பகவத்கீதை – பதினெட்டாம் அத்தியாயம் – மோக்ஷ ஸந்யாஸ யோகம்– 9


*ஞானத்தேடல் பதிவு எண்: 095 நாள்: 09.12 2022*

*பகவத்கீதை – பதினெட்டாம் அத்தியாயம் மோக்ஷ ஸந்யாஸ யோகம் – 9*

சுலோகம் 57: எல்லாக் கர்மங்களையும் மனப்பூர்வமாக என்னிடம் அர்ப்பணம் செய்து, அப்படியே சமபுத்தியாகிற யோகத்தைக் கடைப்பிடித்து, என்னையே அடைக்கலமாகக் கொண்டு, மேலும் எப்பொழுதும் என்னிடமே உள்ளம் பதித்தவனாக இருப்பாயாக.

அவனவனின் மனம், புத்தி, உடல் அவற்றின் வழியே செய்யப்படும் கர்மங்களையும், உலகியலில் கிடைக்கும் அனைத்தையும், இவை பகவானுடையவை என்றெண்ணி அவை அனைத்திலும் மமகாரம், பற்று, ஆசை இவற்றை முற்றிலும் துறந்து, ‘எனக்கு எதையும் செய்யும் சக்தி இல்லை. பகவானே எல்லாவிதமான சக்தியையும் எனக்கு அளித்து, என் மூலம் தமது விருப்பப்படி எல்லாச் செயல்களையும் செய்ய வைக்கிறார்! நான் எதையும் செய்யவில்லை’ என்று கூறி, பகவானைத் தியானிக்க வேண்டும்.

செயலின் வெற்றி – தோல்வி, ஸுகம்-துக்கம், லாபம்-நஷ்டம் இவற்றில் மேலும் உலகியல் பொருள்கள் எல்லாவற்றிலும் எல்லாப் பிராணிகளிடமும் சமநோக்கு கொள்வதே புத்தியோகமாகும்.

LORD KRISHNA THUS EXHORTS his disciple, Arjuna: “O devotee, disconnecting your intelligence from the physical ego and its consciousness of being the doer of sense-originated actions, unite your pure discrimination with God, feeling Him as the Doer of all your actions. By uniting your intelligence with the Supreme Being, keep your heart saturated with Him.”

Such a yogi, his discrimination absorbed in God, all actions performed only for Him, finds his heart filled with the bliss of Spirit. There is no room for the lesser pleasures of the senses.

சுலோகம் 58: (மேற்கூறியபடி) என்னிடமே உள்ளம் பதித்தவனாக, நீ எனது அருளால் எல்லா இன்னல்களையும் எளிதாகக் கடந்துவிடுவாய். மேலும், அகங்காரத்தின் காரணமாக என்னுடைய சொற்களைக் கேளாவிட்டால் அழிந்து போவாய். அதாவது பெருநிலை பெறமாட்டாய்.

‘முன் சொன்னபடி எல்லாக் கர்மங்களையும் எனக்கு அர்ப்பணம் பண்ண வேண்டும். என்னையே சரண் அடைய வேண்டும்; என்னிடமே மனத்தைச் செலுத்த வேண்டும். இப்படிச் செய்தபின், நீ வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை. என் அருளால் உன்னுடைய இவ்வுலக மேலுலகத் துயரங்கள் யாவும் மிக எளிதில் விலகிவிடும்; உன்னிடம் எந்த விதமான தீய குணங்களும், தீய நடவடிக்கைகளும் இருக்காது. பிறப்பு-இறப்புத் துயரங்கள் நீங்கி, என்றும் ஆனந்தமயமான என்னையே அடைந்து விடுவாய்’ என்று கண்ணன் – காண்டீபனுக்கு புத்திமதி சொல்லுகிறார்.’

அர்ஜுனன் கண்ணனின் பக்தன்; சிஷ்யன். என்றும் கண்ணனையே அண்டினவன். எனவே அவன் கண்ணனில் நிறைந்திருக்கிறான் எனப் பொருள் கொள்ள வேண்டும். அர்ஜுனனுக்கு வீழ்ச்சியில்லை.

THE YOGI WHO HAS HIS HEART FIXED on God finds that, through His grace, all previous material taints of his heart—the sense-bent likes and dislikes— have been eliminated. After explaining this, the Lord cautions His devotee about the treacherous ego.

