பகவத்கீதை – பதினெட்டாம் அத்தியாயம் – மோக்ஷ ஸந்யாஸ யோகம்– 5


*ஞானத்தேடல் பதிவு எண்: 091 நாள்: 07.12 2022*

*பகவத்கீதை – பதினெட்டாம் அத்தியாயம் மோக்ஷ ஸந்யாஸ யோகம் – 5*

*சுலோகம் 33: அர்ஜுனா! பகவானைத் தவிர வேறு எந்த விஷயத்திலும் சிந்திக்காத எந்த உறுதியினால் மனிதன் தியான யோகத்தின் மூலம் மனம், பிராணன், புலன்கள் இவற்றினுடைய செயல்களை நிலைநிறுத்துகிறானோ, அந்த உறுதி சாத்விகமானது.*

சுலோகத்தில் த்ருதி என்னும் சொல் இங்கு மன உறுதி என்று பொருள் படுகிறது. மனத்திட்பம். அறிவும் ஆற்றலும் சேர்ந்தது. இப்படிப்பட்ட உறுதி யுடன் இருப்பவன் சத்வகுணத்தை உடையவன்.

எண்ணம், செயல் இவற்றைத் திடமான உறுதியுடன் நிறைவேற்றும் சக்தி எதுவோ, எதனடிப்படையில் உறுதியுடன் செயல் கடைப்பிடிக்கப்படுகின்றதோ, எண்ணமும் செயலும் இடையறாமல் காக்கப்படுகின்றனவோ அதுதான் தருதி ஆகிறது.

இதன் மூலம் ‘நிலைகுலையாமை’ என்ற குறை நீங்கி விடப் போவதில்லை. ஆயினும் மனிதன் எப்போது தனது உன்னதமான லட்சியத்தை உறுதிப்படுத்துகின்றானோ அடைகிறானோ அப்போது நிலைகுலையாமை ஏற்பட்டு விடும்.

LIBERATION CONSISTS OF TWO ASPECTS of union. The first unites the physical ego with the soul; or, in other words, resolves the pseudosoul into the real soul, which is a reflection of the blessedness of Spirit. The second unites the soul with omnipresent Spirit.

But the physical ego cannot be separated from its identification with sense objects—a prerequisite of union with the soul and with Spirit— without withdrawal of the mind, life force, and sense consciousness from the body and the objective world.

The word dhriti in this context is not exactly “fortitude,” but rather connotes the inner firmness of self-control and the constancy of soul perception that produces a steady state of fortitude. In that unshakable state, the soul in its pure nature retains mastery over the mind, life force, and senses, and thus remains unperturbed by the temptations of sense objects.

A yogi possessing a sattvic-dhriti consciousness keeps his mind settled in the blessed perception of the soul and God, undisturbed by the inroads of sensations in the conscious state of existence as well as in the interiorized ecstasy of meditation. He can therefore wander in worldly life, engaging in dutiful activities, beholding good and evil, without being in any way affected or entangled by them.

*சுலோகம் 34: ஆனால், பிருதையின் மைந்தனே! அர்ஜுனா! பயனில் விருப்பமுடைய மனிதன் எந்த உறுதியினால் மிகுந்த பற்றோடு அறம், பொருள், இன்பங்களை அடைவதிலேயே உறுதியாக இருக்கிறானோ, அந்த உறுதி ராஜஸமாகிறது.*

தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் அதாவது அறம், பொருள், இன்பம், வீடு இவை மனிதப் பிறவியின் முக்கிய நோக்கங்கள். இந்த நான்கில் வீடு பேற்றை முக்கிய நோக்கமெனக் கொள்ளாதவன் இங்கு சொல்லப்படுகிறான்.  இப்படிப்பட்டவனின் மன உறுதி இங்கு ராஜசம் எனப்படுகிறது. இது மனிதனை உலக பந்தத்திலேயே ஆழ்த்தி விடுகிறது.

