மற்றவருக்காக

மற்றவருக்காக அட்ஜஸ்ட் செய்து செய்து, காம்ப்ரமைஸ் செய்து செய்து எல்லாவற்றிலும் ஒத்துப்போய் போய், எல்லா மனவலிகளும் பொறுத்து பொறுத்து, நாம் சுயத்தை இழக்கிறோம். மனதார வலியவந்து சுயத்தை மற்றவருக்காக இழப்பவர் பிறர்வலியைத் தான் ஏற்று, மற்றவர் வாழ்க்கைக்கு தென்றலாக விளங்குகிறார். அத்தகைய நல்லோர், காலம் இடம்கொடுத்தால் சடைமுடி தரித்து காவியணிந்தபின் சுயத்தை தேடிப் போகின்றனர். (நவீன #சாமி(?)#யார்(!)களைப்பற்றி நினைக்க வேண்டாம்.) #கபிலவிசாகன்

முனைவர் மா கி இரமணன்

முனைவர் மா கி இரமணன் அவர்கள். இவர் ஒரு அசாதாரணமான பிறவி. இவரைப் பற்றிய தகவல்கள் இணையத்தில் ஏராளம் கொட்டிக் கிடக்கின்றன. ஆன்மீகவாதிகள், தமிழ்ப் பற்றாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், மாணவ சமுதாயம், என ஆண் பெண் யாவரும் அறிந்த இவரைப் பற்றி நான் எழுதத் தேவையில்லை. இவரது சொற்பொழிவுகள் சில யூட்யூப் தளத்தில் கிடைக்கின்றன. அன்றாடம் தொலைக் காட்சிகளிலும் இவர் தினமும் பங்கேற்று தன் தமிழ்ப் பணியை, இறைப்பணியை, சமூகப் பணியை ஆற்றி வருகிறார். தினமலர் … Continue reading முனைவர் மா கி இரமணன்

நெஞ்சில் ஓடும் நதி

நெஞ்சில் ஓடும் நதி ஒருமுறை திருச்சியில் ஒரு திருமணத்திற்குச் செல்ல, முதல் நாள் காலையில் பஸ் பிடிக்க தாம்பரம் சென்றேன். மாலைக்குள் என் சகோதரர் வீட்டுக்குச் சென்று பின்னர் காலையில் நண்பர் வீட்டுத் திருமணத்திற்குச் செல்லலாம் என்று முடிவு செய்திருந்தேன். ஒரு மணி நேரம் ஆயிற்று. ஒரு வண்டியிலும் இடம் கிடைக்கவில்லை. சீக்கிரம் போகலாம் என்று நினைத்து தாம்பரத்துக்கு வந்திருக்காமல் நேரடியாகவே கோயம்பேடு நிலையம் சென்று வண்டியைப் பிடித்திருக்கலாம் என்று தோன்றியது. உண்மையில் அன்று திருச்சிக்கு அன்றே … Continue reading நெஞ்சில் ஓடும் நதி

பாரதி கண்ட புதுமைப் பெண்

பாரதி கண்ட புதுமைப் பெண் போற்றி போற்றி!ஓர் ஆயிரம் போற்றி!நின் பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றி காண்! சேற்றி லேபுதி தாக முளைத்த தோர் செய்ய தாமரைத் தேமலர் போலொளி தோற்றி நின்றனை பாரத நாட்டிலே; துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை சாற்றி வந்தனை,மாதரசே!எங்கள் சாதி செய்த தவப்பயன், வாழி நீ! மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின் வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல் நாதந் தானது நாரதர் வீணையோ? நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ? வேதம் பொன்னுருக் … Continue reading பாரதி கண்ட புதுமைப் பெண்

தமிழுக்கும் அழகென்று பேர்

எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெருந் தமிழ் அணங்கே! உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துவோம். - பேராசிரியர் சுந்தரம்பிள்ளை   தமிழைக் கையாளும் விதம் – ஓர் உதாரணம் ------------------------------------------------ பேராசிரியர் திரு. திருவோத்தூர் வையாபுரி முருகேசன் அவர்கள் எழுதியுள்ள “மெய்கண்டார் அருளிய சிவஞானபோதப் பேருரை” (2004ஆம் ஆண்டு முதல் வெளியீடு) என்ற நூலில் இருந்து சிறிய துளியை எடுத்து கீழே தந்திருக்கிறேன். இந்த நூல் தஞ்சையில் மிகப் பிரபலமான உயர் நிலை மருத்துவரும் … Continue reading தமிழுக்கும் அழகென்று பேர்