The meaning here is that when ego consciousness even temporarily substitutes itself for God-consciousness, whether in dutiful or meditative actions, the desire for salvation is lost—and along with it, the requisite effort—whether for a short or long time, owing to the complications created by delusive egotistical desires.

சுலோகம் 59: எந்த அகங்காரத்தின் வசப்பட்டு நீ, ‘நான் யுத்தம் செய்யமாட்டேன்என்று நினைக்கிறாயோ, உன்னுடைய இந்தத் தீர்மானம் பொய்யானது. ஏனெனில், உன்னுடைய இயல்பு உன்னை வலுவில் போரில் ஈடுபடுத்தும்.

The Lord thus reveals this wisdom:

“Through the help of God, O Arjuna, your innate nature ( samskaras) from past incarnations has made you a veteran fighter of the senses from your very birth. But your temporary identification with the physical ego makes you feel that to heed its behest to refrain from destroying your inimical ‘kinsmen’—material sense inclinations—is just. This is a fleeting, erroneous conclusion. As a born sense-fighter, your own nature will compel you to act otherwise. So it is better for you to undertake now your righteous duty, for your samskaras have given you this present excellent opportunity to establish the blessed kingdom of the soul. Thus with its soldiers of discrimination, calmness, self-control, peace, concentration, love of goodness, and other divine qualities, and by the power of yoga and dispassion, you may defeat the physical ego and its undesirable horde of misery-making sensory passions.”

சுலோகம் 60: குந்தியின் மைந்தனே! அறிவுமயக்கத்தின் காரணமாக, நீ எந்தச் செயலைச் செய்வதற்கு விரும்பவில்லையோ, அதையும் உன்னுடைய இயல்பான கர்மவினையினால் கட்டப்பட்டு, உன்வசம் இழந்து செய்யப் போகிறாய்.

இப்பொழுது மயக்கத்தின் காரணமாக நீ எந்தச் செயலைச் செய்வதற்கு உன் க்ஷத்ரிய வம்ஸத்திற்கு ஏற்ற வீரத்தால் உனக்கே இயல்பான கர்மவினையினால், கட்டுப்பட்டவனாய்க் கொண்டு உன் வசம் இழந்து, பிறர் உனக்குச் செய்யும் உபத்ரவத்தைப் பொறுக்காதவனாய், நீயே உன்னையுமறியமால் இந்த யுத்தக் களத்தில் போர் செய்யப் போகிறாய். இதையும் நீ நன்குணர்ந்து கொள்.

இதை அர்ஜுனனுக்கு பகவான் இங்கே நினைவூட்டுகிறார். ‘நீ யுத்தம் செய்ய மாட்டேன் என்கிறாயே அது அஹங்காரத்தின் குரல். போர் புரியாமலிருப்பது உன் கையில் இல்லை! உன்னை அறிஞன் என்றும், வலிமையானவன் என்றும், சுதந்திர மனிதனென்றும், நினைக்காதே!’ என்று எச்சரிக்கிறார்.

‘முன் வினைப்பயன் இப்பிறவியில் ஸ்வபாவமாகவே உனக்கு அமைந்திருக்கிறது. எந்த இயல்பினால் நீ க்ஷத்ரிய வமிசத்தில் பிறந்தாயோ அந்த க்ஷத்ரிய இயல்பே, நீ விரும்பாவிட்டாலும் உன்னை வலுவிலே போரில் ஈடுபடுத்திவிடும்’ என்று மீண்டும் பகவான் அறிவு புகட்டுகிறார்.

சுலோகம் 61: அர்ஜுனா! உடல் என்கிற இயந்திரத்தில் ஏற்றி வைக்கப்பட்ட அனைத்துப் பிராணிகளையும், அந்தர்யாமியாகிய பகவான் தன்னுடைய மாயையினால் அவரவர்கள் கர்மவினைக்கேற்றவாறு சுழலச் செய்து கொண்டு, அனைத்துப் பிராணிகளுடைய இதயத்திலும் வீற்றிருக்கிறார்.

‘என் மாயாசக்தியினால் ப்ரக்ருதி என்னும் உலகமாகிய இயந்திரம் சுழன்று கொண்டிருக்கிறது. ஸகல பூதங்களையும் (உயிர்கள்) குணமயமான என் மாயையைக் கொண்டு அந்தந்தக் குணத்திற்குத் தக்கபடி நான்தான் ப்ரவ்ருத்தி செய்து கொண்டிருக்கிறேன்.’

