பகவத்கீதை – ஒன்பதாம் அத்தியாயம் – ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம் – 2


ஞானத்தேடல் பதிவு எண்: 053 நாள்: 12.09.2022

பகவத்கீதை – ஒன்பதாம் அத்தியாயம் – ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம் – 2

*சுலோகம் 9-11*: என்னுடைய மேலான இயல்பை அறியாதவர்களான அறிவிலிகள் மனிதனுடைய உடலைத் தாங்கிக் கொண்டிருக்கும் உயிரினங்களனைத்திற்கும் தலைவனான என்னை அற்பமாக நினைக்கிறார்கள். அதாவது அவமதிக்கிறார்கள். (என்னுடைய யோகமாயையினால் உலகம் அனைத்தையும் காப்பதற்காக மனித உருத்தாங்கி நிலவும் பரமேசுவரனான என்னைச் சாதாரண மனிதன் என்று நினைக்கிறார்கள்.)

என்னுடைய பர சொரூபத்தையும், நான் உயிர்களுக்கு எல்லாம் ஈசனாக இருப்பதையும் அறியாத மூடர்கள், ஒரு மானிட வடிவம் எடுத்தவன் என்றெண்ணி என்னை அமதிக்கின்றனர்.

*சுலோகம் 9-12*: வீணான ஆசையுடையவர்களும் பயனற்ற செயல்களைச் செய்பவர்களும், வீணான அறிவு உடையவர்களுமான (தத்துவ ஞானம் இல்லாத) உறுதியற்ற மனமுடைய அறிவிலிகள் அரக்கத் தன்மையையும் அசுரத் தன்மையையும் மோகத்திற்கு வசப்பட்டுத் துன்புறுத்துவது ஆகிய இயல்பையே சார்ந்துள்ளார்கள்.

வீண் ஆசையுடையவர்கள், பயன்படாதச் செயலைச் செய்பவர்கள், கோணலறிவை உடையவர்கள், விவேகம் இல்லாதவர்கள், மையலூட்டுகிற ராட்ஷஸ, அசுர இயல்பை அடைகின்றனர்.

பொய்யுடலை மெய்யென்று நம்பி , அதன் மூலம் போகம் துய்த்தலே குறிக்கோள், என்ற மயக்கமே “மோகம்” ஆகிறது. பின்பு அதன் பொருட்டு கொள்ளும் ஆசையில் செய்யும் செயல்களும், வளர்க்கும் அறிவும், கையாளும் யுக்தியும் ஆத்ம லாபத்திற்கு உதவாதவைகளாக வீணாகின்றன. இத்தகைய கீழான இயல்புடையவர்களுள் ரஜோ குணத்தோடு கூடியவர்கள் ராட்ஷஸர்; தமோ குணத்தோடு கூடியவர்கள் “அசுரர்” ஆவர்.

*சுலோகம் 9-13*: ஆனால், அர்ஜுனா! தெய்விக இயல்பைக் கைக்கொண்டவர்களான பெரியோர்கள் என்னை எல்லா உயிரினங்களுக்கும் என்றுமுள்ள நிலைத்த காரணம் என்றும், அழிவற்றவன் என்றுமறிந்து, வேறு எதிலும் நாட்டமில்லாத மனத்துடன் இடைவிடாது வழிபடுகிறார்கள்.

பார்த்தா! ஆனால் மஹாத்மாக்கள் தெய்வீக இயல்பை அடைந்தவர்களாக, உயிர்களுக்குப் பிறப்பிடமும், அழியாதவன் நான் என்று அறிந்து வேறு எதிலும் பற்று வைக்காது என்னை வழிபடுகின்றனர்.

