பகவத்கீதை – பதினெட்டாம் அத்தியாயம் – மோக்ஷ ஸந்யாஸ யோகம்– 8


*ஞானத்தேடல் பதிவு எண்: 094 நாள்: 08.12 2022*

*பகவத்கீதை – பதினெட்டாம் அத்தியாயம் மோக்ஷ ஸந்யாஸ யோகம் – 8*

சுலோகம் 49: எங்கும் பற்றற்ற புத்தியுடைய, ஆசையற்றவனான, உள்ளத்தை அடக்கிய மனிதன் ஸாங்க்ய யோகத்தினால் கர்மத் தளைகளில் இருந்து முற்றிலும் விடுபட்ட பெருநிலையை அடைகிறான்.

யாருக்கு மனம் புலன்களுடன் கூடிய உடம்பிலும், அதன் மூலம் ஸாதிக்கப்படுகின்ற கர்மங்களிலும், எல்லா போகங்களிலும், சராசரங்கள் நிரம்பிய அகில லோகத்திலும் உள்ள பற்று முழுமையாக அகன்றுவிட்டதோ அவனை ‘ஸர்வத்ர அஸக்த புத்தி:’ (பற்றற்றவன்) என்கிறார் பரமாத்மா.

புலன்களையும், மனத்தையும் அடக்கித் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தவனை ‘ஜிதாத்மா’ என்கிறார் பகவான்.

இங்கே ஸந்யாஸம் என்ற சொல்லுக்கு ஞானயோகம் ஸாங்க்யயோகம் என்று பொருள் கூறுகின்றனர். ஸ்லோகம் 51 முதல் 53 வரை இவற்றைப் பற்றி விளக்கப் போகிறார் பகவான். இதன் பயன் என்ன? கர்மத் தளையிலிருந்து பூரணமாக விடுபட்டு விகாரமற்ற பரமாத்மாவை அடைவதே!

‘பரமாம் நைஷ்கர்ம ஸித்தி’ என்ற சொல்லுக்கு ஸாங்க்ய யோகத்தினால், ஸந்யாஸத்தின் மூலம் பரமஸித்தியைப் பெறுதல் என்பது பொருளாகும்.

“அர்ஜுனா! பரம நைஷ்கர்ம ஸித்தியைத் தரக்கூடிய, அந்த ஸந்ந்யாஸ ஸாங்க்யத்தின் தன்மைகளை, ப்ரமத்தை அடையலாம். நீ இவற்றை என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்” என்கிறார் பகவான்.

THAT DEVOTEE ATTAINS THE “uttermost perfection” of his individualized incarnate status when he realizes his true Self, the soul, as being of the essence of God’s transcendent consciousness, untouched by bodily experiences, even as the Lord is immutable beyond the activities He sends forth through Cosmic Nature. The way to liberation lies through this realization of the Self, by God-communion and by remaining in this God-aware state of the soul while performing dutiful actions. Any individual can reach this supreme actionless state by the renunciation of all fruits of actions: performing all dutiful acts without harboring in his heart any likes and dislikes, possessing no material desires, and feeling God, not the ego, as the Doer of all actions.

That yogi who is not attached to his own body or his family or the world, even though he joyously works for them with the sole desire of pleasing God; who is in full control of his mind ( manas), intelligence ( buddhi), ego ( ahamkara), and heart ( chitta); who is free from all desires for sense pleasures; and who works, yet renounces the fruits of actions, becomes free from the reincarnation-causing triple qualities of mortal and natural actions. The consciousness of such a yogi rests in the immutability of the eternal Spirit.

சுலோகம் 50: ஞானயோகத்தினுடைய எந்த உயர்ந்த நிலை உண்டோ, அந்த நைஷ்கர்ம்ய ஸித்தியை அடைந்த மனிதன் பிரம்மத்தை எப்படி அடைகிறானோ, அந்த முறையை, குந்தியின் புதல்வனே! சுருக்கமாகவே என்னிடமிருந்து அறிந்துகொள்.

