நெஞ்சில் ஓடும் நதி

நெஞ்சில் ஓடும் நதி ஒருமுறை திருச்சியில் ஒரு திருமணத்திற்குச் செல்ல, முதல் நாள் காலையில் பஸ் பிடிக்க தாம்பரம் சென்றேன். மாலைக்குள் என் சகோதரர் வீட்டுக்குச் சென்று பின்னர் காலையில் நண்பர் வீட்டுத் திருமணத்திற்குச் செல்லலாம் என்று முடிவு செய்திருந்தேன். ஒரு மணி நேரம் ஆயிற்று. ஒரு வண்டியிலும் இடம் கிடைக்கவில்லை. சீக்கிரம் போகலாம் என்று நினைத்து தாம்பரத்துக்கு வந்திருக்காமல் நேரடியாகவே கோயம்பேடு நிலையம் சென்று வண்டியைப் பிடித்திருக்கலாம் என்று தோன்றியது. உண்மையில் அன்று திருச்சிக்கு அன்றே … Continue reading நெஞ்சில் ஓடும் நதி

விசா (தொடர்ச்சி-4 கடைசிப் பகுதி)

விசா (தொடர்ச்சி-4) (7) அடுத்த நாள் நந்துவின் அப்பா சுதாவிடம் “உன்னோட கொஞ்சம் பேசலாமா சுதா” என்று கேட்டார். என்ன மாமா இப்படிக் கேட்கிறேள், கல்யாணத்துப் பின் நீங்க என் அப்பாவுக்குச் சமானம். நமஸ்காரம் பண்றேன் மாமா. வாடா நந்து, நமஸ்காரம் பண்ணு என்றாள். நமஸ்கரித்தார்கள். “என்னை மன்னிச்சிடுங்க மாமா, நான் ரொம்ப கலாட்டா பண்ணிட்டேன்ல. எனக்குக் கொஞ்ச வருஷமாவே நம்ம பழக்க வழக்கங்கள் பிடிக்கிறதில்லை. நம்ம ரிலிஜன்லே ஒரே மேல் ஷாவினிஸம் எல்லா ரிச்சுவல்சிலும் இருக்கு. … Continue reading விசா (தொடர்ச்சி-4 கடைசிப் பகுதி)

விசா (தொடர்ச்சி-3)

விசா (தொடர்ச்சி-3)   (6) விடிகாலையில் மங்களஸ்நானம் சரியாக நடந்தது. பெண்ணும் மாப்பிள்ளையும் சமர்த்தாக தலையில் எண்ணெய் பெரியவர்களைத் தேய்க்கவிட்டு “கங்கே ச யமுனேசைவ கோதாவரி ச சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி” ஜலத்தால் குளித்து முடித்தார்கள். சுதா தன் தலையில் ஷாம்பூ தேய்த்துக் குளித்தாள். “இதுலே ஒண்ணும் முட்டை கலப்பில்லையேடி” என்று கேட்ட தன் தாயைப் பார்த்து முறைத்தாள். கௌரி பூஜையும் நடந்தது. சாஸ்திரி சுதாவை கண்டு கொள்ளவே இல்லை. காசியாத்திரைக்குக் கிளம்பினான் மாப்பிள்ளை. எல்லோரும் … Continue reading விசா (தொடர்ச்சி-3)

விசா (தொடர்ச்சி-2)

விசா (தொடர்ச்சி-2) (5) பார்க்கில் இருட்டாகத் தான் இருந்தது. ஒரு பக்கம் மட்டும் வெளிச்சம் இருந்தது. சுதாவின் அப்பா தடுக்கித் தடுக்கி நடப்பதைப் பார்த்த நந்துவின் அப்பா, “வாரும் அங்கே ஒரு பெஞ்ச் இருக்கு. அங்கே போய் பேசலாம்” என்றார். “உம்.” “என்ன ஆச்சு, உடம்பு சரியில்லையா, சாஸ்திரி நிறைய சம்பாவனை கேட்டுட்டாரா. அவர் ஃபோன் நம்பர் இருக்கா, வரச் சொல்லுங்கோ, நான் அவருக்கும் சேர்த்து பணம் தரேன். எங்க சாஸ்திரிக்கு எவ்வளவு தர்ரேனோ அதையே இவருக்கும் … Continue reading விசா (தொடர்ச்சி-2)

விசா (தொடர்ச்சி-1)

