ஸ்ரீவைஷ்ணவர்களின்  குருபரம்பரை – 5 (இறுதிப்பகுதி)

ஸ்ரீவைஷ்ணவர்களின்  குருபரம்பரை – 5 (இறுதிப்பகுதி) நாதமுனிகள்: ஆழ்வார்களின் காலத்துக்குப்பின் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு வீரநாராயணபுரத்தில் (காட்டுமன்னார்கோயில்) ஆனி மாதம் அனுஷ நக்ஷத்திரத்தில் அவதாரம் செய்த இவருக்கு யோகதசையில் நம்மாழ்வாருடைய அனுக்ரஹத்தால் அவரிடமிருந்து எல்லா ஆழ்வார்களும் அருளிச்செய்த ப்ரபந்தங்களை உபதேசமாகப் பெற்றார். திருமங்கையாழ்வார் ஆரம்பித்து நடத்தி பின் நின்றுபோய் விட்ட அத்யயன உத்ஸவத்தை மறுபடியும் நடத்த நாதமுனிகள் ஏற்பாடுகள் செய்தார். மார்கழி மாதம் சுக்லபக்ஷப் பிரதமையில் ஆரம்பித்து, தசமி வரை பத்து நாட்கள் முதலாயிரம், பெரிய திருமொழி … Continue reading ஸ்ரீவைஷ்ணவர்களின்  குருபரம்பரை – 5 (இறுதிப்பகுதி)

ஸ்ரீவைஷ்ணவர்களின் குருபரம்பரை – 4

ஸ்ரீவைஷ்ணவர்களின்  குருபரம்பரை – 4 திருப்பாணாழ்வார்: ஸ்ரீரங்கத்துக்கு அருகில் உறையூரில் கார்த்திகை மாதம் ரோஹிணி நக்ஷத்திரத்தில் ஒரு வயல் நடுவில் அவதரித்த குழந்தையை ஒரு பாணர் தம்பதி கண்டெடுத்து குழந்தையில்லாத தமக்குக் கிடைத்த பொக்கிஷமாக அவரை வளர்த்தனர். மிக்க தேஜஸ்ஸுடன் வளர்ந்து, தம் குலத்திற்கு ஏற்ப வீணையிலும் பாடலிலும் தேர்ச்சிபெற்றதால் பாணர் என்றே அழைக்கப்பட்ட அவர், தன்குலவழக்கப்படி, உபயகாவேரிக்கும் நடுவில் உள்ள ஸ்ரீரங்க க்ஷேத்திரத்துக்குச் செல்லாமலே, தென் திருக்காவேரியின் கரையில் வீணையும் கையுமாய் பெரிய பெருமாள் ஸந்நிதியைப் பார்த்தவண்ணம் நின்று … Continue reading ஸ்ரீவைஷ்ணவர்களின் குருபரம்பரை – 4

ஸ்ரீவைஷ்ணவர்களின்  குருபரம்பரை – 3

ஸ்ரீவைஷ்ணவர்களின்  குருபரம்பரை – 3 குலசேகர ஆழ்வார்: எம்பெருமான் திருமேனியில் உள்ள கௌஸ்துபம் என்னும் ரத்னத்தின் அம்சமாக மாசி மாதம் புனர்வஸு நக்ஷத்திரத்தில் வஞ்சிக்களம் எனும் கொல்லி நகரில் த்ருடவ்ரதன் என்னும் அரசனுக்கு மகனாக அவதரித்தார்.  பெரியாழ்வாரும் ஆண்டாளும்:  பெரியாழ்வார்ஆனி மாதம் ஸ்வாதி நக்ஷத்திரத்தில் அந்தணர்குலத்தில் விஷ்ணுசித்தர் என்ற பிள்ளையாக பிறந்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொண்டிருந்த வடபத்ரசாயிக்கு புஷ்பமாலை கட்டி சேவை செய்துவந்தார். “பரதத்வம் எது, உயர்ந்த புருஷார்த்தம் எது” என்று அறியவிரும்பிய மதுரையை ஆண்டுவந்த வல்லபதேவன் என்னும் மன்னன் … Continue reading ஸ்ரீவைஷ்ணவர்களின்  குருபரம்பரை – 3

ஸ்ரீவைஷ்ணவர்களின்  குருபரம்பரை – 2

  ஸ்ரீவைஷ்ணவர்களின்  குருபரம்பரை – 2 ஆழ்வார்கள்: பதின்மர். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாளையும் மதுரகவிகளையும் சேர்த்துக்கொண்டு பன்னிருவர் என்றும் சொல்வர். எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களிலேயே எப்போதும் ஆழ்ந்து இருந்ததால், அவர்களுக்கு ஆழ்வார்கள் என்று பெயர் ஏற்பட்டது. ஆழ்வார்களில் நம்மாழ்வார் மிக முக்கியமானவர். தம்முடைய ப்ரபந்தத்தின் மூலமாக ப்ரபத்தியின் பெருமையை விளக்கிக் கூறினார். தாமும் ப்ரபத்தியை அனுஷ்டித்தார். அதனால் ப்ரபத்தி அல்லது பரந்யாஸம் செய்துகொள்பவர் களுக்கு நம்மாழ்வார்தான் தலைவர், மூல … Continue reading ஸ்ரீவைஷ்ணவர்களின்  குருபரம்பரை – 2