எல்லா உயிர்களின் முயற்சிகளுக்கு இடையில் மனிதனது முயற்சி மிக மேலானது. மற்றவைகளின் சித்தி ஸ்தூல வடிவத்தில் அமைகிறது, ஸ்தூல வடிவாத்தோடு அழிந்தும் போகிறது. மனிதனுடைய பரிபாகம் மனத்தகத்தில் அமைகிறது. ஒரு மனிதனைப் போன்று இன்னொரு மனிதன் இருப்பதில்லை. எத்தனை மனிதரோ அத்தனை வித மன பரிபாகம் உண்டு. பல ஜன்மாந்திரங்களில் அது வந்து அமைகிறது.

‘ப்ராநிஷ்டா’ – ஞான யோகத்தின் இறுதியான மிக உயர்ந்த பொருள். அதுதான் ‘பராபக்தி’ தத்வக் கிஞானம். அதுதான் ஸாதனைகளின் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஞானநிஷ்டா-ஞானத்தின் உயர்நிலை என்றார். அதன் பயன் தத்வக்ஞானம் பராநிஷ்டா.

நித்யமானது, விகாரமற்றது, நிர்குணமானது, உருவமற்றது, ஆனந்தமயமானது என்றெல்லாம் துதிக்கப்படுகிறது. அந்தப் பூரணமான பரமாத்மாவே ப்ரம்மம். நாம், நம் மனம், மொழி, மெய், காயம், புலன்கள் இவற்றின் துணையால் நற்செயல் பலவும் புரிந்து அந்த நிர்க்குன ப்ரம்மத்தை அடைய வேண்டும். அதுவே நம் உயிரின் இறுதியான லட்சியம்.

A YOGI, HAVING REACHED THE ACTIONLESS state of transcendental soul-realization, thereby frees himself from the effects of the three qualities of Nature and of his own individual karma. He thence attains oneness with Brahman, which is the consummation of all knowledge—the full flowering of his realization of truth into oneness with Truth, the Omniscient Spirit. In this state he fully realizes his identity with the Supreme Lord—He who remains above all vibratory activities even though He manifests out of Himself all cosmic activities of creation. At one with God, the yogi learns to act in the world without attachment, even as does God.

Stanzas 51, 52, and 53, following, specify in brief the yoga practices necessary to reach the supreme state of oneness with Spirit.

சுலோகம் 51-53: தெளிந்த அறிவுடன் கூடியவனாகவும், எளிய சாத்விக-அளவான உணவு அருந்துபவனாகவும், ஒலி முதலிய புலன்நுகர்ப் பொருட்களைத் துறந்து, தூய்மையான இடத்தில் தனித்திருந்து, சாத்விகமான உறுதியோடு உள்ளத்தையும் புலன்களையும் அடக்கி, மனம்-வாக்கு-உடல் ஆகியவற்றைத் தன்வசத்தில் நிறுத்தி, விருப்பு-வெறுப்புகளை முற்றிலும் அழித்து, திடமான வைராக்கியத்தை அடைந்தவனாகவும், அகங்காரத்தையும் வலிமையையும் கர்வத்தையும் காமத்தையும் கோபத்தையும் சொத்து சேர்த்தலையும் நீக்கி, எப்பொழுதும் தியான யோகத்தில் நிலைத்திருந்து, மமகாரமற்று, சாந்தியோடு கூடியவனாகவும் உள்ளவன், ஸத் சித் ஆனந்தமயமான பரப்பிரம்மத்தில் இரண்டறக் கலப்பதற்குத் தகுதி பெறுகிறான்.

ஞானயோக விவரணம்

“தூய்மையான அறிவுடன் கூடியவன், எளிமையான ஸாத்விகமான அளவோடி கூடிய உணவைப் புசிப்பவனாக (மிதாஹாரம் ஸுக போஜனம்) ஒலி ஸப்தம் முதலான புலன் நுகர் பொருள்களைத் தியாகம் பண்ணி விடுத்து இந்தரியாதி விஷயங்களை அறவே துறந்து, விருப்பு வெறுப்புகளை முற்றிலும் விட்டுவிட்டு, ஸுத்தமான இடத்தில் ஆஸனமிட்டு தனிமையில் ஸாத்விகமான உறுதியுடன், உள்ளத்தையும், புலன்களையும் ஆமை போல உள்ளடக்கி, உண்டி சுருங்கி, மனம், மொழி, மெய்யை அடக்கியாண்டு, தியான யோகத்தில் மூழ்கி, வைராக்யம் பூண்டு, அஹங்காரம் – வலிமை, செருக்கு, காமம், கோபம் இவற்றை விட்டு, மமகாரம் இன்றிச் சாந்தமாயிருப்பவன் அந்த அசையாப் பரப்ரமத்தோடிணைய முழுத் தகுதியையும் பெற்றுவிடுகிறான்” என்கிறார் கண்ண பரமாத்மா.