விசா (தொடர்ச்சி-1) (4) அன்று இரவு சுதாவின் அப்பா பலதடவை ஸ்வாமிமலை ஸ்வாமியை நினைக்க வேண்டி வந்தது. “அப்பா இங்கே வா, அம்மா இங்கே வா, இப்படி உக்காருங்க. முக்கியமா பேசணும். அரை மணி நேரம்.” படபடப்பாக அப்பாவும், சாதாரணமாக அம்மாவும் வந்து அமர்ந்தனர். அம்மா படபடப்பை எல்லாம் துடைத்துப்போட்டு பல வருஷங்கள் ஆகிவிட்டது. அடங்காத இந்தப் பெண்ணை ஒரு ஆணிடம் பிடித்துக் கொடுத்தால் போதும் என்ற நிலை ரொம்ப நாட்களுக்கு முன்னரே வந்துவிட்டது. இன்னும் ஒரு … Continue reading விசா (தொடர்ச்சி-1)

விசா (ஒரு சிறுகதை)

(1) எதுக்கப்பா இவ்வளவு சாஸ்திரிகள்? கல்யாணம்னா இவ்வளவு பேர் வேணுமா? என்ன பண்ணப் போறா இவா? ரொம்ப சிம்பிள் கல்யாணம்தான்னு வேற நீ சொன்னே.” “இல்லடா செல்லம். இது மாப்பிள்ளை வீட்டு ஏற்பாடு. வேத பாடசாலையிலேந்து நாப்பது ஸ்டூடண்ட்ஸ் கூப்பிட்டிருக்கா, இரண்டு மணி நேரம் கோரஸா கணபாராயணம் பண்ண.” “என்ன இது. என்னக் கேட்காம ? நான் நந்துவைக் கேட்கிறேன்.” “சுதா, அதெல்லாம் செய்யாதேம்மா. நல்லதுதானே பண்றா. நமக்கு இப்படித் தோணாமல் போயிடுத்தே என்று நான் வெட்கப் … Continue reading விசா (ஒரு சிறுகதை)

மிக்க முயற்சி செய்து தவமிருந்து பெற்ற சென்னை வெள்ளம்

மிக்க முயற்சி செய்து தவமிருந்து பெற்ற சென்னை வெள்ளம் (02.12.2015) January 23, 2016 nytanaya அன்று பகீரதன் தவம் செய்து இறங்கியது கங்கைநதி. சென்னையில் நாங்கள் கடந்த 18 வருடங்களில் மூன்று, நான்கு வருடங்களில் தண்ணீரை விலைகொடுத்து வாங்கி ஆழ்நிலைநீர்த்தொட்டியில் சேமித்து வைக்க நேர்ந்தது. அத்தகைய நேரங்களில் தண்ணீருக்காகத் தவமிருந்த சென்னைவாசிகளின் தவம் மிகப்பெரிய அளவில் நிறைவேறியது. மூழ்கியிருந்த வீட்டினில் ஊறிப்போன பொருட்களுடன், இருட்டில் புலம்பெயர்ந்து, உயிர்காத்து மீண்டுவந்திருக்கும் பலரில் நானும் ஒருவன். சிற்றளவு தண்ணீர்தான் வீடுபுகும் … Continue reading மிக்க முயற்சி செய்து தவமிருந்து பெற்ற சென்னை வெள்ளம்

அன்றொரு நாள் கோபாலும் நானும்

அன்றொரு நாள் கோபாலும் நானும் மணி 9.20 நான் உள்ளே வரும்போதே உள்ளே சோனாவைத் தவிர இன்னொரு நபரைப் பார்த்தேன். என்றும் 10.30 க்கு மேல் வரும் கோபால்தான் இன்று சீக்கிரம் வந்து விட்டான். ஏதாவது ஒரு வாரம் அல்லது பத்து நாள் லீவ் கேட்பானோ, அப்படி வந்து கேட்டால் கண்டிப்பாய் இருக்க வேண்டியதுதான் என்று தோன்றியது. அவன் மனதுக்குக் கேட்டிருக்கவேண்டும். என் அறைக்கு வந்தான். “சார், குட் மார்னிங் சார். நான் நீங்க சொன்ன மாதிரி … Continue reading அன்றொரு நாள் கோபாலும் நானும்

அலுவலகத்தில் ஒரு நாள்

அலுவலகத்தில் ஒரு நாள் என் கேபினில் அமர்ந்தேன். ஏதோ நடக்கப் போகிறது என்று உள்ளுணர்வு சொன்னது. மணி 8.45 காலை.  சோனா சுத்தம் செய்துவிட்டு “ சார், நான் டிபன் சாப்ட்டு வரேன்” என்று வெளியே போனார். அடடா, ஒரு டீ வாங்கிவரச் சொல்லி இருக்கலாம். வேறு யாரும் ஆபீஸில் இல்லை. ஏதாவது டிவிஷனல் ஆபீஸிலிருந்து கால் வரலாம். மார்ச் மாதம் வேறு. எனவே என் சீட்டில் அமர்ந்தேன். சோனா வந்தவுடன் வெளியில் சென்று டீ சாப்பிடலாம் … Continue reading அலுவலகத்தில் ஒரு நாள்