பகவத்கீதை – பதினெட்டாம் அத்தியாயம் – மோக்ஷ ஸந்யாஸ யோகம்– 12

*ஞானத்தேடல் பதிவு எண்: 098 நாள்: 08.12 2022*

*பகவத்கீதை – பதினெட்டாம் அத்தியாயம் மோக்ஷ ஸந்யாஸ யோகம் – 12*

சுலோகம் 74&75: ஸஞ்ஜயன் கூறுகிறார் – ‘இவ்வாறு நான், பகவான் ஸ்ரீவாசுதேவருக்கும், மகாத்மாவான பார்த்தனுக்கும் இடையே நிகழ்ந்த இந்த அற்புதமான உட்பொருள் கொண்ட புல்லரிக்கக் கூடிய உரையாடலைக் கேட்டேன். ஸ்ரீவியாச பகவானுடைய அருளினால் தெய்விகப் பார்வை பெற்ற நான் உயர்ந்த ரகசியமான இந்த யோகத்தை, அர்ஜுனனைக் குறித்துச் சொல்லுகின்ற சாட்சாத் யோகேசுவரனான பகவான் ஸ்ரீகிருஷ்ணனிடமிருந்து நேரிடையாகக் கேட்டேன்.

ஸஞ்ஜயன் : ‘ஓ திருதராஷ்டிர மஹாராஜாவே! இப்படியாக வஸுதேவரின் மைந்தனான கண்ணனுக்கும், அவருடைய அத்தையின் குந்தி தேவியின் மகனாய், மஹாபுத்திசாலியாய் கண்ணனின் திருவடிகளை அண்டிய வில்லாளியான விஜயனுக்கும் இடையே நடந்த அத்யத்புதமான உரையாடல்களை மயிர் கூச்செழும்படியாக மேற்கூறியபடி நான் கேட்டேன்.’

‘பகவான் வேதவ்யாஸ மஹர்ஷியின் அநுக்ரஹத்தால் திவ்யமான ஞானக்கண்ணும், தொலைதூர ஒலியையும் கிரஹிக்கவல்ல திவ்யமான செவிகளையும் அடியேன் பெற்றவனாகையாலே, இந்த யோகமென்னும் மேலான உயர்ந்த இரகசியத்தையும், ஞானப்பலன்களுக்கெல்லாம் நிதியாய் விளங்கும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தாமே தம் திருவாயினால் அருளிச் செய்யக் கேட்டேன்.’

இப்படியாக கீதா சாஸ்த்திரத்தின் பெருமையையும், மஹிமையையும் ஸஞ்ஜயன் புகழ்ந்தார். நர ரிஷியின் அவதாரமான அர்ஜுனன், எல்லா உயிர்களின் உள்ளங்களிலும் அந்தர்யாமியான பரமாத்மா கிருஷ்ணன் என்று, நரநாராயண அவதார புருஷர்கள் இருவரையும் ஸ்லாகித்து, திருதராஷ்டிர மன்னருக்கு எடுத்துரைத்தார் ஸஞ்ஜயன். பகவான் பரமாத்மாவான ஸ்ரீகிருஷ்ணனின் திருவாய்மொழி கீதா ஸாஸ்த்ரம்! வேறு பிற எந்த ஸாஸ்த்ரமும் கீதா ஸாஸ்த்ரத்திற்கு ஈடு இணையாக இருக்க முடியாது என்பது ஸஞ்ஜயனின் அபிப்பிராயமாகும். எல்லா ஸாஸ்த்ரங்களின் ஸாரமன்றோ கீதா ஸாஸ்த்ரம்!

கீதா ஸுகீதா கர்த்தவ்யா கிமந்யை: ஸாஸ்த்ர ஸங்க்ரஹை:

யா ஸ்வயம் பத்மநாபஸ்ய முக பத்மாத் விநி: ஸ்ருதா:

(மஹா. பீஷ்மபர்வம் 43/1)

‘கீதையையே கருத்தூன்றி ஈடுபாட்டுடன் செவிமடுப்பது, கீர்த்தனம் செய்து இசையுடன் பாடுவது, கற்பது, பிறருக்கும் கற்பிப்பது, மனப்பாடம் செய்வது, பொருள் உணர்வது ஆகியவற்றைச் செய்தால் பிற நூல்களைப் படிக்க வேண்டிய அவசியமே இல்லை! இது பகவான் திருமுகத் தாமரையிலிருந்து வெளிப்பட்டதன்றோ?’

