நன்னடத்தையின் ரகசியம்

இன்று எண்ணிக்கையில் உலகில் நல்லவர்கள் பெருகி வருகிறார்கள். அவர்கள் தங்களை இடதுசாரி என்றோ, நாத்திகர் என்றோ கூறுவதில்லை. ஆனால் இவர்கள் நாடுவது பலிபீடத்திற்குப் பதிலாக ஆய்வுக்கூடம், ஆலயத்திற்குப் பதிலாக அணுஆலை, தியானத்திற்குப் பதிலாகப் பொதுநலம் பேணல், மதகோட்பாட்டிற்குப் பதிலாக தொழில்நுட்ப அறிவியல், ஜபம் அல்லது வேறு ஆன்மீகச் சாதனைகளுக்குப் பதிலாகப் புள்ளியியல் போன்றவற்றையே. ஒழுக்கமுள்ள வாழ்க்கையை ஏற்றுக்கொள்வதில் நம்பிக்கை இருப்பினும் கடவுளின் தேவை அவசியம் என்று உணராதவர்கள் அதற்காக இறையார்ந்த அறிவின் தேவையை உணர்வதில்லை. ஒழுக்கமுறையை ஏற்பர், … Continue reading நன்னடத்தையின் ரகசியம்

உங்கள் தாய்

உங்கள் தாய் மகாபாரதம் கூறும் உண்மைகள்: அம்மா என்பவர் இருக்கும் வரை யாரும் அநாதை ஆவதில்லை – மகாபாரதம் சாந்தி பர்வம் தாய் இருக்கும்வரை மனிதனுக்கு கவலை என்பதே இல்லை. செல்வம் அனைத்தும் அழிந்த பின்னும் அம்மா என்றழைக்க வீட்டில் தாய் இருந்தால் போதும். அன்னம் அளிக்கும் தெய்வம் இருப்பதாகப் பொருள். தாயை விடப் பெரிய நிழல் ஏதுமில்லை. தாயை விடச் சிறந்த அடைக்கலம் வேறு எவரும் இலர். தாயைப் போல நம்மைக் காப்பவர் வேறு எவரும் … Continue reading உங்கள் தாய்

இலக்கும் தன்னம்பிக்கையும்

நம் முன்னேற்றப் பாதையில் நம் இலக்கு என்பது ஒரு வித்து போன்றது. அது முளைத்து வந்து  இலை விட்டு, செடியாகி, மரமாகி, பூத்துப் பின் மலர்ந்து மணம் பரப்பி, காய்த்துக் கனியாகி வாழ்க்கையை இனிமையாக்க தன்னம்பிக்கையே ஆதவனின் ஒளியாகவும், பூமித்தாயின் மண்ணாகவும், உரமாகவும், இயற்கையின் காற்றாகவும், நீராகவும் அமையும். எனவே தன்னம்பிக்கையை ஒருகாலும் இழக்கக்கூடாது. சோதனையான காலங்களில், நம் இலக்கையும் அதை அடைவதால் நாம் எட்டப்போகும் உயரத்தையும் அது தரும் மனமகிழ்ச்சியையும் நினத்து, ஓடிக்கொண்டிருக்கும் குதிரை எவ்வாறு … Continue reading இலக்கும் தன்னம்பிக்கையும்

அன்பைத் தேடியவர்

அன்புக்காக ஏங்கிய ஒரு முதியவரைப் பற்றி, ஒரு பார்வை, Dr William Collinge எழுதிய Subtle Energy எனும் ஆங்கில நூலிலிருந்து: அன்பைத் தேடியவர்: “மேகிக்கு 81 வயது. அவர் முதியமனிதர்கள் மட்டும் வாழும் முதியோர் பகுதியில் வசிக்கிறார். அவரால் இன்னும் தன் உணவைத் தானே சமைத்துக் கொள்ளவும், நடமாடவும் முடிகிறது. அண்மையில் நடந்த மருத்துவப் பரிசோதனையில், அவரது இதயத்தைப் பரிசோதித்த மருத்துவர் ஆச்சரியப்பட வேண்டியதாயிற்று. இதுவரை அந்த முதியவரை பத்துமுறை அவர் பரிசோதனை செய்துள்ளார். அவரின் … Continue reading அன்பைத் தேடியவர்

உங்கள் இதயத்தை வருடிக் கொடுங்களேன் !

