பகவத்கீதை – பதின்மூன்றாம் அத்தியாயம் – க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம் – 5


*ஞானத்தேடல் பதிவு எண்: 072 நாள்: 03.11 2022*

*பகவத்கீதை – பதின்மூன்றாம் அத்தியாயம் க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம் – 5*

சுலோகம் 20: காரியத்தையும் கரணங்களையும் உண்டுபண்ணும் விஷயத்தில் பிரகிருதி காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், சுக-துக்கங்களை அனுபவிப்பதில் ஜீவாத்மா காரணமென்று கூறப்படுகிறான்.

புருஷனே, பிரகிருதி(இயற்கையின் படைப்பு) ஆகிறான். பிரகிருதியின் வெவ்வேறு மாறுபாடுகளே உடலாகவும், புலன்களாகவும். பரிணமிக்கின்றன. அப்புலன்கள் ஞானத்தை அடிப்படையாகவும், கர்மங்களை அடிப்படையாகவும் கொண்டு பாகுபடுகின்றன. ஜுவாத்மா என்பது. பிரகிருதியோடு மேலும். சம்பந்தப்படுதற்கு புலன்கள் பயன்படுகின்றன. அத்தகைய தொடர்பு இன்பதுன்பமாக வடிவெடுக்கிறது. இங்ஙனம் புருஷன், பிரகிருதியோடு சேர்வதால் ஞானம் பெற்று வருகிறான். இப்படி ஜீவாத்மாவைப் பக்குவப்படுத்துவதே பிரகிருதியின் வேலை.

*Paramahamsa Yogananda explains thus:*

THE PURUSHA MENTIONED HERE is not the Supreme Spirit (Para-Purusha) nor Its reflection in creation as Kutastha Intelligence, but the individualized soul ( jiva) that is conditioned and limited by its association with the body.

Cosmic Nature or Prakriti is the direct creative cause of the human body and its Nature-dictated activities (“the effect”), and of the bodily senses, which are the means (“the instrument”) of the experience of objective creation by Purusha, the perceiving soul. The soul then interprets its contact with sense objects in terms of either joy or sorrow derived from that experience.

As the vast sky appears small when seen from a tiny window, so the infinite Lord appears limited in finite Nature and in the egos of individual beings.

The subjective Cosmic Dreamer, God or Para-Purusha, created His Consort or Mother Nature, Prakriti, the invisible Holy Ghost creative force.

Her production, the human body, is a miniature replica of vast Cosmic Nature—a “little Prakriti.”

Similarly, God is reflected in miniature as the soul in the body of man.

The soul in essence is a perfect reflection of the Divine; but through becoming identified with a body, it imagines itself to be the ego that is subject to pleasure and pain. The soul temporarily dreams itself to be a body, experiencing its attendant joys and sorrows; though in reality it is always the changeless image of God.

The Lord is responsible for having divided Himself into the Transcendental Spirit and the Cosmic Dreamer. In His dream state He bestowed individuality and intelligence on Mother Nature or Prakriti by which she creates matter and human bodies with their sensibilities and

activities. It is He who is responsible for giving individuality and intelligence to the reflected human souls by which they dream of pleasure and pain and other bodily sensations and mental perceptions.

Nature is responsible for creation of the objective human dream-body; and God, as the Soul and Perceiver, is responsible for the feelings of dream joy and dream suffering in that dream body. The differentiation was explained in XIII:2.  God through Prakriti creates the hypnotic suggestion of the objective dream creation, and individualized souls as body-identified egos create their own reactions to the dream objects.

The immutable Spirit became the fleeting cosmic motion-picture of twenty-four qualities; and the flawless soul-image of man identified itself with the Nature-bound body and senses. By yoga practice a devotee should establish himself in the perception of soul blessedness and of aloofness from the body even while he is performing his worldly duties. In this way his soul frees itself from the dream perception of the body and its various sensations. Without the duality of pleasure and pain, a dream loses its reality. So by neutralizing joy and sorrow, man finds that the troublesome body-dream loses its reality and its power to hurt.

