பெரிய பலூனா சின்ன பலூனா ? – 5 (இறுதி)

பெரிய பலூனா சின்ன பலூனா ? – 5 (இறுதி) © ந கணபதி சுப்ரமணியன் இப்போது தாங்கள் தயாரித்துள்ள பட்டியலை எடுங்கள். நீங்கள் தரம் வாரியாகப் பிரித்த  தவறுகள், தவறல்லாதவை, மற்றும் உயர்ந்தவை மூன்றிலும் நீங்கள் இட்டுள்ள கருத்துக்களையும் திருக்குறள் கூறுவதையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இந்தக் கேள்விகளுக்கு உண்மையாக நேர்மையாக பதிலளிக்க முயலுங்கள்: திருவள்ளுவர் சொல்லியுள்ள கருத்துக்களை நீங்கள் ஆராய்ச்சி செய்தவர்கள் கொண்டுள்ளனரா ? அப்படிக் கொண்டுள்ளவர் அதனால் எந்த நிலையை அடைந்திருக்கின்றார்? இப்போது தாங்கள் … Continue reading பெரிய பலூனா சின்ன பலூனா ? – 5 (இறுதி)

பெரிய பலூனா சின்ன பலூனா ? – 4

பெரிய பலூனா சின்ன பலூனா ? - 4 © ந கணபதி சுப்ரமணியன் நீங்கள் கேட்கலாம். படிக்க, கேட்க, சொல்ல சுவைதான். இன்றைய கால கட்டத்தில் எடுபடுமா என்று கேட்கலாம். ஆனாலும் உலகில் வெற்றி அடைந்த பலரையும் பாருங்கள். இப்போது வெற்றி அடைகிறவர்களையும் பாருங்கள். அவர்களின் வாழ்வில் அவர்கள் அடக்கத்தைக் கைக் கொண்டவர் என்பது அவரது வரலாற்றை அறிந்தால் நமக்குப் புரியும். ஆகையால் நாம் நம் சுதந்திரத்தை விரும்பிக் குறைத்துக் கொள்ளும்போதுதான் சாதனையும், உயர்வும், மகிழ்ச்சியும், … Continue reading பெரிய பலூனா சின்ன பலூனா ? – 4

பெரிய பலூனா சின்ன பலூனா ? – 3

பெரிய பலூனா சின்ன பலூனா ? - 3 © ந கணபதி சுப்ரமணியன் கற்பனை செய்த இவை வெறும் கற்பனையல்ல. இது தினம் தினம் நம் வாழ்வில் நிகழ்கிறது.  இந்த அளவு நெருக்கம் ஏற்படும்போது நாம் உணர்வதுதான் ஆங்கிலத்தில் lack of personal space எனப்படுகிறது.  இந்த  personal space என்ற ‘சொந்த இடம்’ குறையக் குறைய நம் வாழ்வில் நிறைய உறவுகளை தலைகீழாக மாற்றிவிட்டு, நம் வாழ்க்கை பயணத்தையும் திசைதிருப்பி விடுகிறது. அன்பு செய்தவர் … Continue reading பெரிய பலூனா சின்ன பலூனா ? – 3

பெரிய பலூனா சின்ன பலூனா ? – 2

பெரிய பலூனா சின்ன பலூனா ? - 2 © ந கணபதி சுப்ரமணியன் முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் என்று சொல்லும்போதுதான் என் சுதந்திரத்தைப் பற்றிய பேச்சும் அளவு பற்றி எண்ணமும் வருகிறது. ஏன் ? நான் தனியாக இருக்கும்போது எனக்கு சுதந்திரத்தைப் பற்றி எந்த சிந்தனையும் இல்லை. ஆனால் நீங்களும் என்னருகில் வரும்போது  இதன் அளவுபற்றிய சிந்தனை ஏற்படுகிறது. என்னைப் போன்ற உங்களுக்கும் இந்த சுதந்திரம் இருப்பதால். என் சுதந்திரம் என்பது ஒரு … Continue reading பெரிய பலூனா சின்ன பலூனா ? – 2