உங்கள் இதயத்தை வருடிக் கொடுங்களேன் ! நம் நாட்டில் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை பெரு நகரங்களில் வேகமாக வளர்ந்து  கொண்டிருக்கிறது. சிறு நகரங்களில் அவ்வளவு வேகம் இல்லை. ஆனாலும் பல நகரங்களில், புற நகர்ப்பகுதியில் (extensions) பார்த்தால், சொந்த வீடுகளே, தாங்கள் வாழும் முதியோர் இல்லமாய் மாறிவிட்டிருக்கின்றன. இது ஒரு துயரமான “முன்னேற்றம்.” காற்றுக்கும், நீருக்கும் அடுத்தபடியாக உலகிலேயே மிக முக்கியமான ஒன்று உண்டென்றால் அது அன்புதான்.  மனிதர் வாழ்விலும் அதுவே மிக முக்கியமான தேவை. இதை … Continue reading உங்கள் இதயத்தை வருடிக் கொடுங்களேன் !

சிறந்த அழகும் மற்றதும்

சிறந்த அழகும் மற்றதும் ஓர் ஓவியன் உலகிலேயே மிக அழகான பெண்ணைச் சித்திரம் வரைய ஆசைப்பட்டானாம். அந்தக் காலத்தில் உலகிலே மிக அழகி என்று பேசப்பட்ட ஒருத்தியைச் சந்தித்து அவளைப் படம் வரைந்திருக்கிறான். சில ஆண்டுகள் கழித்து உலகிலே மிக அசிங்கமான ஒருத்தியைப் படம் வரைய வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது அவனுக்கு. இது விசித்திர ஆசைதான். இதற்காக மிகமிக அசிங்கமான பெண்ணைத் தேடி அலைந்திருக்கிறான். அப்போது சிறையில் ஒரு பெண்ணைச் சந்தித்திருக்கிறான் அந்த ஓவியன். அவளையும் … Continue reading சிறந்த அழகும் மற்றதும்

தாய்

தாய் ********  தாய் என்ற தெய்வத்தையும் தமிழ் என்ற தாயையும் பிடித்தவர், தாயைப் பிரிந்த தனயனான சித்தர் பட்டினத்தார் பாடியதைப் படித்து, உள்ளமெனும் கோவிலிலே உயர்வான இடம் தந்து, உங்கள் தாயை வணங்குவீர். கைக்குட்டையுடன் இதைப் படிக்கவும், இன்றேல் தங்கள் கணினியோ அல்லது தங்கள் எழினியோ ஈரமாகி விடும். *************************************************************************************  தாயின் பிரிவைத் தாங்காத பட்டினத்தார் புலம்பி அழற்றியது ----------------------------------------------------------------------------------   ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு கைப்புறத்தில் … Continue reading தாய்

தாயின் காலடியே சொர்க்கம்!

தாயின் காலடியே சொர்க்கம்!   22.04.05ல் ஆனந்த விகடனில் வெளியான அம்மா பற்றிய ஒரு கட்டுரை... பிரபஞ்சத்தைப் படைத்தளித்த பரம்பொருள் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் இருக்க முடியாததால்தான், ஒவ்வோர் உயிருக்கும் ஒரு தாயைத் தந்தது. தாயும் தெய்வமும் தனித்தனி வடிவங்கள் இல்லை! கடவுளின் படைப்பில் தன்னலத்தின் நிழல்கூடப் படாதது, தாயின் படைப்பு ஒன்றுதான். இதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால், சமீபத்தில் தான் பெற்ற விழியற்ற இரு பிள்ளைகள் பார்வையைப் பெறுவதற்காகத் தன் விழிகளைத் தரும் நோக்கில் தற்கொலை செய்துகொண்ட … Continue reading தாயின் காலடியே சொர்க்கம்!

இதயத்தின் ரசவாதம்

நமது அன்பு செலுத்தும் சக்தியை அதிகரித்துக் கொள்ள ------------------------------------------------------------------------------- உலக நோக்குடன் திறந்த மனத்துடன் எதற்கும் தயாராக இருக்கும் ஆன்மாக்களே மிக அழகான ஆன்மாக்கள் - மாண்டேய்ன் (Montaigne) ====================================================== அந்த அதிகாலை வேளையில், உறைவிடம் இல்லாத இந்தியாவின் ஏழைகள் உறங்கிக் கொண்டிருந்த தெருக்களின் வழியே, கொல்கத்தா புகைவண்டி நிலையத்திற்கு அன்னை தெரசா அவர்களை வழியனுப்ப, அவருடன் வந்துகொண்டிருந்த மால்கம் முக்கரிட்ஜ் கூறுவது: “அன்னையை புகைவண்டியில் ஏற்றிவிட்டுத் திரும்பும்போது, இந்த உலகின் எல்லா அழகையும் மகிழ்ச்சியையும் நான் … Continue reading இதயத்தின் ரசவாதம்