தெய்வீக இயல்பு சத்வ(சாத்வீக) குணத்தில் இருந்து வருகிறது. ஜீவர்கள் (உயிர்கள்) எல்லாம் பகவானிடம் இருந்து தோன்றியவைகளே. இப்பெரும் உண்மையை உணர்ந்து, பரந்தாமனைச் சென்றடைய விரும்புபவர்கள் மஹாத்மாக்கள் ஆகின்றனர். புலன்களை அடக்குதல், இறைவன் படைத்த உயிர்களிடம் அன்பாக இருத்தல், பரமாத்மாவை அடைவதற்கு அக்கறை, ஈடுபாடு (சிரத்தை) காட்டுதல் முதலிய நல்லியல்புகள் அத்தகையவர்களுக்கு எளிதில் வந்து அமைகின்றன.

SATTVIC BEINGS, FREE FROM THE BLINDING delusions of the rajas and tamas qualities, see God within and without, in all things, and thus remain always in His proximity. Their uncompromising goodness and undistracted devotion offer no resistance to the natural pull of the soul toward Spirit—the pull of the Lord’s love that pursues every soul, even unto the farthest reaches of delusion.

*சுலோகம் 9-14*: உறுதியான நிச்சயம் கொண்ட பக்தர்கள் இடைவிடாது என்னுடைய நாமங்களையும் குணங்களையும் கீர்த்தனம் செய்து கொண்டும், என்னைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டும், என்னைத் திரும்பத் திரும்ப வணங்கிக் கொண்டும், எப்பொழுதும் என்னுடைய தியானத்திலேயே நிலைத்திருந்தும், வேறொன்றிலும் நாட்டமில்லாத அன்புடன் என்னை வழிபடுகிறார்கள்.

எப்பொழுதும் என்னைப் புகழ்பவர்களாவும், உறுதியான விரதத்தோடு முயற்சி செய்பவர்களாகவும், பக்தியுடன் வழிபடுபவர்களாகவும், நித்திய யோகிகள் என்னை உபாஸிகின்றார்கள்.

மனது எதை புகழ்கிறதோ அதன் மயமாகிறது. எப்பொழுதும் மனதில் நாம் எதை நினைத்துக் கொண்டிக்கிறோமோ, நாமும் அதன் மயமாகவே ஆகின்றோம். எத்துறையில் நாம் முயற்சி செய்கிறோமோ, அத்துறையில் மேன்மை அடைகிறோம். கடவுளை எவ்வடிவில் விரும்பி வணங்குகிறோமோ, அதன் இயல்பை நாமும் அடைகின்றோம். இத்தனை விதங்களில் பக்தர்கள், தமது மனதை பகவானிடம் செலுத்துகிறபடியால் அவர்கள் “நித்திய யோகிகள்” ஆகிறார்கள். பகவானின் இதயத்தில் இடம்பிடித்தவர்களாகவும், பகவானுக்கு அருகில் இருப்பவர்களாகவும் ஆகின்றார்கள்.

*சுலோகம் 9-15*: வேறு சில ஞானயோகிகள் நிர்குணமான உருவமற்ற பிரம்மமான என்னை ஞான யக்ஞத்தினால் தான் வேறு என்ற எண்ணமில்லாமல் ஒன்றிய பாவத்தோடு வழிபட்டுக் கொண்டும், மற்றும் சிலர் பல தோற்றங்களில் விளங்கும் விராட் ஸ்வரூபம் கொண்ட பரமேசுவரனான என்னைத் தன்னிலும் வேறாக எண்ணியும் வழிபடுகிறார்கள்.

ஞானயக்ஞத்தால் வேட்பவர்களாகிய ஏனையவர்களும் என்னை. ஒன்றாய், வேறாய், பலவாய் இத்தனை விதங்களில் உபாஸிக்கின்றனர்.

பரம்பொருளை உள்ளபடி அறிய அவர்கள் தங்களை பரம்பொருளுக்கு அர்ப்பணித்து விடுகிறார்கள் ஆகையால் அது ஞான வேள்வி (ஞான யக்ஞம்) ஆகிறது.

பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றே! என்ற அத்வைத பாவனை. பரமாத்மாவும், மனிதருள் இருக்கும் ஜீவாத்மாவும் ஒன்றே! என்ற எண்ணம்.