மஹாத்மா அர்ஜுனன் கேட்க, ஸாக்ஷாத் பரமாத்மா கிருஷ்ணன் திருவாய் மலர்ந்தருளிய இந்தக் கீதோபதேசம் தனிச்சிறப்புடையது; ஆச்சர்யமானது; இந்த உயர்ந்த கீதையின் மூலம் மனிதன் இறைவனின் தெய்வீகமான, உலக இயற்கைக்கு அப்பாற்பட்ட குணப்ரபாவங்கள் அவனின் ஆளுமையுடன் கூடின ஸமக்ர ரூபத்தின் முழுமையான ஞானத்தை அடையப் பெறுகிறான்.

‘உடல் முழுதும் கேட்கக் கேட்கப் புல்லரிக்கிறது’ என்கிறான் அர்ஜுனன்! ‘மயிர் கூச்செழும்படியான பகவானின் உபதேசம்’ எனப் போற்றுகிறான் ஸஞ்ஜயன்!

‘வ்யாஸப்ரஸாதாத் ஸ்ருதவாந்’ என்ற வாக்யத்தின் மூலம் பகவான் வியாசருக்கு நன்றி தெரிவிக்கிறான் ஸஞ்ஜயன். ஏன்? ஞானக்கண் பெற்ற பெரும் பாக்யம் பண்ணினவன் ஸஞ்ஜயன்.

தேரோட்டிக்குக் கிடைத்த பாக்யமும், புண்ணியமும், நாடாளும் மஹாராஜனுக்குக் கிடைக்கவில்லை. செல்வம் பெற்ற பாவம்.

இந்த ஸாஸ்த்ரம், கர்மயோகம், ஞானயோகம், த்யானயோகம், பக்தியோகங்களின் மூலம் பகவானை அடையும் உபாயத்தைச் சொல்லி வழி காட்டுகிறது.

SANJAYA (THE INTUITIVE SIGHT of impartial introspection) has been relaying to King Dhritarashtra (father of the one hundred sense tendencies; the hitherto blind mind) the entire discourse between Krishna (omnipresent Spirit) and Arjuna (the soul). In conclusion, he exclaims: “I am thrilled to have been awakened from my stupor of delusion and to have felt all the truth in this sacred dialogue.”

No devotee should be satisfied until he has sufficiently developed his intuition—by impartial introspection and deep meditation, as in Kriya Yoga —to experience the communion of soul and Spirit. If a devotee meditates intensely for at least short periods every day, and has longer periods of three or four hours of deep meditation once or twice a week, he will find his intuition becoming sufficiently superfine to realize unendingly the dialogue of blissful wisdom exchanged between the soul and God. He will know the interiorized state of communion in which his soul “talks” to God and receives His responses, not with the utterances of any human language, but through wordless intuitional exchanges. That student of the Gita will be divinely benefited who is not satisfied with theoretical study, but reenacts within his own being the soul-awakening experiences of Arjuna.

SANJAYA CONTINUES TO EXPRESS WONDERMENT at the revelation he has received:

“I have perceived through my own intuition the dialogue of blissful wisdom between God and Arjuna’s intuitive soul perception.” The devotee whose interiorized, introspective divine sight (Sanjaya) receives the blessing of support of a spiritualized state of consciousness manifesting the soul’s pure discriminative perception (Vyasa), thereby realizes the divine communion of soul and Spirit, and becomes fully possessed of all wisdom inherent in that blissful union.

சுலோகம் 76: அரசே! பகவான் ஸ்ரீகிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்குமிடையே நடந்த இந்த ரகசியமான நன்மை தரக் கூடிய அற்புதமான உரையாடலை நினைத்து நினைத்து, நான் மீண்டும் மீண்டும் மகிழ்கிறேன்.

மஹாராஜனே! பரமாத்மா ஸ்ரீகிருஷ்ணனுக்கும், மஹாத்மா அர்ஜுனனுக்குமிடையே நடைபெற்ற, இந்த ரஹஸ்யமான நன்மை விளைவிக்கும் உரையாடல்களை அடிக்கடி மீண்டும் மீண்டும் எண்ணி எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.

‘பகவான் செய்த உபதேசம் என் உள்ளத்தை ரொம்பவும் கவர்ந்து விட்டது. எனக்கு வேறொன்றுமே உயர்ந்ததாகத் தோன்றவில்லை! என் மனத்தில் அந்த அற்புத உபதேசம் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று ஸஞ்ஜயன் தன் நிலையை, திருதராஷ்டிர மன்னனுக்கு விளக்கினான்.

