பகவத்கீதை – பதினேழாம் அத்தியாயம் – சிரத்தாத்ரய விபாக யோகம் – 4


*ஞானத்தேடல் பதிவு எண்: 086 நாள்: 26.11 2022*

*பகவத்கீதை – பதினேழாம் அத்தியாயம் சிரத்தாத்ரய விபாக யோகம் – 4*

சுலோகம் 23: *ஓம் தத் ஸத் என்று மூன்றுவிதமாக ஸத் சித் ஆனந்தமயமான பிரம்மத்தினுடைய பெயர் மொழியப்பட்டுள்ளது. அந்த பிரம்மத்தினால் படைப்பின் ஆரம்பத்தில் பிராமணர்களும் வேதங்களும் வேள்விகளும் படைக்கப்பட்டன.*

ப்ரம்மத்திற்கு ஓம், தத், ஸத் என மூன்றுவித பெயர்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்விதமான பெயர்களால் பிராம்மணர்களும், வேதங்களும், யக்ஞங்களும் ஆதிகாலத்தில் சிருஷ்டிக்கப்பட்டன. பரமாத்மாவின் மூன்று பெயர்களே இவை. இவற்றின் முக்யத்துவத்தை வேதங்கள் பகர்கின்றன.

யக்ஞம், தானம், தவம் மூன்றின் புண்ய கர்மங்களுடன், ‘ஓம், தத், ஸத்’ என்ற இந்த மூன்று திருநாமங்களுடன் நெருங்கிய தொடர்புள்ளவை. இம்மூன்று பெயர்களும் பரமாத்மாவினுடையதே.

மூன்றும் மூன்று குறிப்புப் பெயர்களாக பரப்ரம்மத்திற்கு அமைந்துள்ளன. அதுவே ஓசையாக ஒலியாக உலகமெலாம் பரவி நிற்கிறது. எனவே அது “நாதப்ரம்மம்” ஆகிறது.

ஒலியின் தொகைதான் ஓங்கார ஸ்வரூபமாக ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஓம்காரஸ்வரூபம்தான் ப்ரணவம் எனப்படுகிறது. பரப்பிரம்மம் ஓங்காரவடிவினன் என்பது ஒவ்வும்.

ப்ரஜாபதியான பிரம்மாவும் பரமாத்மாவிடமிருந்தே தோன்றியவர். பின்னர் ப்ரம்மாவிடமிருந்து, வேதம், யாகம், பிராமணர்கள் உண்டாயினர்.

“ஓம்” என்ற பிரணவத்தை உச்சாடனம் செய்தால், கர்மம் செய்யும் வகையில் தோன்றும் குற்றங்கள், குறைகள் நீங்கி கர்மம் முழுமை பெறும். தொடக்கம், முடிவு இரண்டிலும் “ஓம்” என்று சொல்வது அவசியம்.

*ஸ்ரீ இராமாநுஜர்* : ‘ஓம், தத், ஸத்’ என்கிற மூன்று விதமான சப்தமும் பிரம்மத்தோடு சேர்ந்ததாக இருக்கிறது. பிரம்மமாவது வேதம். வேதமென்னும் பதத்தினால் வேதங்களிற் சொல்லப்பட்ட கர்மங்கள் சொல்லப்படுகின்றன.

அதாவது – வேதங்களிற் சொல்லப்பட்ட யக்ஞம் முதலிய கர்மங்கள் இம்மூன்றுவித சப்தங்களோடு சேர்ந்தவைகளாயிருக்கின்றன. அதில் ஓம் என்னும் பதத்தோடு சேர்ந்திருப்பது வேதத்தில் சொல்லப்படுகிற கர்மங்களுக்கு அங்கமாக அவற்றைச் செய்ய ஆரம்பிக்கும்போது சொல்லப்படுகிறபடியினால் ‘தத், ஸத்’ என்னும் பதங்களோடு சேர்ந்திருப்பதும் அவை பூஜ்யங்களென்று தெரிவிப்பதற்காக, அவற்றை இந்தப் பதங்கள் சொல்லுகிறபடியினால் இப்படிப்பட்ட மூன்று விதமான பதங்களோடு சேர்ந்தவைகளாகவே, வேதத்தில் சம்பந்தமுடைய, முன்று வர்ணத்தார்களும் யக்ஞங்கள் செய்யப்பட்டன என்று அறிய வேண்டும்.

*ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகன்* : ‘ஓம், தத், ஸத்’ என்று வேதத்தில் சொல்லப்பட்ட யக்ஞம் முதலியவைகளுக்கு லக்ஷணம் சொல்லப்படுகிறதென்று சொல்லுவது உசிதமல்ல.  

‘பிரம்மம்’ என்னும் பதம், அந்த யக்ஞம் முதலியவைகளைச் சொல்லாதாகையினாலும் முக்யமான பொருளுக்கு ஒருவித விரோதமில்லை யாகையினாலும் இந்த மூன்று பதங்களும் நேரில் பரமாத்மாவிற்குப் பேர் என்பதும், அதை அடைய வேண்டிய வஸ்துவை உனக்குச் சுருக்கமாகச் சொல்லுகிறேன்.

அதாவது எவனொருவன் ‘தத்’ என்கிற பெயரை அறிகிறானோ அவன் பிரம்மம் ஆகின்றான்.

ஓ சௌம்யனே! இந்தப் பிராணிகள் எல்லாம் ஸத்தையே காரணமாக உடையது; ஸத்தையே ஆதாரமாக உடையது. ‘ஸத்தையே லய ஸ்தானமாக உடையது’ என்று அர்த்தமுள்ள ஸ்ம்ருதி வாக்கியங்களில் சொல்லப்பட்ட தாகையினால், இந்த சாஸ்த்ரத்தில் முக்யமாக நிருபிக்கப்படுகிற பரமாதமாவைச் சொல்லும் விதம் உபாசனம் செய்கிறவர்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக உபதேசிக்கப்படுகிறதென்பது யுக்தம். 

*ஸ்ரீ இராகவேந்திரர்* : ‘ஓம், தத், ஸத்’ என்கிற மூன்றும் ப்ரம்மத்தினுடைய பெயர்கள். அவ்விதப் பெயர்களை ஏன் ப்ரம்மத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால், சகல ஜகத்தையும் தரிக்கிறபடியினாலே ஓம் என்றும், குணங்களால் வியாபித்திருக்கிறபடியினாலே அல்லது ஞானிகளினால் பார்க்கப்படுகிற படியினாலே ‘தத்’ என்றும், நிர்த்தோஷமாயும், சுப குண பூர்ணமாயு மிருக்கிறபடியினாலே ‘ஸத்’ என்றும், ஸ்ருதிகளில் சொல்லப்பட்டிருக்கின்றன. அந்தப் பிரம்மத்தினாலே பிராம்மணர்கள் வேதங்கள் யக்ஞங்கள் இவை ஏற்படுத்தப்பட்டன.

THE UNMANIFESTED, THE INFINITE, the Changeless Spirit is called Para-Brahman:  the One Absolute. But during the cycles of manifestation, the Nameless and Formless is described as Aum-Tat-Sat (or, often, Sat-Tat-Aum)—so designated by the ancient sages. In the Christian Bible Sat-Tat-Aum is spoken of as the Father, Son, and Holy Ghost.

Aum (the “Word” of the Bible) is God the Holy Ghost, Invisible Vibratory Power, the direct creator and activator of all creation.

Tat (“That”) is God the Son, the Christ or Kutastha Cosmic Intelligence actively present in all creation.

Sat (“Being, Truth”) is God the Father, beyond creation, existing in vibrationless unchangeability.

As the calm ocean without waves and the ocean with waves in tumult are one and the same in essence, differing only in appearance, so also the Unmanifested Sea of Spirit (Para-Brahman) and the Manifested Sea of Spirit ( Aum-Tat-Sat) are the selfsame Sole Reality, differing only in form.

God as Sat is the Father of creation (Ishvara), though He exists beyond it. God as Tat is the Son or Christ (Krishna or Kutastha) Intelligence that pervades the universe. God as Aum is the Creative Vibration that upholds the worlds through Prakriti, Mother Nature, His consort. It is the macrocosmic triple conception that has established itself in the microcosmic human relationship of father and mother and their reflection in their offspring.

Man displays in himself the three divine manifestations. His body is the result of Aum or vibratory forces. His Christ Intelligence or Tat exists in his omniscient spiritual eye between the eyebrows. This Intelligence, individualized as his soul, is a reflection of Cosmic Consciousness or Sat residing in the thousand-petaled lotus in the brain.

