சேவை

சேவை மனிதனாகப் பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு. எல்லா பாக்கியங்களுக்கும் மேலான பாக்கியம் பிறருக்குச் சேவை செய்வதே. ‘சேவை’ என்று தெரியாமலே அவரவரும் தமது குடும்பத்துக்காகச் சேவை செய்கிறோம். அதோடு நமக்குச் சம்பந்தமில்லாத குடும்பத்துக்கு, ஊருக்கு, நாட்டுக்கு, சர்வ தேசத்துக்கும் நம்மால் முடிந்த சேவை செய்யவேண்டும் என்கிறேன். நமக்கு எத்தனையோ கஷ்டங்கள், உத்தியோகத்தில் தொந்தரவு, சாப்பாட்டுக்கு அவஸ்தை, வீட்டுக் கவலை – இத்யாதி இருக்கின்றன. நாம் சொந்தக் கஷ்டத்துக்கு நடுவில், சமூக சேவை வேறா என்று எண்ணக்கூடாது. … Continue reading சேவை

தேவை

தேவை தேவை என்று ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு விட்டோமானால் அப்புறம் அதைப் பூர்த்தி செய்து கொள்ளும் ஓயாத பிரயாசை ஏற்படத்தான் செய்கிறது. இது திருப்திக்கும் சாந்திக்கும் பங்கம்தான். போதுமென்ற மனமே பொன்னானதிருப்தியைத் தருவது. சமீப காலம்வரை படாடோப (Luxury) வஸ்துக்களாக இருந்த ரேடியோ, ஃபான் மாதிரியானவற்றைக்கூட இப்போதே அவசியமாக்கிக் கொண்டு (necessaries), இவை கிடைக்கவில்லையே என்று தாபப்படுவதும், அதிருப்திப்படுவதுமாக இருக்கிறார்கள். தேவையை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகப்படுத்திக் கொள்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு சாந்தி குறையும்; சௌக்கியம் குறையும்; நிம்மதியும், … Continue reading தேவை

அன்பு எங்கே கிடைக்கிறது ?

அன்பு எங்கே கிடைக்கிறது ? காற்றுக்கும், நீருக்கும் அடுத்தபடியாக உலகிலேயே மிக முக்கியமான ஒன்று உண்டென்றால் அது அன்புதான். மனிதர் வாழ்விலும் அதுவே மிக முக்கியமான தேவை. இதை நாம் ஒருவரிடத்தில் ஒருவர் பரிமாறிக் கொள்ளுவதும் மிக முக்கியம். ஆனால் இது மிகவும் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு ஒரு முக்கியமான காரணம் பெற்றோரிடத்தில் பிள்ளைகள் வைக்கும் அன்பு குறைவதுதான். அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. “திரவியம் தேடு”வதற்காக அவர்கள் ஊர் கடந்து, மாநிலம் கடந்து, நாடு … Continue reading அன்பு எங்கே கிடைக்கிறது ?

யாருக்கு கண் தெரியவில்லை ?

*யாருக்கு கண் தெரியவில்லை ? * உண்மை நிகழ்ச்சி – கணபதி சுப்ரமணியன் ************* என் நண்பர் கண்ணன் என் கல்லூரித்தோழன், பின்னர் இந்தியன் வங்கியிலும் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். அவர் திருமணத்திற்கு நானும், என் திருமணத்திற்கு அவரும்  சென்று பங்கேற்றோம். நான் 1976இலும் கண்ணன் அனேகமாக 1978இலும் இந்தியன் வங்கியில் சேர்ந்தாலும், கல்லூரிக்குப்பின் தொடர்பு விட்டுப்போயிற்று. நான் 1990இல் இரண்டாம் முறை வட இந்தியா பணிக்குப்பின் திரும்பிவந்தபோது அவர் இந்தியன் வங்கியில்தான் இருக்கிறார் என்று அறிந்தேன். இருப்பினும் எந்தக்கிளையில் … Continue reading யாருக்கு கண் தெரியவில்லை ?

