பகவத்கீதை – ஏழாம் அத்தியாயம் – ஞான விஞ்ஞான யோகம் – 2


*ஞானத்தேடல் பதிவு எண்: 044 நாள்: 01.09.2022*

*_பகவத்கீதை – ஏழாம் அத்தியாயம் – ஞான விஞ்ஞான யோகம் – 2_*

*சுலோகம் 7-4,5*: _ நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய எனது இந்தப் பிரகிருதி எட்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எட்டு வகையாகப் பிரிக்கப் பட்டுள்ள இதுவோவெனில் ‘அபரா’ அதாவது என் ஜடப் பிரகிருதி. நீண்ட புஜமுடையவனே! இதிலிருந்து வேறான எந்தப் பிரகிருதியினால் இந்த உலகம் முழுவதும் தாங்கப் படுகிறதோ, அது என் ஜீவரூபமான ‘பரா’ அதாவது சேதனப் பிரகிருதி என்று தெரிந்து கொள்._

*சுவாமி பரமஹம்ச யோகானந்தர் அவர்களின் விளக்கம்*:

This stanza of the Bhagavad Gita gives a summary of the eight elements or forces of cosmic material nature. The ancient scientists spoke loosely of nature as matter. The modern scientists think of matter as coordinated forces. They describe all mineral, plant, and animal substances as made of ninety-two elements, 6 which are further explained as nothing more than permutations and combinations of different atoms or wave-energies.

Matter, according to Hindu philosophy, is made of the intelligent thoughtrons of God, which materialize into grosser forces of intelligent lifetrons (prana), electrons and protons, atoms, molecules, cells, tissues, and organic matter. Both inorganic and organic matter are composed of anu (atoms), paramanu (subatomic particles and energies), prana (lifetrons), and chaitanya (“consciousness,” thoughtrons) of God. This is the constitution of physical cosmic nature or matter from the metaphysical standpoint.

The yogis maintain that matter—physical cosmic nature or Jada-Prakriti (gross nature) or Apara-Prakriti (the gross expression of God)—may be spoken of as the physical dream-body of the Lord. This cosmic physical dream-body is made of five objective elements (subtle vibratory forces) of earth, water, fire, air (life force), and ether; two perceptive cognitive processes, sensory mind and intelligence; and one perceiving entity, the ahamkara or egoistic consciousness of cosmic nature. The little body-dream of man, the copy of cosmic physical nature, is included in the latter’s larger dream. Even as cosmic nature is the physical dream-body of God and is made of eight elementary forces, so the human body is also made of eight elementary forces and is the dream body of the human soul—the perfect image of God. (பயோ)

*வில்லியம் ஷேக்ஸ்பியர் அவர்களின் வரிகளும் இங்கு ஒப்பு நோக்கத் தக்கவை*:

“All the world’s a stage, And all the men and women merely players;
They have their exits and their entrances, And one man in his time plays many parts,
His acts being seven ages. At first, the infant, Mewling and puking in the nurse’s arms.
Then the whining schoolboy, with his satchel And shining morning face, creeping like snail
Unwillingly to school. And then the lover, Sighing like furnace, with a woeful ballad
Made to his mistress’ eyebrow. Then a soldier,  Full of strange oaths and bearded like the pard,
Jealous in honor, sudden and quick in quarrel, Seeking the bubble reputation
Even in the cannon’s mouth. And then the justice, In fair round belly with good capon lined,
With eyes severe and beard of formal cut, Full of wise saws and modern instances;
And so he plays his part. The sixth age shifts Into the lean and slippered pantaloon,
With spectacles on nose and pouch on side; His youthful hose, well saved, a world too wide
For his shrunk shank, and his big manly voice, Turning again toward childish treble, pipes
And whistles in his sound. Last scene of all, That ends this strange eventful history,
Is second childishness and mere oblivion, Sans teeth, sans eyes, sans taste, sans everything.”
― *William Shakespeare, As You Like It*

நாரத பஞ்சராத்ரத்தில் “ஜடவுலகின் படைப்பிற்காக, பகவான் கிருஷ்ணர் மூன்று விஷ்ணு ரூபங்களாக விரிவடைகிறார். முதல் விரிவங்கமான *மஹா விஷ்ணு,* மஹத்-தத்த்வ எனப்படும் மொத்த ஜட சக்தியைப் படைக்கின்றார். இரண்டவாது விரிவங்கமான கர்போதகசாயி விஷ்ணு, எல்லா பிரபஞ்சத்தின் உள்ளும் நுழைந்து பல்வேறு வேறுபாடுகளை உண்டாக்குகின்றார். மூன்றாவது விரிவங்கமான க்ஷீரோதகசாயி விஷ்ணு, பரமாத்மாவாக அனைத்து பிரபஞ்சத்தினுள்ளும் எல்லா இடங்களிலும் பரவியுள்ளார். அவர் அணுக்களுக்குள்ளும் இருக்கின்றார். இந்த மூன்று விஷ்ணுவையும் அறிபவர் எவரும் ஜடவுலக பந்தத்திலிருந்து முக்தி பெற முடியும்.” என்று சொல்லப்பட்டு இருக்கிறது. (பிபா)

