பகவத்கீதை – பதினெட்டாம் அத்தியாயம் – மோக்ஷ ஸந்யாஸ யோகம்– 7


*ஞானத்தேடல் பதிவு எண்: 093 நாள்: 08.12 2022*

*பகவத்கீதை – பதினெட்டாம் அத்தியாயம் மோக்ஷ ஸந்யாஸ யோகம் – 7*

சுலோகம் 41: எதிரிகளை வாட்டுபவனே! பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் மற்றும் நான்காம் வர்ணத்தவருடைய கர்மங்கள் இயல்பிலிருந்து உண்டான குணங்களுக்கு ஏற்பப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன.

IN THE DIVINE GITA DIALOGUE, symbolic of the inner realization received by the devotee in communion with God, the Lord now reiterates to Arjuna through his intuitional perception that the true meaning of the four natural castes, or classifications of mankind, and the duties inherent in them (described in the following verses) are based not on one’s birth but on one’s individual qualities. The true natural castes are the Brahmins or God-knowers, Kshatriyas or sense-fighters, Vaishyas or wisdom-cultivators, and Sudras or body-identified individuals. These four “castes” are present in all nations as the spiritual intelligentsia; the soldiers, rulers, and leaders; the businessmen; and the laborers.

The existence in the world of four natural classes of human beings is the result of the sattvic, rajasic, and tamasic qualities, and their mixtures, present in Prakriti or Cosmic Nature. The differentiation of individuals into these four classes is also the result of their own free choice of good and evil actions in the past.

In summation, man and Cosmic Nature cannot manifest their activities without the mixture of the three gunas.  It is by differentiation of the triune qualities that Cosmic Nature comes into being; and it is by man’s response to these qualities that the aforesaid four types of individuals are born.

சுலோகம் 42: மனவடக்கம்; புலனடக்கம்; ஸ்வதர்மத்தைக் கடைப் பிடிப்பதற்காகத் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுதல்; அகத்தூய்மை-புறத்தூய்மை; பிறர் குற்றம் பொறுத்தல்; மனம், புலன், உடல் இவற்றில் நேர்மை; வேதம், சாஸ்திரம், கடவுள், பரலோகம் இவற்றில் நம்பிக்கை; வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றல்- கற்பித்தல்; பரமாத்மத் தத்துவத்தை அனுபவம் மூலம் உணர்தல் இவையே பிராமணர்களுக்கு இயல்பாகவே உண்டான கர்மங்கள்.

சுலோகம் 43: சூரவீரத்தனமும், தேஜஸ்ஸும், உறுதியும்திறமையும்போரில் புறங்காட்டாமையும்கொடையும்ஆளும் தன்மையும், க்ஷத்திரியர்களுக்கு இயல்பான கர்மங்கள் ஆகும்.

சுலோகம் 44: உழவு செய்தலும், பசுக்களைக் காத்தலும், பொருட்களை வாங்கி விற்பதில் சத்தியத்தைக் கடைப்பிடித்தலும், வைசியர்களுக்கு இயல்பாக உண்டான கர்மங்கள். அப்படியே, மக்கள் அனைவருக்கும் சேவை புரிதல் நான்காம் வர்ணத்தவர்களுக்கு இயல்பாக உண்டான கர்மம்.

42-44 இல் கூறப்பட்டிருக்கும் இலக்கணப்படி வாழ்பவர்கள் இன்றைய உலகில் குறைந்துவிட்டனர். அதனால் இந்த நால்வருணப் பிரிவும் இன்றைய தினத்தில் உண்மையாகக் கடைப் பிடிக்கப்படுவதில்லை.

இந்தியாவில் அரசர்கள் காலத்தில், பின்னர் முகலாய, ஆங்கிலேய ஆட்சிகளில், பிறப்பினால் ஜாதி என்ற கருத்தைப் பிடித்துக் கொண்டு உயர்ஜாதியினர் கீழ்ஜாதியினரை குறைவாக மதிப்பிடுவதும், அவர்கள் திறமையற்றவர்கள், அவர்கள் மற்றவர் ஆணைக்கு அடிபணிந்துதான் வாழவேண்டும் என்ற ஒரு முற்றிலும் சுய நலமான கருத்து வேர் ஊன்றி இருந்தது. சுதந்திரம் அடைந்தவுடன் நம் நாட்டு அரசியல் சட்டம் இயற்றப்பட்டு எல்லோருக்கும் சம உரிமை, பிற்பட்டவர்களுக்கு கல்வியில்,வேலையில், சலுகைகள், அவர்களுக்கான முன்னேற்றத் திட்டங்கள் என்பன மிகப் பெரிய அளவில் ஏற்படுத்தப்பட்டு அனைவரும் சமமாக முன்னேறுவதற்கு பல திட்டங்கள் கடைப் பிடிக்கப் பட்டு வருகின்றன.