வேறாக இருக்கும் “துவைத பாவனை”. அதாவது பரம்பொருள் வேறு, ஆத்மா வேறு என்றிருக்கும் துவைத பாவனை. ஆண்டவன், அடிமைக்கு(மனிதர்களுக்கு) புறம்பானவன் என்ற எண்ணம்.

பலவாய் உள்ள எல்லா அங்கங்களும் ஒரு புருஷனை சார்ந்தவைகள் இது விசிஷ்டாத்வைத பாவனை. “பரமாத்வான ஒருவனே இத்தனையுமாக ஆனான்என்ற எண்ணம்! இப்பாவனையில் உண்டு.

ஜீவனுக்கும், பரமாத்மாவுக்கும் உள்ள இணக்கத்தைத் துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் ஆகிய மூன்று நிலைகளில் எதை வைத்து பயிற்சி (சாதனம்) செய்தாலும் அது ஞான வேள்வி (யக்ஞம்) ஆகிறது.

*சுலோகம் 9-16*: கிரதுவும் நானே; யக்ஞமும் நானே; பித்ரு யக்ஞமான சிராத்தமும் நானே; ஹோமத்திரவியங்களும் மூலிகைகளும் நானே; வைதீக கர்மங்களில் ஓதப்படும் மந்திரமும் நானே; நெய்யும் நானே; அக்னியும் நானே; ஹோமம் என்ற செயலும் நானேதான்!

நானே கிரது என்ற வைதீக கர்மம்; யக்ஞம் நானே; ஸ்வதாவாவது நான்; ஔஷதம் நான்; மந்திரமாவது நான்; ஹோமம் செய்யப்படும் நெய்யும். நான்; அக்னியும் நான்; வேட்டல் நானே.

நான்காவது அத்தியாயம் 24_ வது சுலோகத்தில் செய்கிற வினைகளை (செயல்கள்) எல்லாம் பிரம்ம சொரூபமாக நினைப்பவனை வினைகள் கட்டுப்படுத்தாது! என்று கூறினார் பகவான். இங்கு பொருள்கள் எல்லாம் பரமாத்மாவின் திருஷ்டியில் பிரம்ம சொரூபம் ஆகின்றன! என்று சொல்லப்படுகிறது. பொருட்களை எல்லாம் அவன் சொரூபமாக காண்பது “பாரமார்த்திகத் திருஷ்டியை” நாம் அடைவதற்கு உபாயமாகிறது.

THE VEDIC SACRIFICIAL CEREMONIES, in which clarified butter is poured on fire, symbolize the surrender of the self to the Self. All the gifts that God has bestowed on man are offered in turn to Him by the devotee. The sattvic devotee considers all his actions—whether secular, spiritual, or ritualistic—as holy rites and oblations offered in the purifying fire of God-awareness. As dream objects and beings cannot be separated from their dreamer, similarly, the oblating devotee honors the Lord as the Giver, the Offering, and the Receiver.

*சுலோகம் 9-17*: இந்த உலகம் அனைத்தையும் தாங்குபவனும், கர்மங்களுக்குப் பயனளிப்பவனும், தந்தையும், தாயும், பாட்டனாரும், அறியத் தக்கவனும், புனிதமானவனும், ஓங்காரமும், ருக், சாம, யஜுர் என்ற மூன்று வேதங்களும் நானேதான்.

இந்த ஜகத்தின் தந்தை, தாய், பாட்டனாரானவனும், கர்மபலனைக் கொடுப்பவனும், அறியத்தக்கவனும், தூய்மை செய்பவனும், ஓங்காரம், ரிக், சாம ம்,யஜூர் வேதங்கள் ஆகின்றவனும் நானே.

Spirit as the Sole Reality is the One Object of Knowledge, comprehending which man will simultaneously understand all other knowledge. Spirit is the Sanctifier that purifies man of sin and delusion; and It, too, is the Source of Vedic or eternal wisdom.

சுலோகம் 9-18: புகலிடம், வளர்ப்பவன், உடையவன், சாட்சி, இருப்பிடம், அடைக்கலம், தோழன், பிறப்பிடம், ஒடுங்குமிடம், தங்குமிடம், களஞ்சியம், அழியாத வித்து.

