விவேக சிந்தாமணி

  விவேக சிந்தாமணி அல்லல்போம்; வல்வினைபோம்; அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம்; போகாத் துயரம்போம் - நல்ல குணமதிக மாம்அருணைக் கோபுரத்துள் மேவும் கணபதியைக் கைதொழுதக் கால். ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம் தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர் கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன் பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழும்தானே. 1. பிள்ளைதான் வயதில் மூத்தால் பிதாவின் சொல் புத்தி கேளான் கள்ளினற் குழலாள் மூத்தால் கணவனைக் … Continue reading விவேக சிந்தாமணி

வாழ்வின் மூன்று படித்தரங்கள்

வாழ்வின் மூன்று படித்தரங்கள் வென்று வாழ்தல், வகுத்து வாழ்தல், வழங்கி வாழ்தல் என்று மூன்று படித்தரங்கள் உயிர்களின் வாழ்க்கையில் வாய்த்திருக்கின்றன. அவைகளுள் வென்று வாழ்தல் (competition) கடைத்தரமானது. விலங்குகளிடத்திலும் விலங்குகள் போன்ற மக்களிடத்தும் அத்தகைய வாழ்க்கை முறையைக் காணலாம். தங்களுக்குத் தருகிற மதிப்பை மற்ற உயிர்களுக்குத் தருவதில்லை. உலகில் உள்ளவைகளையும், உள்ளவர்களையும் ஏதேனும் ஒருவிதத்தில் மடக்கித் தங்கள் நலனுக்காகவும் சுகஜீவனத்துக்காகவும் பயன்படுத்துதல் அவர்களின் குறிக்கோள் ஆகும். அவரவர் வல்லமைக்கு ஏற்றவாறு பிறர்மீது ஆக்கிரமிப்பது அவர்களது இயல்பு. அதனால், … Continue reading வாழ்வின் மூன்று படித்தரங்கள்

கன்பூசியசு

கன்பூசியசு ************** கன்பூசியசு (செப்டெம்பர் 28, கிமு 551 - கிமு 479) ஒரு சீனச் சிந்தனையாளரும், சமூக மெய்யியலாளரும் ஆவார். இவருடைய உபதேசங்களும், மெய்யியலும் சீனா,கொரியா சப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளின் வாழ்வியல் சிந்தனைப் போக்குகளில் ஆழமான செல்வாக்குச் செலுத்தின. இவருடைய மெய்யியல் சிந்தனைகள் தனிமனித, அரச நன்னடத்தை; சமூகத் தொடர்புகள், நீதி,நேர்மை ஆகியவற்றில் சரியாக இருத்தல், ஆகியவற்றை வலியுறுத்தின. சீனாவில் கான் (Han) மரபினரின் காலப் பகுதியில் (கிமு 206 – கிபி 220), … Continue reading கன்பூசியசு

சரியான நவக்கிரக பரிகாரங்கள்

மந்த்ரேஸ்வரர் எழுதிய பலதீபிகையின்படி:  பலதீபிகை குறிப்பிடும் பரிகாரம் வித்யாசமானது. நவகிரகங்கள் பலக் குறைவுக்கு அந்தந்த கிரகங்களை ஸ்தோத்ரபாராயணம் மந்த்ரஜபம் ஹோமம் ப்ரதக்ஷிணம், நமஸ்காரம் போன்ற வழிபாடுகளால் திருப்தி செய்வித்து உபாசித்தல் என்பது ஒருவழி. மற்றொரு வழி அந்தந்த கிரகங்களுக்குண்டான உறவுகளை மதித்துப் போற்றி கௌரவித்து மகிழ்தல் என்பதாகும். மனிதநேய அடிப்படையில் அமைந்துள்ள இந்த வழி மிகவும் சுலபமாகவும், திருஷ்ட (கண்ணுக்குத் தெரியும்) பலன்களையும், அதிருஷ்ட (கண்ணுக்குத் தெரியாத) பலன்களையும் விரைவாகப் பெற்றுத் தருகிறது. இதன் படி, தந்தைக்குரிய … Continue reading சரியான நவக்கிரக பரிகாரங்கள்