A man of this tenacious activating disposition keeps his mind, vitality, and senses patiently and persistently settled in physical duties in order to gain their results. Taking the matter-of-fact view of life, the majority of these worldly people gird up their loins to fulfill all natural propensities— earning money, keeping up the home and maintaining a family, and superficially partaking in religious ceremonies—in general, remaining identified with the inclinations of the physical ego.

*சுலோகம் 35: பார்த்தா! தீய புத்தி கொண்டவன் எந்த உறுதியினால் தூக்கத்தையும் அச்சத்தையும் கவலையையும் துயரத்தையும் செருக்கையும் கூட விடாமல் உறுதியுடன் பற்றுகிறானோ, அந்த உறுதி தாமஸமானது.*

தமோ குணத்து மனிதன் தூக்கம், அச்சம், கவலை, துயரம் இவற்றை விடாமல் பற்றி இருப்பான். எந்தச் செயலும் செய்ய முயலமாட்டான். அப்படிச் செய்யாமல் இருக்கும் உறுதி இங்கு சொல்லப்படுகிறது.

தமோ குணமும், அக்ஞான இருளும் ஒன்றோடொன்று சேர்ந்தவையே. தூங்கும் நிலை ஜடவஸ்துவுக்கு ஒப்பானது. கனவு காணும் இயல்பும் அதில் அடங்கும். பகலில் தூங்கும் தமோ குணம் உடையவன் பகற்கனவும் காண்பான்.

த்ருதராஷ்டிர மன்னன் – துரியோதனனின் தந்தை – தமோ குண உறுதிக்கு தக்க எடுத்துக்காட்டு.

பிறருக்குத் தீங்கிழைப்பதிலேயே கவனமாயிருப்பவன் துர்மேதா. தீயகுணமுடையவன் உறுதி தாமஸம்.

ஸ்வப்னத்திலும் பயம். செல்வம் அழியுமோ, துன்பம் வருமோ, சுகம் போய்விடுமோ, மரணம் ஸம்பவிக்குமோ என்றெல்லாம் தோன்றுகின்ற கவலையும், படபடப்பும்தான் பயம் சோகமாகும். அவற்றால் புலன்களில் ஏற்படும் தாபமே விஷாதம் – துயரம்.

பாண்டவ – துரியோதனாதிகளும் மூத்தவன் யுதிஷ்டிரன். ராஜ்யம் அவனுக்கே உரியது. இக்கருத்தை காந்தாரி – துரியோதனனின் தாய் – ஒப்புக் கொள்ளுகிறாள். ஆனால் திருதராஷ்டிர மன்னன் ஒப்பவில்லை. தன் மகனே ராஜ்யமாள வேண்டும் என்றெண்ணுகிறான். இது தமோ குண உறுதி தருதி. இத்தீய உறுதி பாரதப்போருக்கே அடிகோலியது. இது த்ருதராஷ்டிர மன்னனின் தாமஸ குணத்தால் ஏற்பட்ட விளைவு.

கர்மங்கள் அனைத்திற்கும் இலக்கான சுகம் கூட ஸாத்விக, ராஜஸ, தாமஸ என மூன்று வகைப்படுகிறது என்கிறார் பகவான். முதலில் ஸாத்விக சுகத்தின் இலக்கணம்.

TAMASIC-DHRITI,  INNER SETTLEMENT ON EVIL—the quality ( guna) of ignorance acting on the inner patient attitude of an unthinking person—is that obstinacy through which one clings to evil. Tamasic or evil indiscriminative persistence keeps gross individuals habitually settled in over-sleep, constant fear, grief, despondency, and insolent conceit. These evil qualities are harbingers of great troubles. Egoistic dark-minded persons who sleep too much become drugged by the habit of this stupor and thus remain identified with the idle, ungoverned body—unable to whip it into proper action to fulfill ordained duties and to gain success and peace. Owing to mental and physical inactivity, they naturally become depressed, which results in fear of carrying on an unbearable, unhappy existence.

In other words, over-sleep produces physical and mental indolence and aversion to constructive work. Lack of activity produces despondency through the consciousness of a useless existence. The habit of deeming life a burden produces grief and fear of repeated experience of sorrow.

