பகவத்கீதை – பதினான்காம் அத்தியாயம் – குணத்ரய விபாக யோகம் – 4


*ஞானத்தேடல் பதிவு எண்: 078 நாள்: 16.11 2022*

*பகவத்கீதை – பதினான்காம் அத்தியாயம் குணத்ரய விபாக யோகம் – 4*

சுலோகம் 21: அர்ஜுனன் கேட்கிறார் – “இந்த மூன்று குணங்களையும் கடந்த மனிதன் எந்தெந்த இலக்கணங்களோடு கூடியவனாக இருக்கிறான்? மேலும், எத்தகைய நடத்தை உள்ளவனாக இருக்கிறான்? அப்படியே பிரபுவே! எந்த உபாயத்தினால் இந்த மூன்று குணங்களையும் கடக்கிறான்?”

சுலோகம் 22: ஸ்ரீபகவான் கூறுகிறார்—“அர்ஜுனா! எந்த மனிதன் சத்துவ குணத்தின் செயலான பிரகாசத்தையும், ரஜோ குணத்தின் செயலான செயலூக்கத்தையும், தமோ குணத்தின் செயலான மோகத்தையும், அவை வரும்போது அவற்றை வெறுப்பதில்லையோ, விலகும்போது அவற்றைத் திரும்பவும் பெற விரும்புவதில்லையோ

சத்துவ குணத்தில் கட்டுண்டிருப்பவன் அறிவையும், இன்பத்தையும் வேண்டுகிறான். சாஸ்திர ஞானப்பற்று மிக வல்லமை வாய்ந்தது. எளிதில் அது மனதைவிட்டு அகலாது. கேள்வியறிவும், இன்பமும் வாய்க்காத ஒருவன் பேராவலோடு அவைகளை நாடுகிறான். சத்துவ குணத்திற்கு அப்பால் சென்றவனுக்கு இந்த விருப்பு, வெறுப்பு இல்லை.

ஆனால் ரஜோ குணத்தின் வசப்பட்டவன் சும்மா இராமல், ஏதாவது செய்துக் கொண்டிருப்பான்! சில கர்மங்களில் (செயல்களில்) அவனுக்கு பெருவிருப்பம் உண்டாகிறது; வேறு சில செயல்களில் தாங்காத வெறுப்பும் ஏற்படுகிறது. நல்ல செயல் எனத் தோன்றுவதை ரஜோ குணத்தையுடையவன், ஆவலோடு செய்கிறான்; கெடுதலான செயல் என நினைப்பதை வெறுத்தும் ஒதுக்குகிறான். முக்குணங்களையும் கடந்தவனோ, மறந்தும் கேடுடைய செயலைச் செய்ய முடியாது.

தமோ குணத்தில் பற்றுடையவனுக்கு சோம்பலிலும்,தூக்கத்திலுமே அதிக விருப்பம் இருக்கும்; அதற்கு இடைஞ்சல் வந்தால், அவன் வெறுப்படைகிறான்.
முக்குணங்களையும் வென்றவனோ, ஒரு நிலைக்கண்ணாடியைப் போன்றவன். அதில் தெரியும் தோற்றங்களாலும், அது மறைந்துப் போவதாலும் கண்ணாடிக்கு எப்பயனும் இல்லை.

குணங்களை வென்றவனுக்கு, எந்த விருப்பு, வெறுப்பும் இல்லை! அவன் ஒரு ஞானியின் நிலையில் திடமான, சமமான மனநிலையில் இருக்கிறான்! என்கிறார் ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.

சுலோகம் 23: எவன் சாட்சியைப் போல் இருந்துகொண்டு குணங்களால் அசைக்கப் படுவதில்லையோ, மேலும் குணங்களே குணங்களிலேயே இயங்குகின்றன என்று அறிந்து ஸத் சித் ஆனந்த பரமாத்மாவிடம் ஒன்றியவனாக இருக்கிறானோ, மற்றும் அதிலிருந்து நிலைகுலைவதில்லயோ

மலையில்  உள்ள  மரம், செடி, கொடிகளெல்லாம்  அசைந்தாலும்,  மலை  அசைவதில்லை.  அவ்வாறு  ஆத்மாவைச்  சார்ந்துள்ள  குணங்களெல்லாம். அசைந்தாலும்,  ஆத்மா  அசைவதில்லை.  