These three measures of Spirit incarnate in man “from the beginning”  are the Brahmins,  Sat, “knowers of God,” the soul; the Vedas,  Tat,  the soul’s intuitive all-knowing intelligence; and the sacrificial rites,  Aum,  the vibratory life that creates and preserves the body, empowering it to perform its divine and dutiful rituals of existence—including the ultimate sacrificial rites of yoga (one of which is meditation on Aum) that reunite the soul with Spirit. By this inherence, indigenous in the coming-forth of mortal beings, the Lord has endowed to man the way and the means—and the irrevocable assurance—of salvation.

All yogis who perform the sacrificial rite of listening to the omnipresent holy vibration of Aum attain cosmic perception, Veda, and by this expanding blessedness ascend to cosmic consciousness and become Selfrealized souls, the true Brahmins or “knowers of Brahman.”

Aum of the Vedas became the sacred word Hum of the Tibetans, Amin of the Moslems, and Amen of the Egyptians, Greeks, Romans, Jews, and Christians. Amen in Hebrew means “sure, faithful.” Aum is the all-pervading sound emanating from the Holy Ghost as it performs its work of creating and maintaining the universal structure. Aum is the voice of creation, testifying to the Divine Presence in every atom.

“These things saith the Amen, the faithful and true witness, the beginning of the creation of God. ”

“In the beginning was the Word, and the Word was with God, and the Word was God….All things were made by him (the Word or Aum); and without him was not any thing made that was made.”

“Faith cometh by hearing, and hearing by the word of God.”

“He who knows Aum knows God.”

Aum is the divinely empowered creator of all things; it manifests itself as cosmic light and cosmic sound. As the ocean roar is a conglomerated sound of all waves and is manifested in each wave, so the cosmic sound and the cosmic light are the aggregate of all animate and inanimate creation, and are manifested in each man as the light of life and may be heard by him as the astral sound of Aum.

Each seeker who wants liberation from the world of delusion must pass through the sphere of the Holy Ghost vibration and the sphere of Christ Intelligence before he can reach God the Father beyond the phenomenal worlds. “No man cometh unto the Father (Cosmic Consciousness), but by me (Christ Consciousness).” These words were spoken by Jesus from his oneness with the Infinite Christ Intelligence: “Believe me that I am in the Father, and the Father in me.”

Jesus promised to send to his disciples the Comforter, the Holy Ghost, to speed them on their way to Self-realization. An advanced devotee can hear the sound of Aum in his body and can see its light in his spiritual eye.

After he has become acquainted with these two limited manifestations, in the bodily sound and in his spiritual eye, then, by further spreading of his consciousness in Omnipresence, he sees his small spherical eye of light expand into a cosmic sphere whose luminosity conflagrates the whole universe.

Similarly, as the devotee listens to Pranava,  the holy sound of Aum,  he forgets the restrictions of the human body and of space and can feel the Aum of his body vibrating into a perception of his cosmic body. He feels his consciousness vibrating everywhere with the ever-expanding Aum sound. In ecstasy he suddenly sees his body as an atom or cell in the cosmic body.

Perceiving the cosmic body as his own, he feels in it the cosmic Aum sound (see verse 24) and the Christ Intelligence (see verse 25). By further advancement he becomes conscious of his presence not only in all creation but with God the Father beyond creation (see verses 26–27).

சுலோகம் 24: *ஆகையினால், வேதம் ஓதும் பெரியோர்களுடைய சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள வேள்வி, தானம், தவம் முதலிய கர்மங்கள் எப்பொழுதும் ஓம்என்கிற பரமாத்மாவின் திருப்பெயரை உச்சரித்துக் கொண்டே தொடங்கப் படுகின்றன.*

‘ஆகையினால் வேதாத்யநம் பண்ணும் வேத வித்பந்நர்களுடைய சாஸ்த்ரோக்தமாந யக்ஞம், தானம், தவம் முதலான கர்மங்கள் வேதத்தில் சொன்னபடி ஆரம்பிக்கும் பொழுது, முதலில் ‘ஓம்’ என்று சொல்லி, பரமாத்மாவின் திருநாமாவை உச்சாடணம் செய்தே ஆரம்பிக்கப்படுகின்றன. இப்படி ஓம் என்னும் சப்தத்தோடு அந்வயம் சொல்லப்பட்டது.’

இதன் மூலம் பகவான் நாம மஹிமையை எடுத்துக் காட்டுகிறார்.

பரமாத்மாவிடமிருந்து இந்த யக்ஞங்கள் முதலியன தோன்றின. எனவே அவருடைய திருநாமம் ‘ஓம்’ என்று சொல்லப்படுகிறது. ஓம் என்ற திவ்ய நாமச் சொல்லை உச்சரிப்பதாலேயே எல்லாக் கர்மங்களின் குற்றம் குறைகள் யாவும் அகன்று விடுகின்றன. ஓம் என்பது தொடக்கத்திலும், முடிவிலும் மங்களத்தை அளிக்கின்றது.

