பகவத்கீதை – பதின்மூன்றாம் அத்தியாயம் – க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம் – 4


*ஞானத்தேடல் பதிவு எண்: 071 நாள்: 03.11 2022*

*பகவத்கீதை – பதின்மூன்றாம் அத்தியாயம் க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம் – 4*

சுலோகம் 15: சராசரமான எல்லாப் பிராணிகளினுடைய உள்ளும் புறமும் அது நிறைந்திருக்கிறது. அசைவன – அசையாதனவற்றின் வடிவிலும் கூட அதுவே உள்ளது. அது நுண்ணியதாக இருப்பதால் அறிய முடியாதது. மிக அருகிலும் மிக தூரத்திலும் இருப்பதும் அதுவே.

கடலில் மிதக்கும் பனிக்கட்டியின் உள்ளும், புறமும் இருப்பதும் நீரே. அவ்வாறே பரமாத்மா எல்லா பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்.


கடலின் மேல்புறம் அலைவீசி அசைந்தாலும், கீழ்புறம் அசையாதிருக்கிறது. அதைப்போல பரமாத்மாவும் குணங்களோடு பொருந்தி பிரகிருதியாக இயங்குகிறார். பனிக்கட்டி கரைந்த பின்னர், நம் கண்ணுக்குத் தெரிவதில்லை.

அவ்வாறே சுத்த நிர்க்குண பிரம்மம் , பேரறிவு வடிவம் என்றாலும் மனப்பக்குவம் இல்லாத மானிடருக்கு அது தெரிவதில்லை.


தன் சொந்தப் பூமியில் தன் பாதத்திற்குக் கீழே பொன் இருப்பதை மானிடன் அறிய மாட்டான். அதைப்போல தனக்குள் பரமாத்மா இருப்பதை சாதாரண மனிதன் உணரமாட்டான்.


*தன்னுள் இருக்கும் பரமாத்மாவை அறியாதவன், விண்ணுலகில் அவர் இருக்கிறார்! என்றும், மறுமையிலேயே அவரைப் பார்க்க முடியும்! என்றும் நினைக்கிறான். தனது அந்தராத்மாவே பரம்பொருள்! (உள்ளுணர்வு) என அறிவுடையோர் உணர்வர்.*


இறைவனிடம் தாளாதப் பக்தியுடன் இருப்போர், அனைத்தையும் விட, தனது ஆழ்மன உள்ளுணர்விற்கே முக்கியத்துவம் கொடுப்பர்! ஏனென்றால். அது இறைவனின் குரல்! என அறிவுடையோர் அறிவர்; இறைவன் தன்னை வழிநடத்துகிறார்! என உறுதியாக நம்புவர்.


எனவே பரப்பிரம்மம் ‘அனைத்து பொருள்களுக்கும் உள்ளும், புறமும் உள்ளது; அது அசையாதது! அசைவது! நுண்மையானது! தொலைவிலும், அதே நேரம் அருகிலேயும் உள்ளது!’ என்று அர்ஜுனனுக்குப் போதிக்கிறார்! ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.

சுலோகம் 16: அறியத்தக்க அந்த பரப்பிரம்மம் ஆகாயத்தைப்போல் பிளவு இல்லாமல் எங்கும் ஒரே சீராக நிறைந்திருந்த போதிலும், சராசரமாகிய பிராணிகள் அனைத்திலும் பிரிக்கப்பட்டுத் தனித்தனியாக இருப்பது போன்ற தோற்றத்தை அளிக்கிறது. ஸ்ரீமகாவிஷ்ணு ஸ்வரூபமாக சகலப் பிராணிகளையும் தாங்கிப் பேணிக் காப்பது. மேலும் ருத்ரனுடைய உருவமாக அழிப்பது. அப்படியே பிரம்மாவின் உருவமாக எல்லோரையும் படைப்பது.

ஆகாயம், எங்கும் நிறைந்திருந்தாலும் அது ஒவ்வொரு வடிவத்திற்கு உள்ளேயும் பிளவுபட்டது போன்று காணப்படுகிறது; பிளவுபடுத்துகிற வடிவத்திற்கு உள்ளேயும், அது இடைவெளியின்றி பரவியிருக்கிறது.


பரமாத்மாவும் அத்தகையவரே. மீதிமிருக்கிற நான்கு பூதங்களையும் ஆகாயமே தாங்குவதைப் போன்று பிரபஞ்சம், உயிர்கள் ஆகிய அனைத்தும் பிரம்மத்திலேயே நிலைபெற்றிருக்கின்றன. அவைகள் பிரளய காலத்தில் ஒடுங்குவது பிரம்மத்திடம்; படைப்புக் காலத்தில் தோன்றுவதும் பிரம்மத்திடமே.


படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று நிலைகளிலும் அவைகள் பிரம்மத்திற்கு வெளியே இல்லை.

அலைகள் கடலில் தோன்றி, கடலில் நிலைபெற்றிருந்து, கடலிலேயே ஒடுங்குவதைப் போல, இவை யாவும் பரமாத்மாவிடம் தோன்றி, நிலைபெற்றிருந்து, பரமாத்மாவிடமே ஒடுங்குகின்றன.


