யோகசிம்மபுத்ரன் சரிதை – 098 – தரங்கம்பாடி 13 “அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 12 (இறுதிப்பகுதி)

“அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 12 (இறுதிப்பகுதி) தொடர்ச்சி: மறுநாள் காலையில் குளித்து பூஜை செய்ய கொஞ்சம் தாமதமாகிவிட்டது. அன்று கந்தசஷ்டிக் கவசம் அமர்ந்து சொல்லவில்லை. பாண்ட் ஷர்ட் போட்டு ஆஃபீஸ் கிளம்பியபோது சொல்லிக்கொண்டே கிளம்பினேன், சொல்லிக்கொண்டே என் அபார்ட்மென்ட் வெளியே வராந்தாவில்  செல்கையில் என் அருகில் இருந்த அபார்ட்மெண்டுகளில் இருந்த கிறிஸ்தவ குடும்பத்தினர் பார்த்தனர். சொல்லிக்கொண்டே மாடிப்படிகளில் இறங்கிச் சென்றேன். அங்கிருந்த ஆட்டோவில் அமர்ந்ததும் ஆட்டோக்காரர் கிளப்பியதும் வண்டியில் கந்தசஷ்டிக்கவசம் ஒலிக்க … Continue reading யோகசிம்மபுத்ரன் சரிதை – 098 – தரங்கம்பாடி 13 “அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 12 (இறுதிப்பகுதி)

யோகசிம்மபுத்ரன் சரிதை – 097 – தரங்கம்பாடி 12 “அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 11

“அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” - 11 தொடர்ச்சி: “உண்மையில் மதம், கல்வி, பட்டறிவு, சிந்தனை ஞானம், அழகு, செல்வம், இவை ஆன்மீகப் பயணத்திற்கு தடைக்கற்கள். இவற்றைத் தாண்டிச் செல்ல வேண்டிய ஆன்மிகப் பயணத்தில் மிகச்சிலரைத் தவிர எல்லோரும் தடைக்கற்களையே பொக்கிஷமாகக் கருதி, அவற்றின் இன்பத்தைத் துய்த்து அந்த இன்பமே உலகென்று உழல்கின்றனர். “உள்ளத்தால் மட்டுமே இறைசக்தியை அணுகவேண்டும். உள்ளத்தில் மட்டுமே அன்புக்கு இடம் உண்டு. அன்பு இருந்தால்தான் அங்கே இறைசக்தியை உணரமுடியும். எனவே … Continue reading யோகசிம்மபுத்ரன் சரிதை – 097 – தரங்கம்பாடி 12 “அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 11

யோகசிம்மபுத்ரன் சரிதை – 096 – தரங்கம்பாடி 11 “அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 10

“அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” - 10 தொடர்ச்சி: “நீ நினைப்பது சரிதான். நீ எழுப்பிய வினாவும் சரிதான். நீ இன்னும் பலநூல்களைக் கற்றுப் படித்து உணரவேண்டும். இறைவன் உலகைப் படைத்து அந்த உலகமாகவே விளங்குகிறார். தன்னால் படைக்கப்பட்ட உயிருள்ள உயிரற்ற அசைவுள்ள அசைவற்ற அனைத்திலும் இறைசக்தி உள்ளது. மனிதர்களில் அவர்கள் மனத்துக்குள் இறைசக்தி இருக்கிறது. நீ படித்த நாராயண சூக்தத்தில் இறைவன் நடுநெஞ்சில் கவிழ்ந்த தாமரை மொக்கில் எப்போதும் ஒளிவிட்டுக் கொண்டிருக்கிறான் என்று … Continue reading யோகசிம்மபுத்ரன் சரிதை – 096 – தரங்கம்பாடி 11 “அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 10

யோகசிம்மபுத்ரன் சரிதை – 095 – தரங்கம்பாடி 10 “அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 9

“அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” - 9 தொடர்ச்சி: “நீ கூறியது எல்லாமே உண்மைதான். இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலுமே ஆழமான உண்மைகள் பல ஒளிந்துள்ளன. ஆனால் இவை எல்லாவற்றையும் ஐயமறத் தெரிந்துகொள்ள இப்போது உனக்குப் பக்குவம் இல்லை. தகுந்த பருவம் வரும்போது யாமே உனக்குத் தேவையான ரகசியங்களை வெளிப்படுத்துவோம். அதுவரை நீ பொறுமை காக்கவேண்டும்.” என்று கூறினார் சாமியின் உடலில் வந்த முருகன். அருகில் அமர்ந்திருந்த கணேசனுக்குப் பொறுமையில்லை என தோன்றியது. நீண்ட நேரம் … Continue reading யோகசிம்மபுத்ரன் சரிதை – 095 – தரங்கம்பாடி 10 “அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 9

யோகசிம்மபுத்ரன் சரிதை – 094 – தரங்கம்பாடி 9 “அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 8

“அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” - 8 தொடர்ச்சி: “காலையில் நான்கு மணிக்கு வந்த குருக்கள் இவரை அழைத்துச் சென்று முருகன் சன்னிதிக்கு அருகில் உள்ள ஒரு ரகசிய படிக்கட்டின்மூலம் இறக்கி கீழே கூட்டிச் சென்றார். அங்கேயும் ஒரு முருகன் சிலை இருந்தது. அச்சிலைக்கு நிறைய வியர்த்திருந்தது. “பெரியவரே, சிறிது நேரம் கண்களை மூடிக்கொள்ளுங்கள்” என்று கூறிய குருக்கள் அச்சிலை அருகில் சென்றார். இவர் தன் கண்களை கைகளை வைத்து மூடிக்கொண்டாலும், விரலிடுக்கின்வழியே பார்த்தார். … Continue reading யோகசிம்மபுத்ரன் சரிதை – 094 – தரங்கம்பாடி 9 “அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 8

யோகசிம்மபுத்ரன் சரிதை – 093 – தரங்கம்பாடி 8 “அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 7

“அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” - 7 தொடர்ச்சி: அவர் என்னிடம் சினங்கொள்ளாதது என்னை அடுத்த கேள்வி கேட்கத் தூண்டியது. நான் தொடர்ந்தேன். “சுவாமி, என் தந்தை என் சிறுவயதில் கூறியது இது. இது உண்மையா எனக் கூறுங்கள். “அச்சமயம் என் தந்தைக்குப் பரிச்சயமான ஒருவர் இறைநம்பிக்கை தவறானது என்ற கொள்கையுடைய கட்சிக்காரர். ஒருசமயம் அவருக்கு மிகுந்த நோய்வாய்ப்பட்டது, பலமுறை பல வைத்தியர்களிடம் காண்பித்தும் சரியாகவில்லை. உடல் மிகவும் தளர்ந்துகொண்டே வந்தது. அவர் கட்சிக்காகவே … Continue reading யோகசிம்மபுத்ரன் சரிதை – 093 – தரங்கம்பாடி 8 “அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 7

யோகசிம்மபுத்ரன் சரிதை – 092 – தரங்கம்பாடி 7 “அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 6

“அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” - 6 தொடர்ச்சி: கேள்விகள் பல மனத்தில் எழுந்தன. முதலில் என் வீட்டில் நான் படித்து விளங்கிக் கொள்ள இயலாத ஒரு விஷயம் பற்றிக் கேட்க அப்போது எனக்குத் தோன்றியது. நான் தொடர்ந்தேன். “முருகன் என்னும் உருவத்தில் இப்போது இவர்மூலம் பேசும் இறைவனே, என்னை மன்னித்து விடும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நான் இறைசக்தியை நம்புகிறேன். ஒரே ஒரு கடவுள் உண்டு என்பதை மனதார நம்புபவன். கடவுளுக்கு எல்லையற்ற … Continue reading யோகசிம்மபுத்ரன் சரிதை – 092 – தரங்கம்பாடி 7 “அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 6

யோகசிம்மபுத்ரன் சரிதை – 091 – தரங்கம்பாடி 6 “அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 5

“அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” - 5 தொடர்ச்சி: உள்ளே சென்றேன். கணேசன் சாமியிடம் “சார் இன்னிக்கு சீக்கிரம் வந்துட்டாரண்ணே. கொஞ்ச நேரம் இருந்து போகலாம்ல, இல்ல வேற யாரும் வர்ராங்களா” என்று கேட்டார். சாமி, “சார் எத்தனை நேரம் இருக்கணும்னு நெனைக்கிறாரோ இருக்கட்டுமே. வேற யாரும் வர்ரதா சொல்லல்ல. ஆனா கணேசா இங்க எல்லாரும் சொல்லிட்டுதான் வராங்களா என்ன?. யாரு வந்தாலும் பரவாயில்ல. சாருக்கு சொல்லி முடிச்சபிறகுதான் அவங்க யாரா இருந்தாலும் பாப்பேன். … Continue reading யோகசிம்மபுத்ரன் சரிதை – 091 – தரங்கம்பாடி 6 “அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 5

யோகசிம்மபுத்ரன் சரிதை – 090 – தரங்கம்பாடி 5 “அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 4

“அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” - 4 தொடர்ச்சி: அலுவலக வேலைகளில் அடுத்த இரண்டு மாதங்கள் சென்றுவிட்டன. ரீஜினல் ஆபீஸ் மீட்டிங், ப்ரான்ச் இன்ஸ்பெக்ஷன், ஆடிட் என்று நிறைய அதிகப்படி வேலைப்பளு. ஒரு ஞாயிறு மாலை தரங்கம்பாடி (தரங்கம்பாடிக்கு மினி டென்மார்க் என்று 1947 வரை ஒரு பெயருண்டு) கடற்கரையில் முக்கால்வாசி கடலில் மூழ்கிவிட்டும்கூட பூஜைகள் நடந்து கொண்டிருந்த மாசிலாமணிநாதர் கோவிலுக்குச் சென்று, சுவரைப்பிடித்தபடியே கடலுக்குள் இறங்கி நடந்து கோயில் உள்ளே சென்று சிவனை … Continue reading யோகசிம்மபுத்ரன் சரிதை – 090 – தரங்கம்பாடி 5 “அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 4