சுலோகம் 24: எவன் தன் நிலையான ஆத்ம ஸ்வரூபத்தில் இடையறாது நிலைத்து நிற்கிறானோ, இன்ப-துன்பங்களைச் சமமாகக் கருதுவானோ, மண்ணையும் கல்லையும் பொன்னையும் சமமாக மதிப்பானோ, ஞானியோ, வேண்டியது-வேண்டாதது இரண்டையும் ஒன்றாகவே நினைப்பானோ, இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் ஒன்றெனக் கருதுவானோ

தன்   உடலாக  வடிவெடுத்திருப்பதும்   குணங்களே;  புற உலகாக  வடிவெடுத்திருப்பதும்  குணங்களே.  இவ்வாறு  குணங்கள்,  குணங்களோடு  விதவிதமாகத்  தொடர்புப்பட்டிருக்கையில்,  ஆத்மசொரூபத்தை  முற்றும்  அறிந்துள்ள  ஞானி,  ஆத்மாவில்  திருப்தியடைந்தவனாக,       குணங்களைக்  கடந்தவனாக. ஞானியைப்  போல  நடுவுநிலையில்  நிற்கிறான்.  

         அவ்வாறவன்  மண், கல் பொன்னையும்  சமமாகவே  நினைக்கிறான்.  இன்பத்தையும், துயரத்தையும்;   புகழ்ச்சியையும்,  இகழ்ச்சியையும்  சமமாக  நினைப்பவனே!   நிறை ஞானி. 

    அப்பர்  சுவாமிகள்  திருக்கோயில்களில்    உழவாரப்பணியைச்  செய்யும்பொழுது,  “ஓடும், செம்பொன்னும்  ஒக்கவே  கருதி”  உடைந்த ஓடுகளோடு, பொன்னையும், தேவையற்ற செடிகொடிகளையும் சேர்த்தே ஒதுக்கித் தள்ளுவாராம். அப்படிப்பட்ட நிறைஞானியையே, குணங்களை வென்ற #குணாதீனன் என்கிறார்! ஶ்ரீகிருஷ்ணர்.

சுலோகம் 25: பெருமையையும் சிறுமையையும் சமமென நினைப்பானோ, நண்பர் பக்கலிலும், பகைவர் பக்கலிலும் சமநோக்குக் கொண்டவனோ, செயல்கள் அனைத்தையும் நான் செய்கிறேன்’ (தான் கர்த்தா) என்ற மனப்பான்மையை விட்டவனோ, அந்த மனிதன் முக்குணங்களையும் கடந்தவன் என்று கூறப்படுகிறான்.

முக்குணங்களில்   கட்டுண்டு  அறியாமையில்  இருப்பவர்களுக்கு   மானம்,  அவமானம்,  நட்பு,  பகை  முதலியன  உண்டு.   குணங்களைக்  கடந்த  நிறைஞானிக்கு  இவையொன்றுமில்லை.   

     இந்த  மூன்று  சுலோகங்களும்  அர்ஜுனனுடைய  கேள்விக்கு  விடையாக  வருகின்ளன.

   எந்த  உபாயத்தைக்  கையாண்டு  ஞானி  மூன்று  குணங்களையும்  கடக்கிறான்?  என்ற  கேள்விக்கு  இனி விடையாக  அடுத்து  பதிலளிக்கிறார்  ஶ்ரீகிருஷ்ணர். 

சுலோகம் 26: மேலும், எவன் வேறு எதிலும் நாட்டமிலாமல் ஒன்றிய பக்தியோகத்தினால் என்னை இடைவிடாது வழிபடுகிறானோ, அவன் இந்த மூன்று குணங்களையும் கடந்து ஸத் சித் ஆனந்தமயமான பரப்பிரம்மத்தை அடைவதற்குத் தகுதி பெறுகிறான்.

எந்த உபாயத்தைக் கையாண்டு ஞானி முக்குணங்களையும் கடக்கிறான்? என்ற கேள்விக்கு, விடையாக இச்சுலோகம் வருகிறது.


பரமபிரேமை (பரபிரம்மத்தின் மீது அன்பு, பக்தி) வடிவமாக இருக்கிற பக்தி யோகத்தால், யார் ஒருவன், அனைத்தையும், நாராயணரின் வடிவமாகக் கருதி, உள்முகப் பார்வையில்( மனத்தினுள்ளே இறைவனைக் கண்டு) ஆத்மார்த்தமாக எப்பொழுதும் பரமாத்மாவை நினைத்துக் கொண்டே இருக்கிறானோ, அவன் பிரம்ம சொரூபமாகிறான்.