வாகீச கலாநிதி திரு கி.வா.ஜகன்னாதன்  ( கி.வா.ஜ )

வாகீச கலாநிதி திரு கி.வா.ஜகன்னாதன்.  ( கி.வா.ஜ ) நன்றி: அமரர் கி.வா.ஜ. அவர்களின் தவப்புதல்வி திருமதி உமா பாலசுப்ரமணியன் அவர்களது இணையப்பக்கம் : https://vakeesakalanidhi.blogspot.com/ விசுவாச வருடம் பங்குனி மாதம் சனிக்கிழமை , 29ஆம் தேதி அதாவது ,  11-4-1906 இரவு கும்ப லக்ன , அனுஷ நட்சத்திரத்தில் திரு வாசுதேவ ஐயருக்கும், பார்வதி அம்மாள் அவர்களுக்கும் மகனாகப் பிறந்த வாகீச கலாநிதி திரு கி.வா.ஜ அவர்கள் தன் பேச்சுத்திறமையை வெளிக்கொண்டு  வந்த  நாளிலிருந்து  எந்த … Continue reading வாகீச கலாநிதி திரு கி.வா.ஜகன்னாதன்  ( கி.வா.ஜ )

கண்ணே ராஜா நான் வந்துட்டேண்டா செல்லம்

பழைய செய்திதான் ஆனால் என்றைக்கும் நல்ல செய்தி சௌதி அரேபியாவில் ஒரு அரபிக்கு திருமணம் முடிந்து 20 வருடங்கள் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பல கம்பனிகளுக்கு சொந்தக்காரர். அனைத்து சொத்துக்கும் வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையில் இருந்த அந்த குடும்பத்திற்கு பொக்கிசமாக வந்தது அந்த குழந்தை. இந்த வீட்டில் ஒரு ஸ்ரீலங்கா வை சேர்ந்த ஒரு பெண்மணி வேலை செய்து வருகிறார். இந்த அம்மணிக்கு 3 குழந்தைகள். சிறு வியாபாரம் செய்து குழந்தைகளையும் … Continue reading கண்ணே ராஜா நான் வந்துட்டேண்டா செல்லம்

மாணவனைக் காத்த ஆசிரியர்கள்

உயிர் பிரியும் கடைசி தருணத்தில் ஆசிரியர்களின் பேச்சால் உயிர் மீண்ட மாணவன்..! ஓர் நெகிழ்ச்சி சம்பவம்...! புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார் மாணவன் அருண்பாண்டியன். கூலி தொழிலாளியின் மகனான அருண்பாண்டியன் குண்றாண்டார்கோயில் ஒன்றியம், மின்னாத்தூர் கிராமத்திலிருந்து தினமும் பள்ளி வந்து செல்கிறான். இந்நிலையில், நேற்று மாலை வழக்கம் போல் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்ல பேருந்து நிலையம் சென்ற மாணவன் அருண்பாண்டியன் சக நண்பர்களுடன் சேர்ந்து பானிபூரி சாப்பிட்டுள்ளான். அப்போது … Continue reading மாணவனைக் காத்த ஆசிரியர்கள்

உ.பி.யில் காவலரின் தலைமை அதிகாரியானார் மகன்: திரைப்படக் காட்சியை போல் சல்யூட் அடித்து நெகிழ்ச்சி

உ.பி.யில் காவலரின் தலைமை அதிகாரியானார் மகன்: திரைப்படக் காட்சியை போல் சல்யூட் அடித்து நெகிழ்ச்சி by ஆர்.ஷபிமுன்னா Courtesy: Tamil Hindu - சிந்தனைக் களம் / 2018-10-31 உத்தரபிரதேச மாநிலத்தில் காவல ராகப் பணியாற்றும் தந்தையின் தலைமை அதிகாரியாக ஐபிஎஸ் அந்தஸ்தில் உள்ள மகன் பணி யாற்றுகிறார். திரைப்படக்காட்சி போல் தன் அதிகாரி மகனுக்கு அன்றாடம் சல்யூட் அடித்து நெகிழ் கிறார் தந்தை. உ.பி.யின் தலைநகரான லக்னோவின் விபூதிகண்ட் காவல் நிலையத்தில் காவலராகப் பணி யாற்றி … Continue reading உ.பி.யில் காவலரின் தலைமை அதிகாரியானார் மகன்: திரைப்படக் காட்சியை போல் சல்யூட் அடித்து நெகிழ்ச்சி