கொரோனாவைரஸ் நகைச்சுவை அல்ல

கொரோனாவைரஸ் நகைச்சுவை தவிர்க்க வேண்டும். சில பதிவுகள் இந்த நோயைப் புரளி என்று கூறுகின்றன. புரளியாக இருந்தால் கடவுளுக்கு நன்றி. ஆனால் நடப்பது இது புரளி அல்ல என்று கூறுகிறதே. இத்தகைய சங்கடமான நேரங்களில் இந்த நோயைப் பற்றிய நகைச்சுவையை தவிர்க்கலாம். நண்பர்கள் இப்படி எழுதுவதற்காக என்னை மன்னிக்கவும். சில தெரிந்தவர்கள் இந்த நோயால் அவதிப் படுகிறார்கள். தெரியாதவர்களைப் பற்றியும் நாம் கவலை கொள்ளலாமே. நம் தமிழ்ப் பண்பாடு மற்றவர் சிரமங்களைக் கண்டு நகைக்கும் பண்பாடல்ல. யாதும் … Continue reading கொரோனாவைரஸ் நகைச்சுவை அல்ல

ஓங்கி அடிச்சா…

மிகவும் அவசியமான கட்டுரை. உயர்திரு மாரிக்குமார் அவர்களுக்கு வாழ்த்தும் நன்றியும். எல்லாப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இதை பெரிய எழுத்தில் எழுதி மாணவர்களின் கண்ணில் படுமாறு வைக்க வேண்டும். காலம் காலத்துக்கும் இப்படி எழுதியதை அழியாமல் காக்க வேண்டும். இதுமாதிரியான கட்டுரைகள் நம் இளைய சமுதாயத்தின் பார்வையையும், பாதையையும் சீராக்கி அவர்கள்தம் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி கொண்டவை. தினமணி நாளிதழுக்கும் நன்றி. நான் இக்கட்டுரையை என் வலைப்பக்கத்தில் பகிர்கிறேன்.   N Ganapathy Subramanian     ஓங்கி … Continue reading ஓங்கி அடிச்சா…

தமிழுக்கும் அழகென்று பேர்

எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெருந் தமிழ் அணங்கே! உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துவோம். - பேராசிரியர் சுந்தரம்பிள்ளை   தமிழைக் கையாளும் விதம் – ஓர் உதாரணம் ------------------------------------------------ பேராசிரியர் திரு. திருவோத்தூர் வையாபுரி முருகேசன் அவர்கள் எழுதியுள்ள “மெய்கண்டார் அருளிய சிவஞானபோதப் பேருரை” (2004ஆம் ஆண்டு முதல் வெளியீடு) என்ற நூலில் இருந்து சிறிய துளியை எடுத்து கீழே தந்திருக்கிறேன். இந்த நூல் தஞ்சையில் மிகப் பிரபலமான உயர் நிலை மருத்துவரும் … Continue reading தமிழுக்கும் அழகென்று பேர்

கொஞ்சம் பேசலாம்

கொஞ்சம் பேசலாம் அறிவும் மனதும் நாம் உயிர்வாழ இன்றியமையாதவை. பள்ளிகளில் பாடப்புத்தகத்தை நெட்டுரு செய்து தேர்வில் தாளில் கொட்டி பள்ளிமுடிவில் பெற்ற ஒரு பட்டயத்தைக் காட்டிக் கிடைப்பதற்குப் பெயர் அறிவல்ல. நன்றாகப் படிக்கத் தெரிந்துகொண்டோம் என்று மட்டும்தான் பொருள். கல்லூரி வரையிலும் ஆராய்ச்சித் துறையிலும் கூட நன்றாகப் படிக்கத் தெரிந்து கொண்டோம் என்றுதான் பொருள். எல்லாத் திக்குகளிலும் ஒவ்வொரு நொடியும் நம்மை வந்து நிறைக்கின்ற செய்திகள், தகவல்களின் மதிப்பு அது அதன் பெயரிலேயே உள்ளது. வெறும் தகவல்கள் … Continue reading கொஞ்சம் பேசலாம்

அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது!

தமிழே!!! அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது! 1.நற்றிணை 2.குறுந்தொகை 3.ஐங்குறுநூறு 4.அகநானூறு 5.புறநானூறு 6.பதிற்றுப்பத்து 7.பரிபாடல் 8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள்.. ! 1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை 5.முல்லைப்பாட்டு 6.மதுரைக்காஞ்சி 7.நெடுநல்வாடை 8.குறிஞ்சிப் பாட்டு 9.பட்டினப்பாலை 10.மலைபடுகடாம் என்னும் "பத்துப்பாட்டு" சங்க நூல்கள்….! 1.திருக்குறள் 2.நாலடியார் 3.நான்மணிக்கடிகை 4.இன்னாநாற்பது 5.இனியவை நாற்பது 6.கார் நாற்பது 7.களவழி நாற்பது 8.ஐந்திணை ஐம்பது 9.திணைமொழி ஐம்பது 10.ஐந்திணை எழுபது 11.திணைமாலை நூற்றைம்பது 12.திரிகடுகம் 13.ஆசாரக்கோவை 14.பழமொழி … Continue reading அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது!

