பகவத்கீதை – பதின்மூன்றாம் அத்தியாயம் – க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம் – 1


*ஞானத்தேடல் பதிவு எண்: 068 நாள்: 02.11 2022*

*பகவத்கீதை – தின்மூன்றாம் அத்தியாயம் – க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம் – 1*

Paramahamsa Yogananda translates the name of this chapter as THE FIELD AND THE KNOWER OF THE FIELD. This chapter deals with the following:

The Divine Forces That Create the Body, the Field Where Good and Evil Are Sown and Reaped

The True Nature of Matter and Spirit, Body and Soul

Characteristics of Wisdom

Spirit, as Known by the Wise

Purusha and Prakriti (Spirit and Nature)

Three Approaches to Self-realization

Liberation: Differentiating Between the Field and Its Knower

 *_“O Offspring of Kunti (Arjuna), by the knowers of truth, this body is called kshetra (“the field” where good and evil karma is sown and reaped); likewise, that which cognizes the field they call kshetrajna (the soul)….Also know Me to be the Kshetrajna (Perceiver) in all kshetras (the bodies evolved out of the cosmic creative principle and Nature). The understanding of kshetra and kshetrajna—that is deemed by Me as constituting true wisdom.”_*

34 சுலோகங்கள் கொண்ட இவ்வத்தியாயம் ஆறு விஷயங்கள் பற்றிப் பேசுகிறது:

*க்ஷேத்திரம்*

விளைநிலத்திற்கும், பூமிக்கும் க்ஷேத்திரம் என்பர். பகவான் அகிலப் பிரபஞ்சத்தையே க்ஷேத்திரம் என்று கூறுகிறார். மனித தூல  உடலையும் பகவான் க்ஷேத்திரம் என்று கூறுகிறார்.

*க்ஷேத்திரக்ஞன்*

இந்த உடலை க்ஷேத்திரம் என்று அறிபவன் க்ஷேத்திரக்ஞன் ஆவார். க்ஷேத்திரக்ஞன் ஆகிய நான், ஈஸ்வரன் என அறிந்து கொள்ள வேண்டும். 

ஆத்மாவை ஈஸ்வரனாக தெரிந்து கொள்ள வேண்டும். ஆத்மா அனைத்து உடலுக்குள் இருந்து பிரகாசித்துக் கொண்டிருக்கும்.

க்ஷேத்திரக்ஞனை நான் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

க்ஷேத்திரக்ஞன் அனைத்து உயிரினங்களில் *சாட்சியாக* அறிமுகப்படுத்துகிறார் பகவான்.

இதுவே *அஹம் பிரம்மாஸ்மி என்ற மகாவாக்கியம்* ஆகும்.

க்ஷேத்திரத்தையும் க்ஷேத்திரக்ஞனையும் ஐக்கியப்படுத்துகிறார் (ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் ஐக்கியப்படுத்துகிறார்) பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.

*புருஷன்*

க்ஷேத்திரக்ஞன் மற்றும் ஆத்மா ஆகிய சொற்கள் ”புருஷன்” என்பதைக் குறிக்கிறது. அனைத்தும் ஒரே பொருளைத் தரும் சொல். புருஷன் இந்த உடலில் இருப்பதால், உடல் சுக – துக்கங்களை அனுபவிக்கிறது.

*பிரகிருதி*

பிரகிருதி எனும் சொல் மாயையைக் குறிக்கிறது. காரணப் பிரபஞ்சம் இவ்வுலகம், காரியமான பிரபஞ்சம் மாயை; மாயையிலிருந்து வெளிப்பட்ட இந்த பிரபஞ்சமே பிரகிருதி எனப்படும்.