பெரிய பலூனா சின்ன பலூனா ? – 1

பெரிய பலூனா சின்ன பலூனா ? - 1 © ந கணபதி சுப்ரமணியன் வாழ்க்கை என்பது ஒரு கேள்வியானால் பதில் சொல்வது நாம்தானே. நினைத்ததைச் செய்வது – அதுதான் சுதந்திரம் என்ற வார்த்தையின் பொருள். ‘சு’ என்றால் சுயமான, ‘தந்திரம்’ என்றால் செயல் என்று பொருள். இந்தச் சொல் ‘நரியின் தந்திரம்’ போன்ற சொல்லில் வருவது அல்ல. சிலவற்றை நாம் சில கோணங்களில் மட்டும் பார்த்துப் பழகி விடும்போது சில சொற்கள் கூட சிறைவாய்ப் பட்டு, … Continue reading பெரிய பலூனா சின்ன பலூனா ? – 1

ஒரு பதிவும் அதன் தாக்கமும்.

என் நெடுநாளைய நண்பர், from 1985. தொல்லியல் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். தமிழ் நாகரீகம் மண்ணில் விட்டுப் போன அடையாளங்களை தேடித் தேடி அலைந்து பல்வேறு எதிர்ப்புக்களையும் கடந்து தொல்லியல் சார்ந்த பல புதிய உண்மைகளை வெளிக்கொணர்பவர். தமிழ் நாட்டு, இந்திய ஆராய்ச்சி உலகில் தன்னை ஜாம்பவானாகக் கருதிக்கொள்ளும் இத்துறையின் அமைப்புகளில் பணிபுரியும் சிலர், அமைப்புசாராது தனிமையாக, அரசு செலவு செய்யாத (அதாவது அரசியல் சாயம் இல்லாத) பலரையும் ஒடுக்கி இவர்களின் வளர்ச்சியைத் தடுக்கிறார்கள். இவர் கண்டு … Continue reading ஒரு பதிவும் அதன் தாக்கமும்.

வாழ்க்கை

வாழ்க்கை என்பது போர்கள், தவறுகள், திருத்தங்கள் இவற்றின் ஒரு தொடர்.  …வாழ்க்கையின் ரகசியம் பலவகை அனுபவங்களிலிருந்து அறிவு பெறுவதே; போகமல்ல. ஆனால் அந்தோ ! உண்மையான அறிவு கிடைக்கத் தொடங்கும் போது நமக்கு மறு உலகிலிருந்து அழைப்பு வந்துவிடுகிறது. … நாம் செய்கின்ற பணிகளின்மீது ஒரு புயற்காற்று அடிப்பது நல்லது, அதனால் சூழ்நிலை தூயதாகிறது; நமக்கும் பொருட்கள் அனைத்தின் உண்மை தெரிய ஆரம்பிக்கிறது. உலகில் சிலர் இருக்கிறார்கள் --– ஏன், நிறையவே இருக்கிறார்கள் --- அவர்கள் தங்களுக்கு … Continue reading வாழ்க்கை

எனக்கு அந்த க்ளாஸில்தான் டீ வேண்டும்

#வாழ்க்கைப்_பாடம்... அந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், ஈ மெயில் … Continue reading எனக்கு அந்த க்ளாஸில்தான் டீ வேண்டும்

நவீன முதியோர் இல்லம்

🌷 நவீன முதியோர் இல்லம் 🌷 நவீன #முதியோர் இல்லம் கொடுத்ததும் கிடைத்ததும்!! மிகவும் வசதியான முதியோர் இல்லம் ‘அது. கணவன், மனைவிக்கென்று தனித்தனியாக அறைகள், கட்டில், சோபா என்ற எல்லா வசதிகளும் இருந்தது. அறைக்கே வந்து உணவு பரிமாறும் வசதியும் உண்டு. பின்னே ஒருத்தருக்கு 6 லட்சம் ரூபாய் என்று இரண்டு பேருக்கும் 12 லட்சம் ரூபாய் டெபாசிட்டும் அறைக்கே உணவு வரும் வகையில் ஏற்பாடு செய்து அதற்காக மாதம் 6000 ரூபாய் என்று 12000 … Continue reading நவீன முதியோர் இல்லம்