வரலாற்றுக் குறியீடுகள்

வரலாற்றுக் குறியீடுகள் வரலாறு. கி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன்  பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது. கி.மு. 470000 இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது. கி.மு. 50000  … Continue reading வரலாற்றுக் குறியீடுகள்

தமிழர் பெருமை

  தமிழர் பெருமை ********************************  கணக்கதிகார அளவுகள்  தமிழக கோயில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகலாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித் தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை மேற்கொண்டோமா? அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அறிய விசயத்தை உங்களுடன் பகிர்கிறேன். 1 - ஒன்று 3/4 - முக்கால் 1/2 - … Continue reading தமிழர் பெருமை

பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை – திருக்குறள் ஆராய்ச்சி

பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை - திருக்குறள் ஆராய்ச்சி நன்றி “சென்னை வானொலி நிலையம்” பதிவு செய்த நாள் : 18/10/2011 பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை – திருக்குறள் ஆராய்ச்சி தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள் காலத்தால் அழியாத கருவூலம்; உள்ளுதொறும் உள்ளுதொறும் உயர் எண்ணங்களை விளைவிக்கும் உயர்நூல்; எழுதப்பட்டது ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட அக்காலத்தில்தான் என்றாலும் எக்காலத்திலும் ஏற்றம் தரும் வாழ்வியல் இலக்கியம்; உலகிலே எண்ணற்ற நூல்கள் தோன்றிவரினும் உலக நூலாகக் கருதக்கூடிய ஒரே … Continue reading பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை – திருக்குறள் ஆராய்ச்சி

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா

கந்தர் அந்தாதியில் 54ஆம் பாடல் *************************************** திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே பொருள் : திதத்த ததித்த என்னும் தாள வரிசைகளை, தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற, உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும், மறை கிழவோனாகிய பிரம்மனும், புள்ளிகள் உடைய படம் விளங்கும், பாம்பாகிய ஆதிசேஷனின், முதுகாகிய இடத்தையும், இருந்த இடத்திலேயே நிலைபெற்று, (ஆனால்) அலை … Continue reading திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா

“லவ்”வெனப் படுவது யாதெனில் ……

“லவ்”வெனப் படுவது யாதெனில் ...... ***** Love – அன்பு, நேசம், மேவுதல், Love – காதல்(ஆழ்ந்த அன்பு), Love – நெயிற்சி (நண்பரிடம் அன்பு) Love – பக்கம் (மன அருகாமை) Possessive Love – பிணை Love – புகற்சி (=காதல்) Love – முழுவல் (முழுமை பெற்ற காதல்) Infatuation – மோகம், மயக்கம், கிறக்கம், பித்து (இருபாலருக்கிடையே ஏற்படுவது) – மோகம் என்பது உடல் கவர்ச்சியால் ஏற்பட்டு, வளர்ந்து காமம் என்னும் … Continue reading “லவ்”வெனப் படுவது யாதெனில் ……

சிலப்பதிகாரம் வரந்தரு காதை

சிலப்பதிகாரம் வரந்தரு காதை **************************************** பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின் தெய்வந் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின் பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொற் போற்றுமின் ஊனூண் துறமின் உயிர்க்கொலை நீங்குமின் தானஞ் செய்ம்மின் தவம்பல தாங்குமின் செய்ந்நன்றி கொல்லன்மின் தீநட் பிகழ்மின் பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின் அறவோ ரவைக்களம் அகலா தணுகுமின் பிறவோ ரவைக்களம் பிழைத்துப் பெயர்மின் பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஓம்புமின் அறமனை காமின் அல்லவை கடிமின் கள்ளுங் களவுங் காமமும் பொய்யும் வெள்ளைக் கோட்டியும் விரகினில் … Continue reading சிலப்பதிகாரம் வரந்தரு காதை

இலக்கியத்தில் மாலைமாற்றல்

இலக்கியத்தில் மாலைமாற்றல் **************************************** தமிழ் இலக்கண நூலான தண்டியலங்காரத்தில் சித்திரக்கவி வகைகள் குறிக்கப் பட்டிருக்கின்றன. "கோமூத் திரியே கூட சதுக்கம் மாலை மாற்றே யெழுத்து வருத்தனம் நாக பந்தம் வினாவுத் தரமே காதை கரப்பே கரந்துரைச் செய்யுள் சக்கரஞ் சுழிகுளஞ் சருப்பதோ பத்திரம் அக்கரச் சுதகமு மவற்றின் பால." சித்திரக்கவி வகைகளில் “மாலை மாற்றல்” என்று ஒரு வகையுண்டு. ஒரு செய்யுளின் முதலில் இருந்து படித்தாலும், கடைசியில் இருந்து படித்தாலும் ஒன்றாகவே வரும். (ஆங்கிலத்தில் வார்த்தைகளில் வரும் … Continue reading இலக்கியத்தில் மாலைமாற்றல்

தாய்

தாய் ********  தாய் என்ற தெய்வத்தையும் தமிழ் என்ற தாயையும் பிடித்தவர், தாயைப் பிரிந்த தனயனான சித்தர் பட்டினத்தார் பாடியதைப் படித்து, உள்ளமெனும் கோவிலிலே உயர்வான இடம் தந்து, உங்கள் தாயை வணங்குவீர். கைக்குட்டையுடன் இதைப் படிக்கவும், இன்றேல் தங்கள் கணினியோ அல்லது தங்கள் எழினியோ ஈரமாகி விடும். *************************************************************************************  தாயின் பிரிவைத் தாங்காத பட்டினத்தார் புலம்பி அழற்றியது ----------------------------------------------------------------------------------   ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு கைப்புறத்தில் … Continue reading தாய்

ஒப்புமை_இலக்கியம்

ஒப்புமை_இலக்கியம் தமிழில் ஒப்புமை இலக்கியத்தில் கரைகண்ட, கொழும்புவில் வாழ்ந்த உயர்திரு தமிழய்யா கலாநிதி க. கைலாசபதி அவர்கள் எழுதிய “ஒப்பியல் இலக்கியம்” நூலிலிருந்து ஒரு எடுத்துக் காட்டு. தமிழால் சுவாசிக்கும் தமிழன்பர்கள் சுவைக்க இப்பதிவு ******** இருகோட்பாடுகள் புதுமைப் பெண்ணைப் பற்றிப் பாடவந்த பாரதியார் வீராவேசத் தோடு ஓரிடத்திலே, "நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்" என்றார். தமது சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் வீர சுதந்திரம் வேண்டி நின்ற கவிஞர், தமிழ்ப் பெண்கள் "விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை விரைவில் … Continue reading ஒப்புமை_இலக்கியம்