பகவத்கீதை – பதினெட்டாம் அத்தியாயம் – மோக்ஷ ஸந்யாஸ யோகம்– 1


*ஞானத்தேடல் பதிவு எண்: 087 நாள்: 02.12 2022*

*பகவத்கீதை – பதினெட்டாம் அத்தியாயம் மோக்ஷ ஸந்யாஸ யோகம் – 1*

கண்ணனின் கீதோபதேசத்தைக் கேட்ட அர்ஜுனன், இவ்வத்தியாயத்தில் கீதா சாரம் முழுவதையும் மீண்டும் ஒருமுறை சுருக்கமாக அறிய விரும்பி, கண்ணனிடம் சன்யாசம், ஞானயோகம், தியாகம், பயனில் விருப்பத்தை அறவேதியஜிக்கும் கர்மயோகம் இவற்றின் உண்மைப் பொருள்களை தனித்தனியாக நன்றாகத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தையும் வெளியிடுகிறான்.

78 சுலோகங்கள் கொண்ட இவ்வத்தியாயம் 1 சந்நியாசம், சந்நியாசத்தின் பலன்கள், 2 முக்குணங்களுடன் கூடிய தியாகம், தியாகி, தியாகத்தின் பலன், மேலும் முக்குணங்களுடன் கூடிய ஞானம், கருமத்தின் தன்மைகள், கர்த்தா(செயல் செய்பவன்), புத்தி, தைரியம், சுகம், மற்றும் கர்மம் 3 கர்ம யோக சாரம், வர்ணாசிரம தர்மங்கள் 4 பக்தி யோக சாரம், 5 ஆத்ம ஞானம் அடையும் வழிகள், 6 நிதித்யாசனம் (ஆத்ம தியானம்), இவற்றை விளக்குகிறது.

*அத்தியாயத்தின் சுருக்கம் விக்கிப்பீடியா வில் இருந்து:*

*சந்நியாசம்*

வாழ்கையில் வெறுப்பு அடையாது, மனநிறைவுடன் மேற்கொள்வதே  சந்நியாசம் எனும் துறவறம் ஆகும். கர்மங்களினால் வரும் புண்ணியத்தை துறப்பது கர்மபல சந்நியாசம் என்பர். இவ்வாறு புண்ணியத்தை துறப்பதால் நமக்கு விவேகம், வைராக்கியம் மற்றும் முமுச்த்துவம் எனும் பிரம்மத்தைப் பற்றிய அறிவுத் தேடலில் ஆர்வம் பிறக்கும். மேலும் வேதாந்தங்களை கேட்கும் ஆர்வம் மனதில் வரும்.

இதன் பயனாக ஆத்மாவாகிய ”நான்” எந்த செயலையும் செய்வதில்லை என்ற ஞானம் (அறிவு) ஏற்படுகிறது. இதனால் “நான் செயல் செய்கிறேன்” என்ற எண்ணம் துறக்கப்படுகிறது. இதற்கு கர்த்துருத்துவ சந்நியாசம் என்பர். இதனால் ”நான்” எனும் ஆத்மா எந்த செயலை செய்பவனும் அல்ல என்றும் செயலின் பயனை அனுபவிப்பவனும் அல்ல என்ற அறிவு மனதில் பிறக்கிறது.

*வர்ணாசிரம தர்ம கடமைகள்*

சத்துவ குணம், இராட்சத குணம் மற்றும் தாமச குணம் எனும் முக்குணங்களின் அடிப்படையில் அனைத்து சீவர்களும் வர்ணாசிரம தர்மத்தின்படி பிரிக்கப்படுகின்றனர்.

*கர்ம யோக சாரம்*

நமது செயல்கள் அனைத்தும் பகவானை முன்னிட்டு செய்வதே கர்ம யோகமாகும். நமது செயல்கள் பகவானுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் இருத்தல் வேண்டும். வேள்வி, தானம், தவம் எனும் செயல்களை துறக்கக்கூடாது. ஆனால் விலக்கப்பட்ட செயல்களையும், பயனை எதிர்பார்த்துச் செய்யப்படும் செயல்களையும் துறக்க வேண்டும். ஆனால் சாத்திரங்கள் விதித்த செயல்களை செய்யாமல் இருப்பது தகாது.