*’ஓம் இத்யேகாக்ஷரம் பிரஹ்ம : நம இதி பஸ்சாத் : நாராயணேதி பஞ்சாக்ஷராணி:‘ ‘ஓம் நமோ நாராயணாய‘* என்ற எட்டு அக்ஷரங்களை உச்சரிப்பதால் சகல பாவங்களும் நசித்துப் போகின்றன.

இது பரமாத்மாவின் திவ்ய நாமாவின் பெருமையாகும். சமயமும், ஓய்வும் கிடைக்கும் போதெல்லாம் மனத்தினுள் ‘ஓம் நமோ நாராயணாய’ என்னும் திரு மந்திரத்தை ஜபித்துக் கொண்டேயிருக்க வேண்டும் மோக்ஷம் பெற வழி இதுவே.

குறையற்ற கர்மம் இல்லை. குறைபாட்டை முகாந்தரமாகக் கொண்டு கர்மம் செய்யாமலும் விட்டுவிட முடியாது. உடம்பைப் பெற்றவன் கர்மமே செய்யாமல் இருக்க முயலுவதும் பொருந்தாது. கர்மத்தில் உள்ள குறைபாட்டைப் போக்குவதற்கு, கர்மம். ஒவ்வொன்றும் ‘ஓம்’ என்று உச்சரித்துக் கொண்டேதான் ஆரம்பிக்கப்படுகிறது.

*ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன்* : ‘யக்ஞம், தானம் முதலியவை பிரணவத்தை முன்னிட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றை விதிக்கின்ற சாஸ்த்ரங்களினாலே ஏற்பட்டதென்கிற அபிப்பிராயத்தினால் ‘ஓம்’ என்று சொல்வதும், இவ்விடத்தில் வேதாந்த சாஸ்த்திரத்தை செவ்வனே உணர்ந்தவர்கள் எல்லாவற்றிலும் அந்தர்யாமியாகிய பரமாத்மாவை அனுசந்தானம் செய்து கொண்டு அதனால் இந்தக் கர்மம் அவனுக்கு ஆராதனம் என்று எண்ணிக் கொள்வதற்காக, அவ்வாறே மஹானாகிய சௌனகர், எப்பொழுதும் கர்மங்களின் முன்னும் பின்னும் பகவானையே நினைக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்.’

‘வேதாந்த சாஸ்திரம் தெரியாதவர்களுக்கும், பரமாத்மாவைச் சொல்லுகிற பதத்தைக் கூறுவதனால் மங்களம் முதலியவை கிடைக்கிறதென்பது தானாகவே ஏற்பட்டதாகலின் ப்ரணவத்திற்கு வைதிகங்களான எல்லா வஸ்த்துக்களுடனும் சம்பந்தம் ஏற்பட்டது.’ 

இவ்விதம் ஓம் என்ற தத்துவத்தின் பயன் எடுத்துரைக்கப்பட்டது.

AUDIBLE UTTERANCE OF  “AUM”  PRODUCES a sense of sacredness, even as a devotee feels awe at the sound of the word “God.” At the beginning of all acts and rituals, repetition of the holy syllable, “Aum, ” the Pranava,  symbol of the Divine, removes the taints and defects that inhere in all human activities, even the highest ones.

However, real understanding of Aum is obtained only by hearing it internally and then becoming one with it in all creation. That is why the ancient sages prohibited the study of the Vedas to those who were kayastha (body-identified) and thus unreceptive to the cosmic sound, Aum.

In the Bible Saint John tells us: “I was in the Spirit on the Lord’s day, and heard behind me a great voice, as of a trumpet, saying, I am Alpha and Omega, the first and the last”—the omnipresent Aum vibration by which God created the heavens and the earth. Devotees who can spiritually commune with Aum and understand its omnipresent significance are able to feel God the Father, beyond creation, manifested in creation as the creative Cosmic Vibration.

All aspiring yogis who would be performers of the inner holy rites of consuming restlessness and delusion in the fire of ecstasy, givers of unconditional devotion to God, and cultivators of true perception through Self-mastery, must begin their progress on the spiritual path by first chanting Aum,  and then communing with Aum by hearing this sacred Word-symbol of God present right within the body-temple.

