அன்பைத் தேடியவர்

அன்புக்காக ஏங்கிய ஒரு முதியவரைப் பற்றி, ஒரு பார்வை, Dr William Collinge எழுதிய Subtle Energy எனும் ஆங்கில நூலிலிருந்து: அன்பைத் தேடியவர்: “மேகிக்கு 81 வயது. அவர் முதியமனிதர்கள் மட்டும் வாழும் முதியோர் பகுதியில் வசிக்கிறார். அவரால் இன்னும் தன் உணவைத் தானே சமைத்துக் கொள்ளவும், நடமாடவும் முடிகிறது. அண்மையில் நடந்த மருத்துவப் பரிசோதனையில், அவரது இதயத்தைப் பரிசோதித்த மருத்துவர் ஆச்சரியப்பட வேண்டியதாயிற்று. இதுவரை அந்த முதியவரை பத்துமுறை அவர் பரிசோதனை செய்துள்ளார். அவரின் … Continue reading அன்பைத் தேடியவர்

உங்கள் இதயத்தை வருடிக் கொடுங்களேன் !

உங்கள் இதயத்தை வருடிக் கொடுங்களேன் ! நம் நாட்டில் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை பெரு நகரங்களில் வேகமாக வளர்ந்து  கொண்டிருக்கிறது. சிறு நகரங்களில் அவ்வளவு வேகம் இல்லை. ஆனாலும் பல நகரங்களில், புற நகர்ப்பகுதியில் (extensions) பார்த்தால், சொந்த வீடுகளே, தாங்கள் வாழும் முதியோர் இல்லமாய் மாறிவிட்டிருக்கின்றன. இது ஒரு துயரமான “முன்னேற்றம்.” காற்றுக்கும், நீருக்கும் அடுத்தபடியாக உலகிலேயே மிக முக்கியமான ஒன்று உண்டென்றால் அது அன்புதான்.  மனிதர் வாழ்விலும் அதுவே மிக முக்கியமான தேவை. இதை … Continue reading உங்கள் இதயத்தை வருடிக் கொடுங்களேன் !

மனிதனும் விலங்கும்

மனிதனும் விலங்கும் மனிதனுக்கும் பரிணாம வளர்ச்சியில் குறைந்ததென நாம் கருதும் விலங்குக்கும் அடிப்படை வேற்றுமை உடல் அமைப்பிலோ தோற்றத்திலோ இல்லை. அடிப்படை வேற்றுமை மன அளவில் உள்ளது. சிந்திக்கத் தெரிந்துவிட்ட மனம் கொண்டுள்ள மனிதன் பார்ப்பது மட்டுமின்றி, படிக்கவும், விவரிக்கவும் அறிந்து கொண்டுள்ளான். அவன் தனது ஐம்புலன்களுக்கு அப்பாலும் பார்க்கிறான். அவன் அறிவு, புலன் நுகர்ச்சியில் மட்டும் கட்டுண்டு இருக்கவில்லை. வாழ்க்கையின் ஆழ்ந்த புதிர்களையும் இயற்கையின் அதிசயங்களையும் பார்த்து வியந்து சிந்தித்து அந்த புதிர்களை அவிழ்க்க முயல்கிறான். … Continue reading மனிதனும் விலங்கும்

இதயத்தின் ரசவாதம்

நமது அன்பு செலுத்தும் சக்தியை அதிகரித்துக் கொள்ள ------------------------------------------------------------------------------- உலக நோக்குடன் திறந்த மனத்துடன் எதற்கும் தயாராக இருக்கும் ஆன்மாக்களே மிக அழகான ஆன்மாக்கள் - மாண்டேய்ன் (Montaigne) ====================================================== அந்த அதிகாலை வேளையில், உறைவிடம் இல்லாத இந்தியாவின் ஏழைகள் உறங்கிக் கொண்டிருந்த தெருக்களின் வழியே, கொல்கத்தா புகைவண்டி நிலையத்திற்கு அன்னை தெரசா அவர்களை வழியனுப்ப, அவருடன் வந்துகொண்டிருந்த மால்கம் முக்கரிட்ஜ் கூறுவது: “அன்னையை புகைவண்டியில் ஏற்றிவிட்டுத் திரும்பும்போது, இந்த உலகின் எல்லா அழகையும் மகிழ்ச்சியையும் நான் … Continue reading இதயத்தின் ரசவாதம்