இன்னொரு பக்கத்து உண்மைகள்

🌹🕉 Picture Courtesy: ISKCON தன் மகன் பரதன் உள்பட அனைவராலும் வெறுத்தொதுக்கப்பட்டு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பதினான்கு வருடங்கள் மனத்துயரை அனுபவித்தவள் கைகேயி. இறுதியில் அனுமன் வாயிலாக அவளின் தியாக உள்ளம் வெளிப்படுகிறது. இராவண வதம் முடிந்து சீதை, லக்ஷ்மணர், வானர, ராக்ஷசப் படைகளுடனும் அவர்களின் குடும்பத்தினருடனும் ஸ்ரீஇராமர் புஷ்பக விமானத்தில் அயோத்திக்குத் திரும்பும் வழியில் பரத்வாஜ மஹாமுனியின் அழைப்பை ஏற்று அவருக்கு ஏற்கெனவே வாக்களித்தபடி இரவு அங்கு தங்கினார். விடிந்தால் பதினான்கு வருடங்கள் முடிந்த … Continue reading இன்னொரு பக்கத்து உண்மைகள்

படகில் ஓட்டை சொல்ல மறந்து போனேனே

பிரதிபலன் பாராது உதவுவோம் .!! படகு ஒன்றுக்கு பெயின்ட் அடிப்பதற்கான பொறுப்பு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் ப்ரஷ், பெயின்ட் என்பவற்றைக் கொண்டு வந்து படகு உரிமையாளர் வேண்டிக் கொண்டதைப் போலவே பிரகாசமான சிவப்பு நிறத்தில் பெயின்ட் அடித்துக் கொடுத்தார். பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் படகில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதை அவதானித்து, உடனடியாகவே அந்த ஓட்டையை சரிவர அடைத்தும் விட்டார். வேலை முடிந்ததும் அவர் தனக்குரிய கூலியை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார். அடுத்த நாள் … Continue reading படகில் ஓட்டை சொல்ல மறந்து போனேனே

உயிரும் மூச்சும் வாழ்வும்

நன்றி: திரு Chatta Venkatesh அவர்களின் முகநூல் பதிவு கால் மாற்றும் கலை ! ************************ கால் மாற்றும் கலையினைப் பற்றி இன்று நம் சித்தர்களின் குரல் முகபக்கத்தில் இன்று விரிவாக தெரிந்துக்கொள்வோம். இந்தக் காலும் கலையும் பற்றி நம்பெருமானார் வள்ளலார் கூறுவது யாது? ஒரிடத்தில் 'கால் மேல் கால் போடவும் பயந்தேன்' என்று காலைப்பற்றியும், 'கலையுரைத்த கற்பனையெலாம் நிலை என கொண்டாடும் உலகீர்' என்று கலையைப் பற்றியும் பாடியிருப்பதைக் காண்கிறோம். ஆனால், நாம் இங்கே பார்க்கப்போவது … Continue reading உயிரும் மூச்சும் வாழ்வும்

நாம் பணம் கொடுத்து வாங்கிய உணவையும் வீணாக்க நமக்கு உரிமை இல்லை

"வீணாக்காதீர்கள்..’’ உலகில் உள்ள பணக்கார நாடுகளில் ஒன்று ஜெர்மனி. அந்த நாட்டிற்கு புதிதாக சென்ற நம் இந்தியர் ஒருவர் அங்குள்ள ஓட்டல் ஒன்றுக்கு தனது குடும்பத்தோடு இரவு உணவு உண்பதற்காக சென்றார். ஏகப்பட்ட அயிடங்களுக்கு ஆர்டர் கொடுத்தார். குழந்தைகளும் மனைவியும் சரியாய் சாப்பிடாததால் பாதிக்கு மேல் மீந்துவிட்டன. நம் இந்தியர் பில் கேட்டார்.சிறிது நேரத்தில் பரிமாறியவர் பில்லைக் கொண்டு வந்து கொடுத்தார். பில்லை பார்த்ததும் நம் இந்தியருக்கு அதிர்ச்சி காரணம் 500-மார்க்குக்கு பதிலாக 1000-மார்க் என்று இருந்தது. … Continue reading நாம் பணம் கொடுத்து வாங்கிய உணவையும் வீணாக்க நமக்கு உரிமை இல்லை

சும்மா இருக்கும் அம்மா

(வாட்சப்பில் அனுப்பிய நண்பருக்கு நன்றி.) "வீட்ல சும்மா தான இருக்க" எல்லோரும் கூறுகின்ற இந்த வார்த்தையை இப்பொழுது குழந்தைகள் கூட சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.. " நீ சும்மா தான மா இருக்க.. இது செஞ்சி குடுத்திடு மா..." 'எல்லாரும் சொல்றது போல ஒரு நாள் சும்மா இருந்தா என்ன'ன்னு தோனுச்சு. வீட்டில் உள்ள அனைவரும் கிளம்பிட்டாங்க. அவரவர்க்கு தேவையான உணவுகளை சமைத்து கொடுத்து வீட்டேன். இன்றைக்கு சும்மா இருப்போம் என்ன தான் ஆகும் பாப்போம். மாலை கணவரும், … Continue reading சும்மா இருக்கும் அம்மா