சுலோகம் 25: *தத்என்று அழைக்கப்படுகின்ற பரமாத்மாவுக்கே எல்லாம் உரியது என்ற உணர்வுடன் பயனை விரும்பாமல் பலவிதமான வேள்வி, தவம் ஆகிய செயல்களும் தானமாகிய கர்மங்களும், மோட்சமாகிய நலன் நாடும் நல்லோரால் செய்யப் படுகின்றன.*

‘தத்’ என்றால் பரமாத்மா அவரை தியானிப்பதைக் குறிப்பது ‘தத் இதி’ என்பது எந்த பரமாத்மாவிடமிருந்து இப்பிரபஞ்சம் உண்டாயிற்றோ, அவருக்கே எல்லாம் உரியது. அவரிட்ட கட்டளையின்படியே கர்மங்கள் நடக்கின்றன. நான் ஒரு கருவியே என்ற எண்ணத்துடன், அஹங்கார, மமகாரங்களை விட்டொழித்துத் தியாகம் பண்ணி விடுவர். எல்லாம் அவன் செயல் என்றெண்ணிக் கர்மங்கள் செய்தால் கர்மபலன் தன்னுடையதல்ல என்ற தெளிவு ஏற்படும். 

கண்ணன் காண்டீபனுக்கு அவன் கடமையை உணர்த்தினார்! போர் புரிவதால் பார்த்தனுக்குத் தோஷமேதும் இல்லை.

REALIZATION OF TAT, THAT, the immortal Indefinable, the Cosmic Intelligence in creation, comes after the ever-striving seeker of salvation has succeeded in merging in Aum.  He then withdraws his mind from all minor spiritual perceptions and engages himself in the high ceremony of uniting his superconsciousness with Tat,  the cosmic Christ or Krishna Spirit that exists behind the patterned curtain of cosmic vibration and is the undefined essence that holds together all threads of the tapestry of creation. Devotees who merge in this omnipresent Intelligence are the true givers of their soul to Kutastha Chaitanya,  the Tat.

சுலோகம் 26 & 27: *ஸத்என்ற பகவானுடைய பெயர் உண்மை என்ற கருத்திலும் நல்லெண்ணம் என்ற கருத்திலும் உபயோகப் படுத்தப் படுகிறது. அங்ஙனமே, அர்ஜுனா! உயர்ந்த மங்களமான கர்மத்திலும் ஸத்என்ற சொல் உபயோகிக்கப் படுகிறது.*

‘பார்த்த! உண்மை என்ற கருத்திலும், நன்மை என்ற கருத்திலும், ‘ஸத்’ என்ற சொல் வழங்கப்படுகிறது. மங்களமான கர்மங்களிலும் ‘ஸத்’ என்ற சொல் உபயோகிக்கப்படுகிறது.

‘யாகங்களிலும், தவத்திலும், தானத்திலும் நிலைத்திருப்பதும், ‘ஸத்’ என்று சொல்லப்படுகிறது. இன்னும் பிரம்மத்தின் பொருட்டுச் செய்யும் கர்மமும் ‘ஸத்’ என்று தான் சொல்லப்படுகிறது.’

முக்காலத்திலும், எக்காலத்திலும் மாறாத – அழியாத – அசையாத பிரம்மமே ‘ஸத்’ என்று சொல்லப்படுகிறது. சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட மங்கள கர்மம் தான் பிரஸஸ்த கர்மம் (சிறந்த கர்மம்) ஆகும். அதை நிஷ்காமமாகச் செய்தால் அது பரமாத்மாவை அடையக் காரணமாகும். எனவே அதை ‘ஸத்’ என்று சொல்லி ஸத்கர்மம் என்று சொல்கிறோம்.

யாகம், தானம், தவம் இவை முறைப்படி செய்யப்பட்டால் அவை இயல்பாகவே ‘ஸத்’ என்பதற்கு இலக்கணமாகி விடுகின்றன.

சாத்விகமான யாகம் தானம் தவங்கள்தான் இங்கே குறிப்பிடப்படுகின்றன. அவற்றில் சிரத்தை, பிரேமை ஆஸ்த்திகப்பண்பு இம்மூன்றும் இருப்பின் அது ‘நிஷ்டை’ என்றும் சொல்லப்படும். அதுவே ‘ஸ்தி’ ஆகும். இந்த உறுதிப்பாடே பரமாத்மாவாகிய தன்னை அடையக் காரணமாகும் என்கிறார் பகவான். 