ஆதவனை_வேண்டுகிறேன்

பிறந்த மதத்தில் உண்மையான ஈடுபாடு,  மற்றவரிடம் உண்மையான மரியாதை,  எல்லோரிடமும் அன்பு இவை தடையில்லாது வளரட்டும். ஒரு மனிதன் மற்ற மனிதரிடம் காட்டும் அன்பு,  பரிவு இவற்றை மதமும் ஜாதியும் கொள்கையும் ஒருபோதும் கெடுக்காதிருப்பதாக. நமக்கு உயிரும் உணவும் வழங்கும் நம்  கண்ணில் தெரியும் அந்த ஆதவனை அனைவரும்  வணங்கும் இந் நன்னாளில் இருந்தாவதுஇத்தகைய ஒரு நல்லிணக்கம் எல்லோர் மனத்திலும் விளைய வைக்க வேண்டுகிறேன். நாம் வணங்கும் தெய்வம் எதுவாயினும் அத்தெய்வத்திடம் மனத்தில் இந்த நல்லிணக்கம் விரும்புவோர் … Continue reading ஆதவனை_வேண்டுகிறேன்

உலக நீதி

உலக நீதி ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம் போகாத இடந்தனிலே போக வேண்டாம் போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம் வாகாரும் குறவருடை வள்ளிபங்கன் மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே (1) நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம் நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம் நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம் நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம் அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம் அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம் மஞ்சாரும் குறவருடை வள்ளிபங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே (2) மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம் மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம் தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம் தருமத்தை ஒருநாளும் கெடுக்க வேண்டாம் சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம் சினந்து இருந்தார் வாசல் வழிச் சேர வேண்டாம் வனம் தேடும் குறவருடை வள்ளிபங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே (3) குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம் கொலை களவு செய்வரோடு இணங்க வேண்டாம் கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம் கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம் கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம் கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் மற்று நிகர் இல்லாத வள்ளிபங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே (4) வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம் மனையாளை குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம் வீழாத படுகுழியில் வீழ வேண்டாம் வெஞ்சமரில் புறம் கொடுத்து மீள வேண்டாம் தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம் தாழந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் வாழ்வாரும் குறவருடைய வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே (5) வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம் மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம் முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம் வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம் வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம் … Continue reading உலக நீதி

தொண்டிக்கு வந்திறங்கிய ‘சீனச்சூடன்’!

தொண்டிக்கு வந்திறங்கிய ‘சீனச்சூடன்’! முனைவா் ந. அறிவரசன் தினமணி நாளிதழில் அக்டோபர் 15ஆம் நாள் வெளியான கட்டுரை பண்டைத் தமிழகமும், சீனமும் மிகவும் தொன்மையான நாகரிகங்களைக் கொண்டவை. பண்டைத் தமிழகமும் சீனாவும் பண்பாட்டால், கல்வியால், கடல் வணிகத்தால், தொழில்நுட்பம் முதலானவற்றால் இரண்டறக் கலந்திருந்ததற்கு வரலாற்று ஆய்வாளா்கள் பல்வேறு சான்றுகளை நிறுவியுள்ளனா்; பலரது ஆய்வு நூல்களிலும் சுவாரஸ்யமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. புறநானூற்றில் பரணரும், ஒளவையாரும் பண்டைத் தமிழகத்துக்குக் கரும்பினை அறிமுகப்படுத்தியவா்கள் அதியமான் நெடுமான் அஞ்சியின் முன்னோர் என்கின்றனா். அதியமான் … Continue reading தொண்டிக்கு வந்திறங்கிய ‘சீனச்சூடன்’!

பிள்ளைகளுக்கு ஆசை ஆசையாக ஆன்ட்ராய்டு ஃபோன் வாங்கித்தந்து ‘ஆப்’பு வைத்துக் கொள்ளும் பெற்றோர்களுக்கு சமர்ப்பணம்!

Courtesy: Dinamani Newspaper பிள்ளைகளுக்கு ஆசை ஆசையாக ஆன்ட்ராய்டு ஃபோன் வாங்கித்தந்து ‘ஆப்’பு வைத்துக் கொள்ளும் பெற்றோர்களுக்கு சம்ர்ப்பணம்! By கார்த்திகா வாசுதேவன் | Published on : 07th August 2018 02:02 PM | DINAMANI ஸ்மார்ட் ஃபோன்களால் சூழப்பட்டுள்ள நகரத்தின் நிலை என்ன? நீங்கள் செல்ஃபோனில் அனுப்புகின்ற ஃபோட்டோக்கள் முதல் மெசேஜ்கள் வரை காவல்துறை அதிகாரிகளாகிய நாங்கள் பார்க்க வேண்டுமென்றால் ஒரே ஒரு அனுமதி வாங்கி விட்டால் பார்க்க முடியும். இந்தக் கண்கள் … Continue reading பிள்ளைகளுக்கு ஆசை ஆசையாக ஆன்ட்ராய்டு ஃபோன் வாங்கித்தந்து ‘ஆப்’பு வைத்துக் கொள்ளும் பெற்றோர்களுக்கு சமர்ப்பணம்!