பகவத்கீதை – பதினேழாம் அத்தியாயம் – சிரத்தாத்ரய விபாக யோகம் – 1


*ஞானத்தேடல் பதிவு எண்: 083 நாள்: 26.11 2022*

*பகவத்கீதை – பதினேழாம் அத்தியாயம் சிரத்தாத்ரய விபாக யோகம் – 1*

இந்தப் பதினேழாம் அத்தியாயம் மூன்று வித சிரத்தைகளைப் பகுதி பகுதியாகப் பிரித்துச் சொல்லுவதால் இவ்வத்தியாயத்திற்கு ‘ஸ்ரத்தாத்ரய விபாக யோகம்’ எனப் பெயர் அமைந்தது. இங்கே அர்ஜுனன் சிரத்தையில் உறுதியாயிருப்போரின் நிலை நிஷ்டை பற்றியும் பலன் பற்றியும் கேள்வி எழுப்புகிறான்.

*சிரத்தையின் (நம்பிக்கை) பண்புகள்*

மனிதர்களுக்குள் முக்குணங்களுடன் கூடிய சிரத்தைகள் (நம்பிக்கைகள்) உண்டு. அவை *சத்துவ குண சிரத்தை, ரஜோகுண சிரத்தை மற்றும் தாமசகுண சிரத்தை* ஆகும். எந்த மனிதன் எந்த சிரத்தையுடன் கூடியவனோ, அவன் அந்தச் சிரத்தையின் தன்மையுடையவனே. சத்வ குணத்துடன் கூடிய சிரத்தையே இறைவன் விரும்புவார்.

சத்துவ குணம் நிறைந்த மக்கள் தேவர்களையும், ரஜோ குணமுடையவர்கள் யட்சர் மற்றும் அரக்கர்களையும், தமோ குணமுடையவர்கள் பூதப் பிரேதங்களை வழிபடுகிறார்கள்.

எந்த மனிதர்கள் சாத்திர விதிமுறைகளை மீறி, கொடிய தவம் செய்கிறார்களோ, ஆடம்பரம், அகங்காரம் இவற்றோடு பேராசை, விருப்பம், மற்றும் உடல் வலிமை – இவற்றின் மீது கர்வமும் கொண்டுள்ளார்களோ, மனிதர்களையும், இறைவனையும் துன்புறுத்துகிறார்களோ, அவர்களை அசுரப் பண்புடையவர்கள் ஆவர்.

முக்குணங்களுடன் கூடிய உணவு, யாகம், யக்ஞம், தவம், தானம் ஆகியவற்றில் சத்துவ சிரத்தை, ரஜோ சிரத்தை மற்றும் தமோ சிரத்தை எனும் முக்குணங்கள் மூலம் செய்யப்படுகிறது. இவற்றில் சத்துவ சிரத்தையுடன் செய்யப்படும் செயல்களே இறைவனை மகிழ்விக்கும்.

சத்துவ சிரத்தை, ரஜோ சிரத்தை மற்றும் தமோ சிரத்தையுடன் உடல், வாக்கு, மனம் மூலம் செய்யப்படும் தவத்தில் இறைவனுக்கு சத்துவ சிரத்தையுடன் கூடிய தவமே சிறந்தது.

*ஓம் தத் ஸத்*

ஓம் தத் ஸத் என்று மூன்று விதமாக சத் சித் ஆனந்தமயமான பிரம்மத்தினுடைய குணங்களை குறிக்கும். ஓம் என்பது ஈஸ்வரனை குறிக்கும். தத் என்பதும் இறைவனை குறிக்கும். ஸத் என்பதும் இறைவனை குறிக்கும், அத்துடன் நல்லது என்பதையும் குறிக்கும். ஒரு செயலை செய்யத் துவங்கும் போது ஓம் தத் சத் என்று மனதில் கூறி தொடங்க வேண்டும். நம்பிக்கையின்றி பகவானுக்காக செய்யப்படும் நற்செயல்களான  யாகம்யக்ஞம்ஜெபம்தவம்தானம் ஆகியவைகள் அஸத் (சடத்தன்மை) ஆகும். எனவே நம்பிக்கை இன்றி செய்யும் அச்செயல்கள் இம்மையிலும், மறுமையிலும் நன்மை பயக்காதவைகளே ஆகும். (Wiki)

