பகவத்கீதை – பதினைந்தாம் அத்தியாயம் – புருஷோத்தம யோகம் – 2


*ஞானத்தேடல் பதிவு எண்: 080 நாள்: 25.11 2022*

*பகவத்கீதை – பதினைந்தாம் அத்தியாயம் புருஷோத்தம யோகம் – 2*

*சுலோகம் ஆறு முதல் பதினொன்று வரை ஸ்ரீராமகிருஷ்ணமடம் வெளியீடான “அண்ணா” அவர்களின் பகவத்கீதையின் பொழிப்புரையில் இருந்து:*

ஸ்ரீபகவான் கூறியது:

(6)எங்கு சென்று திரும்புவதில்லையோ அது என்னுடைய உயர்ந்த உறைவிடம். அதைச் சூரியன் பிரகாசிக்க்ச் செய்வதில்லை; சந்திரனும் இல்லை; அக்னியும் இல்லை.

(7)ஜீவலோகத்தில் அனாதியான என்னுடைய அம்சமே ஜீவனாகத் தோன்றி அதனதன் இயல்பில் நிற்கும் மனதுடன் கூடிய ஆறு இந்திரியங்களை இழுக்கிறது.

(8)எப்போது இச்சரீரத்தை ஆளும் ஜீவன் சரீரத்தை அடைகிறானோ அப்போதும், எப்போது விட்டுக் கிளம்புகிறானோ அப்போதும் – காறானது உறைவிடத்தினின்று வாசனைகளைப் போல இவற்றைக் கவர்ந்து கொண்டு செல்கிறான்.

(9)“இவன் செவி, கண், மெய், நாவு, நாசி, மனம் இவை அனைத்தையும் தன்வயப் படுத்திக் கொண்டுவிஷயங்களை அனுபவிக்கிறான்.

(10)விட்டுச் செல்பவனாயினும், உறைந்திருப்பவனாயினும், குணங்களுடன் கூடிப் புசிப்பவனாயினும் அவனை மதியீனர்கள் காண்பதில்லை; ஞானிகள் காண்கின்றனர்.

(11)முயற்சியுடையவர்களான யோகிகள் இவனைத் தம்மிடத்தில் உறைந்திருப்பவனாகக் காண்கின்றனர்; முயற் சி உடையவர்களாயினும் செய்கையால் திருந்தாத மதியீனர்கள் இவனைக் காண்பதில்லை.

சுலோகம் 6: எதை (எந்த பரமபதத்தை) அடைந்தபிறகு, மனிதர்கள் சம்சாரத்திற்குத் திரும்புவதில்லையோ, அந்த ஸ்வயம்பிரகாசமான பரமபதத்திற்கு சூரியன் ஒளி தருவதில்லை; சந்திரன் ஒளி தருவதில்லை; அக்னிதேவனும் ஒளி தருவதில்லை. அது என்னுடைய மேலான ஸ்தானம் பரமபதம் ஆகும்.

சமுத்திரத்தில் பாய்ந்த நதி சமுத்திரமாகிறது. அவ்வாறே பிரமத்தைச் சசார்ந்த மனிதனும் பரவெளியில் ஒன்றுபடுகிறான். அதுவே “சித் ஆகாசம்” எனப்படுகிறது. இருட்டறையில் இருக்கும் ஒருவனுக்கு, ‘நான் இருக்கிறேன்’ என்ற உணர்வு இருக்கிறது; ஆனால் அந்த உணர்வை சூரிய வெளிச்சம் விளக்காது.அப்படியே சந்திரனும், தீயும் அதை விளக்காது. நான் இருக்கிறேன்! என்ற உணர்வை, அந்த உணர்வே விளக்குகிறது. அந்த சுய உணர்வு எப்பொழுதும், எங்கும் நிலைத்துள்ளது. அது தெளிவடைந்த நிலையே #பரமபதம் எனப்படுகிறது.