Disdainful conceit makes one satisfied with his evil habits; his contempt toward the need to change his ways keeps him from having any hope of salvation.

Human beings who find themselves steadfastly clinging to tamasic-dhriti, and therefore settled in evil habits, should forthwith banish conceit and regulate their lives by proper activity and proper sleep supplemented by the rejuvenating power of meditation, thus freeing the mind from fear, despondency, and grief.

*சுலோகம் 36&37: பரதகுலச் செம்மலே! இப்பொழுது மூன்று விதமான சுகம் பற்றியும் நீ என்னிடம் கேள். எந்தச் சுகத்தில் சாதகனான மனிதன் பஜனை, தியானம், சேவை முதலிய பயிற்சியினால் இன்புறுகிறானோ, துன்பத்தின் முடிவையும் அடைகிறானோ, அந்தச் சுகம் சாதனையின் தொடக்கத்தில் விஷத்தைப்போலத் தோன்றினாலும் விளைவில் அமிர்தத்திற்கொப்பாக இருக்கும். ஆகவே, பகவான் பற்றிய தெளிவான அறிவினால் ஏற்படக் கூடிய அந்தச் சுகம் சாத்விகம் என்று கூறப்படுகிறது.*

இவ்வுலகில் அறிவுரை என்பது எப்போதும் கிடைக்கும். ஆனால் எப்படிப்பட்ட அறிவுரை என்பதும் முக்கியம். சில நல்லவர்கள், நம் மீது அக்கறை உள்ளவர்கள் கூறும் அறிவுரைகள் நன்மை தரும். துவக்கத்தில் சுகம் கெடுப்பதைப் போலவும் கடினமாகவும் தோன்றுவது துவக்கி செய்யச் செய்ய நன்மையே விளையும். நல்ல பயிற்சிகளை விடாமல் செய்யும்போது நன்மையே விளையும். அதிலும் நாம் இறை சிந்தனை, நல்லொழுக்கம், முழு தன்னம்பிக்கை, முழு இறை நம்பிக்கை இவற்றுடன் மேற்கொள்ளும் எந்த செயலும் துவக்கத்தில் கடினமாக இருப்பினும் இறுதியில் நன்மையே செய்யும். இப்படிப்பட்ட சுகம் அறிவினால் ஏற்படுவது. இது சத்வகுண மனிதருக்கு இருப்பது.

கண்ணன் : “பரதகுல ஸ்ரேஷ்ட்னே இப்பொழுது மூவகையான சுகத்தைப் பற்றியும் என்னிடம் நீ தெரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு சுகத்தில் ஸாதனை புரியும் மனிதன் பஜனை, ஸேவை, தானம், முதலிய செயல்களினால் சுகப்படுகிறானோ, துன்பத்தின் முடிவையும் அடைகிறானோ, அந்த சுக சாதனையின் ஆரம்பத்தில் விஷம் போல் தோன்றினாலும், பயனில் அது அம்ருதத்துக்கு ஒப்பாக இருக்கும்.”

எனவே கடவுளைப் பற்றிய தெளிவான புத்தியினால் ஏற்படக்கூடிய அந்த சுகம் ஸாத்விகம் என்று தெரிந்துகொள்.

காண்டீபன் : க்ருஷ்ணா அடியேன் அறிய வேண்டிய மூன்று வகையான சுகம் எவை?

கண்ணன் : காண்டீபனே! உனக்கு நான் இதுவரை கர்மம், கர்த்தா, புத்தி, ஞானம், உறுதி இவற்றின் – ஸாத்விக, ராஜஸ, தாமஸ், வேற்றுமை பற்றிச் சொன்னேனில்லையா? அது போலவே இனி நீ ஸாத்விக சுகம் பெறவேண்டியும் ராஜஸ, தாமஸ சுகங்களை எப்படி விலக்குவது என்பதையும் பிரித்துச் சொல்லுகிறேன். அவற்றைக் கவனமாகக் கேட்டுக் கொள்.