Even though Nature is responsible for the creation of the body with its senses and activities, and even though the soul is responsible, through body identification, for the perception of duality (good and evil, and so on), yet man may regain his divine heritage. Through the proper use of the God-given power of free choice, a painstaking devotee who meditates and cultivates nonattachment can neutralize the suggestions of the body with its susceptibility to contrary impressions that have been inflicted on him by Nature and by the body-attached soul.

God ever retains His bliss, impartially witnessing His cosmic dream-drama; similarly, man made in His image should realize himself to be the immortal soul, impartially witnessing and playing in the motion picture of life.

சுலோகம் 21: பிரகிருதியில் இருந்து கொண்டுதான் புருஷன் பிரகிருதியிலிருந்து உண்டான முக்குணங்கள் நிறைந்த பொருட்களை அனுபவிக்கிறான். மேலும், அந்த குணங்களுடைய தொடர்பே, அந்த ஜீவாத்மா நல்லதும் தீயதுமான பிறவிகளில் பிறப்பதற்குக் காரணமாகிறது.

வெயிலில் நிற்பவன் வெயிலை அனுபவிக்கிறான். பனியில் நிற்பவன் பனியை அனுபவிக்கிறான்.

அவ்வாறே ஜீவாத்மா, பிரகிருதியோடு(இயற்கையின் படைப்புகள்) பொருந்தி இருக்கையில், பிரகிருதியின் தன்மைகளை எல்லாம் தன்னுடையவைகள்! என நினைத்து அனுபவிக்கிறான்.

‘நான் அறிவுடையவனாக இருக்கிறேன்; நான் அறிவற்றுப் போனேன்’ __ இவை போன்ற உணர்ச்சிகள், குணத்தோடு பற்று வைத்திருப்பதாலேயே வருகின்றன.
இனிப் பிறப்பிற்குக் காரணமாக இருப்பதும் பற்றுதலே.

மேன்மையான நற்குணங்களோடு பற்று வைப்பவன்! தேவன் போன்ற மேலானவனாக, நற்குணவானாகப் பிறக்கிறான். கீழ்மையான குணத்தில் பற்று வைப்பவன் மிருகங்களைப் போல கீழ்மையான குணங்களோடே பிறக்கிறான்.

மேலானதும், கீழானதும் கலந்தக் குணத்தில் பற்று வைப்பவன், சாதாரண இயல்புடைய மனிதனாகப் பிறக்கிறான்.

இப்படித் தொடர்ந்து வருகிற ஜனன, மரண சம்சாரக் கடலில் இருந்து விடுதலையடைவதற்கு வழியொன்றும் இல்லையா? என்பதற்கு அடுத்தச் சுலோகத்தில் விடை வருகிறது.

நமது குணங்களே நமது பிறவிகளுக்கும் காரணமாகிறது! என்கிறார் ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.

சுலோகம் 22: அந்த புருஷனாகிற ஜீவாத்மா இந்த தேகத்தில் இருப்பினும், அது உண்மையில் பரமாத்மாவே. (அவரே) சாட்சியாக இருப்பதால் ‘உபத்ரஷ்டா’ என்றும், உண்மையான ஒப்புதல் அளிப்பதால் ‘அநுமந்தா’ என்றும், எல்லோரையும் தாங்குதலாலும் காப்பதாலும் ‘பர்தா’ என்றும், ஜீவரூபமாக இருந்தும் அனுபவிப்பதால் ‘போக்தா’ என்றும், பிரம்மா முதலியவர்களுக்கும் தலைவரானதால் ‘மகேசுவரன்’ என்றும், சுத்த ஸத் சித் ஆனந்தமயமாக இருப்பதால் ‘பரமாத்மா’ என்றும் சொல்லப் படுகிறார்.

உடலிலே இத்தனை செயல்கள் நடைபெறுகையில், அறிவின்மையால் உழலும் மனிதன், தானே இத்தனைக்கும் காரணமானவன்!(கர்த்தா), என்னாலேயே அனைத்து செயல்களும் நடைபெறுகிறது! என நினைக்கிறான்.

அந்த உயிரின் நிலையே பரமாத்மாவின் தோற்றமாகும். ஜீவனுள்ளே இருக்கும். பரமபுருஷன்( பரமாத்மா) எப்படிப்பட்டது என்றால் அவர் பலவிதமாக உயிரினுள்ளே வீற்றிருக்கிறார்!