ரதம், உடல்; அதில் ஏறியிருக்கும் அர்ஜுனன் ஜீவாத்மா; ரதஸாரதி யோகேஸ்வரக் கிருஷ்ண பரமாத்மா! ரதம் இயங்குகிறது. பார்த்தனும் போர் புரிந்தான். இயங்கியது பற்றிய உணர்ச்சி ரதத்துக்கு இல்லை. போர் புரிந்த உணர்ச்சி அர்ஜுனனுக்கு இருந்தது. கண்ணன் பரமாத்மா! அவருக்கு இருந்தது ஸமபாவனையே. தான் செய்த போர் உண்மையில் கண்ணன் செயல் என்பதை உணரக் கடமைப்பட்டிருந்தான் போர் வீரன் அர்ஜுனன். பரமாத்மா பார்த்தஸாரதி மட்டுமே! கையில் ஆயுதம் தரிக்காமல் போரில் தேரை மட்டும் ஓட்டினார். ஆனால் உண்மையில் போர்புரிந்தது கண்ணனே.

GOD’S LIFE AND INTELLIGENCE are omnipresent in all creation and determine, through Nature’s law, the orderly progression of events in the cosmic drama. That same Power, innate in all human beings, subjects each person to the influence of the law, and also enables him to transcend it.

Bound to creation by maya, all beings are inexorably constrained by their individual karmic patterns to reincarnate again and again during these upward and downward cycles, as their spiritual evolution progresses under the influence of cosmic nature. Man may accelerate or delay his evolution by his right or wrong actions (karma). Until right actions prevail, he mechanically moves along with the cycles, as if fixed on a rotating wheel of a machine. But as he gradually develops spiritually, he awakens to his true nature and seeks escape. Only those who discover God within themselves, and who demand freedom—for having been created against their will— does God liberate, after they have worked out the karma caused by misuse of their divine free choice.

Human beings under maya are thus fated to be subject to the compulsions of Nature and influenced by the prevailing dualities of good and evil during their experience of numerous lives and deaths, so long as they mechanically move up and down with creation on the cosmic machine of evolution. But as soon as they turn to God, using rightly the divine gift of free will—their key to escape from maya—and demand liberation, they are freed from birth and death. They suffer no longer from bondage to creation’s evolutionary cycles.

சுலோகம் 62: பரதகுலத்தோன்றலே! நீ எவ்வகையிலும் அந்த பரமேசுவரனையே தஞ்சம் அடைவாயாக! அந்த பரமாத்மாவின் அருளினால் நீ உயர்ந்த அமைதியையும், நிலையான பரமபதத்தையும் அடைவாய்.

உட்பொருள் : அந்த ஸாரதியின் கட்டளைகளை நீ மேற்கொள்ளாவிடினும் அவனுடைய மாயையால் ஏவப்பட்டு நீ போர் செய்யத்தான் போகிறாய்! நீ ஸர்வ சுதந்திரன் அல்லன். எனவே நீ உன் ஸாரதி சொன்னபடியே செயல்படு. போர் முதலிய கர்மங்களை ஆற்று. அதுதான் உன் கடமை. பயனில் பற்றற்றுப் போர் புரி. பலன் தானே கிடைக்கும்! என்றபடி.

ஸர்வ வல்லமைகளும் படைத்த, ஸகலத்திற்கும் ஆதாரமான, அனைத்தையும் தூண்டி ஏவுகின்ற அனைவருக்கும் அந்தர்யாமியான எங்கும் – எதிலும் நிறைந்திருக்கும் அந்த பரமாத்மாவான பார்த்த ஸாரதியான அந்த யோகேஸ்வரக் கிருஷ்ணனையே குறிக்கிறது ‘தம்’ என்ற சொல்.

தனது மனம், புத்தி, புலன்கள், உயிர், செல்வம், சுற்றம், நட்பினர் எல்லாவற்றையும் அந்தக் கண்ணனுக்கே அர்ப்பணம் பண்ணி அவர் பொறுப்பிலேயே அனைத்தையும் விட்டுவிட்டு, அவரையே அண்டியிருப்பதுதான், எல்லா நிலைகளிலும் பகவானைத் தஞ்சம் அடைதலாகும்.

