எனக்கு அந்த க்ளாஸில்தான் டீ வேண்டும்

#வாழ்க்கைப்_பாடம்... அந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், ஈ மெயில் … Continue reading எனக்கு அந்த க்ளாஸில்தான் டீ வேண்டும்

Advertisements

எதுவுமே மிச்சமில்லை — அப்படியா ?

மனப்போக்குகள் உண்மைகளைவிட மிகவும் முக்கியமானவை! . ஐம்பத்திரண்டு வயது நிறைந்த மனிதர் ஒருவர் என்னிடம் ஆலோசனை பெற வந்தார். அவர் மிகவும் மனம் தளர்ந்திருந்தார். அவர் முற்றிலுமாக நம்பிக்கை இழந்திருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. தனக்கு ‘எல்லாம் முடிந்துவிட்டது’ என்று அவர் கூறினார். தன் வாழ்நாளில் அவர் உருவாக்கியிருந்த அனைத்தும் பறிபோய்விட்டதாக அவர் என்னிடம் தெரிவித்தார். “அனைத்துமா?” என்று நான் கேட்டேன். “ஆம், அனைத்தும் பறிபோய்விட்டது,” என்று அவர் மீண்டும் கூறினார். தனக்கு எல்லாம் முடிந்துவிட்டது என்று மீண்டும் … Continue reading எதுவுமே மிச்சமில்லை — அப்படியா ?

வளர்ச்சியை நோக்கி கனவு காண்போம்!

வளர்ச்சியை நோக்கி கனவு காண்போம்! நாம் பிறருக்கு வழிகாட்ட, கொடுத்து உதவ கனவு காண வேண்டும். பிறருக்குக் கொடுப்பதால் வாழ்வில் பல வசதிகள் கிடைக்கப் பெறலாம். மாறாக பிறரை ஏமாற்றியோ, வஞ்சித்தோ இல்லை மோசமான செயல்களினாலோ நம்முடைய வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. அரசியல் பலம், அரசு அதிகார பலம், பண பலம், மற்றும் ஒருவருடைய உயர்ந்த நிலையின் சௌகர்யங்கள் போன்ற எண்ணற்ற விஷயங்கள் மக்களை மிகவும் திமிர் பிடித்தவர்களாக ஆக்கிவிடுகிறது. அவர்கள் இந்த பலம் கொண்டு … Continue reading வளர்ச்சியை நோக்கி கனவு காண்போம்!

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்துவிட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்கத் தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்தப் பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக்கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை தெரிந்தது. நடக்கவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அந்த இடத்திற்கு சென்று விட்டான். அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் … Continue reading யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

உலகத் தலைவர்களை அமைதியில் உறையச் செய்த சிறுமி

குழந்தைகளே பெரியோர்களின்ஆ சிரியர்கள் முதல் பூமிக்கோள உச்சி மாநாடு 1992ம் ஆண்டு ரியோவில் நடைபெற்றபோது, செவெர்ன் குல்லிஸ் சுசுகி (Severn Cullis Suzuki) என்ற 12 வயது சிறுமி உலகத் தலைவர்களிடம் 6 நிமிடங்கள் பேசினார். அச்சிறுமியின் சொற்கள் உலகத் தலைவர்களின் உள்ளங்களில் அம்புகளாய் பாய்ந்தன. 20 ஆண்டுகளுக்கு முன் அச்சிறுமி சொன்ன கசப்பான உண்மைகள் இன்னும் இவ்வுலகில் நம்மை வாட்டி எடுக்கும் கேள்விகளாக ஒலிக்கின்றன. அப்பெண் அந்த உச்சி மாநாட்டில் சொன்னவை உலகில் இன்றும் பேசப்பட்டு … Continue reading உலகத் தலைவர்களை அமைதியில் உறையச் செய்த சிறுமி

இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை மாற்ற வேண்டும்

ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான். அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான். இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம். ஒருநாள் ஒரு கடைக்காரரிடம் இப்படி தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான். முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி … Continue reading இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை மாற்ற வேண்டும்

எங்கே_போய்க்_கொண்டிருக்கிறோம் ???

மறுபதிவு இக்கட்டுரை வாசிப்பது உங்கள் மன அமைதிக்குக் கேடு விளைவிக்கும். எங்கே_போய்க்_கொண்டிருக்கிறோம் ??? குடியரசு நாட்டில் நாம் “குடி”மக்கள் "மது நாட்டுக்கு வீட்டுக்கு கேடு" என்று விளம்பரத்துடன், மதுவை மக்களுக்கு மிக அருகிலேயே கிடைக்கும் வசதிக்காக, நம் அரசாங்கமே முனைந்து அதை வியாபாரம் செய்கிறது. அரசுக்கு உரிமையான எந்த தொழிற்சாலையையும், நிறுவனங்களையும் விட அதிக வேகத்துடன் வளர்ந்து வரும் இத்துறை நம் மக்களை உண்மையில் "குடி"மக்களாக மாற்றியிருக்கிறது. நலிந்த மக்களுக்கு சேவை செய்ய பெரும் நிதி திரட்ட … Continue reading எங்கே_போய்க்_கொண்டிருக்கிறோம் ???

கேட்க ஆளில்லை — ஒரு பருவத்தில் வரம் — ஒரு பருவத்தில் சாபம்

கேட்க ஆளில்லை -- ஒரு பருவத்தில் வரம் -- ஒரு பருவத்தில் சாபம். *************************** குடும்பம் என்பது மூன்று நான்கு தலைமுறைகள் ஒரே வீட்டில் இருந்த காலம் ஒன்றிருந்தது. சில குடும்பங்களில் அங்கத்தினரின் எண்ணிக்கை 100-ஐக்கூடத் தாண்டும். அப்போதும் எப்போதும் அக்குடும்பங்கள் தனிமனித வாழ்வுக்கு அரணாக இருந்தன. இந்த எண்ணிக்கை சுருங்க ஆரம்பித்து, 50 ஆகி, 20 ஆகி, 10 ஆகி, 5 ஆகி, 4 ஆகி, 3 ஆகி, 2 ஆகிப்போனதே! தனிமனிதச் சுதந்திரம் முற்றிலும் … Continue reading கேட்க ஆளில்லை — ஒரு பருவத்தில் வரம் — ஒரு பருவத்தில் சாபம்

வலியை வலிமையாக மாற்றுங்கள்

வலியை வலிமையாக மாற்றுங்கள் *************************************** அழகு, மகிழ்ச்சி, இனிப்பு, உவகை, சாதனை, களிப்பு இவை போன்ற நேர்மறையான சொற்களைப் பற்றி நாம் சிந்திக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் இவை நமக்குள் நல்ல உணர்ச்சியை எற்படுத்துகின்றன. இவைதானே நமக்குப் பிடிக்கின்றன. பின் ஏன் எதிர்மறையான எண்ணங்களும் நமக்கு வருகின்றன? நமக்குப் பிடிக்காவிட்டாலும் ஏன் அவற்றை நாம் கொள்கிறோம்? ‘கனி இருப்பக் காயை’ ஏன் நாம் கொள்கிறோம்? ‘இனிய உளவாக இன்னாத’ உணர்வு ஏன் ஏற்படுகின்றது? உடலில் ஏற்படும் வலி … Continue reading வலியை வலிமையாக மாற்றுங்கள்