மனம் தெளிவடைந்தப் பிறகு அது பிரமாண்டமாக விரிகிறது. பிறப்பு, இறப்பு, போக்குவரத்து, காலதேச எல்லைகள் எல்லாம் பிரமத்தில் ஒடுங்கி மறைகின்றன. இந்தப் பரவெளியில் கலக்கின்ற ஜீவன்முக்தர்கள, திரும்பவும் பிறப்பதில்லை! அவர்கள் பிரமத்தோடே கலந்துவிடுகின்றனர்.


எதனாலும், யாராலும் விளக்க முடியாததே #பிரம்மம் என்பது! அதன் ஆற்றல் எல்லையற்றது; பிரம்மத்தில் கலந்தவர்கள், மீண்டும் பிறவியெடுப்பதில்லை! அத்தகைய இடமே எனது “பரமபதம்” என்கிறார் ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா, அர்ஜுனனிடம்.

வேதம் : தத்ர ஸுர்யோ பாதிந சந்த்ர தாரகம்

நேமா வித்யுதோ பாந்தி |

த மேவ பாந்த மநுபாதி ஸர்வம்

தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி || (கடோபநிஷத் 2/2/5)

என்கிறது.

‘அந்தப் பூரண பிரம்மமான பரமாத்மாவைச் சூரியன் தன் ஒளி கொண்டு விளங்கச் செய்ய இயலாது. சந்திரனும் வானில் மின்னும் நட்சத்திரங்களும் கூட அந்த பிரம்மத்தை ஒளிரச் செய்ய முடியாது. நிலை அங்ஙனம் இருக்கும்போது, இந்த உலகில் உள்ள அக்னியைப் பற்றி என்னவென்று சொல்வது? அந்த பரமாத்மா ப்ரகாஸிப்பதனால் தான் மற்றவை எல்லாம் ப்ரகாஸம் பெறுகின்றன. அவருடைய ஒளி தான் உலகிற்றே ஒளி தருகிறது’ என்று வேதம் போற்றுகிறது.

மேலும் –

‘யதோவாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ |’  

(ப்ரம்மோப நிஷத்)

என்கிறது.

பொருள் – ‘மனத்துடன் கூட வாக்குகளும், எதை எட்டிப் பிடிக்க முடியாமல் திரும்பி விடுகின்றனவோ, அதுவே பூரண ப்ரம்மம் – பரமாத்மா.’

‘அந்த அழியாப் பெரும் பதவி – சொல், மனம் இவற்றிற்கு எட்டாதது! அதன் தன்மையைச் சொல்லவோ, விளக்கவோ முடியாது.’

கர்மங்களின் கட்டிலிருந்து விடுபடுவதற்கு உபாயம். ஆதிபுருஷனான பகவான் ஸ்ரீ கிருஷ்ணனையே சரணம் அடையணும், சர்வம் விஷ்ணுமயம் ஜகத்.

சுலோகம் 7: இவ்வுடலில் என்றுமுள்ள ஜீவாத்மா என்னுடைய அம்சமே. அதுவே பிரகிருதியில் உள்ள மனம் மற்றும் ஐந்து புலன்களையும் ஈர்க்கிறது.

எக்காலத்திற்கும் எனது அம்சமே உயிராகத் தோன்றி வரும்பொழுதும், அது பரமாத்மாவிற்கே உரியதே. பரமாத்மாவில் இருந்து பிரிந்து வந்து , மீண்டும் அதில் கலத்தல் என்பதல்ல. எப்பொழுதுமே ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்றே! என உணர வேண்டும். ஆனால் அறியாமையினால் பிரகிருதியில் தன்னைக் கட்டுண்டவனாக, நினைத்துக் கொள்பவனே மனிதன் (ஜீவாத்மா).