THE INTUITION OF SANJAYA IS OVERJOYED, remembering again and again the amazing sacred communion it has witnessed between Krishna and Arjuna (Spirit and soul). Such wondrous intuitional realizations become a permanent and indelible memory, and descend repeatedly into the sphere of the devotee’s inner mind, the king of the senses; metaphorically, from Sanjaya, or impartial intuitive sight, to King Dhritarashtra, the blind mind enlightened by intuition. In the ordinary man, the mind, which should be the real ruler of the senses, is instead enslaved by them, and hence is blind, unable to perceive extrasensory soul perceptions. But the divine man of impartial introspection is blessed with inner realizations, and can readily recall in his mind those intuitional experiences. So this stanza describes how the awakened intuition of Sanjaya again and again rejoiced as it relived its divine experience.

Every devotee who unites his soul with Spirit in ecstasy ( samadhi) can recall in his mind, after coming down from that state, the unending thrills of communion with the Infinite. Just as the true lover, even after long separation from his beloved, is thrilled in body, mind, and soul when he recalls a momentary meeting with the loved one, so the yogi, long after his ecstasy is over, recalls with unending joy his experiences with the Beloved Spirit.

சுலோகம் 77: அரசே! பாவங்கள் அனைத்தையும் போக்கக் கூடிய பகவான் ஸ்ரீஹரியின் மிகவும், அற்புதமான, அழகான அந்தத் திருவுருவையும் நினைந்து நினைந்து, என்னுடைய மனத்தில் பெருவியப்பு உண்டாகிறது. மேலும் நான், மேலும் மேலும் மகிழ்ச்சியடைகிறேன்.

‘மஹாபுருஷனே! பாவங்களைப் போக்கும் ஸ்ரீஹரியின் அந்த அற்புதமான அழகான யோகிகளாலும் காணமுடியாத, மிகப் பெரிய திருஉருவத்தைக் கண்டேன். அதை நான் எண்ணும் போதெல்லாம் என் மனத்தில் பெரும் வியப்பு உண்டாகிறது! நான் மேன்மேலும் மகிழ்ச்சி அடைகிறேன்! ஸ்ரீஹரியின் ரூபம் அற்புதமானது.’

அதிசயமானதும் அரிதுமான அந்த தெய்வீக வடிவழகை நான் எப்படிக் காண முடிந்தது? எனக்கு மிக வியப்பேற்படுகிறது. அந்த திவ்ய ரூப தரிசனம் கிடைக்குமளவிற்கு எனக்குப் புண்யமில்லையே! ஆஹா! ஸ்ரீஹரியின் அவ்யாஜ கருணையே இதற்குக் காரணமன்றோ! அந்த ஸம்பவங்களை எண்ணி எண்ணிப் பார்க்கையில் எனக்குப் பேராச்சர்யமே உண்டாகிறது’ என்று ஸஞ்ஜயன் கூறி மகிழ்கிறான்.

பல யோகிகளுக்கும், பக்தர்களுக்கும் கிடைத்தற்கரிய விஸ்வரூப தர்ஸனத்தைத் தற்செயலாக பகவத் கருணையால் ஸஞ்ஜயன் கண்டான்.

IN THE PREVIOUS STANZA, THE INTUITION of Sanjaya perceived the joyous state of Arjuna’s soul as it was dissolving in the omnipresent nature of Krishna— the ubiquitous, boundless consciousness of Spirit. Sanjaya now tells how his intuition recalls over and over again, each time with a wondrous thrill, the indescribable ever new blessedness of Absolute Spirit, in which all dualities are completely dissolved. In that transcendent state of divine union, which cannot be even dreamed of in the limited consciousness of physical existence, there is a total dissolution of dichotomy. All things exist not as a creation of Spirit, but of naught else than Spirit Itself, the “colossal manifestation” referred to by Sanjaya in this verse and described in the “vision of visions” (XI:15–34). This Divine Immutability, hailed by Arjuna as “the Manifested, the Unmanifested, and That beyond” (XI:37), is the Ultimate Mystery, resolved only in oneness with the Illimitable Absolute.

