பகவத்கீதை – பதினெட்டாம் அத்தியாயம் – மோக்ஷ ஸந்யாஸ யோகம்– 4


*ஞானத்தேடல் பதிவு எண்: 090 நாள்: 06.12 2022*

*பகவத்கீதை – பதினெட்டாம் அத்தியாயம் மோக்ஷ ஸந்யாஸ யோகம் – 4*

சுலோகம் 26: *பற்றற்றவனாகவும், நான் என்ற அகங்காரத்தைக் காட்டும் சொல்லைக் கூறாதவனாகவும், உறுதியும், ஊக்கமும் உடையவனாகவும், செயல் கைகூடுதல், கைகூடாமை இவற்றில் மகிழ்ச்சி, துயரம் முதலிய மாறுபாடற்றவனாகபும் இருக்கின்ற அந்த கர்த்தா, சாத்விகன் எனப்படுகிறான்.*

எல்லா வடிவங்களும் ஈசன் சொரூபம்; எல்லாச் செயல்களும் ஈசனின் செயல்கள் என்று எப்போதும் இருப்பதால் அவன் பற்று நீங்கியவன் ஆகிறான். தன் உடலின் மூலம் நிகழ் கர்மத்துக்கு ஈசனே காரணம் என்று அறிவதால் அவனிடம் அகங்காரம் இல்லை.

Only a yogi of the highest God-realization could in truth behave with such transcendent feeling. A lesser person feigning such spiritual aloofness would be acting in cruel and unfeeling hypocrisy.

A truly wise man is able to distinguish temporal mortal dreams from the Eternal Reality; therefore, he is utterly free from all attachment. He is evenmindedly indifferent to both the reverses and the successes that befall him, for he does not see himself as the doer; he perceives the Lord working through him in His world. He who believes he owns any portion of this earth is seized with terrible grief when he loses that which he mistakenly thought was his own.

Sattvic nonattachment and absence of egoity does not make the yogi apathetic. His inner state of God-union rather gives him an imperturbability of fortitude and resolution, and a zeal that is constantly enlivened by his perception of the Hidden Joy in all things. Dispassionate toward the happenings in God’s dream, he is yet wholly compassionate toward those beings still struggling with its relativities.

*சுலோகம் 27: பற்றுடன் கூடியவன், செயலின் பயனை விரும்புபவன், பேராசையுள்ளவன், பிறரைத் துன்புறுத்தும் தன்மை கொண்டவன், தூய்மையற்ற நடத்தையுள்ளவன், மகிழ்ச்சியாலும் துயரத்தாலும் பாதிக்கப் படுபவன் – இத்தகைய கர்த்தா ‘ராஜஸன்’ என்று அழைக்கப் படுகிறான்.*

பிறர் பொருளைத் தனதாக்கிக் கொள்ள முயல்பவன் உலுத்தன் அல்லது உலோபி எனப்படுகிறான். இந்த முயற்சியில் அவன் பிறரிடம் வன்முறையிலும் ஈடுபடுவான். இவன் முயற்சியில் வென்றால் மகிழ்ச்சியும் தோற்றால் வருத்தமும் கொள்கிறான்.

A PERSON WHO IS UNDER THE UNGOVERNED influence of the passionate or fiery energy of the guna of rajas develops a wholly materialistic exertive nature. Always restless and outgoing, he never spends time in the pure enjoyment of meditation, or in introspection, or in exchanging peace with others. He is excessively active, blindly accumulating money, property, and power with inordinate greed and sole self-interest. He is inclined to seek baneful thrills, such as the indiscriminate hunting of animals just for the lust of the sport. When it suits his purpose, he can be insensitively harsh, even sadistic, ready to hurt or destroy any competitor, or to take revenge on anyone standing in the path of his self-interest. He is constantly bobbing up and down in excitation on the alternating waves of mirth and grief. He is nothing more than a cogwheel in the machinery of action, a mechanical rajasic person.

Even a little sattvic discrimination and self-control aimed at restraining and guiding the passionate force in the base rajasic tendencies helps to create a more principled energetic personality.

*சுலோகம் 28: கட்டுப்படுத்தப்படாத மனமும், புலன்களும் உடையவனும், அறிவு முதிர்ச்சி அடையாதவனும், கர்வமுடையவனும், வஞ்சகனும், பிறருடைய வாழ்க்கையைக் கெடுப்பவனும், கவலை கொண்டவனும், சோம்பேறியும், காலம் கடத்துபவனுமான கர்த்தா தாமஸன்என்று கூறப்படுகிறான்.*

அடக்கமும், ஒடுக்கமும், சாதனமும் (சாதனம் என்பது இவ்விடத்தில் தொடர்ந்து செய்யும் முயற்சியைக் குறிக்கும்.) உடைய மனது யோகத்துக்கு உரியது.