ஜட சக்தியைப் பொறுத்தவரையில், மேலே குறிப்பிட்ட எட்டும் அதன் முக்கியத் தோற்றங்களாகும். இவற்றில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் ஸ்தூல படைப்புகள் என்று அழைக்கப்படுகின்றன, அவற்றினுள் ஐந்து புலன் விஷயங்களும் அடங்கும். அவற்றிலிருந்து ஒலி, தொடு உணர்வு, உருவம், சுவை, வாசனை ஆகியவை தோன்றுகின்றன. ஜட அறிவியலில் இந்த பத்து விஷயங்கள் மட்டுமே உள்ளன. வேறெதுவும் இல்லை. மனம், புத்தி, அஹங்காரம் ஆகிய மூன்றும் பௌதிகவாதிகளால் புறக்கணிக்கப்படுகின்றன. மனதின் செயல்களுடன் தொடர்பு கொள்ளும் தத்துவவாதிகளின் அறிவும் பக்குவமானதலல்; ஏனெனில், இறுதி மூலமான கிருஷ்ணரை அவர்கள் அறிவதில்லை. “நான்,” “எனது,” எனும் எண்ணமே ஜட வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகின்றது—அஹங்காரம் என்று அழைக்கப்படும் இந்த எண்ணம், ஜட இயக்கங்களுக்கான பத்து புலனுறுப்புகளை உள்ளடக்கியது. புத்தி என்பது மஹத்- தத்த்வ எனப்படும் மொத்தம் ஜடப் படைப்பினைக் குறிக்கின்றது. இவ்வாறாக, பகவானின் எட்டு பிரிந்த சக்திகளிலிருந்து ஜடவுலகின் இருப்பதுநான்கு மூலகங்களும் தோன்றுகின்றன, இவையே நாத்திகத் தன்மை வாய்ந்த ஸாங்கிய தத்துவத்தின் கருப்பொருளாகும்; உண்மையில் கிருஷ்ணரின் சக்திகளிலிருந்து தோன்றிய அவை அவரிடமிருந்து பிரிந்து இருக்கின்றன, ஆனால் குன்றிய அறிவுடைய நாத்திக ஸாங்கிய தத்துவவாதிகள் எல்லா காரணங்களுக்கும் காரணம் கிருஷ்ணரே என்பதை அறியார். பகவத் கீதையின்படி, ஸாங்கிய தத்துவத்தின் விவாத விஷயம், கிருஷ்ணரின் புறச் சக்தியின் தோற்றமே. (பிபா)

*சுலோகம் 7-6*: _ எல்லா உயிரினங்களும் இந்த இரண்டு பிரகிருதிகளில் இருந்தும் உண்டானவை என்றும், நானே சம்பூர்ணமான எல்லா உலகிற்கும் உற்பத்தியாகும் இடம், அவ்வாறே ஒடுங்குகின்ற இடம் என்றும் தெரிந்துகொள். அதாவது, அகில உலகிற்கும் நானே மூலகாரணம் என்கிறார், பகவான்._

எவையெல்லாம் இருக்கின்றதோ, அவையனைத்தும் ஜடம் மற்றும் ஆத்மாவின் உற்பத்திப் பொருள்களே. ஆத்மாவே படைப்பின் ஆதாரம், ஜடம் ஆத்மாவிலிருந்து படைக்கப்பட்டதாகும். ஆத்மா, ஜட வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட நிலையில் உண்டாக்கப்படுவதல்ல. மாறாக, ஜடவுலகம் ஆன்மீக சக்தியின் அடிப்படையில் படைக்கப்படுள்ளது. ஆத்மா இருப்பதால்தான் ஜடவுடல் வளர்கின்றது. ஒரு குழந்தை பால்ய பருவத்திற்கும், பின்னர் இளமைப் பருவத்திற்கும் வளர்வதற்கு காரணம், உயர் சக்தியான ஆத்மா அதனுள் இருப்பதே. அதுபோலவே, மாபெரும் பிரபஞ்சத் தோற்றம் பரமாத்மாவான விஷ்ணுவினாலேயே வளர்கின்றது. இந்த மாபெரும் பிரபஞ்சத்தை உருவாக்க ஆத்மாவும் ஜடமும் இணைகின்றன, இவ்விரண்டும் இறைவனின் சக்திகளாகும்; மேலும் அவரே எல்லாவற்றிற்கும் மூல காரணமாவார். (பிபா)

*சுலோகம் 7-7*: _ அர்ஜுனா! என்னைக் காட்டிலும் வேறொன்றும் உயர்ந்த காரணமில்லை. இவ்வுலகம் அனைத்தும் நூலில் நூலினால் ஆன மணிகளைப்போல என்னிடம் கோக்கப் பட்டுள்ளன._

சுவேதாஸ்வர உபநிஷதம் இப்படிச் சொல்கிறது: “ஜடக் கருத்துக்களின் இருளுக்கெல்லாம் அப்பாற்பட்ட திவ்யமான பரம புருஷ பகவானை நான் அறிவேன். அவரை அறிபவன் மட்டுமே பிறப்பு, இறப்பு எனும் பந்தத்தினைக் கடக்க முடியும். அந்த பரம புருஷரைப் பற்றிய இந்த ஞானத்தைவிட முக்திக்கு வேறு வழியில்லை.