அதாவது படைத்தல், காத்தல், அழித்தல் என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொருவரும் தெய்வம் இருப்பதைப் போல நாம் நினைத்தாலும், உண்மையில் பரம்பிரம்மம் என்ற ஒன்றிலேயே அனைத்தும் அடங்கியுள்ளன; ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு தெய்வங்கள் எனக் கிடையாது! அனைத்தையும் உள்ளடக்கியது, பிரம்மம் என்ற ஒன்றே! என்கிறார் ஶ்ரீகிருஷ்ணர்.


எவ்வாறு நீருக்கென்று ஒரு வடிவம் இல்லையோ, அவ்வாறே பிரம்மத்திற்கும் எவ்வடிவமும் இல்லை. அதன் தேவைகேற்ற வடிவத்தை அது தாங்குகிறது; எங்கும் நிறைந்தது! பரப்பிரம்மம்! என்கிறார் ஶ்ரீகிருஷ்ணர்.


எனவே பரப்பிரம்மம் பிரிவுபட்டதைப் போலக் காணப்பட்டாலும், அது பிளவுபடாதது ( முழுமையானது). அனைத்தையும் தாங்கிக் காப்பதும், அழிப்பதும் மீண்டும் தோற்றுவிப்பதும் பரப்பிரம்மமே! என்கிறார்! ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.

சுலோகம் 17: அந்த பரப்பிரம்மம் ஒளிகளுக்கெல்லாம் ஒளியானது; மாயைக்கு அப்பாற்பட்டது; ஞான வடிவானது; அறியப்பட வேண்டியது;  தத்துவ ஞானத்தினால் அடையத் தக்கது; எல்லோருடைய இதயத்திலும் சிறப்பாக விளங்குவது என்று கூறப்படுகிறது.

பரப்பிரம்மம் ஒளி வடிவமானது. சூரியன், நட்சத்திரங்கள் முதலியன பிரளய காலத்தில் தங்கள் ஒளியை இழந்து மறைகின்றன. புத்தியானது ஆத்மாவிடமிருந்து பெற்ற உணர்ச்சியை இழக்கிறது. ஆத்மாவோ தன் ஒளியை ஒருபோதும் இழப்பதில்லை. ஜடப்பொருளுக்கு உண்டாகிற இருளும், வெளிச்சமும் ஆத்மாவை அணுகுவதில்லை.


அறிவைக் கொண்டே சூரியனையும், இருளையும் நாம் அறிகிறோம். அந்த ஆத்மாவானது ஞான வடிவாகும்; அது தன்னைத்தானே அறிகிறது. தன்னைத் தானே சார்ந்திருக்கும் பொழுது, தன்னை, நிறைபொருளாக, முழுமையாக உணர்கிறது.
எனவே ஆத்மாவால் அடைவதற்குரியது ஆத்மாவே; அதுவே பிரம்மம். அது ஒவ்வொருவரின் இதயத்திலும் நிலைத்திருக்கிறது. ஒளி வடிவான பிரம்மம், தன்னுள்ளேயே இருக்கிறது! என்பதை உணருபவன், இறைவனை வெளியேயும் காண்பான்.


எனவே தன் இதயத்தில் இறைவனைக் காண்பவன், பிரபஞ்சத்திலும் இறைவனைக் காண்பான். அப்பரப்பிரம்மமானது ஒளிவடிவானது! இருளுக்கு அப்பாற்பட்டது; அறிவினால் அடையப்படுவது; அதுவே எல்லோருடைய இதயத்திலும் நிலைத்திருக்கிறது! என்கிறார் ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.

சுலோகம் 18: இவ்விதமே க்ஷேத்திரத்தினுடைய ஸ்வரூபமும், அவ்விதமே ஞானமும், அறியவேண்டிய பரமாத்ம ஸ்வரூபமும் சுருக்கமாகச் சொல்லப்பட்டன. என்னுடைய பக்தன் இதை உள்ளபடியறிந்து, என்னுடைய ஸ்வரூபத்தை அடைகிறான்.

இதுவரை க்ஷேத்திரம், ஞானம்,அறியப்படும்பொருள்(ஞேயம்) என்பவற்றைப் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. மனிதன் எதன் மீது முழு மனத்தையும் செலுத்துகிறானோ அதை அறியத் தகுந்தவன் ஆகிறான்; அதில் வல்லவனாகவும் ஆகிறான்.


தீவினைகளிலேயே ஈடுபடுபவன் தீவினையாளன் ஆகிறான். ஆன்மீகத்தில் ஈடுபாடு உடையவன் ஆன்மீகவாதியாகவும், விஞ்ஞானத்தில் ஈடுபாடு உடையவன் விஞ்ஞானியாகவும் பரிணமிக்கிறான்.

இத்தனையாகவும் விளங்குபவன் ஈசனே! என்ற ஞானம் வந்த பிறகு,எப்பொழுதும் அவன் ஈசனுடைய மகிமையிலேயே ஈடுபாட்டுடன் இருந்து ஈசனை அடையத் தகுந்தவன் ஆகிறான்.