உண்மையில் மனிதனை மனிதன் வேறுபடுத்திப் பார்ப்பது என்பது சமுதாய ரீதியில் நிச்சயம் கொடுமையான ஒன்று. உலகெங்கும் சக்தி படைத்தவர் சக்தி குறைந்தவர்களை ஏவல் செய்து வருவது தொடர்கிறது. இந்திய அளவில் ஏற்றத் தாழ்வுகள் ஜாதி அடைப்படையில் அமையாது இருக்க நல்ல திட்டங்கள் நடைமுறைப் படுத்தப் படுகின்றன.

தமிழ் நாட்டில் ஏற்றத் தாழ்வுக்கு முக்கிய காரணம் மதம் என்ற கருத்து நாத்திகத்தை அடிப்படையாக ஏற்ற திராவிடக் கட்சிகளின் முக்கிய கருத்துவித்து. இத்தகைய கருத்து திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் வலுவடைந்து ஜாதியை ஒழிக்க வேண்டும் என்ற எனத் தீவிரமாக இறங்கி 20 ஆண்டுகள் ஆயிற்று.

ஜாதிகள் இருக்க வேண்டுமா, இருக்கக் கூடாதா என்ற வாதத்தில் பல கோணங்கள் இருக்கின்றன. அனேகமாக பெரும்பான்மை மக்கள் ஜாதியை இல்லாமல் ஆக்கவேண்டும் என்ற கொள்கைக்கு முரண்படாதவர்கள்.

ஆனால் இந்திய ஆட்சி முறையில் ஜாதி அடைப்படையில் சலுகைகள் இன்னும் தொடர பல காரணங்கள் முன்வைக்கப் படுகின்றன. பிற்படுத்தப்பட்டவர் சமுதாயம் இன்னும் முன்னேறவில்லை, இன்னமும் அவர்களுக்கு அரசு இப்படிப்பட்ட சலுகைகளை தொடர்ந்து அளிக்கத் தான் வேண்டும் என்ற வாதங்கள் நியாயமானவை. இதை சுதந்திரம் வந்து இத்தனை ஆண்டுகளில் ஆண்ட ஆட்சியாளர்களோ அவர்களது கட்சிகளோ நிராகரிக்கவில்லை. மாறாக ஒரு பத்து ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்ட இந்த சலுகையும் உதவியும் ஒவ்வொரு பத்து வருடமும் புதுப்பிக்கப் பட்டு வருவது உண்மையில் இந்தியாவில் உள்ள எந்தப் பொருட்டான கட்சிக்கும் விரோதமில்லை.

இக்காலத்து சமூகத்தில் பிராமணர் எந்த வேலையும் செய்யாது படித்துக் கொண்டும், சதாகாலமும் இறைவனைப் பிடித்துக் கொண்டும் உணவுக்கும் வசதிக்கும் மற்ற வருணத்தாரை கசக்கிப் பிழிபவர் போலவும், க்ஷத்ரியர் அரசராக இருக்காத இல்லாத இக்காலத்தில் கூட அவர்கள் அரசராகிவிட்ட எண்னத்துடனேயே மற்றவரிடம் பழகுவர் போலவும், வைசியர் பார்க்கும் அனைவரிடமும் வியாபார நோக்கில் லாபத்தை மட்டும் அடிப்படையாகப் பார்ப்பவர் போலவும், சூத்திரர் என்ற நாலாம் வருணத்தார் மற்ற வருணங்களால் ஒடுக்கப்பட்டு, முன்னேற்றத்தை இழந்துவிட்ட ஒரு வர்க்கம் போலவும் ஒவ்வொரு வருணத்தார் பற்றியும் மற்ற வருணத்தார் பேசுகின்றனர். ஆனால் இக்கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை.

