இறைசக்தியும் நம் சக்தியும் – 17

அன்பே எல்லாம் என் வாழ்வில் நான் கற்றுக் கொண்டது  அன்பே எல்லாம் என்பதைத்தான். அன்பினால்தான் இந்த உலகம் செய்யப்பட்டுள்ளது. குழந்தையாகவும், சிறு பிராயத்திலும், நமக்கு நம் பெற்றோர், நம் ஆசிரியர், நம் உற்றோர் ஆகியோர் அளித்த அன்பான அணுகுமுறையால்தான் நாம் வளர்ந்துள்ளோம். அவ்வாறு அன்பு செலுத்தும்போது அவர்கள் அடைந்த மகிழ்ச்சிதான் அளவில்லாதது என்பதை நாம் பிறரிடம் அன்பு செலுத்தும்போதுதான் உணரமுடியும். அந்த அன்புதான் நல்ல மனம் படைத்தவர்களிடமிருந்து இதமான ஒரு வருடலாக, மிகுந்த வெப்பத்தில் வாடும்போது எங்கிருந்தோ … Continue reading இறைசக்தியும் நம் சக்தியும் – 17

Advertisements

இறைசக்தியும் நம் சக்தியும் – 16

தன்னம்பிக்கையே முதல் கடவுள்   என் தந்தை எனக்கு இதைப் பற்றிப் போதித்தவை: தன்னம்பிக்கை என்பதே நமக்கு முதல் கடவுள் என்றும், நம் மதத்தின் கடவுள் அடுத்தபடிதான். தன்னம்பிக்கையின்றி, நம்பிக்கையின்றி எந்தப்பிரார்த்தனையும் நிறைவேறாது. வெறும் பிரார்த்தனை மட்டும் காரியங்களைச் சாதிக்கப் போதாது. தன்னம்பிக்கையுடன் செய்யும் முயற்சிதான் வெற்றிகொடுக்கும். நாம் மனம் தளரும்போது, அச்சமுறும்போது, தன்னம்பிக்கை பலமிழக்கும்போது நம்மைவிட மிக மிக மிக உயர்ந்த எல்லாம் வல்ல சக்தியான அந்த இறைவனை வேண்டினால், நமக்குத் தேவையான நம்சக்திக்கும் மீறிய … Continue reading இறைசக்தியும் நம் சக்தியும் – 16

இறைசக்தியும் நம் சக்தியும் – 15

மதத்தால் மனிதரில் வேற்றுமை பாராட்டக் கூடாது மேலும் என் இளம்பிராயத்தில், என் வீட்டிற்கு வரும் என் தந்தையின் நண்பர்கள் எல்லா மதத்தினரும் ஆவர். எனக்குத் தெரிந்து இரு கிறிஸ்தவர்களும், இரு முகம்மதியர்களும், மூன்று இந்துக்களும் அவருக்கு மிக நட்பாக இருந்தனர். அவர்களில் ஒருவரோ அல்லது இருவரோ அல்லது மூவரோ வந்து எங்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து நீண்ட நேரம் என் தந்தையுடன் உரையாடும் போது பேசப்படும் தர்க்கப்பொருள் பெரும்பாலான நேரங்களில், பிறர் மீது அன்பு வைத்து நாம் … Continue reading இறைசக்தியும் நம் சக்தியும் – 15

இறைசக்தியும் நம் சக்தியும் – 14

21 நாள் ஜுரத்தைத் தீர்த்த அன்பு முன்னொரு சமயம் நான் நெல்லிக்குப்பத்தில் பணிபுரிந்தபோது, நான் நோய்வாய்ப்பட்டு நீண்ட நாள் கழித்தும் சரியாகாத போது என் அலுவலகத்தில் பணியாற்றிய ஒரு கிறிஸ்தவ அன்பரும், அவருடன் ஊழியத்துக்குப் போகும் அவரது நண்பரொருவரும் என் வீட்டிற்கு வந்து என் அனுமதியுடன் தமிழில் கிறிஸ்துவிடம் பத்து நிமிட பிரார்த்தனை செய்ய, எனக்கு வெகு அதிகமாக வியர்வைப் பெருக்கு ஏற்பட்டு 24 நாளில் பல மருந்துகள் உட்கொண்டும் தீராத என் நோய் அப்போதே விலகிவிட்டது. பின்னாட்களில் … Continue reading இறைசக்தியும் நம் சக்தியும் – 14