வெளிச்சம் வந்தால் இருள் மறைவதைப் போல, பிரம்மத்தின் நினைவு என்ற ஒன்றிலேயே மூழ்கியிருப்பவனுக்கு, முக்குணங்களையும கடப்பது எளிதாகிறது.


பிரம்மத்தின் மீது எப்பொழுதும் மாறாதப் பக்திக்கொண்டு, அதிலேயே ஆத்மார்த்தமாக ஈடுபடுபவன், முக்குணங்களையும் கடந்து, பிரம்மத்தோடு இணைந்து, பிரம்மம் ஆவதற்குத் தகுதியுடையவன் ஆகிறான்! என்கிறார் ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.

சுலோகம் 27: ஏனெனில், அந்த அழிவற்றதான பரப்பிரம்மத்திற்கும் அமிர்த நிலைக்கும் (இறவா நிலைக்கும்) எப்பொழுதும் இருக்கக்கூடிய தர்மத்திற்கும் வேறுபாடற்ற ஒரே சீரான ஆனந்தத்திற்கும் உறைவிடம் நானே.

நான்கு யோகங்களும் இங்கு சமரசம் அடைகின்றன. முந்தைய சுலோகத்தில் மாறாதப் பக்தியினால் பிரம்மத்தை அடைவதைப் பற்றி அர்ஜுனனிடம் கூறினார்! ஶ்ரீகிருஷ்ணர்.
அழியாத மோட்ச நிலையாகிய நிர்க்குண பிரம்மம், ஞானத்தின் மூலம் அடையப்படுகிறது. கர்மயோகத்தின் மூலம் பகவானுக்கு சேவைகளைச் செய்து “என்றென்றும். நிலைத்திருக்கும் (சாசுவதமான) தர்மம் அடையப்படுகிறது.


பின்பு ராஜயோகத்தின் மூலம் அமிர்த்திலிருந்து உதிக்கும் ஒப்பற்ற சுகம் அடையப்பெறுகிறது. இந்த நான்கு யோகங்ககளும் குணாதீதத்திற்குச் (முக்குணங்களை வெல்லுதல்) செல்ல உற்ற உபாயங்களாகின்ளன. இந்த நான்கு யோகங்களும். சேர்ந்தே கையாளப்பட வேண்டும். அவைகளை அப்படியே கடைப்பிடிக்கிறவன், குணங்களைக் கடந்து கொண்டிருப்பவன்! ஆகிறான். இது அர்ஜுனன் கேட்ட கடைசிக் கேள்விக்கு விடையாக ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா கூறியது.

இந்த அத்தியாயம் பற்றிய பரமஹம்ச யோகானந்தரின் சில கருத்துகள்:

THE PERFORMANCE OF WORLDLY ACTIVITY without wisdom gives rise to an unquenchable thirst of longings for and attachments to material objects and egotistical satisfactions. The man who acts for selfish reasons becomes deeply attached to bodily activities and desires.

Such worldly activity binds the majority of persons to earthly rebirths, owing to the ceaseless desires it engenders, many of which remain unfulfilled at the time of death. To perform worldly activities only to please God, however, is never binding.

A few persons are sattvic. There are also a few men of exceedingly tamasic nature—those who are effortlessly disposed to commit evil. But the greatest number of human beings are rajasic by inclination; impelled by the passion characteristic of rajoguna,  they remain absorbed in worldly and selfish interests.

…..
ANY ACTION PERFORMED UNDER THE INFLUENCE of these triple qualities, with attachment (egoity), causes rebirth-making bondage. A person whose nature and actions are good is usually attached to virtue and its rewards of inner contentment and happiness. A man habitually engaged in worldly activities is generally attached to those works and to his restless, energetic inclinations. An ignorant man is uncomprehending and steeped in his misconceptions and errors.

The majority of mankind stays in the sphere of worldly activities, which they perform with attachment. This sphere, however, is the clearinghouse and the testing ground of life. Such worldly persons at least remain alert in the mental realm, far above the low tamasic plane of sloth and bewilderment. They have a chance to rise to the good sattvic state as they learn to perform activities for God and hence without egoistic influence.

Persons who conscientiously fulfill their proper worldly duties, although beset with restlessness and worries, learn thereby to act in an increasingly better or sattvic way and to perform activities in a happy frame of mind, even if not yet free from egotism. Aspiring human beings living in this middle sphere of activity find their mental trend is leading them upward—

even though a great many remain for a long time in this educational midsphere, entangled in egotistical performance of good actions. The fortunate few, however, escape quickly from the rajasic realm; remembering the image of God within them, they begin to exercise discrimination and act only to please God. Thereby they progress rapidly into virtuous beings and find emancipation.