எல்லா வருணத்தாரும் எல்லாத் தொழில்களிலும் ஈடுபடுகின்றனர்.  கடந்த 70 ஆண்டுகளாக நம் நாட்டில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை முன்னுக்குக் கொண்டு வரும் முயற்சியில் முன்னுக்கு வந்த நாலாம் வருணத்தவர் கோடிக்கணக்கில். ஆனாலும் இவர்களுக்கு சமுதாயத்தின் மீதும் மற்ற வருணத்தார் மீதும் தீராத கோபம் இருந்து வருகிறது.

பிறப்பின் அடிப்படையில் பிரிக்கப்படும் ஜாதிகள் இப்படி கீதை சொல்லும் இலக்கணத்துடன் இருப்பதில்லை. இதனால் இத்தகைய பிரிவுகளும் பரவிவரும் வெறுப்பும் சரியான புரிதல் இன்றி சுய நலத்துக்காக விளைந்தவை.

நம் தமிழ்நாட்டு ராமநாதபுரம் திருநெல்வேலி மாவட்டங்களில் அந்தணர்கள் பலர் விவசாயம் செய்கின்றனர். ஏர் பிடித்து உழுகின்றனர். மாடுகள் வளர்த்துப் பராமரிக்கின்றனர். பால் வியாபாரம் கூட சிலர் செய்கின்றனர். தமிழ் நாட்டிலும் ஆந்திரா தெலுங்கானாவிலும் சில அந்தணப் பெண்கள் அரசு மயானங்களில் பிணத்தை எரியூட்டும் வேலையில் கூட சேர்ந்து இதை ஒரு புனித சேவை என்று கருதி மனமாறச் செய்கின்றனர். இத்தகைய செய்திகள் செய்தித் தாள் கள் மூலம் அறிகிறோம்.

நாலாம் வருணத்தார் என்று கூறப்படும் சமுதாயத்தில் பலர் வெளிநாடுகளில் படிப்பில் சிபாரிசு இல்லாமல், ஜாதி அடிப்படைச் சலுகை என்ற வசதி இல்லாமல், வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் மருத்துவம், அறிவியல் துறைகளில் படித்து பட்டம் பெற்று திறமையின் அடிப்படையில் நல்ல பதவி கிடைத்து சுகமாக வாழ்கின்றனர்.

ஆனால் இத்தகைய உண்மைகள் அரசியல் ரீதியாக வெளிக் கொணர்வதில் வெறுப்புக் கொண்டு நடப்பதால் இப்படிப்பட்ட உண்மைகள் தெரியாமலே நின்றுவிடுகின்றன.

தமக்கு விதிக்கப்பட்ட கடமைகளை விட்டுவிட்ட அந்தணர் குடும்பங்களிலும் எத்தனையோ தவறுகள் நடந்து குடும்பத்து அவப்பெயர், தீராத அவமானம், வாழ்வில் தோல்வி என்ற விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன. 

அதனால் கீதை சொல்லும் வருணத்தின் அதாவது முக்குணங்களின் கூட்டால் அவரவர் மனப் பக்குவத்துக்கு ஏற்ப செய்துவரும் தொழில்கள் அடிப்படையில் சமுதாயம் வகைப் படுத்தப் படுவது முற்றிலும் மறக்கடிக்கப் பட்டுவிட்டது.

ஆங்கிலேய ஆட்சியில், பிறப்பின் அடிப்படையில் தான் ஜாதி வேறுபாடு என்ற வேதகாலத்துக்குப் பிற்பட்ட அரசர்களின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட இந்தத் தவறான கருத்து, ஆங்கிலேயர்கள் இயற்றிய சட்டத்தின் படி இதுவே இந்து தர்மம் என்று பெயரிடப்பட்டு விட்டது. இந்த்த் தவறான சட்ட அணுகுமுறையே நம் சமூகத்தில் சமூக அளவில் வேற்றுமைகள் ஏற்படக் காரணமாக அமைந்து விட்டது. இப்போது கூட இந்தியாவில் ஜாதிகளை ஒழிப்பதில் முக்கியமாக பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் அரசியலிலும் சுத்தமாக விருப்பம் இல்லை. ஏதேனும் ஒருவகையில் மக்களிடையே வேற்றுமைகள் தொடர்ந்து இருப்பதையே நம் நாட்டுக் கட்சிகளும் விரும்புகிறார்கள்.