இறைசக்தியும் நம் சக்தியும் – 13

நானும் அவ்வாறே முயற்சி செய்ய இறைவன் பணித்தார் நாம் ஏன் அவ்வாறு செய்துபார்க்கக் கூடாது என்று யோசித்து, நான் ப்ராணாயாமமும் அந்த நம்பிக்கைகற்பனையையும் கலந்து தியானிக்க முடிவு செய்தேன். தினமும் 30 முறை ப்ராணாயாமம் செய்து, உட்செல்லும் மூச்சுக்காற்றின் மூலம் இறைசக்தி உடலில் ஒவ்வொரு பாகத்திலும் வியாபிப்பதாக தியானித்து, அது நோயின் காரணங்களை முற்றிலும் போராடி அழிப்பதாக நம்பிக்கையுடன் இரு மாதங்கள் செய்துகொண்டிருந்தேன். நோய் தீர்த்த இறைவன் விடுமுறையில் வந்தபோது மருத்துவப் பரிசோதனை செய்ததில் ஏதோ பிழையிருக்கிறது, … Continue reading இறைசக்தியும் நம் சக்தியும் – 13

இறைசக்தியும் நம் சக்தியும் – 12

  புற்றுநோயை மாயமாக்கிய இறைவன் இன்னொரு நிகழ்வு: மார்பகப் புற்று நோய் என்று மருத்துவர்களால் முடிவுசெய்யப் பட்டு, தன்னால் இன்னும் ஆறு மாதம் அல்லது அதிகபட்சம் ஒரு வருடம் மட்டுமே உயிர்வாழ முடியும் என்ற நிலையில் இருந்த ஒரு பெண், இயற்கையில் மிகுந்த இறை நம்பிக்கை கொண்டவள். மேலும் அவள் மருத்துவச் செலவு செய்ய பொருளாதார வசதி படைத்தவளல்லள். மிகுந்த நம்பிக்கையுடன் தன் உச்சந்தலை வழியே வெள்ளை ஒளியாக இறைசக்தி இறங்குவதாகவும், அது கொஞ்சம் கொஞ்சமாக தலையிலிருந்து … Continue reading இறைசக்தியும் நம் சக்தியும் – 12

இறைசக்தியும் நம் சக்தியும் – 11

  முறையாக ப்ராணாயாமம் தொடர்ந்து செய்தால் ஏற்படும் பயன்கள் குறித்து நூல்களில் படித்தும் பலசமயங்களில் தொடர்ந்து செய்தும் அறிந்திருந்தேன். மேலும்  Norman Vincent Peale, Napolean Hill மற்றும் Robert Schuller இவர்கள் எழுதி உலகமுழுதும் கோடிக்கணக்கில் விற்பனயான Positive Thinking குறித்த நூல்களைப் படித்திருந்தேன். அதில் Norman Vincent Peale அவர்களின் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த இரு நிகழ்வுகள் சிறுவயதுமுதலே என் நினைவில் இருந்துவந்துள்ளன. புயலில் காத்த இறைவன் ஒரு நிகழ்வு: தினமும் தனது 50 ஆடுகளை … Continue reading இறைசக்தியும் நம் சக்தியும் – 11

இறைசக்தியும் நம் சக்தியும் – 10

சீர்காழியில் அருளிய இயேசுநாதர் நான் சீர்காழியில் பணிபுரிந்த போது, சோதனையான ஒரு தருணத்தில், திடீரென்று என்னிடம் ஒரு நோயின் அடையாளங்கள் தோன்றியபோது, அது என்னையும் என் குடும்பத்தாரையும் முற்றிலுமாக வாழ்க்கையில் புரட்டிப் போட்டு விடக்கூடிய சோதனையாக நான் உணர்ந்தேன். என் சோதனைகள் தீர்வதற்கு, என் கடன்களைத் தீர்ப்பதற்கு, குடும்பத்தில் எனக்கிருக்கும் கடமைகளை ஆற்றுவதற்கு , நான் என் வேலையிலிருந்து விடுதலை பெறுவதுதான் வழி என்றும் அதன்மூலம் கிட்டக்கூடும் பணிமுறிவுப் பணத்தினைக் கொண்டுதான் விரைவில் என் கடன்களைத்தீர்க்க வேண்டும் … Continue reading இறைசக்தியும் நம் சக்தியும் – 10

இறைசக்தியும் நம் சக்தியும் – 9

சோதனையில் தப்பிக்க வைத்த ஆஞ்சநேயர் ஒருமுறை 2003ஆம் ஆண்டில் சென்னையில் என் அலுவலகத்தில் என் பொறுப்பில் இருந்து எனக்குத் தெரியாமல் மிக முக்கியமான கோப்பு (Corporate Tax Return/Appeals file) ஒன்று தொலைந்து போய்விட, கோப்பைத் தேட ஆரம்பித்து 40 நாட்களாகியும் கிடைக்காமல் போய் அது தொலந்துதான் போய் விட்டது என்ற முடிவில் அந்தக் கோப்பில்லாமல் எப்படி அந்தப் பிரச்சினையை சமாளிக்கப்போகிறோம் என்றே நாங்களும், எங்கள் கணக்கு மற்றும் சட்ட வல்லுனர்களும் விழி பிதுங்கிப்போக, அதற்குப் பொறுப்பதிகாரியான … Continue reading இறைசக்தியும் நம் சக்தியும் – 9