யோகத்துக்கு ஒவ்வாத மனம் கொண்டவன் அயுக்தன்;
புத்தி வளராதவன் பிராகிருதன்;
வணங்க வேண்டிய இடத்தில் வணங்காதவன் முரடன்;
வேலை செய்ய மனம் இன்றி தன் திறமையை மறைத்துக் கொள்பவன் வஞ்சகன்;
பிறருக்கு இடையில் பகமை வளர்ப்பவன் பழிகாரன்;
செய்யவேண்டியதை செய்யாது தாமதிப்பவன், செய்யாது இருப்பவன் சோம்பேறி;

இப்படிப்பட்டவர்கள் தாமச (தமோ) குணம் கொண்டவர்கள்.

Most people who do not succeed in life are steeped in the dark tamasic quality. They blame the world and everybody but themselves as the cause of their failure and misery; they never find fault with their own indolence, procrastination, unsociable conduct, restlessness, insincerity, selfishness, and maliciousness as the causes of their affliction. Therefore, they are always depressed because they do not recognize and remove the true causes of their unhappiness.

The deeply unhappy tamasic individual should try first to become rajasic, active, but with a noble purpose. It is better to work in harmony with God’s divine activities than for selfish motives; but even a depraved businessman, because of his activity, has a better chance for salvation than the physically and mentally ossified tamasic man.

Company is stronger than will power. Both tamasic and rajasic persons should seek the influence of higher types, preferably sattvic beings who are steeped in God-realization. A wrestler who works out with a stronger combatant increases his strength; weak tamasic and rajasic types likewise should associate with spiritually stronger sattvic individuals.

Environment is also influential; it creates the desire to become either good or evil. A man has free choice to select a good or evil environment or action before he forms habits. But after a specific environment has instilled in him the desire to follow a good or bad habit, he usually loses his free will: a good habit compels a man to be good and an evil habit compels him to do wrong; thus he helplessly gravitates toward a corresponding environment.

Outer environment incites the inner as well as the outer behavior of man. Thus, the creation of a strong inner character is of paramount importance, so that it can then remain unaffected by, or even change, adverse outer influences.

*சுலோகம் 29: அர்ஜுனா! இப்பொழுது நீ முக்குணங்களுக்கேற்பவே புத்திக்கும் மனஉறுதிக்கும் ஏற்படும் மூன்றுவிதமான பாகுபாட்டை முழுமையாகவும் தனித்தனியாகவும் நான் கூறக்கேள்.*

*சுலோகம் 30: அர்ஜுனா! எந்த புத்தி, பிரவிருத்தி- நிவிருத்தி மார்க்கத்தையும், செய்யத் தகுந்தது- செய்யத்தகாதது என்பதையும், பயம்-பயமின்மையையும், தளை-மோட்சத்தையும் உண்மையாக அறிகிறதோ, அந்த புத்தி சாத்விகமானது.*

ஆத்மாவின் மேன்மையை அடைய விரும்புபவன் தன் புத்தியை ஸாத்விகமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

உலகத்தில் ஜீவனைப்பந்தப்படுத்தி பிறப்பு இறப்பை பெருக்கிக் கொண்டு போகும் கர்மம் பிரவிருத்தி;
மோட்சத்துக்கு உரிய கர்மம் நிவிருத்தி;

அஞ்சுவது அஞ்சாமை பேதமை;
நல்லதைச் செய்யும் துணிச்சல் பயமின்மை;

கர்ம வினைப்படுவது தளை;
கர்மயோகம் என்பது மோட்சம் என்ற பொருளில் இங்கு சொல்லப்படுகின்றன.

WHEN INTELLIGENCE  ( BUDDHI) and fortitude ( dhriti) are properly developed, imbued with the uplifting sattva quality, man finds his life fully under his control. With the intelligence unclouded and the courage resolute, the consciousness rises above the limitations of mental frailties and manifests the intuitively perceptive, intrepidly calm state of the soul.