Comparatively speaking, only a few very stupid persons misuse their powers of discrimination to the extent that they are willing to stoop down to the third and worst sphere, that of evil. Perhaps many more would become tamasic if Mother Nature didn’t use hunger, poverty, and misery to prod her charges to remedial activity. Tamasic persons misuse divine free choice, refusing to perform normal constructive activities. Thus they descend in evolution, cultivating the tamasic habits of sensuality, laziness, pride, oversleeping, and Godless living. Constant inner and outer indolence and indulgence in oversleeping or drugging the mind—seeking the uncreative and oblivious state of existence—lead one to the animalistic plane.

The purpose of life is to ascend to God, not to slide down the ladder of evolution to animality. The seeker for liberation should avoid excess in all modes of conduct, and should perform all worldly duties without attachment—maintaining himself and his family, and observing his divine duties for liberating himself and uplifting others.

Transmuting selfish actions into noble and altruistic behavior, the aspirant becomes a sattvic being. The ensuing attachment to virtue turns the mind to God—the final stage of the purifying and liberating process begins.


THE ACTIVITY AND THE UNDERTAKING of works of the average man are ego-tainted and hence accompanied by various griefs and disillusionments. He is engrossed in fears of loss and in expectations of gain. As his desires increase, so does his state of unrest. He is beset by worries; tranquility and true happiness elude him.

However, a man who labors only for himself and his relatives is nevertheless maintaining a portion of God’s family. A selfish businessman, imbued with rajas,  is therefore far superior to the indolent, tamasic type of person who is unwilling to support himself or to make any kind of contribution to society.

 …
RIGHT ACTIVITY LEADS TO HAPPINESS. Worldly actions imbued with egotism ultimately bring pain and disillusionment. Continual evil actions destroy man’s discrimination and understanding.

Good persons, through the incentive of spiritual joy, try to become better and better. The life of the average human being, however, is a mixture of right actions and wrong actions.

The lowest men are those who tire easily of any struggle for virtue, giving up all worthwhile pursuits and sinking into the stupor of nonactivity and evil habits. Persons of tamasic nature become bewildered and increasingly ignorant, devoid of any sense of responsibility for their own welfare or for the welfare of the society of which they are a part.

“The wages of sin is death.” That is, sinful activities lead to the death of man’s happiness. Ignorance is the sin of sins because it is the mother of all misery.

Why do worldly men perform actions that produce little joy and many troubles? Why do evil men destroy themselves with their pernicious behavior? The answer is “habit”—one of the most potent factors in human destiny. Many persons, in spite of their knowledge of the suffering involved, continue to indulge in injurious practices because of the iron influence of habit. In addition, such persons lack experience of the rewarding joys of the spiritual life.

As the camel eats bramble even though it makes the mouth bleed, so the sex-obsessed man indulges himself even though his health suffers, and the alcoholic drinks himself to death. The acquired taste for bad habits is not easily forsworn if one is ignorant of the incomparable nectar of the soul within him. The money-mad person destroys his happiness by continuously seeking more wealth, not knowing that a little investment in the treasure house of sincere meditation yields lasting joys such as gold cannot buy.

Thus worldly persons, in spite of the suffering involved in material activities, continue to be worldly; and evil men continue in their abnormal path, steeped in senseless living. Their rajasic and tamasic habits, respectively, prevent them from picturing the better joys of normal worldly activities or the superior joys of noble pursuits and soul exploration. Rajasic persons, mentally stimulated by activity and chastened by disappointment, may begin a deeper search for lasting joy. But tamasic beings, caught in the ignorance of their own making, with no will for self-improvement, fall into ever deeper ignorance, finding sadistic pleasure in hurting themselves and others.

All persons, however, can change and improve their life through keeping good company and exercising their innate power of self-control, and through meditation on God, the Source of their being. Even a little taste of goodness will stimulate one’s spiritual appetite for the Everlasting Sweetness.

இதுவரை ‘குணத்ரய விபாக யோகம்’ என்ற பதினான்காவது அத்தியாயப் பதிவுகள் நிறைவுற்றன.

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.**
*உதவி*:
பரமஹம்ச யோகானந்தாவின் “GOD TALKS WITH ARJUNA”;
சுவாமி சித்பவானந்தரின் “பகவத்கீதை” உரை;

Leave a comment