இறைவனைக் கண்டவனே ஞானி. நான் இதுவரை கூறிய அனைத்தையும் அறியும் என் பக்தன், என்னை அடையத் தகுந்தவன் ஆகிறான்! என்கிறார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா.

*Paramahamsa Yoganananda’s explanation*:

12-18 THE UNMANIFESTED TRANSCENDENT SPIRIT beyond creation is causeless, without attributes, eluding classification; hence not sat or asat nor referable to any other category.

God is described as immanent in creation: Kutastha or the Intelligence that informs the phenomenal worlds. In all men it is He who works through their hands, moves in their feet, sees and hears through their eyes and ears, eats with their mouths, and in all faces gazes at Himself. With unseen vibratory fingers He holds in perfect balance the ideational, astral, and physical universes.

The Lord is not a Person with sense organs, but Consciousness itself; He is therefore aware of the thoughts and sensory perceptions of every being.

Jesus referred to this all-embracingness when he said that not a sparrow shall fall on the ground without the knowledge of the Father.

The subtle invisible Spirit is omnipresent, ever before the gaze of the wise but seemingly nowhere to be found by the ignorant. Far from those in delusion, the blessed Lord is near and dear only to the heart of His devotee.

Spirit employs the three modes of Nature to appear as (1) the Creator or Brahma (rajas,  activity), (2) the Preserver or Vishnu ( sattva,  the nourishing quality), and (3) the Destroyer or Shiva ( tamas,  dissolution).

The motion-picture beam is the light-revealer and the “life” of all scenes on the screen; without the beam the “living” quality of the pictures would disappear.

Similarly, God’s immanence as Cosmic Intelligence is called the Light of All Lights because It makes manifest the motion pictures of creation and the multifarious intelligences therein. Without Spirit, sentient beings would lose their consciousness and their bodies; the universe of suns and moons and planets would vanish into nothingness.

The yogi who in ecstasy attains realization of this immanence of Spirit as the Cosmic Intelligence, the Krishna or Christ Consciousness transcending the darkness of relativity, “enters My being”—expands the little self into Omnipresence, sentient intelligence into Infinite Wisdom.

சுலோகம் 19: பிரகிருதியையும் புருஷனையும் – இவ்விரண்டையுமே ஆரம்பமற்றதென அறிந்துகொள். மேலும் ராகம், துவேஷம் முதலிய விகாரங்களையும், முக்குணங்கள் அடங்கிய பொருட்கள் அனைத்தையும் கூட பிரகிருதியிலிருந்து உண்டானவையே என்று அறிந்து கொள்.

காலம், தேசம் என்ற கட்டுப்பாட்டில் தென்படும்போது அது பிரகிருதி என்றும், “இயற்கை” என்றும் அழைக்கப்படுகிறது. புத்தி முதல் ஜடப்பொருள் வரை வெவ்வேறு வடிவெடுக்கும் தன்மை பிரகிருதியிடம் உண்டு. ஆணவம், கன்மம், மாயை என முக்குணங்களாகப் பரிணமிப்பதும் அதுவே.

அது வேறுபாடு இல்லாததாக, எக்குணமும் இல்லாததாகப் பேரறிவாகத் தன்மயமாக இருக்கும் போது புருஷன் எனப் பெயர் பெறுகிறது.

ஆனாலும் பிரம்மம் ஒன்றே என்பதால், ஆத்மாவும், பிரம்மமும் (இறைவன்) வேறுவேறல்ல; இரண்டும். ஒன்றே! என்ற அத்வைதத் தத்துவமே இங்கே கூறப்படுகிறது.

இறைவனை யாரும் உண்டாக்கவில்லை; எனவே அது “அனாதி”. ( தானே உருவானது; ஆரம்பமும், முடிவும் அற்றது).

*இராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசம்*:

“சமுத்திர ஜலம் சிலவேளை அமைதியாகவும், சிலவேளை அலைகள் பொங்கிக் கொந்தளித்தும் இருப்பதைப் போல, பிரம்மமும், மாயையாகவும் காட்சியளிக்கிறது. ஆரவாரிக்கும் சமுத்திரம் மாயை; சலனமற்ற சமுத்திரம் பிரம்மம்.”
அதாவது பிரம்மம் சலனமற்றது, செயலற்றது. பல்வேறு உயிரினங்கள், உயிரற்றவைகளாகப் பிரம்மம், மாயையினால்  காட்சியளிக்கிறது. ஆத்மா வேறு, இறைவன் வேறல்ல; இரண்டும் ஒன்றே! என்பதே கிருஷ்ணர் கூறுவதாகும்.

PURUSHA, THE LORD’S TRANSCENDENT PRESENCE in creation as the KutasthaIntelligence and the individualized soul, and Prakriti, Nature, indicate two aspects of the same God. He is causeless and eternal; therefore His manifestations as Purusha and Prakriti are also beginningless and endless.  – Paramahamsa Yogananda

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.**
*உதவி*: சுவாமி சித்பவானந்தர் உரை; God Talks with Arjuna by Paramahamsa Yogananda

Leave a comment