*சாட்சி (உபத்ரஷ்டா)*:
இறைவன், நம்மருகில் இருந்து காண்பவனாக அல்லது சாட்சியாக இருக்கிறான். ஒரு விளையாட்டை ஆடுபவனைவிட, அதை அருகிலிருந்து காண்பவனுக்கு யார், எங்கே தவறு செய்கிறார்கள்! என்பது நன்கு தெரியும். அதைப்போல இறைவன், நமது செயல்களை ஒரு சாட்சியாக இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.

*அனுமதிப்பவன்( அனுமந்தா)*:
ஒன்றும் தெரியாத அறிவற்றவன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். பார்த்ததை நல்லது என்றோ, கெட்டது என்றோ நிராகரிக்க அவனுக்குத் தெரியாது; அறிவாளிக்கோ, அது இயலும். இப்பிரபஞ்சத்தின் நடைமுறைக்கு அவ்வாறே இறைவனும் அனுமதிக் கொடுப்பவராக இருக்கிறார்.

*தாங்குபவன்( பர்த்தா):*
விளையாட்டைப் பார்க்கவும், அனுமதிக்கவும் ஒருவனுக்கு இயலலாம். ஆனால் அதற்கு ஆகிற செலவைக் கொடுத்து அதை நடத்துபவனைத் “தாங்குபவன்” என்பர். திரைப்படத்தைத் தாங்கும் வெண்திரையானது, திரைப்படத்தைத் தாங்குவதைப் போன்று பரமாத்மாவும், ஜீவாத்மாவைத் (பிரகிருதியை) தாங்குகிறார்.

*அனுபவிப்பவன்( போக்தா)*:
திரையானது, திரைப்படத்தைத் தாங்கினாலும், அதனால் திரைப்படத்தை இரசிக்க இயலாது. அது ஜடப்பொருளாக இருப்பதே அதற்குக் காரணம். மனைவிக்குக் கணவன் பர்த்தா எனப்படுகிறான். அதாவது இல்வாழ்வவை மனைவியோடு சேர்ந்து அனுபவிக்கிறான். அவ்வாறே ஆனந்த வடிவாக இருக்கும் பரமாத்மாவும், ஜீவாத்மாவிற்கு போக்தாவாக ( தெய்வீக அனுபவிப்பாளராக) இருக்கிறார். ஜீவாத்மா செய்யும் செயல்களும் இறைவனையே சேருகின்றன.

*மகேஸ்வரன்:*
பரமபுருஷனோ(பரமாத்மாவோ) அரசனைப் போன்றவர். அரசனுக்கு, அவருடைய குடிமக்கள் அனைவரும் கட்டுப்பட்டவர்களே. மகேஸ்வரனது ஆளுகைக்குப் பிரகிருதி அல்லது க்ஷேத்திரம் (உயிர்கள்) முற்றிலும் கட்டுப்பட்டவை. மகேஸ்வரனது ஆணையை மீறுவதற்கு உயிர்களால்( ஜீவாத்மாக்களால்) இயலாது. 

இத்தனை விதங்களில் பரமாத்மா இயற்கையோடு தொடர்பு வைத்திருந்தும், அவர் இயற்கையில் எதற்கும் கட்டுப்பட்டவர் அல்லர். எனவே இறைவன் பரமாத்மா எனப்படுகிறார்; அதாவது இயற்கைக்கும்அப்பாற்பட்டவர். இவ்வாறே இந்த உடலிலும் ஜீவாத்மாவின்(பிரகிருதி) செயல் ஒன்றிலும் கட்டுப்படாதவராக, ஆனால் அதற்கு ஆதரவும், ஒழுங்குப்பாடும் தருபவராகப் பரம புருஷன் ஒவ்வொரு உயிரிலும், பரமாத்மாவாக வீற்றிருக்கிறார். 

இவ்வாறு போர்க்களத்தில் மனம் குழம்பி நிற்கும் அர்ஜுனனுக்கு க்ஷேத்ரம், க்ஷேத்ரக்ஞன் பற்றிய ஞானத்தை விரிவாக எடுத்துரைத்தார்! ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.