பிரகிருதியின் சேர்க்கையால் அவனுக்குப் புலன்கள் உண்டாகின்றன. புறவுலகை அனுபவிப்பதற்கென்றே புலன்கள் உண்டாகியிருக்கின்றன. அந்நிலையில் ஜீவன் “போகி” என்று அழைக்கப்படுகிறான். போகியாகப் போகத்தில் கட்டுப்பட்டிருப்பவர்கள் எல்லாம் , புலனிப்பத்தை துறக்கும் பொழுது யோகியாகின்றனர். புலனடக்கத்திற்கு ஏற்றவாறு அவன் பிரம்மத்தைச் சார்கிறான். அதாவது புலன்களை அடக்கினால் பரமாத்மாவை உணர முடியும்.


ஜீவாத்மாவாக இருக்கும்போதும் அது பரமாத்மாவின் அம்சமே. ஜீவபோதம் அற்றுப் போனால் எஞ்சியிருப்பது பரமாத்மாவே. ஜீவாத்மாவின் உண்மையான இயல்பு இறையம்சமே. ஆனால் அகங்காரத்தினால் இறையம்சம் மறைந்துப் போகிறது. நாம், இறைவனின் அம்சமே! என உணரும்பொழுது, அங்கே பரமாத்மா வெளிப்படுகிறது.
எனது அம்சமே உயிராகத் தோன்றி உலகில் வருகிறது.

ஆனால் புலனின்பங்களால் இழுக்கப்படுகிற மனது, பரமாத்மாவை மறந்துப்போகிறது; விலகிப்போகிறது. ஆனால் நம்முள்ளும் இருப்பதும் பரமாத்மாவே! என உணரும்பொழுது அங்கே ஜீவாத்மா, பரமாத்மா என்ற வேறுபாடு மறைந்துப்போகிறது! பிரம்மத்தோடு கலக்க அவன் தகுந்தவனாகிறான்! என்கிறார் ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.

சுலோகம் 8: காற்று மணமுள்ள இடத்தில் இருந்து பலவித மணங்களை இழுத்துச் செல்வதுபோல, உடலை ஆள்பவனான ஜீவாத்மாவும் எந்த உடலை விட்டுக் கிளம்புகிறானோ, அதிலிருந்து மனத்தோடு கூடிய புலன்களையும் எடுத்துக் கொண்டு எந்த உடலை அடைகிறானோ, அதில் வந்து சேர்கிறான்.

உடலை ஆளும் தன்மையுடையவன் ஆதலால் ஜீவன் இங்கு ஈஸ்வரன் என்று அழைக்கப்படுகிறான். காற்று தன்னளவில் ஒருவித மணமும் இல்லாதது. மலர்களோடு சேருவதாலேயே காற்றிற்கும் மணம் உண்டாகிறது. அந்த மணத்தைப் பிறகு, சிறிது சிறிதாக நீக்கவும் அதற்கு இயலும். உலகப்பற்று நீங்குகிற அளவு மனிதன் தூய்மையடைகிறான்.

ஆனால் உலகப் பற்றுடையவன், ஒரு ஜாலவித்தைக்காரனைப் போன்று நடந்துக் கொள்கிறான். ஓரிடத்தில் தனது பொருட்களை பரப்பி வைத்து வித்தையைக் காட்டிவிட்டு, பிறகு இன்னொரு ஊருக்குப் போகிறான்.

அவ்வாறே ஜீவன் மனதையும், புலன்களையும்_ பிறக்கும்பொழுது விரிக்கிறான்; சாகும்பொழுது ஒடுக்குகிறான். ஜீவன் பிறவியெடுக்கும் பொழுது புலன்களைப் பற்றிக்கொண்டு; உயிரை விடும்பொழுது புலன்களை ஒடுக்குகிறான்! என்கிறார் ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.

சுலோகம் 9: இந்த ஜீவாத்மா காதையும் கண்ணையும் சருமத்தையும் நாக்கையும் மூக்கையும் மனத்தையும் சார்ந்து கொண்டு, அவற்றின் உதவியுடன் தான் புலன்நுகர்ப் பொருட்களை அனுபவிக்கிறான்.

