பகவத்கீதை – ஒன்பதாம் அத்தியாயம் – ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம் – 4


ஞானத்தேடல் பதிவு எண்: 055 நாள்: 12.09.2022

பகவத்கீதை – ஒன்பதாம் அத்தியாயம் – ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம் – 4

சுலோகம் 9-27: கௌந்தேய, நீ எதைச் செய்தாலும், எதைப் புசித்தாலும், எதை ஹோமம் பண்ணினாலும், எதைத் தானம் பண்ணினாலும், எத்தவத்தைப் புரிந்தாலும் அதை எனக்கு அர்ப்பணமாகச் செய்.

குந்தியின் மைந்தனே! எந்தக் கர்மங்களைச் செய்கிறாயோ, எதை உண்கிறாயோ, எதை ஹோமம் செய்கிறாயோ, எதைத் தானம் அளிக்கிறாயோ, அவையனைத்தையும் எனக்கே அர்ப்பணம் செய்துவிடு.

சுலோகம் 9-28: இவ்வாறு நன்மை தீமைகளை பயக்கின்ற வினைத்தளைகளிலிருந்து விடுபடுவாய் . சந்நியாச யோகத்தில் உள்ளத்தை உறுதியாக வைத்தனாக, வினையிலிருந்து விடுபட்டு என்னை அடைவாய்.

இவ்வாறு செய்வதனைத்தையும் பகவானுக்கே அர்ப்பணம் செய்வதாகிய ஸந்யாஸ யோகத்தில் ஈடுபட்ட மனத்துடைய நீ, நல்லதும் தீயதுமான பயன்களாகிய கர்மங்களின் கட்டுக்களில் இருந்து விடுபடுவாய். அவ்வாறு விடுபட்டு என்னையே அடைந்து விடுவாய்.

சுலோகம் 9-29: நான் எல்லா உயிர்களிடத்திலும் சமமாக இருக்கிறேன். எனக்குப் பகைவனும் இல்லை; நண்பனும் இல்லை. ஆனால் என்னைப் பக்தியோடு பூஜிக்கிறவர்கள் என்பால் உள்ளனர்; நானும் அவர்கள்பால் உள்ளேன்.

எல்லா உயிரினங்களிலும் நான் ஒரே சமமாக நிறைந்துள்ளேன். எனக்கு வெறுக்கத்தக்கவன் (வேண்டாதவன்) இல்லை; வேண்டியவன் இல்லை. ஆனால், எவர்கள் பிரேமை கொண்டு பக்தியுடன் என்னை வழிபடுகிறார்களோ, அவர்கள் என்னிடமும், நான் அவர்களிடமும் காணக் கூடியவனாக இருக்கிறேன்.

சுலோகம் 9-30: கேடு மிக உடையோனும் வேறு ஒன்றையும் எண்ணாது, என்னை பூஜிப்பான் என்றால், அவன் சாது என்றே கருதப்பட வேண்டும். ஏனென்றால் அவன் நன்கு தீர்மானித்தவன் ஆகிறான்.

மிகவும் தீய நடத்தை உள்ளவனாகிலும் வேறு எதிலும் நாட்டமின்றி என் பக்தனாகி என்னை வழிபடுவானேயானால், அவன் சாது (நல்லவன்) என்றே கருதப் படக்கூடியவன். ஏனெனில், அவன் பகவானைப் பூஜிப்பதைக் காட்டிலும் சிறந்தது வேறு இல்லை என்ற நல்ல தீர்மானத்துக்கு வந்தவன்.

சுலோகம் 9-31: விரைவில் அவன் அறவாளன் ஆகிறான்; நித்திய சாந்தியையும் அடைகிறான். கௌந்தேய! என் பக்தன் நாசம் அடைவதில்லை என்று நன்கு அறிவுறுத்துக.

அவன் விரைவிலேயே தர்மாத்மாவாக ஆகிறான்; நிலையான அமைதியை அடைகிறான். அர்ஜுனா! என்னுடைய பக்தன் அழிவதில்லை என்ற சத்தியத்தை உறுதியாக அறிந்து கொள்.