தூய்மையான, அமைதியான மனத்தை உடைய யோகிக்குக் கிடைக்கப்போகும் உத்தமமான, உன்னதமான, மிக உயர்ந்த சுகத்தை ‘யத்ர’ (கீதை 6/27) என்ற சொல் குறிக்கிறது. இக-பரலோக போக சுகங்கள் யாவும் அழியக் கூடியவை என்பதை அறிக. அவற்றில் பற்றுக் கொள்ளாதே. பரமாத்ம ஸ்வரூபத்திலேயே சிந்தனையைச் செலுத்திப் பயிற்சி பெறு (கீதை 5/21). ஸாதகன் இப்படிப்பட்ட சுகம் அடைவான். ஸாதனை இன்றி அந்த சுகம் கிடைக்காது. அது ஆத்யாத்மிகம், ஆதிதைவிகம், ஆதிபெளதிகம் என மூன்றாகும்.

இம்மூன்றும் சகலவிதமான து:கங்களின் தொடர்பிலிருந்தும் ஸாதகனை விடுவிக்கும். அந்த சுகமே ஒப்பற்ற சுகவடிவம். பரமாத்மாவிடம் சேர்க்கும் (5/21, 24; 6/28). இதுதான் ஸாத்விக சுகம் என்பதைத் தெரிந்து கொள்.

காண்டீபன் : அச்சுதா! ஸாத்விக சுகம் விஷம் போல என்றீரே? இப்போது இப்படிச் சொல்கிறீரே! எனக்குப் புரியவில்லை.

கண்ணன் : அர்ஜுன! ஸாத்விக சுகம் அமுதமே! அதில் நீ கிஞ்சித்தும் ஸம்ஸயப்படாதே. அந்த சுகத்தை அடைய விருப்பம் கொண்டு அதற்கு உபாயமான, விவேகம் என்னும் அறிவு, வைராக்யம், புலன்களின் அடக்கம், மன அடக்கம், பொறுமைக் குணம் முதலான ஸாதனைகளைப் புரியும் காலத்தைக் குறிப்பிடுகிறது ‘அக்ரே’ என்னும் சொல்.

மாணாக்கன் ஆரம்பத்தில் கல்விகற்கும் போது கல்வியின் பெருமையை அறிய மாட்டான். விளையாட்டுப் புத்தி அவனை இழுக்கும் – அது விஷம். கல்வி கற்பதில் ஈடுபடுவதில் துன்பத்தையும், கடினத்தையுமே காண்பான். கல்வியின் பெருமையை முடிவில் அனுபவத்தால் அமுதமாக உணர்வான்.

அது போலவே ஸாத்விக சுகம் பெறப் பயிற்சியில் இறங்குபவனுக்குப் பயிற்சி விஷம் – முடிவு அமுதம். இப்போது புரிகிறதா?

பயிற்சியில் ஈடுபட்டபடியே பரமாத்மாவைத் த்யானம் பண்ணுவதால் நம் உள்ளம் தூய்மை அடையும். இந்த சுகம் அனுபவரீதியில் அமுதமே! தெளிந்த அறிவினால் மட்டுமே இது கிடைக்கும்.

ராஜஸ, தாமஸ சுகங்கள் உண்மையில் சுகங்களே இல்லை. அதனால் நாம் அவற்றில் சிக்கி அகப்பட்டுக் கொள்ளாமல் மேலான பரமபதம் தரும் ஸாத்விக மார்க்கத்திலேயே செல்ல வேண்டும்.

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.

**

*உதவி*:
(1) பரமஹம்ச யோகானந்தாவின் “GOD TALKS WITH ARJUNA” (2) சுவாமி சித்பவானந்தரின் “பகவத்கீதை” உரை; (3) ஸ்ரீராமகிருஷ்ணமடம் – பகவத்கீதை பொழிப்புரை – ஸ்ரீ அண்ணா (4) திருக்குறள், (5) புலவர் சீனி கிருஷ்ணசாமி அவர்களின் “கீதோதயம்”

Leave a comment