“அந்த பரம புருஷரைவிட உயர்ந்த உண்மை ஏதுமில்லை; ஏனெனில், அவரே மிகவுயர்ந்தவர். அவர் மிகச்சிறியதைவிடச் சிறியவர், மிகப் பெரியதைவிடப் பெரியவர். அமைதியான மரத்தினைப் போன்று நிலை பெற்றுள்ள அவர், திவ்ய வானிற்கு ஒளியூட்டுகிறார். மரம் தனது வேர்களைப் பரப்புவதைப் போல அவர் தனது எண்ணற்ற சக்திகளைப் பரப்புகிறார்.”

இந்தப் பதங்களிலிருந்து, ஜடம், ஆன்மீகம் எனும் இரண்டு சக்திகளைக் கொண்டு எங்கும் நிறைந்துள்ள பரம புருஷ பகவானே பரம பூரண உண்மை என்பதை முடிவு செய்யலாம். (பிபா)

*சுலோகம் 7-8*: _ அர்ஜுனா! நான் நீரில் சுவையாகவும், எல்லா வேதங்களிலும் ஓங்காரமாகவும், ஆகாயத்தில் ஒலியாகவும், ஆண்களிடத்தில் ஆண்மையாகவும் இருக்கிறேன்._

*சுலோகம் 7-9*: _ மண்ணில் புனிதமான நறுமணமாகவும் நெருப்பில் ஒளியாகவும் இருக்கிறேன். அவ்வாறே, எல்லா உயிரினங்களிலும் உயிராகவும் தவம் செய்வோர்களிடத்தில் தவமாகவும் இருக்கிறேன்._

*சுலோகம் 7-10*: _ அர்ஜுனா! சராசரங்கள் அனைத்திற்கும் நிலையான விதை என்று என்னை அறிந்துகொள். நான் அறிவாளிகளுடைய அறிவாகவும் தேஜஸ் படைத்தவர்களுடைய தேஜஸாகவும் இருக்கிறேன்._

*சுலோகம் 7-11*: _ பரதகுலச்செம்மலே! நான் வலிமை மிக்கவர்களுடைய ஆசையும் பற்றும் நீங்கப்பெற்ற வலிமையாக இருக்கிறேன். மேலும், உயிரினங்களில் அறத்திற்கு மாறுபடாத (சாஸ்திர சம்மதமான) காமமாக இருக்கிறேன்_.

சுலோகம் 8 முதல் 11 வரை இறைவனான கிருஷ்ணர் எந்த விதமாக அனைத்திலும் இருக்கிறார் என்பதை சில உதாரணங்களுடன் குறிப்பிடுகிறார்.

ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வாறாக இருக்கிறார்:

  • நீரின் சுவை
  • சூரிய சந்திரர்களின் ஒளி
  • மந்திரங்களில் ஓம் எனும் ஒலி
  • வானில் கேட்டும் கேளாமலும் இருக்கும் ஒலி
  • மனிதரில் இருக்கும் திறமை
  • நிலத்தின் மூல நறுமணம்
  • நெருப்பின் வெப்பம்
  • உயிரினங்களின் உயிர்
  • தவம் புரிவோரின் தவம்
  • எல்லா உயிரினங்களின் மூல விதை
  • புத்திசாலிகளின் புத்தி
  • பலசாலிகளின் பலம்
  • காமமும் பற்றுதலும் இல்லாத ஞானியரின் பலம்
  • தர்மத்தின் கொள்கைகளுக்கு விரோதமற்ற காமம்

நான் செய்கிறேன், நான் திறமை மிக்கவன், நானே சாதிக்கிறேன் என்னும் நம் எண்ணம் எல்லாம் பொடிப்பொடியாகிறது ஸ்ரீகிருஷ்ணரின் இந்த வரிகளில். நாம் பெருமை பட்டுக் கொள்ளும் காரணம் யாவுமாக அவரே இருக்கிறார் என்னும்போது, நமக்கு நாம் செய்தோம் என்னும் எண்ணமும் அதனால் விளையும் அகந்தையும் பொருளற்றது ஆகிவிடுகிறது அல்லவா ?

யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்

(அதிகாரம்:துறவு குறள் எண்:346)

*உதவி*:

1. பயோ = பரமஹம்ச யோகானந்தரின் *GOD TALKS WITH ARJUNA*
2. பிபா   = ஸ்ரீல பக்திவேதாந்தா பிரபுபாதா அவர்களின் *பகவத் கீதை உண்மையுருவில்*
3. William Shakespeare’s *AS YOU LIKE IT*

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.

***

Leave a comment