*சுலோகம் 31: பிருதையின் மைந்தனே! மனிதன் எந்த புத்தியினால் தர்மத்தையும் அதர்மத்தையும் செய்யத்தகுந்த காரியத்தையும் செய்யத்தகாத காரியத்தையும் கூட உள்ளபடியன்றி அறிகிறானோ, அந்த புத்தி ராஜஸம் எனப்படும்.*

ராஜச குணத்தவனுக்கு உழைப்பு இருக்கும், அதில் பெருமையும் இருக்கும், ஆனால் நேர்மை இராது. எது செய்யத்தக்கது எது தகாதது என்பதில் அவன் தெளிவற்றவன். பிறர் ஈட்டிய பொருளைத் தான் அடைய தகாத வழியில் முயற்சிப்பான். மறைமுகமாக நல்லன பேசிய அவனைக் கெடுக்கவே முயல்வான். தன்னருகில் இன்னொருவன் அமைதியாக வாழ விட மாட்டான். தீயவழியில் அவன் ஈட்டும் செல்வம் தீய வழியிலேயே அழியும். அவை எல்லாம் ரஜோ குணத்தின் அடிப்படையில் உதித்த அறிவு செய்யும் செயல்களாகும். பாரமார்த்திகத் தொடர்பான பேச்சுகள் எல்லாமே அவனுக்குக் கசக்கும். இது ராஜஸ புத்தி.

THE MAN WHOSE INTELLECT IS IDENTIFIED with the unthinking mechanism of rajasic activity becomes mentally confused and does not distinguish between God-reminding religious duties and materially absorbing irreligious activities. Such a beclouded mentality heedlessly intermixes righteousness and unrighteousness. Lacking clarity of vision, and blindly performing actions without discrimination, the ordinary gross materialist constantly stumbles into the pit of worries and disillusionment. Being thus the frequent recipient of pain, the rajasic intelligence is full of distrust and doubt, and consequently builds up a defense of self-assertiveness—the stronghold of the passionate ego.

*சுலோகம் 32: அர்ஜுனா! எந்த புத்தி தமோகுணத்தினால் சூழப்பட்டு அதர்மத்தைத் தர்மம் என்றும், எல்லாப் பொருட்களியும் அவற்றின் உண்மைத் தன்மைக்கு மாறாகவும் நினைக்கிறதோ, அந்த புத்தி தாமஸமானது.*

நல்லனவற்றைத் தீயனவாகவும், தீயனவற்றை நல்லனவாகவும் நினைப்பதே விபரீத புத்தி. இது தாமஸ புத்தியின் விளைவால் ஏற்படுகிறது.

‘தெய்வம் இகழேல்’, கடவுளை நம்புவது, தெய்வ கடாக்ஷத்தை விரும்புவது, தாய், தந்தையரை நேசிப்பது, அவர்களுக்குப் பணிவிடை செய்வது, ஆசார்யபக்தி, ஸத்ஸங்கச் சேர்க்கை, மனத்தில் உறுதி, பொறுமை, மனவடக்கம், புலனடக்கம், உள்ளும் புறமும் தூய்மையாய் இருப்பது, நல்லறிவு, நற்கல்வி, ஸத்யம், இறைவழிபாடு, கோபமின்மை, பெரியோர் கட்டளைக்குப் பணிதல், அவற்றை நிறைவேற்றல், சிற்றின்பக் கட்டுப்பாடு, புலனடக்கம், தீயோரின் துர்ச்சேர்க்கைக்கு இணங்காமை, பரோபகார சிந்தனையுடனிருத்தல், சாஸ்த்ரங்களை மதித்துப் பேணுதல், இவற்றைத் தருவது ஸாத்விக புத்தி. இந்த தர்மங்களை அதர்மங்கள் என நினைப்பதுதான்; தர்மத்தை அதர்மமென்பதாகும்.

உண்மைக்கு மாறாக எதையும் முடிவு செய்தல் தாமஸபுத்தியாகும். இது மனிதனைக் கீழ்நிலையில் தள்ளும். தாமஸ புத்தி தீமையையே தரும்.

PERSONS WHO DO NOT FOLLOW EVEN the regular organized path of material life led by those of rajasic temperament, but indulge instead in extremes of indolent and evil conduct, are abnormal individuals impelled by a tamasic intelligence. Their intellect is eclipsed by the mental darkness of ignorance and plagued by its resultant misery. Such extremists make materialistic, irreligious living their religion. As they see nothing unvirtuous in their behavior, lazy and evil ways become second nature to them. They indulge in overeating, oversexuality, and excesses in all harmful habits. Leading an unnatural existence, they have perverted opinions and modes of living, and are irresponsible in their whole manner of thinking, willing, and behaving.

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.

**

*உதவி*:
(1) பரமஹம்ச யோகானந்தாவின் “GOD TALKS WITH ARJUNA” (2) சுவாமி சித்பவானந்தரின் “பகவத்கீதை” உரை; (3) ஸ்ரீராமகிருஷ்ணமடம் – பகவத்கீதை பொழிப்புரை – ஸ்ரீ அண்ணா (4) திருக்குறள், (5) புலவர் சீனி கிருஷ்ணசாமி அவர்களின் “கீதோதயம்”

Leave a comment