எனவே அறியாமையால் அச்செயல்களை செய்யாமல் இருப்பது தாமசத் தியாகம் ஆகும். (இங்கு தியாகம் எனில் விட்டு விடுதல் என்று பொருள்) துன்பம் வரும் எனக்கருதி, செய்ய வேண்டிய செயலை, செய்யாமல் இருப்பது ராஜசத் தியாகம் ஆகும். பற்றையும் பயனை கருதாமல் செய்யும் செயலே சாத்வீகமான தியாகம் ஆகும்.

இதே போன்று முக்குணங்களுடன் கூடிய தியாகி, தியாகத்தின் பலன், மேலும் முக்குணங்களுடன் கூடிய ஞானம், கருமத்தின் தன்மைகள், கர்த்தா (செயல் செய்பவன்), புத்தி, தைரியம், சுகம், மற்றும் கர்மம் ஆகியவைகளைப் பற்றி பகவான் விளக்குகிறார்.

செயலின் பயனைத் துறக்காதவர்களுக்கு செயலினால் வரும் பாவ – புண்ணியம் மேலும் இரண்டும் கலந்த மூன்றுவிதமான பயன் இறந்தபின் உறுதியாக கிடைக்கிறது. ஆனால், கர்மபயனைத் துறந்த மனிதர்களுக்குக் கர்மங்களுடைய பயன் ஒருபோதும் கிட்டாது. எனவே கர்ம பலனை துறந்தவனுக்கு மறு பிறவி இல்லை.

*பக்தி யோக சாரம்*

பகவானின் அருளினால் மட்டுமே ஒருவன் மோட்சத்தை அடையமுடியும். ஒருவன் அகங்காரத்துடன் செயல்பட்டால் அழிந்துவிடுவான். பக்தி நம் மனதை பக்குவப்படுத்தும். ஒருவன் மற்ற சாதனைகளை (தர்மங்களை) கைவிட்டாலும், முடிவின் இலக்கை அடைய பகவான் மீது செலுத்தும் பக்தி அவசியமானது.

*ஞான யோக சாரம்*

சுத்தமான புத்தியுடன் மற்று உறுதியுடன் தன் மனதை அடக்கி, ஐம்புல விஷயங்களிலிருந்து மனதை நீக்கி, விருப்பு வெறுப்புகளை விட்டுவிட வேண்டும்.

தனிமையில் சிறிதளவே உண்டு, நாக்கையும், மனதையும் அடக்கி, எப்பொழுதும் தியான யோகத்தில் ஈடுபட்டு, வைராக்கியத்தை மேற்கொண்டு; அகங்காரம், உடல் பலம், ஆணவம், ஆசை, வெறுப்பு, பற்று ஆகிய தீய குணங்களை விட்டொழித்து, மமகாரமற்று தன்னில் மனநிறைவைப் பெற்றவனே பிரம்ம நிலைக்கு உயர தகுதி பெறுகிறான். பிரம்மமாகவே ஆனவன், உள்ளம் தெளிந்தவனாகிவிடுகிறான்; அவன் எதற்கும் வருந்துவதில்லை; ஆசைப்படுவதில்லை; எல்லா உயிரிடத்திலும் சமநோக்குடன் இருப்பான்; அவன் பகவானிடம் அதிகமான பக்தியையும் பெறுகிறான்.

*நிதித்யாசனம் (ஆத்ம தியானம்)*

ஞானநிஷ்டை (தன்னில் மனநிறைவு) அடைய விஷய சுகங்களை துறந்து, தனிமையில் ஆத்மாவை தியானிப்பதே நிதித்யாசனம் ஆகும். ஒருவன் கர்மத்தினால் கிடைக்கும் பாவ – புண்ணியங்களையும், அகங்காரத்தையும் துறந்து பகவானை மட்டும் சரணாகதி அடைந்து, பகவானைப் பற்றிய அறிவை (ஞானத்தை) அடைந்தவன் உலகத் துயரங்களிலிருந்து விடுதலை பெற்று பகவானை அடைவான்.

(Wikipedia)

சுலோகம் 1: *அர்ஜுனன் கேட்கிறார் – “நீண்ட புஜங்கள் உடையவரே! அந்தர்யாமியே! கேசியை வதைத்த வாசுதேவனே! சன்யாசம், தியாகம் இவை பற்றிய தத்துவங்களைத் தனித்தனியாக அறிந்து கொள்ள விரும்புகிறேன்.”*

கேசி என்ற அசுரன் குதிரை வடிவெடுத்துக் கிருஷ்ணனை விழுங்க வாயைத் திறந்து கொண்டு வந்தான். கண்ணனோ தன் கையை அதன் வாயினில் நீட்டி வயிற்றுக்குள் செலுத்திக் குடலைக் கசக்கிக் கொன்றுவிட்டான்.

