சர்க்கரை இல்லாத சாத்துக்குடிச் சாறு

சர்க்கரை இல்லாத சாத்துக்குடிச் சாறு என் மனைவியும் நானும் நான்கு ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் உள்ள என் மைத்துனர் வீட்டுக்குச் சென்றிருந்தோம். அங்கிருந்து ஒருநாள் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூர் சென்றோம். அன்று என் மனைவி வழக்கம்போல கிருத்திகை விரதம். முழுநாள் பட்டினி. என் மைத்துனரின் மனைவி வற்புறுத்தியபின் சாத்துக்குடிச் சாறு குடிக்க மனம் ஒப்பினார். என் மைத்துனரின் மனைவி கடைக்காரரிடம் என் மனைவி விரதம் என்றும் அதனால் ஜூஸரை நன்கு சுத்தம் செய்தபின் ஜூஸ் போடுமாறு சொன்னார். … Continue reading சர்க்கரை இல்லாத சாத்துக்குடிச் சாறு

About this blog   இந்த வலைப்பக்கத்தைப் பற்றி

அன்புள்ள சகோதர சகோதரிகளே, வணக்கங்களும் வாழ்த்துக்களும். தமிழ்நாட்டில், தஞ்சையில் பிறந்த ஒரு சராசரி மனிதனின் வலைப்பக்கம் இது. நான் முதலில் 2015 ஆம் ஆண்டு NYTANAYA என்னும் வலைப்பக்கத்தைத் தொடங்கினேன். அதன் முதல் பதிவு 22.01.2016 அன்று எழுதப்பட்டது. (https://nytanaya.wordpress.com) அதன் பிறகு இன்றுவரை ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் சுமார் 1000க்கு மேல் பதிவுகள் எழுதப்பட்டு, மற்ற வலைப்பக்கங்களில் எளிதில் கிடைக்கக்கூடிய பொருளைக் கொண்ட சுமார் 200 பதிவுகள் நீக்கப்பட்டபின், தற்சமயம் அந்த வலைப்பக்கம் 870 … Continue reading About this blog   இந்த வலைப்பக்கத்தைப் பற்றி

ஒரு சாமானியனின் வரலாறு – 31

உங்கள் இதயத்தை வருடிக் கொடுங்களேன் ! நம் நாட்டில் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை பெரு நகரங்களில் வேகமாக வளர்ந்து  கொண்டிருக்கிறது. சிறு நகரங்களில் அவ்வளவு வேகம் இல்லை. ஆனாலும் பல நகரங்களில், புற நகர்ப்பகுதியில் (extensions) பார்த்தால், சொந்த வீடுகளே, தாங்கள் வாழும் முதியோர் இல்லமாய் மாறிவிட்டிருக்கின்றன. இது ஒரு துயரமான “முன்னேற்றம்.” காற்றுக்கும், நீருக்கும் அடுத்தபடியாக உலகிலேயே மிக முக்கியமான ஒன்று உண்டென்றால் அது அன்புதான்.  மனிதர் வாழ்விலும் அதுவே மிக முக்கியமான தேவை. இதை … Continue reading ஒரு சாமானியனின் வரலாறு – 31

ஒரு சாமானியனின் வரலாறு – 30

*யாருக்கு கண் தெரியவில்லை ? * உண்மை நிகழ்ச்சி – கணபதி சுப்ரமணியன் ************* என் நண்பர் கண்ணன் என் கல்லூரித்தோழன், பின்னர் இந்தியன் வங்கியிலும் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். அவர் திருமணத்திற்கு நானும், என் திருமணத்திற்கு அவரும்  சென்று பங்கேற்றோம். நான் 1976இலும் கண்ணன் அனேகமாக 1978இலும் இந்தியன் வங்கியில் சேர்ந்தாலும், கல்லூரிக்குப்பின் தொடர்பு விட்டுப்போயிற்று. நான் 1990இல் இரண்டாம் முறை வட இந்தியா பணிக்குப்பின் திரும்பிவந்தபோது அவர் இந்தியன் வங்கியில்தான் இருக்கிறார் என்று அறிந்தேன். இருப்பினும் … Continue reading ஒரு சாமானியனின் வரலாறு – 30

