அன்று சொன்னது

அன்று சொன்னது அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஆங்கில அரசின் கைதியாக இருந்த, சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் பின்வருமாறு எழுதியுள்ளார். “நமக்குச் சுதந்திரம் கிடைத்த உடனேயே தேர்தல்களும், அதனால் ஏற்படும் தர்மத்திற்கு எதிரான செயல்களும், பதவி மற்றும் செல்வத்தின் பலத்தினால் செய்யத்தக்க பலாத்காரம் மற்றும் தீய செயல்களும், ஆள்பவர்களின் திறமை அற்ற தன்மை என்னும் இவ்வனைத்தும் சேர்ந்து மனித வாழ்க்கையை நரக வாழக்கையைப் போலச் செய்துவிடும். “மக்கள் முன்பு தமக்குக் கிடைத்துக் கொண்டிருந்த உழைப்பு, முயற்சியால் கிடைத்த செல்வம், … Continue reading அன்று சொன்னது

படிக்கிறோமா ?

நாம் எல்லோரும் இருப்பது நவீன யுகம். மனத்தின் வேகத்தில் படிப்பதற்கும் இயலாத அளவுக்கு தகவல்கள் கொட்டிக் கொண்டே யிருக்கும் யுகம். நாம் ஒரு செய்தியில் நுழைந்து ஆழ்ந்து நேரம் மறந்து சுவைக்க ஆரம்பித்துவிட்டால், நாம் முடிக்கும்போது அந்த சிந்தனைக்கு புறம்பில் பார்த்தால் எத்தனையோ ஆயிரக்கணக்கில் புதுப்புது செய்திகள் நம் மீது வந்து வந்து விழுந்து விழுந்து, இலையுதிர் காலத்தில் பெருந்தரையை முற்றிலும் மறைத்திடும் இலைக் கூட்டமாய் மாறிவிடும். அந்த வேகத்தின் தாக்கத்தில், நம் சிந்தனை வேகமும் மேலும் … Continue reading படிக்கிறோமா ?

மனிதரில் பல முகங்கள்

மனிதரில் பல முகங்கள் முகநூல் முகங்களையே காட்டும். பலரும் தங்கள் உண்மை முகங்களை மறைத்து அழகுத் தோற்றம் மட்டும் காட்டுகிறார்கள். உண்மை முகங்கள் சிலசமயம் இப்படி பிறர் எழுதினால்தான் தெரியவரும். அதனால் இப்பதிவு இங்கே. நான் இப்போதுதான் (7.55 AM) ஓட்டுச்சாவடி சென்று என் வாக்கை அளித்து விட்டு வந்தேன். என் வாக்குச் சாவடி ஒரு பள்ளியில் அமைக்கப் பட்டிருந்தது. நுழைந்தவுடன் நிறைய புகைப்படக் கலைஞர்கள் தங்கள் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். காவல் துறையினர் வரும் ஒவ்வொருவரிடம் … Continue reading மனிதரில் பல முகங்கள்

கொஞ்சம் பேசலாம்

கொஞ்சம் பேசலாம் அறிவும் மனதும் நாம் உயிர்வாழ இன்றியமையாதவை. பள்ளிகளில் பாடப்புத்தகத்தை நெட்டுரு செய்து தேர்வில் தாளில் கொட்டி பள்ளிமுடிவில் பெற்ற ஒரு பட்டயத்தைக் காட்டிக் கிடைப்பதற்குப் பெயர் அறிவல்ல. நன்றாகப் படிக்கத் தெரிந்துகொண்டோம் என்று மட்டும்தான் பொருள். கல்லூரி வரையிலும் ஆராய்ச்சித் துறையிலும் கூட நன்றாகப் படிக்கத் தெரிந்து கொண்டோம் என்றுதான் பொருள். எல்லாத் திக்குகளிலும் ஒவ்வொரு நொடியும் நம்மை வந்து நிறைக்கின்ற செய்திகள், தகவல்களின் மதிப்பு அது அதன் பெயரிலேயே உள்ளது. வெறும் தகவல்கள் … Continue reading கொஞ்சம் பேசலாம்

யோகசிம்மபுத்ரன் சரிதை – 052 – கொஞ்ச நேரம் வேறு பேச்சு – 3 அன்பு தேவை வேற்றுமை மறைய!