அவரவர் குணங்களுக் கேற்ப சிரத்தையும் சாத்விகம், ராஜசம், தாமசம் என மூவகைப்படும். சாத்விக சிரத்தையுடையோர், சாஸ்திரத்தைத் தழுவித் தேவர்களை வணங்குவர். ராஜசச் சிரத்தை யுடையோர் யக்ஷர்களையும் ராக்ஷதர்களையும் வணங்குவர். தாமச சிரத்தையுடையோர் பூத பிரேத பிசாசங்களை வணங்குவர். அவர்களுக்குக் கிட்டும் பலன்களும் குணங்களுக்குத் தக்கபடியே வேறுபட்டிருக்கும். அப்படியிருக்க சாஸ்திரத்தை மீறுவோரைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் நினைத்த பலன் கிட்டாதென்பது மாத்திரமன்று; அவர்களுக்குக் கேடுமுண்டாகும். அவரவர் குணங்களுக்கேற்ப உண்ணும் உணவும், செய்யும் தவமும், கொடுக்கும் தானமும் மூவகைப் பட்டிருக்கும்.(பாரதியார்)

சுலோகம் 1: அர்ஜுனன் கேட்கிறார் – “கிருஷ்ணா! எவர்கள் சாஸ்திர விதிமுறைகளை மீறி, சிரத்தையால் உந்தப்பட்டு, தெய்வங்களை வழிபடுகிறார்களோ, அவர்களுடைய நிலைதான் என்ன? சத்துவ குணமுடையதா? ரஜோ குணமுடையதா? அல்லது தமோகுணமுடையதா?”

இத்தொடரில் பதிவு எண் 81இல் அத்தியாயம் 16 சுலோகம் 23இல் சொன்னது இங்கு நினைவுக்கு வரலாம். “எவன் சாஸ்திர முறையைத் துறந்து, தன் மனம் போனபடி நடந்து கொள்கிறானோ, அவன் வெற்றியை அடைவதில்லை. பெரும்பேற்றை – மேலான நிலையை அடைவதில்லை; சுகத்தையும் அடைவதில்லை.” (ப.கீ.16-23). அங்கு சொல்லப் பட்டது சாஸ்த்ரங்களை அலட்சியம் செய்வது இங்கு, சாஸ்த்ர முறைகள் எவை என்பதையே அறியாத காரணத்தால் முறை மீறல் பற்றிய விஷயம்.

1. அறிந்தும் வேண்டுமென்றே செய்யும் பிழை; 2. அறியாமையால் ஆனால் ஆசையால் செய்யும் பிழை. இவையே வேறுபாடுகள்.

விருப்பம் போல் தனக்கு நல்லதென்று தோன்றுவதைத் தன்னிஷ்டப்படி செய்தல் அதை ‘வர்த்ததேகாமகாரத:’ என்று கூறுகிறார். ஆனால் அதையே இங்கு ‘யஜந்தேஸ்ரத்தையான்விதா:’ (சிரத்தையுடன் கூடியவர்கள் என்கிறார். சிரத்தையோடு ஈடுபாடு இருக்குமிடத்தில் அலக்ஷியம் இருக்கவே முடியாது. ‘நிஷ்டா’ சிரத்தையே உருவானவன்.)

*உலகில் ஐந்து விதமான மனிதர்கள்*:

1. சாஸ்த்ர முறைகளையும் கடைப்பிடிப்பவர்கள் சிரத்தை உடையவர்கள். 

2. சாஸ்த்ர முறைகளை ஓரளவிற்கே கடைப்பிடிப்பவர்கள். ஆனால் சிரத்தை அற்றவர்கள். 

3. சாஸ்த்ர முறைகளைக் கடைப்பிடிக்க இயலாதவர்கள். ஆனால் சிரத்தை உண்டு. 

4. சாஸ்த்ர முறைகளைக் கடைப்பிடிக்காமல், சிரத்தையும் இல்லாதவர்கள். 

