தமிழ் அறிஞர் ம.லெ.தங்கப்பா: உள்ளத்தின் உண்மை ஒளி

சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தமிழ் அறிஞர்களுள் முக்கியமானவர் ம.லெ.தங்கப்பா. இவர், திருவருட்பா, முத்தொள்ளாயிரம், பாரதியார், பாரதிதாசன் பாடல்களைப் பரவலான வாசகர்களுக்குக் கொண்டுசேர்த்தவர். இருமுறை சாகித்ய அகாடமி விருது பெற்ற இவர், ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து அறிக்கையிட்டு கோவையில் நடந்த உலக செம்மொழி மாநாட்டைப் புறக்கணித்தார். சிறுவர் இலக்கியம், இயற்கை மீதான பற்று என, பல தளங்களில் கடைசிவரை செயல்பட்ட தங்கப்பா, எதற்காகவும் தன்னை சமரசம் செய்துகொள்ளவில்லை. ``தமிழ்ப்புலவர்கள் என்று சொல்லப்படுபவர்கள்கூட ஏதேனும் ஒரு நோக்கம் கருதி … Continue reading தமிழ் அறிஞர் ம.லெ.தங்கப்பா: உள்ளத்தின் உண்மை ஒளி

நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்த பெருந்தேவபாணி

நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்த பெருந்தேவபாணி *************************************************************************** சூல பாணியை சுடர்தரு வடிவனை நீல கண்டனை நெற்றியோர் கண்ணனை பால்வெண் ணீற்றனை பரம யோகியை காலனைக் காய்ந்த கறைமிடற் றண்ணலை நூலணி மார்பனை நுண்ணிய கேள்வியை (5) கோல மேனியை கொக்கரைப் பாடலை வேலுடைக் கையனை விண்தோய் முடியனை ஞாலத் தீயினை நாதனைக் காய்ந்தனை தேவ தேவனை திருமறு மார்பனை கால மாகிய கடிகமழ் தாரனை (10) வேத கீதனை வெண்தலை ஏந்தியை பாவ நாசனை பரமேச் சுவரனை … Continue reading நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்த பெருந்தேவபாணி

அப்பினிற் கூர்மை ஆதித்தன் வெம்மையால்

திருமந்திரம் 180. அப்பினிற் கூர்மை ஆதித்தன் வெம்மையால் உப்பெனப் பேர்பெற் றுருச்செய்த அவ்வுரு அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோற் செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே.   (ப. இ.) அப்பாகிய தண்ணீரில் அதன்கண் விரவி நுண்ணிதாகி அடங்கி நிற்கும் உப்பு கூர்மையெனப்படும். அக் கூர்மை ஞாயிற்றின் வெம்மையால் பிரிந்து உப்பெனப் பெயர் பெறும். அவ் வுப்பினால் ஓர் உருச்செய்து மீண்டும் அவ் வுருவினை அந் நீரினில் கரையவிட்டால் நீருடன் கலந்து வேறு தோன்றாது ஒன்றாய் அடங்கிநிற்கும். அதுபோல் … Continue reading அப்பினிற் கூர்மை ஆதித்தன் வெம்மையால்

பட்டினத்தடிகளின் சில பாடல்கள்

பட்டினத்தடிகளின் சில பாடல்கள் **************************************************** கட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும் காலத்தச்சன் வெட்டி முறிக்கும் மரம்போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால் கொட்டி முழக்கி அழுவார் மயானம் குறுகி அப்பால் எட்டி அடிவைப்பரோ இறைவா கச்சி ஏகம்பனே! பொல்லாதவன் நெறி நில்லாதவன் ஐம்புலன்கள் தமை வெல்லாதவன் கல்வி கல்லாதவன் மெய்யடியவர் பால் செல்லாதவன் உண்மை சொல்லாதவன் நின் திருவடிக்கு அன்பு இல்லாதவன் மண்ணில் ஏன் பிறந்தேன் கச்சி ஏகம்பனே! பிறக்கும் பொழுது கொடுவந்ததில்லை; பிறந்து மண்மேல் இறக்கும் பொழுது கொடுபோவதில்லை; … Continue reading பட்டினத்தடிகளின் சில பாடல்கள்