அடையத்தக்க பரமபதம், காத்துப் போஷிப்பவன், எல்லோரையும் ஆள்பவன், நல்லன-தீயன ஆகியவற்றைப் பார்ப்பவன், அனைத்திற்கும் இருப்பிடம், எல்லாவற்றிற்கும் புகலிடம், கைம்மாறு எதிர்பாராமல் உதவிபுரியும் நண்பன், அகில உலகமும் தோன்றுவதற்கும் ஒடுங்குவதற்குமான காரணம், நிலையாகத் தங்குமிடம், நிதானம், அதாவது பிரளய காலத்தில் அனைத்து உயிரினங்களும் நுண்ணிய வடிவில் லயமடையும் இடம், அழிவில்லாத விதை ஆகிய அனைத்தும் நானே!

உயிர்களுக்குப் புகலிடமாகவும், வளர்ப்பவனாகவும், உடையவனாகவும், அவர்கள் செய்யும் நல்வினை, தீவினைகளுக்கு சாட்சியாகவும், உயிர்களின் இருப்பிடமாகவும், அடைக்கலமாகவும், கைமாறு கருதாது நன்மையைச் செய்யும் தோழனாகவும்,உயிர்களின் பிறப்பிடமாகவும், ஒடுங்குமிடமாகவும், அவைகள் தங்குமிடமாகவும், களஞ்சியமாகவும், அழியாத வித்தாகவும்(பீஜம்) நானே இருக்கிறேன்! என்கிறார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா.

சுலோகம் 9-19: அர்ஜுனா! நான் வெப்பம் தருகிறேன்; மழையைப் பெய்விக்கவும், தடுக்கவும் செய்கிறேன் ஸத்தும், அஸத்தும் நானே.

நான்தான் சூரியனுடைய வடிவில் வெப்பம் அளிக்கிறேன்; மழையை உள்ளிழுத்துத் தடுத்து நிறுத்துகிறேன்; பொழியவும் செய்கிறேன். அர்ஜுனா! நானே இறவாப்பெருநிலையும் ஆவேன்; படைத்தவற்றை அழிக்கும் மகாகாலனும் நானே ஆவேன். அழியாததும் அழியக் கூடியதும் எல்லாமே நான்தான் (என்னுடைய ஸ்வரூபம்தான்).

பகவான், சூரியனைக் கொண்டு பகவான் வெப்பத்தை உண்டு பண்ணுகிறார். சூரிய கிரகணத்தால் மழை பெய்யவும், நிற்கவும் செய்விக்கிறார். அவரவர் கர்மபலனுக்கு ஏற்றாற்போன்று தேவர்கள் சாகாமையும், மனிதர்கள். சாவையும் பெறுகின்றனர்.
சாகாமை, சாவு ஆகிய இரண்டும் சிலவேளைகளில் விருப்பையும், சிலவேளைகளில் வெறுப்பையும். நமக்குத் தருகின்றன. எனவே ஜீவனை ஞானத்துக்கு பக்குவப்படுத்துவதற்குத் தேவர்களுடைய சாகாமையும், மனிதர்களுடைய சாவும் மாறி மாறி பயன்படுகின்றன.
கர்மம்( வினைகள்) செய்யப்படுவதால் உயிர்களிடத்து ஏற்படும் தோற்றம். “ஸத்” என்று இங்கே கூறப்படுகிறது. தோன்றா நிலையே “அஸத்” ஆகிறது. அஸத்து என்பது சூனியமல்ல.

THE LORD HERE PRESENTS HIMSELF as the Great Paradox. As the Creator of Maya, the Cosmic Magician, He is responsible for the “pairs of opposites,” the contrasting suggestions accepted by all creatures under may a’s   hypnotic sway—heat and cold, life and death, truth and falsehood (reality and illusion).

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.

**

உதவி:

மகாகவி பாரதியார் உரை
சுவாமி சித்பவானந்தர் உரை
பரமஹம்ச யோகானந்தர் உரை

Leave a comment