*ஞானம் அடைய வழிகள்*

ஞானம் என்பது சாதாரணமாக மனதில் தோன்றும் அறிவைக் குறிக்கும். ஞானத்தை அடைய இருபது சாதனைகள் செய்ய வேண்டும் என பகவான் அருள்கிறார்:

1 தற்பெருமையின்மை

2 தன்னிடமில்லாத நற்குணங்களை இருப்பதாகக் காட்டிக் கொள்ளாமை

3 எந்த உயிரினத்தையும் எந்த வகையிலும் துன்புறுத்தாமல் இருத்தல்

4 சுக-சுக்கங்களை பொறுத்துக் கொள்ளுதல்

5 மனம், வாக்கு முதலியவற்றில் நேர்மை

6 நம்பிக்கையுடனும், பக்தியுடனும் பெரியோர்களுக்குப் சேவை செய்தல்

7 உள்ளும் புறமும் தூய்மையாக இருத்தல்

8 உள்ளத்தின் உறுதி

9 மனம் மற்றும் ஐம்புலன்களோடு கூடிய உடலை கட்டுப்படுத்துதல்

10 இவ்வுலக இன்பங்களில் பற்று அற்ற தன்மை

11 அகங்காரம் இல்லாமை

12 பிறப்பு – இறப்பு, மூப்பு, நோய் இவைகளை சிந்தித்தல்

13 மனைவி, மக்கள், வீடு, செல்வம் இவற்றில் தன்னுடையது என்ற எண்ணமின்மை (மமகாரமின்மை)

14 வேண்டியன – வேண்டாதனவாற்றை அடையும் போதும் எப்போதும் சமபாவனையுடன் இருத்தல்

15 யோகத்தின் மூலம் பிறழாத பக்தி

16 தனிமையில் தூய்மையான இடத்தில் வாழும் இயல்பு

17 உலகியலில் ஈடுபாடு கொண்டவர்களிடம் விலகி இருத்தல்

18 அத்யாத்ம ஞானத்தில் என்றும் நிலைத்து நிற்றல்

19 தத்துவஞானப் பொருளான பரமாத்மாவையே தியானம் செய்தலே ஞானம் என்றும்

20 எது அதனில் மாறுபட்டதோ, அது அஞ்ஞானம் எனும் அறியாமை என்று தெரிந்து கொள்வதே

ஞானத்தை அடையும் வழிகளாகும்.

*நேயம்*

நேயம் எனில் நம்மால் அறியப்படுவது எனப் பொருள். எது அறிவதற்கு தகுதி உடைய விஷயம் எனில் பிரம்மம் ஒன்றே.

  • மேலே தமிழில் உள்ளவை விக்கிபீடியாவில் இருந்து.)
இந்த அத்தியாயம் முதல் நமக்கு ஒரு புதுப் பார்வை கிடைக்கிறது. இறைவன் நம்மில் இருந்து வேறல்ல என்பது. ஆனால் இது மலைப்பான எளிதில் புரிந்து கொள்ள இயலாத கருத்து.

வேதங்களின் நான்கு மஹாவாக்கியங்களில் ஒன்றான *தத் த்வம் அஸி* என்பதை பகவத் கீதை விளக்குவதாகச் சொல்லப்படுகிறது. “நீயே அது ஆகிறாய்”.  நீ என்பது மனிதன், அது என்பது இறைசக்தி, நீ எப்படி கொஞ்சம் கொஞ்சமாக அதுவாக மாறலாம் என்பதை விளக்கும் நூல் ஸ்ரீமத் பகவத்கீதை.

சுவாமி கிருஷ்ணானந்தா சொல்வது:

While this body, which is physical in nature, is a field of operation, there must be somebody who carries on this operation in the field. The field is the body; but the knower of this body is the operator behind it. This body is, no doubt, the vehicle of action, but there is somebody who is conscious that there is a body which is to be used for the purpose of some activity. This body is an instrument of action in this world, but this body cannot act by itself. It is inert, constituted of the five inert elements—earth, water, fire, air and ether. Inert instruments cannot act by themselves. Even a car cannot move unless there is a driver. So is the case with this body. Unless there is prana and an intelligence that drives the prana in respect of the bodily limbs, there will be no activity.

So while this body may be called ketra, or field, the one who knows this field is and is conscious of it, operates through it—lives in it, indwells it, and handles it in a different manner—such a principle is called ketrajñaJña means knower, and ketra is, of course, field, so ketrajña means ‘the knower of the field’. Hence, this body is the ketra, the field, and the one who knows this field is the ketrajña.

Consciousness and matter constitute the subject of this chapter. The so-called field—this body or anything that is material—is an unconscious presentation that is usually called matter. That which knows matter is consciousness. Throughout the history of philosophy, there has been a lot of controversy on the theme as to what is the relationship between consciousness and matter, and this controversy has not subsided even today. How do we connect consciousness with matter?

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.

**

Leave a comment