கம்பராமாயணச் சுவை

இது சாகித்திய அகாதெமி வெளியீடான, மூதறிஞர் மு வரதராசனார் எழுதிய “தமிழ் இலக்கிய வரலாறு” என்னும் நூலில் இருந்து நகல் செய்தது. வால்மீகி இயற்றிய ஆதி காவியத்தை ஒட்டிக் கம்பர் தம் காப்பியத்தை எழுதியபோதிலும், கம்பராமாயணம் மொழிபெயர்ப்பும் அல்ல; வெறுந்தழுவலும் அல்ல. ஓரு புதுக் காப்பியம் போலவே விளங்குமாறு கம்பர்தம் கற்பனைத் திறனால் படைத்துத் தந்துள்ளார். வால்மீகியால் உயர்ந்த காப்பியத் தலைவர்களாகப் படைத்துக் காட்டப்பட்ட இராமனும் சீதையும், கம்பராமாயணத்தைக் கற்பவர் கேட்பவர்களின் நெஞ்சில் தெய்வங்களாகக் காட்சியளிக்கின்றனர். கம்பருக்குப் … Continue reading கம்பராமாயணச் சுவை

திருவள்ளுவரின்_திருக்குறள்_தரும்_காதல்_நாடகம்

திருவள்ளுவரின்_திருக்குறள்_தரும்_காதல்_நாடகம் காதலன் தன் காதலியை அழகான இயற்கைச் சூழலில் காண்கிறான். கண்டு காதல் கொண்டு உள்ளம் மயங்குகிறான். அந்த மயக்கம் அவனுடைய சொற்களில் புலனாகிறது : “இவள் தெய்வமகளோ ? மயிலோ ? குழை அணிந்த பெண்ணோ ? என் நெஞ்சம் மயங்குகிறது.” சிலநாள் கழித்துக் காதல் வளர்ந்தபின் அவன் கூறுகிறான் : “உடம்போடு உயிர்க்கு என்ன உறவோ, அதே உறவுதான் என் காதலியோடு எனக்கு உள்ள நட்பு. உயிர்க்கு வாழ்வு போன்றவள் அவள். அவளுடைய பிரிவு … Continue reading திருவள்ளுவரின்_திருக்குறள்_தரும்_காதல்_நாடகம்

காளமேகப் புலவர் கவிச்சிறப்பு

காளமேகப் புலவர் கவிச்சிறப்பு செந்தமிழ்ச் செல்வர் சு.ஸ்ரீகந்தராசா-அவுஸ்திரேலியா கம்பர், வள்ளுவர், இளங்கோ, ஒளவையார், பாரதியார் என்றெல்லாம் காலத்தால் அழியாத காவியங்களைச்செய்த கவிப்பெருமக்களைப்பற்றி நாம் அறிவோம். அந்த வரிசையிலே வரலாற்றுக்கு எட்டாத காலத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டு வரை எண்ணிக்கையற்ற புலவர் பெருமக்கள் இனிமைத் தமிழுக்கு வளமை சேர்த்துள்ளனர். அவர்கள் ஆக்கியளித்துள்ள இலக்கியங்கள் உலகை வியக்கவைக்கும் அறிவுக்களஞ்சியங்களாகத் திகழ்கின்றன. அத்தகையோரின் ஆக்கங்களை அவ்வப்போது அறிஞர்களும், பேச்சாளர்களும், எழுத்தாளர்களும் எடுத்தாள்கின்றார்களே தவிர, அவர்களைப்பற்றியும், அவர்களின் ஆற்றல்களைப்பற்றியும் அறிந்தவர்களின் எண்ணிக்கை தமிழ் உலகத்திலே … Continue reading காளமேகப் புலவர் கவிச்சிறப்பு

தமிழ்ச் சங்கங்கள்

இலமுரியா கண்டம். ஒரு காலத்தில் சுமார் கி.மு.5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு நீண்ட நிலப்பரப்பு இருந்தது என்கிறார், அறிஞர் ஓல்டுகாம் அவர்கள். பேரறிஞர் எக்கேல் மற்றும் கிளேற்றர் இருவரும் ஒருமனதாக “சந்தாத் தீவுகளிலிருந்து” தொடங்கி ஆசியாவின் தென்கரை வழியாக ஆப்பிரிக்காவின் கீழைக்கரை வரை ஒரு பெரிய நிலப்பரப்பு பரவியிருந்த தாகவும், அங்கே குரங்கையொத்த உயிரினம் “இலமுரியா” (Lemuria) வாழ்ந்தன எனக் கூறுகின்றனர். பேரறிஞர் கட்டு எலியட் என்பவர் தாம் … Continue reading தமிழ்ச் சங்கங்கள்

திருவள்ளுவர்

திருவள்ளுவர். திருவள்ளுவர் காலம். அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கணுபிடித்து இருக்கிறார்கள். அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாக கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தை பிரித்து பயன்படுத்துகிறார்கள். திருக்குறள் காலம். திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது. மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் … Continue reading திருவள்ளுவர்