யோகசிம்மபுத்ரன் சரிதை – 110 – IBHL 9

யோகசிம்மபுத்ரன் சரிதை – 110 – IBHL 9 வசூலுக்குச் சென்றபோது மனித நேயம் மனதைத் தொடும் நிகழ்ச்சிகள் என் அலுவலக வாழ்வில் நிறைய நடந்துள்ளன. நினைவில் வரும் சிலவற்றைப் பற்றி எழுதுகிறேன். சென்னை சாலிக்கிராமத்தில் உள்ளே நெடுந்தூரம் சென்றால் ஒரு ஃப்ளாட்டின் முதல் மாடியில் ஒரு குடும்பம். கதவைத் தட்டினேன். “வர்ரேங்க” என்றது ஆண் குரல். ஆனால் வந்து திறந்து பேசியது ஒரு பெண் குரல். “யாருங்க, யாரைப் பார்க்கணும் ?” “நான் இந்த்பங்க் ஹவுசிங்லேர்ந்து … Continue reading யோகசிம்மபுத்ரன் சரிதை – 110 – IBHL 9

யோகசிம்மபுத்ரன் சரிதை – 109 – IBHL 8

யோகசிம்மபுத்ரன் சரிதை – 109 – IBHL 8 ஊர் சுற்றும் வசூல் ராஜா கடன் கொடுப்பதை நிறுத்தியதால் கொடுத்த கடனை வசூல் செய்வதே முக்கியவேலை ஆனது. சென்னைக் கிளையுடன் வந்து சேர்ந்த திண்டிவனம், பாண்டிச்சேரி கிளை கணக்குகளையும், பின்னர் வந்து சேர்ந்த பெங்களூர், மங்களூர் கணக்குகளையும், எல்லாவற்றையும் பார்க்கவேண்டிய அதிகாரி ஆனேன். சென்னைக் கிளையும் கார்ப்பரேட் ஆஃபிசுக்குள் வந்துவிட்டதால், கார்ப்பரேட் ஆஃபீஸ் வேலைகளும் மறுபடியும் என்னுடன் சேர்ந்து கொண்டன. திரு ஷண்முகம் என்னும் கம்பெனி ஊழியர் … Continue reading யோகசிம்மபுத்ரன் சரிதை – 109 – IBHL 8

யோகசிம்மபுத்ரன் சரிதை – 108 – IBHL 7

யோகசிம்மபுத்ரன் சரிதை – 108 – IBHL 7 World of Words and High Voltage Tension போர்டு, கமிட்டிகள் இவற்றிற்கு நிறைய நோட்டுகள் அடிக்கடி தயாராகும். ஒவ்வொரு போர்ட் மீட்டிங்கிலும் குறைந்தது 30 முதல் 120 வரை அஜெண்டாக்கள் இருக்கும். டைரக்டர்களுக்கு அனுப்பப்படும் அஜெண்டா தைக்கப்பட்ட ஃபைல்பைண்டராக அனுப்பப்படும். சிலசமயம் 1000 பக்கத்தைத் தாண்டும். போர்ட் மீட்டிங்குக்கு 15-20 நாட்களுக்கு முன் அனுப்பவேண்டும். சிலசமயம் இதைத் தவிர டேபிள் அஜெண்டா சில தலைப்புகளில் இருக்கும். எப்போதும் … Continue reading யோகசிம்மபுத்ரன் சரிதை – 108 – IBHL 7

யோகசிம்மபுத்ரன் சரிதை – 107 – IBHL 6

யோகசிம்மபுத்ரன் சரிதை – 107 – IBHL 6 கசப்பை மறப்போம் என் எழுத்து பிறரால் படிக்கமுடியாதது என்பது என்னால் மாற்றப்பட முடியாமல் ஆகிவிட்டது. பள்ளிக் காலத்தில் நல்ல எழுத்துக்காக சிறப்புப் பரிசைப் பெற்ற நான் இந்தியன் பாங்கில் சேர்ந்து முதல் எட்டு வருடத்தில் கூட்டமும் வேலையும் மிக அதிகமாக இருந்த இரண்டு கிளைகளில் பணியாற்றியதில் வேகமாக எழுதுவது பழகிப்போய் எழுத்தின் தன்மையும் கெட்டுவிட்டது. இதனால் நான் அக்கவுண்ட்ஸ் செக்‌ஷனுக்கே சென்று கம்ப்யூட்டர் அருகில் அமர்ந்து சொல்லச் … Continue reading யோகசிம்மபுத்ரன் சரிதை – 107 – IBHL 6

