உலக நீதி

உலக நீதி ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம் போகாத இடந்தனிலே போக வேண்டாம் போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம் வாகாரும் குறவருடை வள்ளிபங்கன் மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே (1) நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம் நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம் நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம் நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம் அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம் அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம் மஞ்சாரும் குறவருடை வள்ளிபங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே (2) மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம் மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம் தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம் தருமத்தை ஒருநாளும் கெடுக்க வேண்டாம் சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம் சினந்து இருந்தார் வாசல் வழிச் சேர வேண்டாம் வனம் தேடும் குறவருடை வள்ளிபங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே (3) குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம் கொலை களவு செய்வரோடு இணங்க வேண்டாம் கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம் கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம் கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம் கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் மற்று நிகர் இல்லாத வள்ளிபங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே (4) வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம் மனையாளை குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம் வீழாத படுகுழியில் வீழ வேண்டாம் வெஞ்சமரில் புறம் கொடுத்து மீள வேண்டாம் தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம் தாழந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் வாழ்வாரும் குறவருடைய வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே (5) வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம் மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம் முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம் வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம் வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம் … Continue reading உலக நீதி

ஸ்ரீவைஷ்ணவர்களின்  குருபரம்பரை – 5 (இறுதிப்பகுதி)

ஸ்ரீவைஷ்ணவர்களின்  குருபரம்பரை – 5 (இறுதிப்பகுதி) நாதமுனிகள்: ஆழ்வார்களின் காலத்துக்குப்பின் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு வீரநாராயணபுரத்தில் (காட்டுமன்னார்கோயில்) ஆனி மாதம் அனுஷ நக்ஷத்திரத்தில் அவதாரம் செய்த இவருக்கு யோகதசையில் நம்மாழ்வாருடைய அனுக்ரஹத்தால் அவரிடமிருந்து எல்லா ஆழ்வார்களும் அருளிச்செய்த ப்ரபந்தங்களை உபதேசமாகப் பெற்றார். திருமங்கையாழ்வார் ஆரம்பித்து நடத்தி பின் நின்றுபோய் விட்ட அத்யயன உத்ஸவத்தை மறுபடியும் நடத்த நாதமுனிகள் ஏற்பாடுகள் செய்தார். மார்கழி மாதம் சுக்லபக்ஷப் பிரதமையில் ஆரம்பித்து, தசமி வரை பத்து நாட்கள் முதலாயிரம், பெரிய திருமொழி … Continue reading ஸ்ரீவைஷ்ணவர்களின்  குருபரம்பரை – 5 (இறுதிப்பகுதி)

ஸ்ரீவைஷ்ணவர்களின் குருபரம்பரை – 4

ஸ்ரீவைஷ்ணவர்களின்  குருபரம்பரை – 4 திருப்பாணாழ்வார்: ஸ்ரீரங்கத்துக்கு அருகில் உறையூரில் கார்த்திகை மாதம் ரோஹிணி நக்ஷத்திரத்தில் ஒரு வயல் நடுவில் அவதரித்த குழந்தையை ஒரு பாணர் தம்பதி கண்டெடுத்து குழந்தையில்லாத தமக்குக் கிடைத்த பொக்கிஷமாக அவரை வளர்த்தனர். மிக்க தேஜஸ்ஸுடன் வளர்ந்து, தம் குலத்திற்கு ஏற்ப வீணையிலும் பாடலிலும் தேர்ச்சிபெற்றதால் பாணர் என்றே அழைக்கப்பட்ட அவர், தன்குலவழக்கப்படி, உபயகாவேரிக்கும் நடுவில் உள்ள ஸ்ரீரங்க க்ஷேத்திரத்துக்குச் செல்லாமலே, தென் திருக்காவேரியின் கரையில் வீணையும் கையுமாய் பெரிய பெருமாள் ஸந்நிதியைப் பார்த்தவண்ணம் நின்று … Continue reading ஸ்ரீவைஷ்ணவர்களின் குருபரம்பரை – 4

ஸ்ரீவைஷ்ணவர்களின்  குருபரம்பரை – 3

ஸ்ரீவைஷ்ணவர்களின்  குருபரம்பரை – 3 குலசேகர ஆழ்வார்: எம்பெருமான் திருமேனியில் உள்ள கௌஸ்துபம் என்னும் ரத்னத்தின் அம்சமாக மாசி மாதம் புனர்வஸு நக்ஷத்திரத்தில் வஞ்சிக்களம் எனும் கொல்லி நகரில் த்ருடவ்ரதன் என்னும் அரசனுக்கு மகனாக அவதரித்தார்.  பெரியாழ்வாரும் ஆண்டாளும்:  பெரியாழ்வார்ஆனி மாதம் ஸ்வாதி நக்ஷத்திரத்தில் அந்தணர்குலத்தில் விஷ்ணுசித்தர் என்ற பிள்ளையாக பிறந்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொண்டிருந்த வடபத்ரசாயிக்கு புஷ்பமாலை கட்டி சேவை செய்துவந்தார். “பரதத்வம் எது, உயர்ந்த புருஷார்த்தம் எது” என்று அறியவிரும்பிய மதுரையை ஆண்டுவந்த வல்லபதேவன் என்னும் மன்னன் … Continue reading ஸ்ரீவைஷ்ணவர்களின்  குருபரம்பரை – 3