மனிதனின் ஐம்பொறிகளும் ஐந்துவித ஜன்னல்கள் ஆகின்றன. ஜன்னல்கள் இல்லாத வீட்டிற்குள் ஒருவனை அடைத்து வைத்துவிட்டால், அவனுக்கு வெளியுலகத் தொடர்பு அறுந்துப் போகிறது; காற்றும், வெளிச்சமும், நீரும், உணவுமின்றி அவன் உயிர் வாழ்வதே சிரமமாகன தாகிவிடுகிறது.


மனிதனின் ஐம்பொறிகளும், ஐம்பூதங்களோடு அவன் தொடர்பு வைக்க உதவுகிறது. அக்னியை உணர கண்ணும், காற்று நம்மைத் தீண்டுவதை உணர உடலும் உதவுகிறது. நீரின் தன்மையை, சுவையை உணர நாவு உதவுகிறது. நிலத்தின்(மண்ணின்) வாசனையை உணர நாசி உதவுகிறது; மனமோ இந்த ஐந்திற்கும் பொதுவானது.


உடல் என்னும் கோட்டைக்கும் இருக்கும் ஜீவன், ஐம்பொறிகளின் வகையைத் தெரிந்துக்கொள்ள மனம் என்ற கருவியே பாலம் போன்று அமைகிறது. ஐம்புலன்களின் வழியாகவும் மனிதன் உலக இன்பங்களை துய்க்கிறான்.

சுலோகம் 10: இந்த ஜீவனை உடலைவிட்டுக் கிளம்பும்பொழுதோ, உடலில் இருக்கும்பொழுதோ, போகங்களை அனுபவிக்கும்பொழுதோ, முக்குணங்களுடன் கூடியிருக்கும்பொழுதோ அறிவிலிகள் அறிகிறதில்லை. ஞானக்கண் பெற்றவர்கள்தான் விவேகமுள்ள ஞானிகள்தான் தத்துவரீதியாக அறிகிறார்கள்.

அறிவிலிகளுக்கு உடலும், அதன் மூலம் நடைபெறுகிற வெளியுலகக் காட்சிகளும், அதன்மூலம் வருகிற இன்பதுன்பங்களும் மட்டுமே புலனாகின்றன. உடலுக்குள், தங்களது மேலான சொரூபமாக இருக்கும் (பிரம்மத்தை) இறைவனைக் காண அவர்களுக்கு இயலாது.


புலன்கள் புறவுலகைப் பார்ப்பதெற்கென்றே அமைந்தவைகள். அவைகளின் வசப்பட்டு, வெளியுலகை மட்டுமே பார்த்து, ஆத்மாவை உணராதிருப்பவர்கள் அறிவற்றவர்கள்.

விழாக்களில் சிலர் பெரிய பொம்மைகளைத் தூக்கிக்கொண்டு, அவைகளின் உட்புகுந்து விளையாடுவதைக் குழந்தைகள் பார்த்து குதூகலிக்கும்; ஆனால் பெரியவர்களுக்கோ உள்ளேயிருப்பது, மனிதன் என்பது தெரியும். அவ்வாறே ஞானக் கண்ணுடையவர்களுக்கு, உடல் என்னும் பொம்மைக்குள் இருக்கும் ஆத்மா வேறு! என்பது தெரியும்.

மனிதனின் உடலினுள் இருக்கும் ஜீவனே, இறைவன்; எனவே உடல் வேறு; ஆத்மா வேறு என்பதை அறிவுடையோர் அறிவர்! என்கிறார்! ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.

சுலோகம் 11: யோகிகளும் முயற்சி செய்தே தம் இதயத்தில் உறைகின்ற இந்த ஆத்மாவைத் தத்துவரீதியாக அறிகிறார்கள். ஆனால், எவர்கள் தங்கள் உள்ளங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவில்லையோ, அந்த அஞ்ஞானிகள் முயன்றாலும் கூட, இந்த ஆத்மாவை அறிகிறதில்லை.

ஒரு சிறந்த யோகி மற்றும் ஆத்மாவைப் பற்றிய அறிவில்லாத, பக்குவமடையாத அறிவிலி __ ஆகிய இருவருக்கும் முயற்சி என்பது பொதுவானது. முயற்சியின்றி மனிதனால் எதையும் சாதிக்க முடியாது.


