நகசுவின் சமூக ஊடகப் புதுமொழிகள்



போஸ்ட் மேல் போஸ்ட் போட்டாலும்
பயனில படிப்போர் இல்லையெனில்.

போஸ்ட் மேல் கமென்ட் வருமா என்று
வழிமேல் விழி வைக்க வேண்டா.

கண்டுகொள்ளா கமெண்டினும் சிறப்பு முற்றிலும் கமெண்ட மறுப்பது.

இன்றே படிப்பது நன்று, இன்றில்லை என்றால் என்றும் இல்லை.

பத்து பேர் எழுதி பத்து பேர் படிப்பது இருநூறு பேர் உள்ள குழு.

சிரிக்க மட்டும் பலர் திட்ட மட்டும் பலர் ஆனால் படிக்க மட்டும் சிலர்.

படிப்பதற்குப் பதில் எழுதாமை உண்டுவிட்டு ஓடுவதற்கு நிகர்.

வராத பதிவும் வரும் வந்த பதிவும் பலமுறை வரும் இடம் குழு.

பத்துப்பேர் எழுத பத்துப் பேர் படிக்க இரு நூறு பேர் கூடி வருவர்.

இன்று நீ எழுதுவது நாளை இன்னொருவர் எழுதியது ஆகிறது.

முன்வந்தது என்று சொல்லி பின்வந்த போதும் படிக்காமல் இருப்பது நட்பு.

நம் பதிவு கண்டு கொள்ளப்படும் அளவுக்காவது பிறர் பதிவு கண்டுகொள்வது நம் கடன்.

நோடிஃபிகே ஷனைப் புறக்கணிப்பது நண்பரைப் புறக்கணிப்பதற்கு நிகர்.

நான்கு ஃபார்வேர்டுக்கு ஒருமுறையாவது குழுவில் தலைகாட்டுக.


*_நகசு_*, 24.04.2022

Leave a comment