ஒரு சாமானியனின் வரலாறு – 29

அன்றொரு நாள் கோபாலும் நானும் மணி 9.20 நான் உள்ளே வரும்போதே உள்ளே சோனாவைத் தவிர இன்னொரு நபரைப் பார்த்தேன். என்றும் 10.30 க்கு மேல் வரும் கோபால்தான் இன்று சீக்கிரம் வந்து விட்டான். ஏதாவது ஒரு வாரம் அல்லது பத்து நாள் லீவ் கேட்பானோ, அப்படி வந்து கேட்டால் கண்டிப்பாய் இருக்க வேண்டியதுதான் என்று தோன்றியது. அவன் மனதுக்குக் கேட்டிருக்கவேண்டும். என் அறைக்கு வந்தான். “சார், குட் மார்னிங் சார். நான் நீங்க சொன்ன மாதிரி … Continue reading ஒரு சாமானியனின் வரலாறு – 29

ஒரு சாமானியனின் வரலாறு – 28

மிக்க முயற்சி செய்து தவமிருந்து பெற்ற சென்னை வெள்ளம் January 23, 2016 nytanaya நான் என் குடும்பம் அன்று பகீரதன் தவம் செய்து இறங்கியது கங்கைநதி. சென்னையில் நாங்கள் கடந்த 18 வருடங்களில் மூன்று, நான்கு வருடங்களில் தண்ணீரை விலைகொடுத்து வாங்கி ஆழ்நிலைநீர்த்தொட்டியில் சேமித்து வைக்க நேர்ந்தது. அத்தகைய நேரங்களில் தண்ணீருக்காகத் தவமிருந்த சென்னைவாசிகளின் தவம் மிகப்பெரிய அளவில் நிறைவேறியது. மூழ்கியிருந்த வீட்டினில் ஊறிப்போன பொருட்களுடன், இருட்டில் புலம்பெயர்ந்து, உயிர்காத்து மீண்டுவந்திருக்கும் பலரில் நானும் ஒருவன். சிற்றளவு தண்ணீர்தான் வீடுபுகும் … Continue reading ஒரு சாமானியனின் வரலாறு – 28

ஒரு சாமானியனின் வரலாறு – 27

ஒரு சாமானியனின் வரலாறு – 27 ஃபஸ்லுர் ரஹ்மானும் ஹாஸன் மரைக்காயரும் உயர்திரு ஹாஸன் மரைக்காயர் இன்று திடீரென்று இவரது நினைவு வந்தது எனக்கு. நான் நெல்லிக்குப்பம் கிளையில் பணி புரிந்தபோது என்னைக் கவர்ந்த நண்பர்களுள் ஒருவர் இந்தப் பெரியவர். உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஆக்ரா கிளையில் இருந்து நான் மாற்றல் ஆகி 1985ஆம் ஆண்டு மே மாதம் நெல்லிக்குப்பம் கிளையில் சேர்ந்தேன். இங்கு வரும்வரை ஏதோ ஒரு கிராமத்தில் உள்ள கிளை என்று நினைத்திருந்தேன். இங்கே வந்ததும் … Continue reading ஒரு சாமானியனின் வரலாறு – 27

ஒரு சாமானியனின் வரலாறு – 26

ஒரு சாமானியனின் வரலாறு – 26 அலுவலகத்தில் ஒரு நாள் என் கேபினில் அமர்ந்தேன். ஏதோ நடக்கப் போகிறது என்று உள்ளுணர்வு சொன்னது. மணி 8.45 காலை.  சோனா சுத்தம் செய்துவிட்டு “ சார், நான் டிபன் சாப்ட்டு வரேன்” என்று வெளியே போனார். அடடா, ஒரு டீ வாங்கிவரச் சொல்லி இருக்கலாம். வேறு யாரும் ஆபீஸில் இல்லை. ஏதாவது டிவிஷனல் ஆபீஸிலிருந்து கால் வரலாம். மார்ச் மாதம் வேறு. எனவே என் சீட்டில் அமர்ந்தேன். சோனா … Continue reading ஒரு சாமானியனின் வரலாறு – 26

ஒரு சாமானியனின் வரலாறு – 25

ஒரு சாமானியனின் வரலாறு – 25 ----------------------------------------- அன்பு எங்கே கிடைக்கிறது ? காற்றுக்கும், நீருக்கும் அடுத்தபடியாக உலகிலேயே மிக முக்கியமான ஒன்று உண்டென்றால் அது அன்புதான். மனிதர் வாழ்விலும் அதுவே மிக முக்கியமான தேவை. இதை நாம் ஒருவரிடத்தில் ஒருவர் பரிமாறிக் கொள்ளுவதும் மிக முக்கியம். ஆனால் இது மிகவும் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு ஒரு முக்கியமான காரணம் பெற்றோரிடத்தில் பிள்ளைகள் வைக்கும் அன்பு குறைவதுதான். அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. “திரவியம் தேடு”வதற்காக … Continue reading ஒரு சாமானியனின் வரலாறு – 25