“இங்ஙனம் புருஷனையும், குணங்களுடன் பிரகிருதியையும் அறிபவன் எவ்வாறு வாழ்ந்தாலும், அவன் மீண்டும் பிறப்பதில்லை”.

சுலோகம் 23: இவ்வாறு புருஷனையும் குணங்களோடு கூடிய பிரகிருதியையும் எந்த மனிதன் தத்துவரீதியாக அறிவானோ, அவன் எல்லாவிதங்களிலும் செய்யவேண்டிய கடமைகளைச் செய்து கொண்டிருந்தால்கூட மறுபடியும் பிறப்பதில்லை.

பிரகிருதியின் செயல்களால் பிரம்மமும் நலத்தையோ, தீங்கையோ அடைவதில்லை. பிரம்மத்தை அறிபவனும் பிரம்மத்தோடு இணைகிறான். வினைப்பயனால் உடலில் ஏற்படும் இன்பத் துன்பங்களில் அவன் கட்டுப்படுவதில்லை. கானல் நீர் போன்று பிரகிருதியின் தோற்றத்தைப் போற்றிப் பாராட்டுவதால், அவனுக்குப் பிரகிருதியில் பற்று ஒன்றும் ஏற்படுவதில்லை. இந்தப் பிரபஞ்சம் என்பது வெறும் தோற்றமே! என்று அவன் அதைப் புறக்கணிப்பதாலும், அவனுக்கு நஷ்டம் எதுவும் வருவதும் இல்லை. இவ்வுடல் இருக்கும்வரை அதில் வாழ்க்கை நமது விதியின்படி விதவிதமாக நடைபெறுகிறது. அதற்கிடையில் ஞானியானவன், ஜீவன்முக்தனாக வாழ்கிறான்.

இவ்வாறு ஜீவாத்மா, பரமாத்மா பற்றிய அறிவுத் தெளிவு உள்ளவன். உலக வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும், அவன் ஞானியாக வாழ்வான். எனவே உலக வாழ்வில் இருந்தாலும் அவனை உலகப் பந்தங்கள் பிணைப்பதில்லை.

எனவே அவன் வாழ்விற்குப் பின்னர் பிரம்மத்தோடு இணைந்து விடுகிறான். எனவே மீண்டும் அவன் பிறவி எடுப்பதில்லை; ஏனென்றால் உலகப் பற்றுகள் அவனிடம் இல்லை. தீயில் கருகிய கயிறு எதையும் கட்டுவதற்கு உதவாது. அவ்வாறே ஞானாக்னியில் வெந்த, ஆசைகளற்ற கர்மம், இன்னொரு பிறவியை உண்டு பண்ணாது! என்கிறார்! ஶ்ரீகிருஷ்ணர், அர்ஜுனனிடம்.

சுலோகம் 24: அந்தப் பரமாத்மாவைச் சில மனிதர்கள் தூய்மையடைந்த நுண்ணிய புத்தியினால் தியானத்தின் மூலமாக இதயத்தில் பார்க்கிறார்கள். மற்றும் சிலர், ஞானயோகத்தின் மூலமாகவும், வேறு சிலர் கர்மயோகத்தின் மூலமாகவும் பார்க்கிறார்கள் (அடைகிறார்கள்).

தியானத்தால் தெளிவடைந்த அறிவை உடையவர்கள், ஆத்மாவை தங்கள் உள்ளத்திலே உணர்கிறார்கள். இன்னும் சிலர், தங்கள் ஞானத்தால் ஆத்மாவை உணர்கிறார்கள். வேறு சிலரோ, தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்து, ஒரு கர்மயோகியாக வாழ்கிறார்கள்; அப்படிப்பட்டோரும் ஆத்மாவை உணர்கிறார்கள்.


இங்கே இராஜ யோகம், ஞான யோகம், கர்ம யோகம் ஆகிய மூன்றும் சொல்லப்பட்டன. இனி பக்தியோகம் அடுத்த சுலோகத்தில் வருகிறது.

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.**
*உதவி*: சுவாமி சித்பவானந்தர் உரை; God Talks with Arjuna by Paramahamsa Yogananda

Leave a comment