Renunciation—the relinquishment of actions, desires, and attachments that impede soul progress—is the compendious principle characterizing the Gita message. When the devotee finds that the intuitive communion of his soul with Spirit is still periodically disturbed by restlessness during meditation, he calls on God as the Conqueror of the Senses, the Master of all outer and inner forces, and the Destroyer of Ignorance. The seeker appeals to the Lord to remove his restlessness caused by continued enslavement to the senses and sensations. At this stage the yogi wonders how he can renounce all objects of soul distraction. It is therefore natural for a devotee like Arjuna to wish to understand clearly the difference between the two forms of renunciation. – Paramahamsa Yogananda

சுலோகம் 2: *ஸ்ரீபகவான் கூறுகிறார் – “ பண்டிதர்கள், விரும்பிய பொருளைப் பெறுவதற்காகச் செய்யப்படும் காம்ய கர்மங்களைத் துறத்தலை சன்யாசம் என்று அறிகிறார்கள். மற்றும் சில அராய்ச்சியாளர்கள் கர்மங்கள் அனைத்தினுடைய பயனையும் துறத்தலையே தியாகம் என்று கூறுகிறார்கள்.*

*பாரதியார் கூறுவது*: “சந்நியாச மென்றாலும், தியாக மென்றாலும் ஒன்றே. ஆனால், காம்ய கர்மத்தை அடியோடு விட்டுவிடுவது சந்நியாசமென்றும், நித்திய நைமித்திக கர்மங்களில் பற்றுதலையும் பலனையும் துறப்பது தியாகமென்றும் அறியவேண்டும். எல்லாக் கர்மங்களையும் விட்டுவிட வேண்டுமென்று சிலர் கூறுவார்கள். அது கீதையின் கருத்தன்று. நித்திய நைமித்திக கர்மங்களைச் செய்தே தீரவேண்டும். செய்யாவிடில் பாபம் நேரிடும். மனிதன் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் ஈசுவரன் முக்கிய காரணமாவான். அப்படியிருக்கத் தானே அவற்றைச் செய்துவிடுவதாக நினைப்பவன் மூடன். ஞானம், கர்மம், உறுதி, இன்பம் என்றிவை ஒவ்வொன்றும் சாத்விகம், ராஜசம், தாமசம் என்று மூவகைப் பட்டிருக்கும். கடவுளைத் தமக்குரிய கர்மங்களால் ஆராதித்தால் சித்தி பெறலாம்.” இவ்விதம் கண்ணனுடைய உபதேசத்தைக் கேட்டு அர்ஜுனன் மயக்கமற்று நல்லறிவு பெற்றுப் போர் புரியத் தொடங்கினான் என்று சஞ்ஜயன் திருதராஷ்டிரனுக்குக் கூறினான். (பாரதியார்)

அத்தியாயங்கள் 18உம் பதினெட்டு யோகங்கள். எல்லாவற்றிற்கும் பொதுவான பெயர் ‘யோக ஸாஸ்த்ரம்’ என்பது. இந்த அத்தியாயத்தில் நிறைவெய்துகிறது. இந்திரியங்களுக்கெல்லாம் இறைவனாயிருந்தமையால் கண்ணன் ஹ்ருஷீகேசன் ஆகிறான். அத். 4/20, 12/11 இது போன்ற இடங்களில் கண்ணன் தியாகத்தைப் பற்றிச் சொல்லி விட்டார். இரண்டுக்கும் என்ன வேறுபாடு என்பதே வினா.

வாழ்க்கை நெறியைப் பற்றிய கொள்கைகளில் சந்நியாசமும், தியாகமும் ரொம்ப உயர்ந்தவை.

பலர் கர்மங்களைச் செய்யாமல் அவற்றைத் தியாகம் பண்ணுவதே சன்யாசம் என்று கருதுகின்றனர் என்கிறார் கண்ணன். காம்ய கர்மங்களைச் செய்யாமல் விட்டுவிட்டு தவிர்க்க முடியாத – தவிர்க்கக்கூடாத – நித்ய நைமித்திக கர்மங்களையும் அந்தந்தக் காலத்தில் செய்ய வேண்டிய கர்மங்களை மட்டும் முறைப்படி செய்பவர்களே ஸந்யாஸி ஆவார்கள். பயன்களைத் துறந்து கடமை செய்வதே தியாகம். எனவே அவர்கள் அதே பாவனையில் செய்ய வேண்டிய கர்மங்களை எல்லாம் செய்து கொண்டேயிருக்கிறார்கள் என்ற கருத்தைக் கண்ணன் வெளியிடுகிறார்.