ஆனால் இறைவனைப் பற்றிய மனப்பக்குவம் இல்லாத மனிதன் மாடு போல உழைக்கிறான். அவன் செய்த செயல்களின் பலன் மட்டுமே அவனுக்குக் கிடைக்கும். ஆனால் இறைவனை அறிய முயற்சி செய்கின்ற யோகியோ ஆத்ம மனப்பக்குவத்தை அடைகிறான்.


உலக விஷயங்களைச் செய்து சாதிப்பதற்கு இடையில், ஒழுக்கத்தாலும், தவத்தாலும் யோகியானவன், மனதைப் பண்படுத்துகிறான்; உள் முகமாகவும் அதைத் திருப்பிப் பழகுகிறான்.(தன்னுள்ளே இறைவனை உணர முயற்சித்தல்).


அவ்வாறு சித்தம் தூய்மையடையப் பெற்று, ஆத்ம சொருபத்திலேயே எப்பொழுதும் ஈடுபட்டிருப்பது, ஆத்ம தரிசனத்திற்கு இன்றியமையாததாகும்.


அதாவது தன்னுள் இருக்கும் ஆத்மாவை, இறைவனை உணர முயற்சித்தலே முக்கியமானது! முயற்சியுடைய யோகிகள் ஆத்ம மனபக்குவத்தை அடைந்து, தன்னிலேயே இறைவனைக் காண்கின்றனர்! என்கிறார் ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.

THOSE OF UNABATED ZEAL, who ignore sense temptations and who continually practice yoga in a humble spirit, behold the Lord as the Indweller. But men who merely read scriptures as a hope of emancipation, who do not try to follow the moral rules, and who practice yoga methods without deep interest and devotion will not receive the spiritual benefits they expect.

Many students of yoga perform their exercises in a haphazard way; then wonder why they do not “get anywhere” and why they fail to feel communion with the Infinite even after apparently serious meditation.

THE EIGHTFOLD PATH OF YOGA

*The technique of salvation is eightfold, as outlined by Patanjali.*

Emancipation is attained by strict adherence to prescribed scriptural rules of conduct and by progressing through the various stages of yoga, as follows:

(1) Yama,  moral conduct: noninjury to others, truthfulness, nonstealing, continence, and noncovetousness.

(2) Niyama: purity of body and mind, contentment in all circumstances, self-discipline, self-study (contemplation), and devotion to God and guru.

(3) Asana: right posture; the spinal column must be held straight, and the body firm in a comfortable position for meditation.

(4) Pranayama: life-force ( prana) control.

(5) Pratyahara: the power of interiorizing one’s mind by disconnecting it from the sense-telephones, switching off at will the messages from the nerve currents.

(6) Dharana: meditation in which the devotee is able to fasten his interiorized mind on the Aum sound, the primal manifestation of God. (The sense-enslaved man does not own, or control, his mind; so he cannot concentrate on the Aum-God as the Holy Ghost or Cosmic Vibratory Sound.

The yogi with a disciplined and interiorized mind is able to offer it to the Lord; none other is able to make that offering.)

(7) Dhyana: cosmic consciousness; endless spherical expansion of blissful awareness; perception of God as the Cosmic Aum reverberating throughout the whole of the universe.

(8) Samadhi: oneness of the individualized soul and the Cosmic Spirit.

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.**

*உதவி*:
(1) பரமஹம்ச யோகானந்தாவின் “GOD TALKS WITH ARJUNA” (2) சுவாமி சித்பவானந்தரின் “பகவத்கீதை” உரை; (3) ஸ்ரீராமகிருஷ்ணமடம் – பகவத்கீதை பொழிப்புரை – ஸ்ரீ அண்ணா (4) திருக்குறள், (5) புலவர் சீனி கிருஷ்ணசாமி அவர்களின் “கீதோதயம்”

Leave a comment