சுலோகம் 9-32: பார்த்தா, யார் இன்னும் கீழானவர்களாக இருக்கிறார்களோ, பெண்கள், வைசியர், சூத்திரர் ஆகியவர்களும் என்னைச் சார்ந்திருந்து நிச்சயமாகப் பரகதி அடைகின்றனர்.

ஏனெனில், அர்ஜுனா! பெண்கள், வைசியர்கள், நான்காம் வர்ணத்தவர்கள், அவ்வாறே சண்டாளர் முதலிய இழிந்த பிறவி அடைந்தவர்கள் எவர்களாக இருந்தாலும், அவர்களும் என்னையே தஞ்சமடைந்து மேலான பெரும் பேறான மோட்சத்தை அடைகிறார்கள்.

IN THESE STANZAS THE LORD OFFERS the sweetest solace and the highest hope to all of His children, even the erring and bewildered. Through steadfast practice of yoga meditation, renunciation of desires and attachments by loving dedication of all actions to God, repentance, and right resolution, not only can the righteous attain liberation, but even the wickedest of men may speedily emerge from sin into sanctity, from ignorance into the healing light of wisdom.

No man may be said to be so depraved that he is outside the pale of Divine Mercy. And such are the potency and mysterious workings of the soul that sometimes even the most evil of men have changed into saints.

Vicious persons, convicting themselves by their own consciences, often judge their souls to be lost forever. But the Gita gives assurance that they too may recover their long-forgotten spiritual heritage. No sin is unforgivable, no evil insuperable, for the world of relativity contains no absolutes.

Stanza 32 does not cast a slur against women and those of low birth and worldly businessmen (Vaishyas) and body-identified laborers (Sudras). No scripture suggests that these are the “worst among sinners”! The meaning is: For a true devotee all social inequalities are negated. Unlike society, God never disqualifies anyone because of occupation, sex, or birth. In reality the “family tree” of all beings is divinely impressive. Are they not children of the Most High, and coheirs to an eternal kingdom?

சுலோகம் 9-33: புண்ணியவான்களும் பக்தர்களுமாகிய பிராமணர்களையும் அப்படியே இராஜரிஷிகளையும் பற்றி பின்பு பேசுவானேன்? நிலையற்றதும், சுகமற்றதுமாகிய இவ்வுலகைப் பெற்ற நீ, என்னைப் பூஜிப்பாயாக.

(அங்ஙனமிருக்க) புனிதமான இயல்பு வாய்ந்த பிராமணர்கள், அவ்வாறே ராஜரிஷிகள் ஆகிய பக்தர்கள், என்னைச் சரணம் அடைந்து பரமகதியை அடைகிறார்கள் என்பதில் சொல்லுவதற்கு என்ன உள்ளது? ஆகையால், சுகமில்லாததும் நிலை இல்லாததுமான இந்த மனித உடலை அடைந்த நீ, எப்போதும் என்னை வழிபடுவாயாக.

IF EVEN SINFUL MEN AND WOMEN may retrace their footsteps to the Hallowed Home, how unhampered is the journey, then, for spiritually inclined people!

சுலோகம் 9-34: மனத்தை என்னிடம் வைத்து என்பால் பக்தி பண்ணி, எனக்கு யாகம் செய்து, என்னை வணங்கு. என்னைக் குறியாகக் கொண்டு உள்ளத்தை உறுதிப்படுத்தி என்னையே அடைவாய்.

என்னிடமே மனம் நிலைபெற்றுள்ளவனாக ஆகிவிடு; என் பக்தனாக ஆகிவிடு; என்னைப்பூஜிப்பவனாக ஆகிவிடு; என்னை வணங்கு, இவ்விதம் மனம்-புலன்களோடு கூடிய உடலை என்னிடம் ஈடுபடுத்தி, என்னையே அடையத் தக்க ஒரே புகலாகக் கொண்டு என்னையே அடைவாயாக.”

இதுவரை ‘ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்’ என்ற ஒன்பதாவது அத்தியாயம்.

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.

**

உதவி:

மகாகவி பாரதியார் உரை
சுவாமி சித்பவானந்தர் உரை
பரமஹம்ச யோகானந்தர் உரை

Leave a comment