கேடு நோக்கிப் பீடு நடை

கேடு வழி நோக்கி பீடு நடை போடுகிறோமே !!! இருமன உறவாம் திருமண உறவு என்பதிலிருந்து 'திரு'வை நம் சமுதாயம் உதிர்த்து வெகு காலம் ஆகிவிட்டது. இப்போது மண உறவு என்பதில் 'மண' என்பதை உதிர்க்கும் காலம் தொடக்கம். வெறும் உறவு மட்டுமே மிச்சம். உறவு என்றால் மன உறவு அல்ல. வெறும் உறவு மட்டுமே. அதாவது மனம் சேராத உடல் சேர்வது. யூட்யூபில் வந்த ஒரு காட்சி நேற்றுக் கண்டேன். காணும் எல்லாவற்றிலும் நகைச்சுவையை மட்டும் தேடி … Continue reading கேடு நோக்கிப் பீடு நடை

சூரியன் விசில் ஊதுனா என்ன தப்பு?

சூரியன் விசில் ஊதுனா என்ன தப்பு? தம்பி, ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கே, இருந்திட்டுப்போ. இந்தா பால் கொண்டாறேன். ஐயோ பாட்டி, ஏன் என்னத்தம்பிங்குற. எனக்கும் அவ்வளவு வயசா ஆயிடுச்சு? சரிடா சுரேசு, இந்த பெஞ்சில ஒக்காரு. இரு பாட்டி, எங்கப்பன் பிரான்ஸ்ல இருந்து கூப்புடுறான், நா பேசிட்டு வந்துர்றேன். என்னடா இது ரெண்டு போனு இருக்கா? ஒன்னு இந்தப் பாட்டிக்கு கொடேன். எது வெல கம்மியோ அதக்குடு. என்னடா பேசிக்கிட்டு இருக்கும்போதே போறியே. இரு பாட்டி, … Continue reading சூரியன் விசில் ஊதுனா என்ன தப்பு?

Coining New Words in Tamil – தமிழில் புதுச் சொல் புனைதல்

Coining New Words in Tamil - தமிழில் புதுச் சொல் புனைதல் This is a repost, the original of which was posted by me in one Face Book group when I was one of its thousands of members. I am not a member there for many months now. As this post which was originally written by me ex … Continue reading Coining New Words in Tamil – தமிழில் புதுச் சொல் புனைதல்

இப்படித்தான் உன்னை நேசிக்கிறேன்

இப்படித்தான் உன்னை நேசிக்கிறேன் **** நான் உன்னை நேசிக்கிறேன். நீ எங்கிருந்தாய் என்பதை அறியாமல், எப்போது எப்படி இருந்தாய் என அறியாமல் நான் உன்னை நேசிக்கிறேன். பிரச்சினையும் கர்வமும் இன்றி இயல்பாய், இலேசாய் உன்னை நேசிக்கிறேன். வேறு எப்படி நேசிக்க இயலும் என்று அறியாமல் இப்படித்தான் உன்னை நேசிக்கிறேன், இங்கு நான் நீ என்ற வேறுபாடற்று, என் நெஞ்சில் உன் கை என் கையாக என் உறக்கம் உன் கண் தழுவ நெருக்கத்துடன் இத்தனை நெருக்கத்துடன் இப்படித்தான் … Continue reading இப்படித்தான் உன்னை நேசிக்கிறேன்

இனிய ஆங்கில புத்தாண்டு(2018) வாழ்த்துக்கள் நண்பர்களே!!!

புது வருடம் சிறப்பாய் இருக்க சில குறிப்புகள்  1.ஒன்றோ இரண்டோ குரூப்பில் மட்டும் இருந்து கொண்டு மீதி அனைத்து வாட்சப் குழுக்களிலிருந்து வெளியே வந்து விடுங்கள். 2. முகநூல், வாட்சப், ட்விட்டர் என்று அனைத்திற்கும் நாள் ஒன்றிற்கு அரைமணி மேல் செலவழிக்காதீர்கள்.அபிமான பதிவாளர்களை மட்டும் தேடிப்படித்து வெளியே வந்து விடுங்கள். 3. ஞாயிற்றுக்கிழமை தோறும் செல்போனை அணைக்கும் வழக்கத்தை முயற்சித்து பாருங்கள்.  4. இந்துக்களாக இருப்பின்,மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமையாவது, குடும்பத்துடன் ஏதோ ஒரு புராதன கோயிலுக்கு (செல்போனை … Continue reading இனிய ஆங்கில புத்தாண்டு(2018) வாழ்த்துக்கள் நண்பர்களே!!!