மமகாரம் (அஹங்காரம்) அபிமானம், ஆசை, பற்றுதல் இவற்றை முற்றிலும் துறந்து பகவானின் இச்சைப்படி அவருக்கு ஏவல் புரிந்து கடமையைச் செய்வதன் மூலம் பரமாத்மாவுக்குச் சேவை செய்ய வேண்டும். வாழ்க்கையில் ஸுகம்-துக்கம் எது நேரிடினும், இவை எம்பெருமானின் க்ருபையே என்று மனப்பூர்வமாக ஏற்று மகிழ்ந்திருக்க வேண்டும்.

மிக்க நம்பிக்கையுடனும், அநந்யமான ப்ரேமையுடனும் பகவானுடைய திருநாமம் கல்யாண குணங்கள், பிரபாவம்; இவற்றையே சிந்திக்க வேண்டும்.

THE SIGNIFICANCE OF BHAGAVAN KRISHNA’S advice to Arjuna is that man can receive the liberating grace of God by properly using his free choice to put God first in his life.

“O devotee, knowing that every action is instigated by delusive cosmic Nature, get out of her clutches by performing all actions only to please God.

He alone can free you from His own decrees, from the decrees of cosmic Nature, and from the snare of the self-actuated law of human actions. By concentrating on God in deepest communion, surrendering eagerly and unreservedly your whole being to Him, you will by His grace become established in supreme peace and find eternal freedom in Him.”

சுலோகம் 63: இவ்வாறு மறைபொருளுக்கெல்லாம் மறைபொருளான ஞானம் என்னால் உனக்குக் கூறப்பட்டது. இப்பொழுது நீ ரகசியமான இந்த ஞானத்தை முழுமையாக நன்கு ஆராய்ந்து எப்படி விரும்புகிறாயோ, அப்படியே செய்.

இந்த சுலோகத்தில் முதற்சொல் ‘இதி’ என்பது, பகவானின் உபதேசத்தின் முடிவைச் சொல்லுகிறது. அத்தியாயம் 2 சுலோகம் 11 முதல் இதுவரை பகவான் பேசிய எல்லாவற்றையும் குறிக்கிறது.

‘ஜ்ஞாநம்’ ‘குஹ்யாத் குஹ்யதமம்’ என்ற சொற்களின் பொருள், பகவான் 2/11 முதல் இதுவரை குந்தீபுத்ரன் பார்த்தனுக்கு, தம்முடைய குணங்கள், ப்ரபாவங்கள் தத்வம், ஸ்வரூப ரஹஸ்யங்கள் ஆகிய எல்லாவற்றையும் நன்கு உணர்த்துவதற்காகச் சொன்ன அனைத்தும், ஜ்ஞாநம் என்ற சொல்லுக்குப் பொருள். உபதேச மொழிகள் அனைத்துமே பகவானுடைய நேர்ஞானத்தைத் தரவல்லவை.

ரஹஸ்யங்களுக்கெல்லாம் ரஹஸ்யங்கள் என்பதை ‘குஹ்யாத் குஹ்யதரம்’ என்ற சொல் உணர்த்துகிறது. உலகியலில் ஸாஸத்ரங்களில் எத்தனையோ ரஹஸ்யங்கள் இருக்கலாம். அவற்றுள் பகவத் குணங்கள், ப்ரபாவங்கள், ஸ்வரூபம் இவற்றின் மெய்ப்பொருள் அறிவைப் புகட்டக்கூடிய உபதேசம் யாவும் மேலும் மறைத்துக் காக்க வேண்டியவை. வெளியிடக்கூடாது. இக்கருத்தையே நம் முன்னோர்களும், இன்றைய ஞானிகளும் கடைப்பிடித்து வருகின்றனர்.

அத்தியாயம் 2/11இல் தொடங்கி பகவான் அர்ஜுனனுக்கு ஸாங்கியம், கர்மம் ஆகியவற்றைப் போதித்தார். (2/18, 37; 3/30; 8/7; 11/34) ஆகியவற்றில் ஸ்வதர்மங்களை உபதேசித்தார்.

தம்மையே சரணமடையச் சொன்னார். இந்தக் கடைசி அத்தியாயம் 18இல் அர்ஜுனன் விரும்பிக் கேட்டபடி, ஸந்யாஸம், த்யாகம் இவற்றின் தத்வப் பொருள்களை உள்ளபடியே உபதேசித்தார்.

மேலும் 18/56,57 சுலோகங்களில் பக்திப் ப்ரதானமான கர்மயோகப் பெருமையை உபதேசம் பண்ணினார். தன்னைத் தஞ்சமடைய ஆணையிட்டார்.