ஸ்ரீவைஷ்ணவர்களின்  குருபரம்பரை – 2

  ஸ்ரீவைஷ்ணவர்களின்  குருபரம்பரை – 2 ஆழ்வார்கள்: பதின்மர். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாளையும் மதுரகவிகளையும் சேர்த்துக்கொண்டு பன்னிருவர் என்றும் சொல்வர். எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களிலேயே எப்போதும் ஆழ்ந்து இருந்ததால், அவர்களுக்கு ஆழ்வார்கள் என்று பெயர் ஏற்பட்டது. ஆழ்வார்களில் நம்மாழ்வார் மிக முக்கியமானவர். தம்முடைய ப்ரபந்தத்தின் மூலமாக ப்ரபத்தியின் பெருமையை விளக்கிக் கூறினார். தாமும் ப்ரபத்தியை அனுஷ்டித்தார். அதனால் ப்ரபத்தி அல்லது பரந்யாஸம் செய்துகொள்பவர் களுக்கு நம்மாழ்வார்தான் தலைவர், மூல … Continue reading ஸ்ரீவைஷ்ணவர்களின்  குருபரம்பரை – 2

ஸ்ரீவைஷ்ணவர்களின்  குருபரம்பரை – 1

  ஸ்ரீவைஷ்ணவர்களின்  குருபரம்பரை – 1 நான் வைஷ்ணவ சமுதாயத்தைச் சேர்ந்தவனல்லன். ஆனால் என் தந்தையின் பெயர், ஸ்ரீமான் நரசிம்மன். எங்கள் குலதெய்வம் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மர். நெற்றியில் திருமண்ணுக்குப் பதிலாக திருநீற்றுப்பட்டையே இருந்தாலும், தினமும் மூன்றுவேளை ஆதித்தனைத் தொழும் ஒரு குடும்பத்தில் பிறந்துள்ளதால், மூன்றுவேளையும் பெருமாளின் நாமங்களையே ஜபித்து வந்தனம் செய்வதால், நானும் கூட வைஷ்ணவன் என்று ஒருவகையில் கூறலாம். காஞ்சி மஹாபெரியவர் அருளியபடி, தினப்பூஜையில் ஸ்ரீவிஷ்ணுவையும் துதிப்பதால், இத்தலைப்பில் உள்ள விஷயத்தில் ஆர்வம் ஏற்பட்டது. எங்களுக்கு … Continue reading ஸ்ரீவைஷ்ணவர்களின்  குருபரம்பரை – 1

யஜுர்வேத ஸந்த்யாவந்தனம் – ஆந்த்ர ஸம்ப்ரதாயம்

Courtesy: • A V ப்ரணதார்த்தி ஹர சாஸ்திரிகள் எழுதி மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ணா பிரஸ் வெளியிட்ட (1962) “யஜுர்வேத ஆந்திர ஸந்தியாவந்தனம்” எனும் புத்தகத்தில் இருந்து ஆந்த்ர ஸம்ப்ரதாய ஸந்த்யாவந்தனம். • சென்னை தி நகர் K V ராகவன், பூண்டி திருக்காடுப்பள்ளி புதுச்சத்திரம் K வெங்கட்ராமன் வெளியிட்ட “யஜுர்வேத ஸந்த்யாவந்தனம் ஆந்த்ர ஸம்ப்ரதாயம்” எனும் புத்தகம். • சென்னை கொடுங்கையூர் TAMBRAS வெளியிட்ட வாஜபேயயாஜீ ப்ரம்மஸ்ரீ சுந்தரேச சர்மா அவர்களால் பிழைதிருத்தம் செய்யப்பட்ட “யஜுர்வேத ஸந்த்யாவந்தனம் ஆந்த்ர ஸம்ப்ரதாயப்படி” … Continue reading யஜுர்வேத ஸந்த்யாவந்தனம் – ஆந்த்ர ஸம்ப்ரதாயம்

சிவ தத்துவங்களும் உருவங்களும்

இது அவன் திருவுரு முனைவர் அ. மா. இலட்சுமிபதிராசு இறை, உயிர், தளை என்று சைவசித்தாந்தம் கூறும் முப்பொருள்களுள் இறை ஏனையவற்றைக் காட்டிலும் பேராற்றல் வாய்ந்தது. தன்னுரிமை உடையது. உண்மை இயல்பு, பொது இயல்பு என்னும் இரண்டு இயல்புகளை உடையது. இறை தன்னையே நோக்கி நிற்கும் நிலையில் உண்மை இயல்புடையதாகும். உலகை நோக்கி நிற்கும் நிலையில் பொது இயல்பு உடையதாகும். உண்மை இயல்பில் சிவம் என்று கூறப்பெறும். பொது இயல்பில் தலைவன் (பதி) என்று கூறப்பெறும். உண்மை … Continue reading சிவ தத்துவங்களும் உருவங்களும்

ஸ்ரீ கந்தகுரு கவசம்

ஸ்ரீ கந்தகுரு கவசம் ராகம்: நாட்டை கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே மூஷிக வாகனனே மூலப்பொருளோனே ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய் சித்தி வினாயக ஜயமருள் போற்றுகிறேன் சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய் கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்தென்னை ரக்ஷ¢த்திடுவீரே ராகம்: நாட்டை ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் சரவணபவ குஹா சரணம் சரணம் குருகுகா சரணம் குருபரா சரணம் சரண மடைந்திட்டேன் கந்தா சரணம் தனைத் தானறிந்து … Continue reading ஸ்ரீ கந்தகுரு கவசம்