மேற்சொன்னபடி உறுதியுடன் சாதனை புரிபவன் ப்ரம்மஸ்வரூபம் அடையத் தகுதி பெற்றவன். அவன் நோக்கில் ஆத்மா, பரமாத்மா இரண்டும் ஒன்றே! வெவ்வேறன்று.

THAT DEVOTEE IS QUALIFIED TO ATTAIN Brahman, Spirit, whose discriminative intelligence ( buddhi) is wholly free from the adulteration of sense entanglements, cognizant only of the purity of soul bliss; who with resolute patience ( dhriti) keeps his perception centered on the Self, remaining established in soul consciousness without ever being identified with the physical ego and its bodily instrumentalities; who abandons all luxuries of the five senses (beginning with enticing conversation with others—the desire to hear and be heard); and who, free of likes and dislikes, is satisfied by only the bare necessities for sustaining life.

Such a yogi, possessing the divine dispassion ( vairagya) of detachment from worldly objects and desires, observes the sattvic discipline of austerity of body, speech, and mind. In the conduct of his holy life, he not only remains in an outwardly quiet place conducive to meditation and spiritual calm, but also, perceiving in yoga meditation the soul, mind, and life force in their innermost subtle spinal tunnel of escape from the body ( brahmanadi), remains there, experiencing the real sense-tumult-free seclusion leading into the omnipresence of Spirit.

The soul, mind, and life force of the yogi in samadhi meditation have had to pass first through three outer tunnels ( sushumna,  vajra, chitra) to reach the innermost channel of brahmanadi—the final exit out of the bodily prison into the freedom of Brahman.

A yogi who can thus disconnect his mind at will from the attractions of both material and subtle sense objects remains no longer identified with the physical ego and its attachments to either physical or miraculous powers, or to the “superiority complex” of pride, or to latent sense desires, or to possessions. He is free from anger springing from thwarted longings and inclinations, free from desire for luxuries (what I often call the “unnecessary necessities” of life), and free from the consciousness of “me and mine.” Such a yogi is ready to merge in Brahman.

சுலோகம் 54: ஸத் சித் ஆனந்தமயமான பிரம்மத்தில் ஒன்றிய மனத்தெளிவுடைய யோகி எதற்கும் வருந்தவதில்லை. அனைத்துப் பிராணிகளிடமும் சமபாவனையோடு இருந்துகொண்டு, என்னுடைய உயர்ந்த பராபக்தியைப் பெறுகிறான்.

புனிதமாகவும், தெளிவாகவும், அமைதியுடனும், எக்காலத்தும் தூய்மையுடனும், மகிழ்ச்சியுடனும் விளங்கும் மனம் படைத்தவர் ‘ப்ரஸந்நாத்மா’ ப்ரம்ம மாகிவிட்டவருடைய பார்வையில், ஆனந்தமயமான ப்ரம்மத்தைத் தவிர வேறு ஒரு பொருளுக்கும் ஸத்தா – இருப்பு என்பது இல்லாமையால், அவருடைய மனம் எப்பொழுதும் தெளிந்திருக்கும். ஒருபொழுதும் எதற்காகவும் கலக்கம் அடைவதே இல்லை.