எங்கே_போய்க்_கொண்டிருக்கிறோம் ???

மறுபதிவு இக்கட்டுரை வாசிப்பது உங்கள் மன அமைதிக்குக் கேடு விளைவிக்கும். எங்கே_போய்க்_கொண்டிருக்கிறோம் ??? குடியரசு நாட்டில் நாம் “குடி”மக்கள் "மது நாட்டுக்கு வீட்டுக்கு கேடு" என்று விளம்பரத்துடன், மதுவை மக்களுக்கு மிக அருகிலேயே கிடைக்கும் வசதிக்காக, நம் அரசாங்கமே முனைந்து அதை வியாபாரம் செய்கிறது. அரசுக்கு உரிமையான எந்த தொழிற்சாலையையும், நிறுவனங்களையும் விட அதிக வேகத்துடன் வளர்ந்து வரும் இத்துறை நம் மக்களை உண்மையில் "குடி"மக்களாக மாற்றியிருக்கிறது. நலிந்த மக்களுக்கு சேவை செய்ய பெரும் நிதி திரட்ட … Continue reading எங்கே_போய்க்_கொண்டிருக்கிறோம் ???

இலவச அழிப்பு – எதிர்காலம்

இலவச அழிப்பு: ********************* காலை ஏழு மணிக்கே மிக இருட்டிவிட்டது. இப்போதுதான் துணிகளை வாசலில் காயவைத்தேன். மீண்டும் நனையாமல் இருக்க துணிகளை எடுத்துவர, வாசல்பக்கம் சென்றேன். ஒரு பையன். பதின்மூன்று, பதினான்கு வயது இருக்கும். "அண்ணே இந்தப் பேப்பர் கட்டை மாடிப்படிக்குக் கீழே வச்சிட்டுப் போறேன். வந்து எடுத்துக்கிறேன்." என்றான். கீழே அமர்ந்து, கட்டைப் பிரித்தான். அது இப்பகுதியில் (மாம்பலம், சென்னை) போடப்படும் ஒரு இலவச வார பேப்பர். சிறு  விளம்பரங்களால் வரும் வருமானத்தை உன்னிட்டு 8 … Continue reading இலவச அழிப்பு – எதிர்காலம்

நமக்குள் அழகிய சக்திகளும் வலிமையான சக்திகளும் இருக்கின்றன.

நமக்குள் அழகிய சக்திகளும் வலிமையான சக்திகளும் இருக்கின்றன. இது இறைவனுக்கு மிக நெருக்கமான செயின்ட் ஃப்ரான்சிஸ் அவர்கள் சொன்ன மிகப் பெரிய உண்மை. அத்தகைய சக்திகளை வெளிப்படுத்தி அதனால் நம் கனவுகளை உண்மையான சாதனைகளாக மாற்ற, நாம் நமக்கு நம்மோடும், இந்த உலகோடும் மற்றும் இறைவனோடும் உள்ள உறவினை சரியாக அறிய வேண்டும். யானையைக் காண இயலாத குருடர்கள் தொட்டு உணர்ந்தும் யானையை சரியாக அறியாத முயற்சியைப் போல, நாமும் எத்தனைதான் அறிவு முதிர்ச்சியோடு ஆன்மீக நூல்களைப் … Continue reading நமக்குள் அழகிய சக்திகளும் வலிமையான சக்திகளும் இருக்கின்றன.

புது பாரதத்தைப் படைப்போம் !!!

வாழ்க இந்தியா ! புது பாரதத்தைப் படைப்போம் !!! அன்று சுதந்திரம் நாட்டுக்காக தம்மையிழந்த தலைவர்களால் கிடைத்தது. ஆனால் உண்மையான சுதந்திரம் இன்னும் கிடைத்தபாடில்லை. பரம ஏழையும் யாரையும் தன் உணவுக்காக, உடைக்காக, வாழ்க்கை நடத்துவதற்காக உழைப்பைத் தவிர, வேறு எதையும், யாரையும் சார்ந்திருக்காத நிலையை நாடுமுழுதும் அடைந்தால்தான் சுதந்திரம் என்ற சொல் நிஜவாழ்வில் நிஜமாகும். தேர்ந்தெடுத்தவர்களையே, தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் ஏமாற்றுவதே நடைமுறையாகிப் போனதே ! மக்களின் கண்திறந்தால் மட்டுமே உண்மையான சுதந்திரம் கிடைக்கும். இதற்கு, நாமெல்லாம் … Continue reading புது பாரதத்தைப் படைப்போம் !!!