பகவத்கீதை – ஒன்பதாம் அத்தியாயம் – ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம் – 3


ஞானத்தேடல் பதிவு எண்: 054 நாள்: 12.09.2022

பகவத்கீதை – ஒன்பதாம் அத்தியாயம் – ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம் – 3

சுலோகம் 9-20: மூன்று வேதங்களை அறிந்தவர்கள் யாகங்களால் என்னை பூஜித்து, சோமபானம் செய்து பாபத்திலிருந்து விடுபட்டவர்களாகி வானுலகிற்குச் செல்வதை வேண்டுகின்றனர். அவர்கள் புண்ணியமான தேவேந்திரலோகத்தை அடைந்து சொர்க்கத்தில் திவ்யமான தேவ போகங்களை அனுபவிக்கின்றனர்.

மூன்று வேதங்களிலும் வர்ணிக்கப்பட்டுள்ள முறைகளின்படி பயனை நல்கக்கூடிய கர்மங்களைச் செய்து, யாகத்தில் ஸோமம் என்ற ரசத்தை அருந்தி, பாவங்கள் அகன்று தூய்மை பெற்றவர்கள் என்னை யாகங்களால் உபாசித்து சுவர்க்கலோகம் அடைவதை வேண்டுகிறார்கள். அவர்கள் புண்ணியத்தின் பயன் வடிவான அமரர் உலகை அடைந்து, சுவர்க்கத்தின் தெய்விகமான தேவதைகள் அனுபவிக்கும் போகங்களை அனுபவிக்கிறார்கள்.

சுலோகம் 9-21: அவர்கள் அந்த அகன்ற வானுலகை அனுபவித்து புண்ணியம் தேய்ந்த பின்பு மண்ணுலகில் புகுகிறார்கள். இவ்வாறு மூன்று வேத நெறிகளைப் பின்பற்றும் போகப்பித்தர்கள் பிறப்பு, இறப்பு எய்துகின்றனர்.

அதாவது அந்த பரந்து விரிந்துள்ள சுவர்க்கலோக சுகத்தை அனுபவித்துவிட்டுப் புண்ணியம் தீர்ந்து போனவுடன் இறப்புக்குரியதான மண்ணுலகை அடைகிறார்கள். இவ்வாறு சுவர்க்கத்தை அடைவதற்கு சாதனமானவையும் மூன்று வேதங்களில் கூறப்பட்டவையும் பயனை நல்கக்கூடியவையும் ஆன கர்மங்களைச் சார்ந்திருக்கின்ற போகத்தில் பற்றுள்ளவர்கள் திரும்பத் திரும்பப் பிறந்து இறத்தலை அடைகிறார்கள். அதாவது, புண்ணியத்தினால் சுவர்க்கத்தையும், புண்ணியம் தீர்ந்து போவதால் மறுபடி மண்ணுலகையும் அடைகிறார்கள்.

THOSE WHO DESIRE CELESTIAL FRUITS of actions and who therefore purify themselves by Vedic rites (or any other scriptural rituals or injunctions), and by right living, receive the satisfaction of their hearts’ aspiration: entrance into the holy astral abodes. But that “entrance” leads inevitably to an “exit,” because such devotees did not desire God but only His gifts.

For such aspirants, good karma produces only a period of astral enjoyments. Whether long or short, that period will end. But those who single-heartedly love the Lord and who work for Him without desire for the fruits of action—those who perform the true yajna  of yoga, offering the self into the Self, and who by guru-given yoga techniques purify their bodies and consciousness with the soma  nectar of divine life energy—win the eternal liberation.

சுலோகம் 9-22: எனக்கு அன்னியரல்லாதவர்களாக என்னையே நினைத்து, எப்பொழுதும் என்னையே உபாசிக்கும் நித்திய யோகிகளுடைய யோக க்ஷேமத்தை நான் வழங்குகிறேன்.

வேறு எதிலும் நாட்டமில்லாது பகவான் ஒருவரிடமே அநன்ய பிரேமை கொண்டவர்களான எந்த பக்தர்கள், பரமேசுவரனான என்னைத் தியானித்துக் கொண்டு, எவ்விதப் பயனையும் எதிர்பார்க்காமல் உபாசிக்கின்றனரோ, இடைவிடாது என்னையே நினைத்துக் கொண்டிருக்கின்ற அவர்களுடைய யோகக்ஷேமத்தை (பகவானை அடைவதற்கான யோகத்திற்குரிய சாதனங்களை) நானே அடையச் செய்கிறேன்.