காமிய கர்மம் என்பது இம்மையில் தனக்குப் பட்டம், புகழ், பெயர், புத்திரபாக்கியம், செல்வம், தீர்க்காயுள், ஆரோக்கியம் முதலியன அமையவேண்டும்று ஆசைப்படுவதும், மறுமையில் சுவர்க்கம் முதலிய பதவிகள் வேண்டுமென்று விரும்புவதுமாம். இத்தகைய ஆசைகளை ஒழிப்பது சன்யாசம்.

சில ஞானிகள் நித்திய, நைமித்திக, காமிய கர்மங்கள் அனைத்து கர்மங்களின் பயனையும் விட்டுவிடுவதே சன்யாசம் என்கின்றனர். இரண்டும் ஒன்றுதான். *அற்றது பற்று எனில் உற்றது வீடு.*

BOTH SANNYASA  AND TYAGA  in common parlance indicate renunciation, the leaving or giving up of worldly objects and pursuits—especially as embraced by those who take holy vows as in the ancient Shankara Order of swamis. But the Gita makes a deeper case for true renunciation as requiring an inner nonattachment above and beyond any merely physical act of material abandonment. In that explication, a subtle distinction is made between sannyasa and tyaga to define two aspects of renunciation.

*Sannyasa*-renunciation signifies the abandonment of the desires and selfish motives that are the usual instigators of actions. *Tyaga*-renunciation means the relinquishment of, or nonidentification with, the inevitable fruits, or results, that accrue from all actions.

In no way does the Gita advocate the renunciation of action itself, for action is a veritable necessity for the incarnate being, and a positive support for the aspiring yogi. The actionless state is rather the culmination of renunciation, the inner abandonment of identification with the ego and its instruments of action in the realization that God is the Sole Doer, Perceiver, and Knower. In this state, even though obligatory and dutiful actions continue, these are known as nishkama karma, inactive activity, because they cause no karmic bondage, being free from selfish motivation and from taking to one’s self the resulting effects, or fruits. This is the ultimate or perfect renunciation toward which the yogi strives—first, by learning to work without personal desire for attaining the fruits of action ( sannyasa); and second, by spiritually transcending identification with the resulting fruits ( tyaga).

Renunciation of the fruits of all actions is followed for the singular purpose of finding God, in preference to getting entangled with worldly ambitions.

Renouncing material goals and working solely to please God in order to find Him is the same as yoga, which emphasizes performing meditative actions to attain God-union. Therefore a true yogi is a sannyasi,  and a true sannyasi is a yogi.

*By dutiful and divine actions and by concentration on his innate oneness with God, with no thought for obtaining the fruits of those actions for the sake of the body-identified ego, the devotee who practices sannyasa negates the binding effects of the karmic law.*

While sannyasa refers to the absence of personal expectation during the performance of activity, the other aspect of perfect renunciation, tyaga, involves nonattachment to, or nonidentification with, the resulting fruits of actions once those actions have been performed. The tyagi,  like the sannyasi,  is a yogi, working and meditating only to please God.

Thus does the yogi who has attained perfect inner renunciation of desireful motivations and of the fruits of action engage in the performance of good actions and meditative actions in a state of conscious ecstasy—to please God alone. Such a renunciant beholds the Lord and not his ego as the Doer of all physical, mental, and spiritual actions, and as the Recipient of the fruits thereof.

The person who is identified with the ego and its desires for and attachments to the fruits of actions is confined in the perception of material activity going on within and around him. The renunciant whose mind remains anchored in God feels all bodily and cosmic activities as workings of the Divine Intelligence, the immanence of God that is omnipresent in the created realm and in all beings.

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.

**

*உதவி*:
(1) பரமஹம்ச யோகானந்தாவின் “GOD TALKS WITH ARJUNA” (2) சுவாமி சித்பவானந்தரின் “பகவத்கீதை” உரை; (3) ஸ்ரீராமகிருஷ்ணமடம் – பகவத்கீதை பொழிப்புரை – ஸ்ரீ அண்ணா (4) திருக்குறள், (5) புலவர் சீனி கிருஷ்ணசாமி அவர்களின் “கீதோதயம்”

Leave a comment