5. சாஸ்த்ரங்களை அலக்ஷியம் பண்ணி வேண்டுமென்றே விதிமுறைகளை மீறுபவர்கள்.

சுலோகம் 2: ஸ்ரீபகவான் சொல்கிறார் – “மனிதர்களுக்கு அறநெறி முறையின்றி இயல்பாக உண்டான அந்தச் சிரத்தை சத்துவ குணமுடையது, ரஜோ குணமுடையது, தமோ குணமுடையது என்று மூன்றுவிதமாகவே இருக்கிறது. அதனை, நீ என்னிடமிருந்து கேள்.

மனிதர்களின் சிரத்தை அவரவர் தன்மை பொறுத்து வேறுபடுகிறது.

சுலோகம் 3: பரதகுலத் தோன்றலே! எல்லா மனிதர்களுக்கும் சிரத்தை அவர்களுடைய அந்தக்கரணத்திற்கு ஏற்றவாறு அமைகிறது. மனிதன் சிரத்தையே உருவானவன். ஆகையினால், எந்த மனிதன் எந்தச் சிரத்தையோடு கூடியவனோ, அவன் அந்தச் சிரத்தையின் தன்மையுடையவனே.

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு (குறள் 596)

எந்த அளவுக்கு நம்மிடம் சிரத்தை இருக்கிறதோ அந்த அளவுக்கு நம் உயர்வும் அமைகிறது.

சுலோகம் 4: சத்துவ குணம் நிறைந்த மனிதர்கள் தேவர்களை வழிபடுகிறார்கள். ரஜோ குணமுடையவர்கள் யக்ஷர்களையும் அரக்கர்களையும் வழிபடுகிறார்கள். மற்ற தாமஸ குணமுடைய மக்கள் பிரேத பூதங்களை வழிபடுகிறார்கள்.

சத்வகுணத்தோர் பிரம்மா விஷ்ணு சிவன் முதலிய தெய்வ உருவை வணங்குவர். ரஜோ குணம் உடையவர் ராக்ஷதர்கள், யக்ஷர் இவர்களை வணங்குவர். தாமச் குணம் உடையவ்ர் பிரேத பூதங்களையும் வழிபடுவர்.

Each person shows by his life, by the inescapable expression of his nature, what type of man he is and what type of unseen power he consciously or unconsciously attracts to himself.

*A person’s “religion” is demonstrated not by his formal worship but by his nature.* Most men are not “pure” types, however; at various times they display the guna (quality) of sattva or rajas or tamas.  But a person’s life as a whole is marked by a predominance of one guna, which indicates the stage of his spiritual evolution.

Therefore Sri Krishna said: “Whatever a man’s faith is, that verily is he.” All persons live according to the law of their nature, and thus are devotees of one of the three paths.

The wise, sattvic man patterns his life after the celestial design, and knowingly or unknowingly receives help from the deities to whom God has entrusted the highest functions of the phenomenal worlds.

The rajasic or worldly, passionate man, aspiring to wealth and power, is knowingly or unknowingly adoring Yakshas and Rakshasas—cosmic embodiments of greed, ruthless strength, and egotistic ambition.

The tamasic or ignorant man knowingly or unknowingly offers homage to the Pretas (spirits of the dead) and the Bhutas (various types of ghosts and spirits). By sloth, stupidity, sense attachment, and superstitious reliance on outside forces in the hope of avoiding self-effort, such a person fails to rise to his full stature as a human being and becomes enslaved to disintegrating forces beyond his comprehension and control.

In particular, this stanza of the Bhagavad Gita addresses itself to a wide spectrum of supernatural arts and rituals whose purpose is to conjure various dark and powerful entities or the spirits of the deceased. Such practices constitute a path that is fraught with danger; and, at its worst, is also evil. As the evil aspects are cited in XVII:13, the cult of consulting “departed spirits” requires commentary here.

MANY PERSONS ERRONEOUSLY imagine that “the dead”—human beings who have passed over to the astral world—are in touch with great masters or are themselves deep founts of wisdom. The truth is that most astral beings are not reliable messengers and have attained no final insight into the Great Mystery.