ஸ்ரார்த்தம் – விதிமுறைகள் சில – ஸ்ரீ காஞ்சி பரமாச்சாரியார்

ஸ்ரார்த்தம் - விதிமுறைகள் சில !!! (ஸ்ரீ காஞ்சி பரமாச்சாரியார்). !!! சாக்ஷாத் மஹேஸ்வர ஸ்வரூபமாகிய ஸ்ரீ மஹா பெரியவா ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அறிவுரை பரலோகம், பித்ருலோகம், பித்ரு கர்மா ..... நாம் ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். பரலோகம் உண்டு. பித்ரு லோகம் உண்டு. அங்கு பித்ருக்கள் வசிக்கின்றனர். நம் முன்னோர்கள் உடல் அழிந்ததும் பிரேத நிலையில் சில காலம் இருந்து தங்கள் செய்த … Continue reading ஸ்ரார்த்தம் – விதிமுறைகள் சில – ஸ்ரீ காஞ்சி பரமாச்சாரியார்

ஆனந்தமாக வாழ நமக்கு என்ன தேவை?

ஆனந்தமாக வாழ நமக்கு என்ன தேவை? அறிவும் உள்ளமும் இணைந்த வாழ்க்கைதான் ஆனந்தமான வாழ்க்கை. உள்ளத்தின் பணி அன்பு செய்வது. அறிவின் பணி நிரந்தரமானதற்கும், நிரந்தரம் அல்லாததற்கும் உள்ள வேறுபாட்டை அறிவது. அன்பும் விவேகமும் நம்மிடையே இணைந்துவிட்டால், ஆனந்தத்திற்குப் பஞ்சமேது ? - சுவாமி விஞ்ஞானானந்தர்

நன்னடத்தையின் ரகசியம்

இன்று எண்ணிக்கையில் உலகில் நல்லவர்கள் பெருகி வருகிறார்கள். அவர்கள் தங்களை இடதுசாரி என்றோ, நாத்திகர் என்றோ கூறுவதில்லை. ஆனால் இவர்கள் நாடுவது பலிபீடத்திற்குப் பதிலாக ஆய்வுக்கூடம், ஆலயத்திற்குப் பதிலாக அணுஆலை, தியானத்திற்குப் பதிலாகப் பொதுநலம் பேணல், மதகோட்பாட்டிற்குப் பதிலாக தொழில்நுட்ப அறிவியல், ஜபம் அல்லது வேறு ஆன்மீகச் சாதனைகளுக்குப் பதிலாகப் புள்ளியியல் போன்றவற்றையே. ஒழுக்கமுள்ள வாழ்க்கையை ஏற்றுக்கொள்வதில் நம்பிக்கை இருப்பினும் கடவுளின் தேவை அவசியம் என்று உணராதவர்கள் அதற்காக இறையார்ந்த அறிவின் தேவையை உணர்வதில்லை. ஒழுக்கமுறையை ஏற்பர், … Continue reading நன்னடத்தையின் ரகசியம்

தொலைக்காட்சி சத்தம் அதிகமாகக் கேட்கிறது – என் கவனம் சிதறுகிறது

மாணவர் சக்தி - கேள்வி பதில் பகுதி- ஆசிரியர் சுவிர் (ஸ்ரீராமகிருஷ்ணவிஜயம், ஆவணி-ஆகஸ்ட் 2017 இதழில் இருந்து) --- கேள்வி: நான் என் தனி அறையில் படிக்கும்போது எனது வீட்டில் தொலைக்காட்சி சத்தம் அதிகமாகக் கேட்கிறது. இதனால் என் கவனம் சிதறுகிறது. நான் எவ்வளவு சொல்லியும் என் பெற்றோர் கேட்பதில்லை. நான் என்ன செய்வது? ---- பதில்: உன்னை உன் பெற்றோர் படிக்க வைத்து, பார்ட் டைம் ஜாப் எதற்கும் அனுப்பாமல், உனக்குத் தனியறையும் கொடுத்து நீ … Continue reading தொலைக்காட்சி சத்தம் அதிகமாகக் கேட்கிறது – என் கவனம் சிதறுகிறது