சுலோகம் 78: அரசே! இங்கு நான் என்ன சொல்லப் போகிறேன்? எங்கு யோகேசுவரனான பகவான் ஸ்ரீகிருஷ்ணனும் எவ்விடத்தில் காண்டீவம் ஏந்திய அர்ஜுனனும் இருக்கிறார்களோ, அவ்விடத்தில் மகாலட்சுமியும் வெற்றியும் ஐசுவரியமும் நிலைத்த நீதியும் இருக்கும் என்பது என்னுடைய கொள்கை.

ஸஞ்ஜயன் கீதைக்கும் இந்த அத்தியாயத்திற்கும் சுபமங்களம் கூறுகிறார்.

यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः 

तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम

யத்ர யோகேஶ்வர: க்ருஷ்ணோ யத்ர பார்தோ தநுர்தர: |

தத்ர ஸ்ரீர்விஜயோ பூதிர்த்ருவா நீதிர்மதிர்மம ||78||

‘மஹாராஜந்! இப்போது உமக்கு நான் என்ன சொல்லப் போகிறேன்? எந்த இடத்தில் ஸர்வாந்தர்யாமியான, யோகேஸ்வரனான, பகவான் ஸ்ரீகிருஷ்ணனும், எந்த இடத்தில் ‘காண்டீபம்’ என்னும் புகழ் பெற்ற வில்லைப் பிடித்து நிற்கும் அர்ஜுனனும் ப்ரகாசமாய் இருக்கிறார்களோ, அந்த இடத்தில் மஹாலக்ஷ்மியும், வெற்றியும், செல்வமும் நிலையான நீதியும் இருக்கும் என்பது என்னுடைய திடமான கொள்கை.’

த்ருதராஷ்டிர மன்னனின் மனத்தில் யுத்தத்தை விலக்கி ஸமாதானம் பண்ணும் எண்ணம் ஏற்பட வேண்டும் என்னும் நோக்கில் ஸஞ்ஜயன் இப்படிச் சொன்னதாகப் பொருள் கொள்ள வேண்டும்.

குருக்ஷேத்ர யுத்தத்தில் பாண்டவர்களுக்கே வெற்றி உறுதி என்பதைத் தெளிவாகவே வெளிப்படையாகவே விளக்கி விட்டார் ஸஞ்ஜயன். காரணம் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா எல்லா யோக சக்திகளையும் ஆட்டிப் படைப்பவர். தன் மாயாஸக்தி யோக ஸக்தியினால் ஒரே கணத்தில் உலகங்கள் எல்லாவற்றையும் படைத்து, காத்து, அழிக்கும் ஸர்வ வல்லமை பெற்றவர்!

யுகாந்தர முடிவில் எல்லாவற்றையும் தம்முள்ளே ஒடுக்கிக் கொள்ளும் திறன் பெற்றவர்!

படைத்தலும், காத்தலும், அழித்தலும் அவருக்கு அளவிட முடியாத ஓர் விளையாட்டுத் தொழில். அவர் ஸாக்ஷ்க்ஷாத் ஸ்ரீமந் நாராயணனே!

ஸ்ரீகிருஷ்ணன் தாமே வலிய வந்து தர்மராஜன் யுதிஷ்டிரருக்குப் போரில் உதவி செய்ய முன்வந்தவர். இப்படியாக ப்ரத்யக்ஷ நிலை இருக்க வெற்றியில் எப்படி ஸந்தேகம் கொள்ள முடியும்?. ஸ்ரீ கிருஷ்ணார்ஜுனர் இருவரும் நர-நாராயணர்கள்.

அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணனின் உற்ற நண்பன் மட்டுமல்லன், உறவினன்! சுபத்ரையை மணந்தவன். கிருஷ்ணன் மைத்துனன்!

ஸ்ரீகிருஷ்ணன் சுதர்சன சக்ரதாரி! அர்ஜுனன் காண்டீபம் என்ற வில்லேந்தியவன் வீரபுருஷன். பாஸுபதாஸ்த்ரம் பெற மஹாதேவருடனேயே போர் புரிந்த மாவீரன்! தமையனார் யுதிஷ்டிரரின் வெற்றிக்கு சபதமேற்றவன். யுதிஷ்டிரருக்குச் சமமானவர் எவரும் இல்லை.

ஸ்ரீகிருஷ்ணனும், வில்லாளியான அர்ஜுனனும் இருக்கும் இடத்தில், செல்வம், ஐஸ்வர்யம், நீதி, தர்மம் எல்லாமிருக்கும் பாண்டவர் வெற்றியில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.