இந்தப்படியாகக் கூறுவதன் வாயிலாக ப்ரம்மமாகிவிட்ட யோகியை அடையாளம் காட்டுகிறார் பகவான். ப்ரம்மமானவர் எங்கும், எதிலும் ‘ப்ரம்மம்’ என்ற புத்தி கொண்டவராதலின் உலகியல், பொருள் எல்லாமே அவருக்கு வேறாகவோ, அல்லது கவர்ச்சி உள்ளதாகவோ, தன்னுடையது என்றோ தோன்றுவது இல்லை. எனவே உடல், பொருள், ஆவி எதனுடனும் எது வந்து சேர்ந்தாலும் அவரிடம் எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை. எந்நிலையிலும் அவர் கொஞ்சம் கூடக் கவலையோ, வருத்தமோ அடைவதில்லை. அவர் எல்லா ஆசைகளும் நிறைவேற்றப் பெற்றவர். (பூர்ணகாமன்) ஏனென்றால் எந்தப் பொருளும் ப்ரம்மம், தவிர வேறில்லை. ஆதலால் அவர் எதையும் விரும்புவதில்லை.

‘பராம் மத் பக்திம்’ என்பதின் பொருள் என்னிடம் பக்தியுள்ளவன் மேலான கதியை அடைவான் என்பதே.

இதுதான் ஞானயோகத்தின் பயன். ஞானயோகத்தினால் பெறக்கூடிய மிக உயர்ந்த நிலை ‘பரா நிஷ்டை’, ‘தத்வ ஞானம்’ என்றும் இதைக் கூறுவர். இந்த ‘பராபக்தி’ பரமாத்மாவின் உண்மை ஸ்வரூபத்தை நேரில் காணச் செய்து, பரமாத்மாவுடன் இரண்டறக் கலந்து விடச் செய்கிறது. ஞானயோகம் ஆன்மாவைக் கரை ஏற்றும். இதற்குப் பயிற்சியே மிக முக்கியம்.

WHEN THE YOGI IS UNSWERVINGLY established in Brahman (though not yet completely liberated), his heart, undisturbed by delusion, is saturated with perpetual bliss. At one with the immanent-transcendent Spirit, he realizes all things as his own Self; yet like the Immutable Lord, he is untouched by them. Since his consciousness is above all destructive and constructive transformations in nature, he neither grieves at unpleasant changes nor longs for pleasant ones, and beholds God equally present in all beings.

Such an accomplished yogi is not only one with the Absolute, merging his identity in God; he can also separate himself, recapturing his individuality with no loss of God-perception, and in this state, with his heart full of supreme devotion, enjoy the bliss of Brahman.

சுலோகம் 55: அந்த பராபக்தியின் மூலம் அவன் பரமாத்மாவான என்னை யார் என்றும், எத்தன்மையானவன் என்றும், உண்மையில் உள்ளது உள்ளபடியே தத்துவரீதியாக அறிந்து, அக்கணமே என்னிடம் ஐக்கியமாகிறான்.

முன் சுலோகத்தில் ‘பராம் மத் பக்திம்’ என்றும், 18/50இல் ஞானத்தின் ‘பரா நிஷ்டா’ என்றும் கூறிய தத்வக்ஞானத்தையே இங்கே ‘பக்த்யா’ என்று குறிப்பிடுகிறார்.

இதுதான் க்ஞானயோகம், பக்தியோகம், கர்மயோகம், தியானயோகம் முதலான அனைத்து ஸாதனைகளுக்கும் உரிய பயன். இதன் வழியாக ஸாதகன் பரமாத்மாவின் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்து அவரையே அடைகிறான். ஸாதனைகள் அனைத்திற்கும் பயன் ஒன்றே.

‘அர்ஜுனா! பராபக்தியின் மூலம் தத்வக்ஞானம் அடைகையில் யோகி என் உண்மை ஸ்வரூபத்தை முழுமையாக அறிந்து விடுகிறான்.’

எனது, நிர்குண-நிராகார ரூபம் என்ன? ஸகுண – நிராகாரரூபம் என்ன? ஸகுண – ஸாகர ரூபம் என்ன? உருவமற்ற நான் எப்படி உருவத்தைப் பெறுகிறேன்? மீண்டும் எப்படி உருவமற்றவனாக ஆகிறேன்? என்பனவற்றை அவன் அறிந்த பின்னர் மீண்டும் அந்த யோகி அறிய வேண்டியது ஒன்றுமே இருக்காது. அவன் பார்வையில் எந்த வேற்றுமையும் இருக்காது.