சுலோகம் 45: தத்தம் இயல்பான கடமைகளில் முழுமுனைப்புடன் ஈடுபட்டிருக்கும் மனிதன், பகவானை அடைதலாகிற ஸித்தியை அடைகிறான். தன்னுடைய இயல்பான கடமையில் கருத்துடையவன் தன் செயலை எப்படிச் செய்து பரமநிலையை அடைகிறானோ, அந்த முறையை நீ கேள்.

சுவாமி சித்பவானந்தர் இந்த சுலோகத்துக்கு இப்படி விளக்கம் தருகிறார்: பயிற்சியால் எந்தக் கர்மத்துக்குத் தகுதி உடையவனாகச் தன்னைச் செய்துகொள்கிறானோ அது அவனுடைய ஸ்வகர்மம் ஆகிறது, அவனது ஸ்வதர்மம் என்பதும் அதுவே. எத்தொழிலைச் செய்தாலும் நல்ல மன நிலையுடன் அதைச் செய்தால் மனபரிபாகம் அடையலாம். செய்யும் தொழிலே தெய்வம் என்னும் மனப்பக்குவம் அவசியம் வேண்டும்.

சுலோகம் 46: எந்தப் பரம்பொருளில் இருந்து சகலப் பிராணிகளும் உண்டாயினவோ, எந்த பரமாத்மாவினால் இந்த உலகம் முழுமையும் நிறைந்துள்ளதோ, அந்த பரமாத்மாவைத் தன்னுடைய இயல்பான கடமைகளினால் வழிபட்டு, மனிதன் பரமஸித்தியை அடைகிறான்.

பரமாத்மா இந்த உலகத்தை முறையாக இயக்குகிறார். இவ்வுலகில் பயன்படாத உயிர்கள் ஒன்றுமே கிடையாது. ஆகவே ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு இடப்பட்ட கட்டளைகளான கர்மங்களைச் செய்து, பகவானைப் பூஜிப்பதற்கு உரிய முறைகளை அறிந்து, வழிபாடு செய்தால் அவர்கள் எல்லோருமே பரமபதம் அடைவார்கள்.

பரமாத்மாவின் குணங்கள், மகிமைகள், ப்ரபாவங்கள் எங்கும், எதிலும் பூரணமாக நிறைந்திருக்கின்றன. ஆகையால் அறிவுடைய மனிதன் தான் எந்தக் கர்மத்தை நன்கு செய்ய முடியுமோ அதைப் பகவதாராதனையாகச் செய்யணும். அதன் வழியே அவன் மனபரிபாகமடைவான்.

‘எம்பெருமான் நம் பெருமான். அந்தப் பரம்பொருள் தனது யோக மாயையினால் உலகம்’ என்ற ‘உருவில் வெளிப்பட்டு வந்துள்ளார்’ என்ற நல்லெண்ணத்துடன் நாம் நமது கடமைகளைச் செய்ய வேண்டும். நம்முடைய எண்ணத்தில் நிற்கிறான் பகவான்.

நம் நெஞ்சில் பகவானை அவருடைய ஆணைப்படி, அவருடைய திருப்திக்காகவே, நம்முடைய இயல்புக்கேற்றபடி, சக்திக்கேற்பக் கர்மங்களைச் செய்வதன் மூலம் உலகிற்கு சேவை செய்வதுதான் எல்லாப் பிராணிகளுக்கும் சுகம் தரவேண்டி, தன்னலத்தைத் தியாகம் செய்து நமது கர்மங்களைப் பொறுப்புடன் செய்வதுதான் பகவானைப் பூஜிப்பதாகும்.

வியாதன் ஒருவன் கசாப்புக்கடை வைத்து ஜீவனம் பண்ணினான். அந்தக் தொழிலே அவனுக்குச் சமுதாய சேவை ஆயிற்று! தேவாராதனையும் ஆயிற்று!! அவன் பரம ஞானியானான். ஒரு துறவிக்கு அவன் செய்த உபதேசம் ‘வியாதகீதை’ என்னும் பெயர் பெற்றுள்ளது.

வயிற்றுப் பிழைப்பிற்கு என்பதை முற்றிலும் மறக்க வேண்டும். இது பகவதாராதனை என்றெண்ண வேண்டும். அந்த உணர்ச்சியின் மூலம், அவன் தொழில், அவனை மிக வேகமாக பகவானிடம் அழைத்துச் செல்லும். உலக வாழ்வே யோகிக்குக் கடவுள் ஆராதனையாகிவிடுகிறது.