ஸ்ரீவைஷ்ணவர்களின்  குருபரம்பரை – 1

  ஸ்ரீவைஷ்ணவர்களின்  குருபரம்பரை – 1 நான் வைஷ்ணவ சமுதாயத்தைச் சேர்ந்தவனல்லன். ஆனால் என் தந்தையின் பெயர், ஸ்ரீமான் நரசிம்மன். எங்கள் குலதெய்வம் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மர். நெற்றியில் திருமண்ணுக்குப் பதிலாக திருநீற்றுப்பட்டையே இருந்தாலும், தினமும் மூன்றுவேளை ஆதித்தனைத் தொழும் ஒரு குடும்பத்தில் பிறந்துள்ளதால், மூன்றுவேளையும் பெருமாளின் நாமங்களையே ஜபித்து வந்தனம் செய்வதால், நானும் கூட வைஷ்ணவன் என்று ஒருவகையில் கூறலாம். காஞ்சி மஹாபெரியவர் அருளியபடி, தினப்பூஜையில் ஸ்ரீவிஷ்ணுவையும் துதிப்பதால், இத்தலைப்பில் உள்ள விஷயத்தில் ஆர்வம் ஏற்பட்டது. எங்களுக்கு … Continue reading ஸ்ரீவைஷ்ணவர்களின்  குருபரம்பரை – 1

வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட ஏகாதசி ஏகாதஶீ ஸமம் கிஞ்சித் பாவனம் ந ச வித்யதே ஸ்வர்க மோக்ஷப்ரதா ஏஷா ராஜ்யபுத்ரப்ரதாயினி ஸ்வர்கம், மோக்ஷம், நல்ல புத்ரன், அரச பதவி முதலிய பலன்களைத் தருவதில் ஏகாதசிக்கு இணையான விரதம் கிடையாது என்கிறது தத்துவ ஸாரம் என்னும் புஸ்தகம். வைகுண்ட ஏகாதசிக்கு மோக்ஷ ஏகாதசி என்ற பெயரும் உண்டு. ஸ்ரீமஹாவிஷ்ணு வஸிக்கும் வைகுண்டத்தில் வாசல் திறக்கும் தினம் இன்று. இதன் அடையாளமாக பெருமாள் கோவில்களில் சிறப்பாக ஒரு வாசலைத் திறந்து அதன்வழியே பெருமாள் தரிசனம் … Continue reading வைகுண்ட ஏகாதசி

ஏகாதசி விரதம்

ஏகாதசி என்றால் தமிழில் பதினொன்று எனப்பொருள்படும் . ஏகாதசி அன்று விரதம் மேற்கொள்வதை அனைத்து சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன”.  மற்ற விரதங்களைவிட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிக சிறப்பானதாகும் , வருடத்துக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும்.  அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர் என்பது நம்பிக்கை. வருடம் முழுவதும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க இயலாதவர்கள், மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் இருப்பது சிறப்பான … Continue reading ஏகாதசி விரதம்

கருடப்பத்து

கருடப்பத்து ஓம் பூரணனே பதினாறு திங்கள் சேரும் பொருந்தியே யருக்கன் பதினெட்டுஞ் சேரும் காரணனே கருமுகில் பொன்மணி சேருங்கருணைபெரு மஷ்டாக்ஷரங் கலந்து வாழும் வாரணனே லட்சுமியோ டெட்டுஞ் சேரும் மதிமுகம் போல் நின்றிலங்கு மாயா நேயா ஆரணனே ரகுராமா கருடன்மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே (1) மந்திரமோ அஷ்டசித்துமெட்டுஞ் சேரும் வாழ்கிரகமொன்பதுமே வந்துசேரும் கந்தர்வர் கணநாத ராசி வர்க்கம் கலைகியான நூல் வேதங்கலந்து வாழும் ந்ந்தி முதல் தேவர்களுங் கவனயோகம் நமஸ்கரித் துன்பாதம் நாளும் போற்ற … Continue reading கருடப்பத்து

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தரம்

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தரம் ஸித்தா ஊசு: பகவந் வேங்கடேஶஸ்ய நாம்நாமஷ்டோத்தரம் ஶதம் அநுப்ரூஹி தயாஸிந்தோ க்ஷிப்ரஸித்திப்ரதம் ந்ருணாம்                                 1   நாரத உவாச: ஸாவதாநேந மநஸா ஶ்ருண்வந்து ததிதம் ஶுபம் ஜப்தம் வைகாநஶை: பூர்வம் ஸர்வ ஸௌபாக்ய வர்த்தநம்                            2   ஓங்கார பரமார்த்தஶ்ச நரநாராயணாத்மக: மோக்ஷலக்ஷ்மீ ப்ராணகாந்தோ வேங்கடாசல நாயக:                                        3   கருணாபூர்ண ஹ்ருதய: டேங்காரஜப ஸௌக்யத: ஶாஸ்த்ர ப்ரமாண கம்யஶ்ச யமாத்யஷ்டாங்க கோசர:                                               4   பக்த லோகைக வரதோ வரேண்யோ பயநாஶந: … Continue reading ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தரம்