The soul is divine; but until man achieves soul-realization he is unable after death to express any more divinity than he expressed during his life on earth. Only those persons who possessed enlightenment while in the physical body are empowered, upon leaving it, to unite with God and to impart illumination to others.

The Gita points out that those who believe in consulting “departed spirits” are ignorant men. Such persons rely on the guidance of astral entities instead of seeking communion with God, the Heavenly Father and Friend of all. Having His help, what need of aid from astral beings?

Liberated souls do not usually dwell in the astral worlds, which are reserved for beings who have more or less recently left the earth and who have many lessons yet to learn. Great masters are unconfined, at home in Omnipresence; though some of them may appear, as saviors, in the astral or ideational (causal) spheres.

Among these emancipated ones are the great gurus or spiritual preceptors appointed by the Lord to help mankind in silent, secret ways.

The astral world (with its various higher and lower vibratory realms) contains many beings who are good, many who are ordinary,  and many who are bad; just as on earth we find all degrees of goodness and badness among human creatures. The person who indiscriminately opens his mind to receive whatever messages may come to him through “spirits” is not able to tell what sort of contact he is making in the astral spheres; and by becoming receptive to any astral vibration he runs the risk of getting into “bad company.” He may also become engrossed with phenomena of the lower astral worlds and thus fail to make any spiritual progress toward the only desirable goal: inner illumination, salvation.

When the mind is kept blank, any “tramp soul” may get in and possess that hapless individual. These tramp souls are roaming through the ether by the millions. They are seeking rebirth, but because of bad karma they are unable to incarnate as soon as they desire; hence they are continually looking for some foolishly passive mentality so that they can use that human being’s flesh and mind to satisfy their wish for physical embodiment. They can very quickly get into a mind that is permitted to become blank. If a person is weak or negative, then during any attempt to contact departed spirits, such as at a séance, he may easily become the victim of a tramp soul. Such possession deranges the subconscious mind.

*By contrast, when one practices the scientific techniques for God-communion that India developed, his mind is not blank; therefore no tramp soul can enter. These practices bypass the subconscious state of the astral realms and develop man’s superconscious state by raising the mind to the Christ Center in the forehead, where no tramp soul can venture. It is in the superconsciousness that we meet true saints and masters. They are surrounded by a divine light; and when one sees them, he infallibly knows, by intuition, that they are great souls.*

No one should try to enter the world of physically disembodied spirits until he is first armed with the spiritual power to control that world. Such power comes only from communion with the Lord. He is the Maker of all souls; and when the devotee has attuned himself to God, if he wants to see and converse with someone who has gone on, the Lord will send that person to him. As Jesus said: “Seek ye first the kingdom of God and His righteousness.”

Yogis stress the importance of concentrating on a definite thought of God while casting aside all other ideas. By thus trying always to reach the highest vibration, the seeker is able to avoid the lower astral world and to commune with the Lord in one of His manifestations—as Peace, or as the Cosmic Sound Aum,  or as Light; or, if one is very advanced, as the visible form of a saint.

Devotees who go deep in meditation are able to reach the higher realms where the great ones dwell. That is the purpose of the scientific techniques for Self-realization taught from ancient times in India. These practices help the yogi to uplift his consciousness to receive, consciously, the subtle vibratory aid of God and liberated masters. The techniques safely lead the devotee to feel the presence of the Spirit behind all beings.

Even though one may encounter only “benevolent” astral entities, and even though the hypnotist may be trying to help that person, the fact remains that he has permitted another being, on this or the astral plane, to invade and temporarily control his consciousness. This is a dangerous practice, one that does not in any way hasten spiritual advancement or resemble a true experience of the presence of God, which should be man’s sole goal.

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.

**

*உதவி*:
(1) பரமஹம்ச யோகானந்தாவின் “GOD TALKS WITH ARJUNA” (2) சுவாமி சித்பவானந்தரின் “பகவத்கீதை” உரை; (3) ஸ்ரீராமகிருஷ்ணமடம் – பகவத்கீதை பொழிப்புரை – ஸ்ரீ அண்ணா (4) திருக்குறள், (5) புலவர் சீனி கிருஷ்ணசாமி அவர்களின் “கீதோதயம்”

Leave a comment