மன்னரே! உமது க்ஷேமத்தில் நீர் நாட்டமுள்ளவராயின், இப்போதாயினும் உமது புதல்வர்களுக்கு புத்திமதி கூறி பாண்டவர்களுடன் ஸமாதானம் செய்து கொண்டு யுத்தத்தைத் தவிர்த்துவிடும் என்கிறார் ஸஞ்ஜயன். (78)

HAVING WITNESSED THE ULTIMATE enlightenment bestowed on Arjuna by Lord Krishna, Sanjaya feels a deep, encouraging conviction within his soul, and declares:

“Wherever there is a devotee like Arjuna, who, though initially weak and oscillating, is still ever ready to free himself by renunciation and by slaying his would-be captors, the sense pleasures, with the bow of self-control; and who is able to unite his soul with the omnipresent Spirit, as manifested in Krishna, Lord of Yoga—that devotee is bound to find the everlasting riches, victory over all matter. Through his positive fulfillment of the divine law of liberation, he will have unending spiritual attainment, miraculous powers, and eternal joy.”

At the battle of Kurukshetra, Arjuna was equipped for victory with his all-powerful bow, Gandiva, and was charioteered by Lord Krishna. The devotee of every clime and age, when he sets out to win the battle against the sense soldiers of the blind king Mind, must similarly equip himself with the bow of self-control; and, charioteered by God, must rally the army of emperor Discrimination with its forces of virtue and its allies of spiritual perceptions.

By practicing renunciation (nonattachment) and by withdrawal of the consciousness from sense perceptions in yoga meditation, every devotee should learn to unite his soul with Spirit. The yogi who is able to sit in meditation with spine erect and to free his soul from the consciousness of the senses and unite it with the bliss of Spirit, and who is able by constant practice of yoga to retain that introspective state of Self-realization in his human nature, will attain the cosmic prosperity of God—all His infinite treasures. By determinedly fulfilling the law of liberation, that devotee will know victory over all nature and possess the highest spiritual accomplishments: all wisdom, love, and powers of the Divine.

om tat sat iti śrīmadbhagavadgītāsu upaniṣatsu
brahmavidyāyām yogaśāstre śrīkṛṣṇārjunasamvāde
mokṣasaṁnyāsayogo nāmāṣṭādaśo ’dhyāyaḥ

Aum, Tat, Sat.

CONCLUSION

THE WORDS OF LORD KRISHNA to Arjuna in the Bhagavad Gita are at once a profound scripture on the science of yoga, union with God, and a textbook for everyday living. The student is led step by step with Arjuna from the mortal consciousness of spiritual doubt and weakheartedness to divine attunement and inner resolve. The timeless and universal message of the Gita is all-encompassing in its expression of truth. The Gita teaches man his rightful duty in life, and how to discharge it with the dispassion that avoids pain and nurtures wisdom and success. The enigmas of creation are resolved in an understanding of the nature of matter. The mysteries that veil the Infinite Spirit are sundered one by one to reveal a beloved God whose awesome omnipotence is tempered with a tender love and compassion that readily responds to a sincere call from His devotees.

In summation, the sublime essence of the Bhagavad Gita is that right action, nonattachment to the world and to its sense pleasures, and union with God by the highest yoga of pranayama meditation, learned from an enlightened guru, constitute the royal path to God-attainment.

Before you is the royal path.

மங்களம் சுபமங்களம்

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதா உபநிஷத் ப்ரஹ்ம வித்யாயாம்

யோக ஸாஸ்த்ரே, ஸ்ரீகிருஷ்ணார்ஜுன ஸம்வாதே

மோக்ஷ ஸந்ந்யாஸ யோகோநாம ஸம்பூர்ணம்

பதினெட்டாம் அத்தியாயம் நிறைவுற்றது.

ஸ்ரீமத் பகவத்கீதா ஸாஸ்த்ரம் ஸம்பூர்ணம்.

முற்றும்.

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.

**

*உதவி*:
(1) பரமஹம்ச யோகானந்தாவின் “GOD TALKS WITH ARJUNA” (2) சுவாமி சித்பவானந்தரின் “பகவத்கீதை” உரை; (3) ஸ்ரீராமகிருஷ்ணமடம் – பகவத்கீதை பொழிப்புரை – ஸ்ரீ அண்ணா (4) திருக்குறள், (5) புலவர் சீனி கிருஷ்ணசாமி அவர்களின் “கீதோதயம்”

Leave a comment