பகவானுடைய ஆணைப்படி நிஷ்காமமாக அவருக்காகவே செய்யப்படும் கர்மம் ததர்த்தீயம். அர்ஜுனன் தனக்காகவே. போர் புரியணும் என ஆணையிட்டதால் பார்த்தன் போர் புரிவது குற்றமாகாது. இக்கர்மம் ‘ஸத்’ கர்மமே. இதில் எவ்வித ஐயமும் இல்லை. காண்டீபன் க்ஷத்ரிய கர்மமப்படி பகவானின் ஆணைப்படி போர் புரிவது உசிதமே.

THE GOOD QUALITIES AND GOOD ACTIVITIES of all human beings, deities, and liberated men have their source in Sat,  God the Father, the Absolute and Immutable.

All the activities of the seeker by which he attains oneness with Cosmic Consciousness are Sat in nature; they are supreme divine actions that lead to perception of the Transcendental, Sat.

After great yogis have penetrated farther than the sphere of the cosmic Aum vibration and of the Tat consciousness within all creation, they become one with Sat,  beyond creation. Merged in the Transcendental Sun of Cosmic Consciousness, such devotees behold, flowing out of Its bosom, the rays of all divine perceptions and all divine activities.

When an advanced yogi reaches the ultimate state of soul realization by dissolving all restlessness in ecstasy, and has been able by self-discipline and devotion to merge himself in the Illimitable Existence beyond creation, he becomes immovably fixed in Sat.  As he penetrates deeply into the realization of the Divine Transcendence, then Tat,  the Lord immanent in creation, also becomes a part of his samadhi experience. The illusion of duality—the manifested in contradistinction to the Unmanifested— dissolves; the realm of creation and Infinity beyond are seen as one and the same Cosmic Consciousness, the Sole Reality, Sat.

சுலோகம் 28: *அர்ஜுனா! சிரத்தையின்றிச் செய்யப்படுகின்ற ஹோமமும், அளிக்கப்படுகின்ற தானமும், அவ்வாறே செய்யப்படும் தவமும், செய்யப்பட்ட மங்கள கர்மங்களும் அஸத்என்று சொல்லப் படுகின்றன. எனவே, அவை இந்த உலகிலும் நன்மை பயவாதவை; இறந்த பிறகும் நன்மை பயவாதவை.”*

சிரத்தை இல்லாமல் செய்யப்படும் ஹோமமும், பிறருக்குத் தருகின்ற தானமும், அப்படியே செய்யப்படும் தவமும் மங்கள கர்மங்களும் ‘அஸத்’ ஆகும். இவை இப்பூவுலகிலும், மேலுலகிலும் இறந்த பின்னும் நன்மை தராதவையே.’

சிரத்தையுடன் செய்யப்படுபவை உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும் இஹ பர ஸுகம் தரும். சாஸ்த்ரங்கள், பெரியோர்கள், பகவான் இவர்களிடமும் முழுமையான சிரத்தா பக்தி இல்லாதவர்கள் பாவிகள்.

DEEP FAITH ( SHRADDHA), UNCONDITIONAL devotion, is necessary for success in the spiritual path. “Without faith it is impossible to please Him: for he that cometh to God must believe that He is, and that He is a rewarder of them that diligently seek Him.”

Religious practices that are followed carelessly or halfheartedly are lacking in the unconditional devotion of faith and may be considered asat (against Truth). The search for the Lord—our Father and the Maker of the Universe—is worth our full attention; what else indeed could be deemed more important?

The man who mechanically performs his devotional duties, without real zest and aspiration, finds his spiritual thirst unsatisfied in this life; and, according to the law of karma, it will remain unslaked in the next world also.

But the yogi who through meditation attunes himself to the intrinsic shraddha of the soul, finds that this devotional faith ultimately rewards him with the wondrous fulfillment of God-realization.

இதுவரை ‘சிரத்தாத்ரய  விபாக யோகம்’ என்ற பதினேழாவது அத்தியாயம் தொடர்பான பதிவுகள் நிறைவுறுகின்றன.

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.

**

*உதவி*:
(1) பரமஹம்ச யோகானந்தாவின் “GOD TALKS WITH ARJUNA” (2) சுவாமி சித்பவானந்தரின் “பகவத்கீதை” உரை; (3) ஸ்ரீராமகிருஷ்ணமடம் – பகவத்கீதை பொழிப்புரை – ஸ்ரீ அண்ணா (4) திருக்குறள், (5) புலவர் சீனி கிருஷ்ணசாமி அவர்களின் “கீதோதயம்”

Leave a comment