மனிதனும் விலங்கும்

மனிதனும் விலங்கும் மனிதனுக்கும் பரிணாம வளர்ச்சியில் குறைந்ததென நாம் கருதும் விலங்குக்கும் அடிப்படை வேற்றுமை உடல் அமைப்பிலோ தோற்றத்திலோ இல்லை. அடிப்படை வேற்றுமை மன அளவில் உள்ளது. சிந்திக்கத் தெரிந்துவிட்ட மனம் கொண்டுள்ள மனிதன் பார்ப்பது மட்டுமின்றி, படிக்கவும், விவரிக்கவும் அறிந்து கொண்டுள்ளான். அவன் தனது ஐம்புலன்களுக்கு அப்பாலும் பார்க்கிறான். அவன் அறிவு, புலன் நுகர்ச்சியில் மட்டும் கட்டுண்டு இருக்கவில்லை. வாழ்க்கையின் ஆழ்ந்த புதிர்களையும் இயற்கையின் அதிசயங்களையும் பார்த்து வியந்து சிந்தித்து அந்த புதிர்களை அவிழ்க்க முயல்கிறான். … Continue reading மனிதனும் விலங்கும்

Advertisements

பெரிய பலூனா சின்ன பலூனா ?

பெரிய பலூனா சின்ன பலூனா ? **************************************** வாழ்க்கை என்பது ஒரு கேள்வியானால் பதில் சொல்வது நாம்தானே. நினைத்ததைச் செய்வது – அதுதான் சுதந்திரம் என்ற வார்த்தையின் பொருள். ‘சு’ என்றால் சுயமான, ‘தந்திரம்’ என்றால் செயல் என்று பொருள். இந்தச் சொல் ‘நரியின் தந்திரம்’ போன்ற சொல்லில் வருவது அல்ல. சிலவற்றை நாம் சில கோணங்களில் மட்டும் பார்த்துப் பழகிவிடும்போது சில சொற்கள் கூட சிறைவாய்ப் பட்டு, நசுங்கி, மெலிந்து, தன் முழுப் பொருளை உணர்த்தும் … Continue reading பெரிய பலூனா சின்ன பலூனா ?

உறுப்பு தானம்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு உடல் உறுப்புகள் கொடை அல்லது உடல் உறுப்புகள் தானம் என்பது நோயுற்று உடலுறுப்பு பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மற்றொருவர் அந்த உடல் உறுப்பைத் தானமாக அளிப்பதாகும். இதை, ஒருவருடைய உடல் உறுப்புகளை இறந்த பின்னரும் வாழும் வாழ்க்கையைத் தருவது உடலுறுப்பு தானம் என்று சிறப்பித்துக் கூறுகின்றனர். உடலுறுப்புகளைத் தானமாகக் கொடுப்பது மதக் கோட்பாடுகளை மீறிய செயல் என்ற நிலை தற்போது மாறி வருகிறது. இருக்கும் வரை இரத்த தானமும், … Continue reading உறுப்பு தானம்

‪‎உள்ளத்தை உருக்கிய வரலாற்றுக் கதை‬

‪உள்ளத்தை_உருக்கிய_வரலாற்றுக்_கதை‬ அண்மையில் படித்தது எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இன்னமும் மீளமுடியாமல் செய்துவிட்டது. படித்ததை அப்படியே மாற்றாமல், சுருக்காமல் தருகிறேன், அதே தாக்கம் படிப்பவருக்கும் கிடைப்பதற்காக: (தொடர்ச்சியாக படிக்க இயலாதவர் விட்டு விட்டு சிறிது சிறிதாகப் படிக்க வேண்டுகிறேன்.) ‪#‎மனுநீதிச்சோழன்‬ ‪#‎ஆன்_கன்றும்_கோன்_கன்றும்‬ அறம் பொருள் இன்பங்களை நல்ல முறையில் நடாத்திய மனுநீதிச் சோழனுக்கு உலகெல்லாம் போற்றும்படியான சிங்கக்குட்டி போன்ற மைந்தன் பிறந்தான். (திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த) மனுநீதிச் சோழ மன்னன், (திருவாரூரில் குடிகொண்டிருந்த சிவபெருமானான)‪#‎வீதிவிடங்கனை‬ வழிபட்டுப் … Continue reading ‪‎உள்ளத்தை உருக்கிய வரலாற்றுக் கதை‬