‘நிர்க்குண உருவமற்ற பிரம்மம், ஸகுண உருவமுள்ள பிரம்மம் இரண்டும் ஒன்றே! என்ற முடிவு அவனுக்குக் கிடைத்து விடுகிறது. உணர்ந்து கொள்’ என்கிறார் பகவான்.

இந்த சுலோகத்தில் ‘மாம் அபிஜாநாதி’ என்று தன்னையே கூறுகிறார் பகவான் பரப்பிரம்மம் ஸ்ரீகிருஷ்ணனே! கண்ணன் பூர்ணாவதார புருஷன்.

இப்படியாக ஸ்ரீகிருஷ்ணார்ஜுன குரு ஸிஷ்ய பாவத்தை ஸ்ரீமத் பகவத்கீதை நமக்குப் பூரணமாகவே விளக்கிக் கொண்டிருக்கிறது.

அர்ஜுனனின் விருப்பத்திற்கிணங்கி த்யாகம், கர்மயோகம், ஸந்யாஸம், ஸாங்கியம் பற்றித் தனித்தனியே பிரித்துக் கூறினார் பகவான்.

சுலோகம் 56: என்னையே புகலாகக் கொண்ட கர்மயோகி எல்லாக் கர்மங்களையும் எப்பொழுதும் செய்து கொண்டிருப்பினும், எனது அருளால் நிலையான என்றுமுள்ள அழியாத பரமபதத்தை அடைகிறான்.

இங்கு ‘பதம்’ என்ற பெயரால் பகவான் அழைக்கப்படுகிறார். 18/46 ல் ஸித்தி அடைவதென்றும், 18/55 ல் மாம் என்ற சொல்லால் பரமாத்மாவையே அடைவது என்றும் கூறியதையே இங்கு ‘ஸாஸ்வதம், அவ்யயம், பதம்’ என்ற சொற்களின் பொருளான பகவானை அடைதல் என்று கூறுகிறார். இதன் மூலம் பக்திப் பிரதானமான கர்ம யோகத்தை மீண்டும் நினைவூட்டுகிறார். பக்தி முக்திக்குக் காரணம்.

THE DEVOTEE BEHOLDS GOD AS THE SHELTER of all creatures, and himself as unsheltered by any other power. Without attachment to the fruits of his efforts, he continuously engages in God-united yoga activities and all other divinely obligatory duties, just to please God. After meeting all the requirements of the laws of liberation, the yogi ultimately finds, by the freely given grace of God—“by My pleasure”—the eternal state of liberation.

The quality of a yogi’s meditation and other actions, the guru’s help, and God’s grace—these are the three requisites of liberation. No matter how much a devotee strives for salvation—and he is required to make the effort wholeheartedly for God—that effort constitutes only 25% of the requirements for liberation. Another 25% depends upon his guru’s blessing, spiritually stimulating the disciple’s striving. But the guru’s help and the devotee’s effort notwithstanding, it is necessary to have also God’s grace, which may be said to constitute the remaining 50% of the requirements.

God, the Creator of the cosmic law of karma that binds human life, is the sole Judge as to whether a devotee has fulfilled all the laws of spiritual conduct required for liberation. However, a devotee who, with the help of his guru, fulfills all the laws and then insolently expects immediate liberation will not find it. God is not a mathematically produced jackpot!

But if the devotee fulfills the divine laws and also has complete love for God—“taking shelter in Me”—that all-surrendering love draws His grace.

Man is made in the image of God’s love, and by manifesting unconditional love he can again become like the Father, merging in Him and dropping his acquired second nature as a mortal being.

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.

**

*உதவி*:
(1) பரமஹம்ச யோகானந்தாவின் “GOD TALKS WITH ARJUNA” (2) சுவாமி சித்பவானந்தரின் “பகவத்கீதை” உரை; (3) ஸ்ரீராமகிருஷ்ணமடம் – பகவத்கீதை பொழிப்புரை – ஸ்ரீ அண்ணா (4) திருக்குறள், (5) புலவர் சீனி கிருஷ்ணசாமி அவர்களின் “கீதோதயம்”

Leave a comment