பகவான் போதித்தவற்றை அர்ஜுனன் ஏற்றதற்கான அறிகுறியோ, ஸமிக்ஞையோ ஒன்றும் தென்படாமையால், தன் ஆணைப் பயன்களைச் சொன்னார். அவற்றை மதிக்காவிட்டால் உண்டாகும் தீமை பற்றியும் எச்சரிக்கை விடுத்தார். இதன் பிறகும் அர்ஜுனனிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை!

எனவே இந்த சுலோகத்தின் முன்பாதியில் ‘அர்ஜுனா! உனக்கு நான் சொல்ல வேண்டிய எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன்! இனி ஒன்றும் இல்லை’ என்றுரைத்து, பகவான் தன் உபதேச மொழிகளை இத்தோடு நிறைவு செய்து முடித்துக் கொண்டார்.

முடிவாக உன் விருப்பப்படியே செய் என்று சொல்லி அமைதியடைந்தார்.

அர்ஜுனன் ஒரு கல்லுளிமங்கன்! நெஞ்சழுத்தக்காரன்!

KRISHNA, LORD OF YOGA (the God-united guru of Arjuna—symbolically, the voice of Spirit, speaking as vibrations of Truth in the devotee’s soul), has revealed in his divine discourse the wondrous truths of the universal science of yoga:

“O Arjuna, I have narrated to you the most secret wisdom, bestowing on your receptive consciousness the full perception of truth concerning the attainment of liberation. Only by intuitive realization can one wholly grasp such wisdom as to how human actions are subtly influenced by divine decree, by cosmic nature, and by human karma. Hold on continuously to this perception, for if instead you keep your heart identified with the distorting likes and dislikes of the physical ego, you will not understand the mystery of human life and actions. By first perceiving God, you will know how the cosmic delusion, and all creatures and their complex activities, evolved from Him. From this divine insight you will understand that so long as you remain identified with nature, or creation, and with ego-guided human actions and desires, you will be bound. But when you withdraw your consciousness, which by nature’s influence flows toward external objects, and make it flow back toward God, you will find liberation.

“Arjuna, now you know that this secret wisdom about the law of action —the law governing man and the universe and their destinies—can only be experienced by intuitional development. Otherwise it will always remain hidden from you. It is up to you whether, by the free choice of your mind, you will start experiencing the truths related by me and thus liberate yourself, or whether you will act contrarily and remain in bondage.”

GOD AND HIS WISDOM, no matter how well expressed in the scriptures by experienced masters, are ever hidden from the sense-identified intellect of material beings. Materialists cannot receive in their small cups of understanding the vast ocean of Truth.

An ordinary person reading or hearing scriptural truths interprets his visual or auditory sensations and impressions of them according to the limitations of his senses and understanding. A man of spiritual acuity studies the scriptures and then tries to perceive their meaning with his developed intuition. It is better still when a man with the potential of realization first reads or hears truth as interpreted through the fully awake realization of a great master or guru; and then meditates on that revelation until he, likewise, perceives that wisdom as his own.

Thus, in this stanza, the truths revealed by God to Arjuna are declared as “most secret.” Truth fully unveils its mysteries only in the advanced devotee’s own Self-realization, when the perception is not through the intellect, but through the direct experience of the soul.

The Lord therefore exhorts the devotee to meditate on truth and to take up dutifully those actions that bring intuitive enlightenment and that are in accord with the divine wisdom secreted in the God-united soul: “So, Arjuna, perform with the consciousness of your soul-oneness with God all dutiful actions instigated by past karma and cosmic nature, and you will disentangle yourself from creation’s delusions. Remember that you are an independent agent, free to act according to this most profound advice for liberation, or to remain bound by submission to the influence of the ego and the sense consciousness of the body. O Arjuna, misuse not your power of free choice! Determine to increase the power of intuition, by which alone you can perceive this deep wisdom. Use your free will to meditate again and again upon the soul, that you may realize, through your awakened intuition, all the secret truths I have revealed to you.”

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.

**

*உதவி*:
(1) பரமஹம்ச யோகானந்தாவின் “GOD TALKS WITH ARJUNA” (2) சுவாமி சித்பவானந்தரின் “பகவத்கீதை” உரை; (3) ஸ்ரீராமகிருஷ்ணமடம் – பகவத்கீதை பொழிப்புரை – ஸ்ரீ அண்ணா (4) திருக்குறள், (5) புலவர் சீனி கிருஷ்ணசாமி அவர்களின் “கீதோதயம்”

Leave a comment