ற சொல்லுக்குக் கர்மங்களைச் செய்யாமல் விட்டுவிடலாம் என்று அர்த்தம் பண்ணலாகாது.

க்ஷத்ரிய தர்மமான போரை விட்டுவிடக் கூடாது. போரிட்டேயாக வேண்டும். இது அர்ஜுனனுக்கு பகவான் இடும் ஆணை. ‘போரினால் விளையும் பாபங்களிலிருந்து உன்னை விடுவிக்கிறேன்’ என்றுதான் பகவான் சொல்லுகிறார்.

A PROSAIC INTERPRETATION OF THIS COUNSEL unequivocally advises the deeply devoted Arjuna, and all true renunciants, to relinquish worldly duties entirely in order to be single-pointedly with God. “O Arjuna, forsake all lesser duties to fulfill the highest duty: find your lost home, your eternal shelter, in Me! Remember, no duty can be performed by you without powers borrowed from Me, for I am the Maker and Sustainer of your life.

More important than your engagement with other duties is your engagement with Me; because at any time I can recall you from this earth, canceling all your duties and actions.

“Under the direction of the body-bound ego, the performance of nature-instigated good or bad, important or unimportant duties will keep you entangled in insatiable desires and the miseries of repeated reincarnations.

But if you restore your lost memory of My presence in your soul, and remain continuously conscious of Me, I will—by the virtue of that inner oneness with Me—liberate you completely from the sin of nonperformance of lesser duties. Grieve not over any supposed loss of physical or material gratification. It was I who decreed your birth as a mortal being. By your wrong responses to My cosmic delusion, you have imprisoned your soul image in that mortal existence. Your fulfillment lies not in earthly entanglements, but in Me. Find your Self in Me, which can be done only by removing all obstructions in your path.”

THE CORRELATED METAPHYSICAL INTERPRETATION of this oft-quoted sixty-sixth stanza is being explained now:

An ordinary man is continually performing duties to his body-bound ego, his physical body, his five senses, and his sense-infected mind and intelligence. Thus, in the guise of “duty,” this hapless doer commits all kinds of errors by which he is bound to the miseries of nature’s realm through countless cycles of rebirth.

So Krishna says: “O Arjuna, be a real renunciant! By the practice of yoga meditation withdraw ( vraja) your mind, intelligence, life force, and heart from the clutches of the ego, from the physical sensations of sight, hearing,  smell, taste, and touch, and from the objects of sense pleasures! Forsake all duties toward them! Be a yogi by uniting yourself to My blessed presence ( mam ekam saranam) in your soul. Then I will save you; by nonperformance of the lesser duties to the senses under the influence of delusion, you will automatically find yourself free from all sinful troubles.

“If you remain in ecstasy with Me, fulfilling all divine duties as directed by Me, forsaking all ego-instigated duties, you will be liberated.”

As discussed in previous contexts (e.g., see commentary on I:1), the ordinary man’s mind is usually identified with external possessions and sense pleasures connected with the surface of the body. The physical consciousness is sustained by the mind, intelligence, and life force operating through the subtle spinal centers of life and intelligence. Through the lower plexuses (lumbar, sacral, and coccygeal), the searchlights of intelligence, mind, and life energy continually operate externally, feeding the nervous system and revealing and sustaining the sense pleasures and physical consciousness. The yogi reverses the searchlights of intelligence, mind, and life force inward through a secret astral passage, the coiled way of the kundalini in the coccygeal plexus, and upward through the sacral, the lumbar, and the higher dorsal, cervical, and medullary plexuses, and the spiritual eye at the point between the eyebrows, to reveal finally the soul’s presence in the highest center ( sahasrara) in the brain.

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.

**

*உதவி*:
(1) பரமஹம்ச யோகானந்தாவின் “GOD TALKS WITH ARJUNA” (2) சுவாமி சித்பவானந்தரின் “பகவத்கீதை” உரை; (3) ஸ்ரீராமகிருஷ்ணமடம் – பகவத்கீதை பொழிப்புரை – ஸ்ரீ அண்ணா (4) திருக்குறள், (5) புலவர் சீனி கிருஷ்ணசாமி அவர்களின் “கீதோதயம்”

Leave a comment