DEVOTEES WHO ARE FAITHFUL to their Creator, perceiving Him in all the diverse phases of life, discover that He has taken charge of their lives, even in the smallest detail, and makes smooth their paths by bestowal of divine foresight. Most men foolishly spend their valuable lives in seeking material riches, which must be forsaken at death. Yogis use their efforts to find imperishable wisdom. Their spiritual wealth is deposited for them by God in the bank of eternity, to be used by them forever.

சுலோகம் 9-23: சிரத்தையோடு கூடிய எந்தப் பக்தர்கள் மற்ற தேவதைகளையும் வணங்குகிறார்களோ, அவர்களும் விதி வழுவியவர்களாக என்னையே வணங்குகிறார்கள்.

அர்ஜுனா! பயனை எதிர்பார்ப்பவர்களான எந்த பக்தர்கள் சிரத்தையோடு கூடியவர்களாக இருந்தபோதிலும் மற்ற தேவதைகளை வழிபடுகிறார்களோ, அவர்களும் என்னையே வழிபடுகிறார்கள்.ஆனால், அவர்களுடைய வழிபாடு விதிமுறைப்படி உள்ளதன்று. ( அஞ்ஞானம் நிறைந்தது.)

சுலோகம் 9-24: நானே சகல யோகங்களுக்கும் போக்காகவும்நானே எல்லா யாகங்கள் உடைய போக்தாவாகவும், பிரபுவாகவும் இருக்கிறேன். அவர்கள் என்னை உள்ளபடி அறிகிறதில்லை. ஆகையால் அவர்கள் வழுவி பிறவியில் வீழ்கின்றனர்.

ஏனெனில், எல்லா யாகங்களையும் ஏற்றுக்கொள்பவனும், தேவர்களை அடக்கி ஆளும் மகேசுவரனும் நானே. ஆனால், அவர்கள் பரமாத்மாவான என்னை இந்தத் தத்துவ ரீதியில் அறிவதில்லை. ஆகையால் வீழ்ச்சி அடைகிறார்கள். (மீண்டும் பிறவியை அடைகிறார்கள்.)

A devotee can rise only as high as the object and the objective of his worship. If a virtuous man propitiates lesser gods, or worships with the goal of attaining the glorified pleasures of a life in heaven, the Supreme Being is indeed touched by the seeker’s devotion to Him in whatever form, and in the afterdeath state in the celestial regions grants him the fulfillment of his expectations. But after a time, being still in the realms of return, he falls again to mortal birth and must work anew to gain divine merit.

சுலோகம் 9-25: தேவர்களை தொழுபவர்கள் தேவர்களை அடைகின்றனர்; பிதகர்களைப் போற்றுபவர்கள் பிதிர்களை அடைகின்றனர்; பூதங்களை வணங்குபவர்கள் பூதங்களை போய் சேர்கின்றனர்; என்னைப் பூஜிக்கின்றவர்கள் என்னையே எய்துவார்கள்.

தேவதைகளை வழிபடுபவர்கள் தேவதைகளை அடைகிறார்கள்; பித்ருக்களை வழிபடுபவர்கள் பித்ருக்களை அடைகிறார்கள்; பூதங்களை வழிபடுபவர்கள் பூதங்களை அடைகிறார்கள். ஆனால், என்னை வழிபடுபவர்கள் என்னையே அடைகிறார்கள். (ஆகவே, என் பக்தர்களுக்கு மறுபிறவி கிடையாது.)

THE GITA (VIII:6) STATES that the predominant feeling at the time of death determines one’s future residence. It is in accordance with their devotional trends that men go to the high astral worlds of the deities, or to the regions of the ancestral heroes, or to the abode of elemental spirits, or to eternal freedom—the supreme vibrationless sphere of God. Those who commune throughout their lives with the Lord are at death not cast by the Karmic Judge into any cosmic-dream prison, but go unto their Father to become pillars in His mansion (unmanifested cosmos).

சுலோகம் 9-26: யார் எனக்கு இலை, மலர், கனி அல்லது நீரை பக்தியோடு படைக்கிறானோ, அத் தூய மனதின் அன்பளிப்பை நான் ( மகிழ்வுடன்) அருந்துகிறேன்.