சுலோகம் 47: நல்ல முறையில் கடைப்பிடிக்கப்பட்ட பிறருடைய தர்மத்தைக் காட்டிலும், குணக்குறை உள்ளதாயினும், தன்னுடைய தர்மம் உயர்ந்தது. ஏனெனில், இயல்புக்கேற்ப விதிக்கப்பட்ட தன்னுடைய கடமையைச் செய்கிற மனிதன் பாவத்தை அடையமாட்டான்.

யுத்த நெருக்கடியில் அர்ஜுனன் போர் புரிவதே உசிதம் என்பதைப் பகவான் இங்கே சூசகமாக அர்ஜுனனுக்குப் புரிய வைக்கிறார். ‘அதர்மிஷ்டர்கள் தீமை செய்து கொண்டிருக்கையில் நீ வனம் சென்று தவம் செய்வது பொருந்தாது’ என்பதை மறைமுகமாக அர்ஜுனனுக்கு எடுத்துரைக்கிறார் பகவான்.

எந்தத் தொழிலும் நன்றாக நடைபெற இது முக்கியமான அறிவுரை. நால் வருணத்தாரில் க்ஷத்திரியர்களுக்கு சமுதாயக் கடமை உள்ளது. போர்புரிவதும் எதிரிகளை தோற்கடிப்பதும் அதில் சேரும். போர்க்களத்தில் க்ஷத்திரியருக்கு தயை, தாட்சண்யம், எதிரிகளின் நல்லவற்றை நினைப்பது போன்ற இவை செய்யும் காரியத்துக்கு கேடு தரும். இக்காலத்து ஜன நாயக நாட்டில் உள்ள ராணுவங்களிலும் இது கடைப் பிடிக்கப் படுகிறது. ஒரு வீரன் எதிரியைக் கொல்லாது விட்டுவிட்டு, நான் தர்மநெறியைக் கடைப்பிடிப்பதால் எதிரியைக் கொல்லவில்லை என்று சொன்னால் இது தேசத்துரோகம் என்றுதான் கருதப்படும். தான் செய்யும் தொழிலில் உள்ள தர்மத்தையே ஒவ்வொருவரும் அவசியம் கடைப் பிடிக்கவேண்டும். மற்ற சிந்தனைகளைக் கொண்டு வருவது தோல்விக்கான வழியாகும்.

சுலோகம் 48: குந்தியின் மைந்தனே! குறை உள்ளதாயினும் தனக்குரிய இயல்பான கடமையை விட்டுவிடலாகாது. ஏனெனில், புகையால் சூழப்பட்ட தீ போல் எல்லாச் செயல்களும் ஏதோ ஒரு வகையில் குறையினால் சூழப்பட்டுள்ளன.

தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை ஒவ்வொருவரும் நிறைவேற்றுவது இங்கு வலியுறுத்தப்படுகிறது.

எந்தக் கர்மங்களிலாவது பொதுவில் ஹிம்சை என்றெண்ணக் கூடிய குற்றங்கள் கலந்திருப்பினும், அவை ஸாஸ்த்ரப்படியும், நியாயமாகவும், அவர்களுக்கு விதிக்கப்பட்டு விட்டபடியால் அவை உண்மையில் குற்றமுடையன அல்ல. அந்தக் கர்மங்களைச் செய்துதான் ஆகவேண்டும். செய்யாமல் விட்டுவிடக்கூடாது. அவற்றைச் செய்வதால் பாவமும் வந்துவிடாது. செய்யாமல் விட்டுவிட்டால் பாவம் பற்றிக் கொள்ளும்.

நெருப்பில் புகை சூழ்ந்தே இருக்கும். ஏனென்றால் நெருப்பில்லாமல் புகையாது. அதுபோல எக்கர்மம் புரிந்தாலும் அதில் ஏதாவதொரு வகையில் குற்றம் குறைகள் இருக்கவே செய்யும்.

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.

**

*உதவி*:
(1) பரமஹம்ச யோகானந்தாவின் “GOD TALKS WITH ARJUNA” (2) சுவாமி சித்பவானந்தரின் “பகவத்கீதை” உரை; (3) ஸ்ரீராமகிருஷ்ணமடம் – பகவத்கீதை பொழிப்புரை – ஸ்ரீ அண்ணா (4) திருக்குறள், (5) புலவர் சீனி கிருஷ்ணசாமி அவர்களின் “கீதோதயம்”

Leave a comment