யோகசிம்மபுத்ரன் சரிதை – 106 – IBHL 5

யோகசிம்மபுத்ரன் சரிதை – 106 – IBHL 5 Image by Alexas_Fotos from Pixabay ;  Image by 52Hertz from Pixabay சுறுசுறுப்பான மாறுதல்களும் வேகமான சறுக்கு மர வழுக்கலும் நான் இந்த்பாங்க் ஹவுசிங் கம்பெனியில் தொடர்ந்து 12 வருட காலம் பணி புரிந்தேன். முதல் மூன்று ஆண்டுகளுக்குப் பின் எனக்கு இந்தியன் பாங்குக்கு திரும்பிவர உத்தரவு வந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி வரவில்லை. இதற்குப் பல காரணங்கள் உண்டு. எனக்கு பரோடா ஜோனுக்கு … Continue reading யோகசிம்மபுத்ரன் சரிதை – 106 – IBHL 5

யோகசிம்மபுத்ரன் சரிதை – 105 – IBHL 4

யோகசிம்மபுத்ரன் சரிதை – 105 – IBHL 4   ரொம்ப சிரிக்காதே கொஞ்ச நாட்கள் இந்தியன் பாங்கில் இருந்து வந்த சிலர் தன் தலையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர். மற்றவரைப் பார்த்து சொட்டைத்தலைக் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் அளவுக்கு நெருக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. பதவி உயரச் செல்லச் செல்ல சின்னச் சின்னச் சிரிப்புகள் கூட பளுவாகத் தெரியும் போலும். ஆனால் நான் யாராவது ஜோக் அடித்தால் ஜோக்கின் தரத்தைப் பொறுத்து சிரித்துவிடுவேன், யார் ஜோக் … Continue reading யோகசிம்மபுத்ரன் சரிதை – 105 – IBHL 4

யோகசிம்மபுத்ரன் சரிதை – 104 – IBHL 3

யோகசிம்மபுத்ரன் சரிதை – 104 – IBHL 3 தொடரும் அறிமுகம் இன்னொரு AGM திரு நாகையா சார் அவர்களும் நன்றாகப் பழகினார். கம்பெனியின் முக்கிய விஷயங்களையும் தான் நிர்வகிக்கும் லோன்ஸ் டிபார்ட்மெண்ட் வேலையோடு பார்த்து வந்தார். நல்ல பண்பாளர். ஆனால் கண்டிப்பானவர். இனிமையாக சிரித்த முகத்துடன் பேசுவார். அவர் பேசும் வார்த்தைகளில் அறிவும் அனுபவமும் நன்கு தெரியும். இந்தியன் பாங்கின் மெர்ச்சண்ட் பாங்கிங் டிபார்ட்மெண்டில் அனுபவம் பெற்றவர். IBMBS என்ற மெர்ச்சண்ட் பாங்கிங் கம்பெனி நிறுவுவதிலும் … Continue reading யோகசிம்மபுத்ரன் சரிதை – 104 – IBHL 3

யோகசிம்மபுத்ரன் சரிதை – 103 – IBHL 2

யோகசிம்மபுத்ரன் சரிதை – 103 – IBHL 2 எனக்கென்ன வேலை Accounts AGMமின் கேபினில் அவரிடம் சிறிது நேரம் பேசியதில் கம்பெனியைப் பற்றி சில விவரங்கள் அறிந்தேன். அவர் எனக்கு ஒரு வேலையும் சொல்லவில்லை. கம்பெனியின் annual reports நாலைந்து எடுத்துக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அவற்றில் இவரும், இன்னொரு AGM, GM, MD, Directors கையெழுத்திட்டு இருந்தனர். கம்பெனியின் வளர்ச்சி, வணிக விவரங்கள் இவற்றை அறிந்தேன். அன்று மாலை வரை ஒரு வேலையும் தரவில்லை. … Continue reading யோகசிம்மபுத்ரன் சரிதை – 103 – IBHL 2

யோகசிம்மபுத்ரன் சரிதை – 102 – IBHL 1

யோகசிம்மபுத்ரன் சரிதை – 102 – IBHL 1 கோடம்பாக்கம் ஹைரோட்டில் பாம்க்ரோவ் ஹோட்டலுக்கு எதிரில் இருந்த கட்டிடத்தில் (இப்போது CAMS இங்கு இயங்கி வருகிறது) இரண்டாம் மாடி முழுவதையும் ஆக்கிரமித்திருந்த இந்த் பாங்க் ஹவுஸிங் லிமிடெட் (IBHL) இன் கார்ப்பரேட் ஆஃபீசுக்குள் நுழைந்ததும் ஒரு பெரிய வெளிநாட்டுக் கம்பெனியில் நுழைந்தது போல் இருந்தது. தேக்கு மரத்தில் இழைத்த கதவுகள் மற்றும் மேஜைகள், பார்ட்டிஷன்கள், குஷன் நாற்காலிகள், அழகான அலங்காரத்துடன் இருந்த பொய்க்கூரை (false ceiling) இத்யாதி … Continue reading யோகசிம்மபுத்ரன் சரிதை – 102 – IBHL 1