எவன் பக்தியோடு எனக்கு இலை, மலர், பழம், நீர் முதலியவற்றை அர்ப்பணம் செய்கிறானோ, தூயபுத்தியுடன் பயனை எதிர்பார்க்காமல் பிரேமை நிறைந்த அந்த பக்தனுடைய பக்தியுடன் அர்ப்பணம் செய்யப்பட்ட காணிக்கையான அதை (இலை, மலர் முதலியவற்றை), நான் (ஸகுண ஸ்வரூபமாக வெளிப்பட்டுப் பிரியத்துடன்) அருந்துகிறேன்.

ஞானேஸ்வரரின் உரையில் இது மிக விவரமாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. நான் அக்கால நடையை மாற்றாமல் அப்படியே தருகிறேன்:

அநந்ய பக்தர்களுடைய யோகக்ஷேமத்தை பகவான் வஹித்துக் கொள்ளல்

ஸர்வவிதமாயும் மனஸால் எனக்கு விற்கப்பட்டுப் போனவர்களாய்,
— தாயின் கர்ப்பத்திலிருக்கும் சிசு ஸ்வரக்ஷ்ணத்திற்காக, தான் ஒருவிதமான ப்ரயத்நமும் செய்யாமல், தாயையே ஆச்ரயித்துக் கிடப்பதுபோல்,
என்னைக் காட்டிலும் உத்தமமான வஸ்து வேறொன்றில்லை என்று நினைத்து, என்னையே ஜீவனமாகப் பாவித்து,
இப்படி மனஸுக்கு வேறோர்போக்கும் அற்றவர்களாய் – எவர்கள் என்னைச் சிந்தித்துக் கொண்டிருப்பார்களோ, அவர்களை நான் உபாஸித்துக் கொண்டிருக்கிறேன்.

அவர்கள் எந்த க்ஷணத்தில் என்றோடு ஒன்றுபட்டு, என்னுடைய பஜநையில் இறங்குவார்களோ, அந்த க்ஷணத்திலேயே அவர்களைப் பற்றிய சிந்தை எனக்கு ஏற்பட்டுப் போகிறது.

பின்பு உலக வழக்கத்தின்படி, அவர்கள் செய்ய வேண்டியதாயிருக்கும் அனைத்தும் நானே செய்யவேண்டியதாய் விடுகிறது.

இறக்கை முளைக்காத குஞ்சின் உயிரிருத்தாற் றான் பிழைத்திருக்க முடியும், என்று பாவித்திருக்கும் தாய்ப் பட்சியைப்போலும், தன்னுடைய பசிதாகங்களைப் பாராட்டாமல் குழந்தைக்கு நன்மையையே தேடிவைக்கும் தாயைப் போலும், என்னை ஸர்வசக்தியையும் கொண்டு தழுவி நிற்கும் அவர்களுக்கு, ஆகவேண்டிய அனைத்தையும் நானே செய்துவைக்கிறேன். அவர்களுக்கு என்னுடன் ஒன்றுபட்டுப் போகவேண்டுமென்ற ஆசையிருந்தால், அந்த ஆசையைப் பூர்ணம் பண்ணி வைக்கிறேன். இல்லாவிட்டால், என்னோடொன்று பட்டுப் போகாமல், எனக்கு ஸேவை செய்துகொண்டிருக்க வேண்டுமென்று, அவர்களுக்காசையிருந்தால், எங்கள் இருவருக்கும் நடுவில் பரஸ்பரம் ப்ரேமையை செய்துவைக்கிறேன். இப்படி அவர்கள் மனஸில் என்னென்ன ஆசை உண்டாகுமோ, அதையெல்லாம் பூர்த்திசெய்துவைப்பது என் கடமையாகிறது. அத்துடன் கூட, அப்படி நான் செய்துகொடுத்தது ஒருநாளும் அழிந்துபோகாவண்ணம், அதைக் காப்பாற்றியும் வைக்கிறேன். இப்படி ஸர்வபாவத்தாலும் என்னையே ஆச்ரயித்திருக்கும் அவர்கள் யோகக்ஷேமம் என் தலையிலேயே சுமந்து போகிறது, அர்ஜுநா.

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.

**

உதவி:

மகாகவி பாரதியார் உரை
சுவாமி சித்பவானந்தர் உரை
பரமஹம்ச யோகானந்தர் உரை

Leave a comment