யோகசிம்மபுத்ரன் சரிதை – 052 – கொஞ்ச நேரம் வேறு பேச்சு - 3 அன்பு தேவை வேற்றுமை மறைய! நான் முதலில் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். மனிதரை நடத்துவதிலும், மரியாதை செய்வதிலும், அன்புடன் அரவணைப்பதிலும், பொருளாதார நிலையிலும், மனித நேயத்திலும், வேற்றுமைகளை ஒழிக்கும் முயற்சியில்  இச்சமுதாயம் (எனையும் சேர்த்து) கொண்டுள்ள பார்வையிலும், எடுக்கும் முயற்சிகளிலும் நான் கொண்டுள்ள பற்றினால் இந்த மன்னிப்புக்கோரல் தேவையாகிறது. வேற்றுமையைக் கொண்டாட அன்பு தேவை. நான் கொண்டாடும் வேற்றுமைகள் வேறுவகையானது. கருப்புக்கும் … Continue reading யோகசிம்மபுத்ரன் சரிதை – 052 – கொஞ்ச நேரம் வேறு பேச்சு – 3 அன்பு தேவை வேற்றுமை மறைய!

கேடு நோக்கிப் பீடு நடை

கேடு வழி நோக்கி பீடு நடை போடுகிறோமே !!! இருமன உறவாம் திருமண உறவு என்பதிலிருந்து 'திரு'வை நம் சமுதாயம் உதிர்த்து வெகு காலம் ஆகிவிட்டது. இப்போது மண உறவு என்பதில் 'மண' என்பதை உதிர்க்கும் காலம் தொடக்கம். வெறும் உறவு மட்டுமே மிச்சம். உறவு என்றால் மன உறவு அல்ல. வெறும் உறவு மட்டுமே. அதாவது மனம் சேராத உடல் சேர்வது. யூட்யூபில் வந்த ஒரு காட்சி நேற்றுக் கண்டேன். காணும் எல்லாவற்றிலும் நகைச்சுவையை மட்டும் தேடி … Continue reading கேடு நோக்கிப் பீடு நடை

இப்படி ஒரு தெய்வம்

முகநூலில் கண்ட முத்தான பதிவு... அந்தப் பெண்ணைச் சமையல்வேலைக்கு வைத்துக் கொள்ளும்படியாக டாக்டரின் மனைவி வித்யா தான் சிபாரிசு செய்திருந்தாள். வித்யாவிற்கு அவளை எப்படித் தெரியும் எனத் தெரியவில்லை. வாசல்கதவை ஒட்டி நின்றிருந்த அந்தப் பெண்ணிற்கு ஐம்பது வயதிருக்கக் கூடும். ஆனால் தோற்றம் நடுத்தர வயது பெண்ணைப் போலவே இருந்தது. மெலிந்திருந்த போதும் களையான முகம். நீண்ட கூந்தல். கவலை படிந்த கண்கள். அந்தப் பெண்ணின் கையில் துணிப்பை ஒன்றிருந்தது. `உன் பேரு என்னம்மா` எனக்கேட்டேன் `கோகிலம்` … Continue reading இப்படி ஒரு தெய்வம்

புது உலகைப் படைத்து விடு

புது உலகைப் படைத்து விடு (இலக்கணம் அறியாப் புலம்பல் இது) கபிலவிசாகன் **** தொட்டு விட்டான் என்று துடித்திருந்தேன் தட்டி விட்டான் என்று தவித்திருந்தேன் கொட்டி விட்ட கண் நீர் பட்டு என் கைகள் சுடுபொறி எடுத்துச் சுட்டு விட்டன அக்காமுகனை. குறைந்தான் ஒருவன் பெண்ணினத்தை வஞ்சம் செய்யும் ஆண்வேடம் போட்ட என்ன வொண்ணா பன்றியரின் கூட்டத்தில். பார்த்தவுடன் எரித்துவிடு தொட்டவுடன் கொன்றுவிடு என் சகோதரியே அஞ்சவேண்டாம் இதுதான் சரியான நீதி. தாயென மதிக்கவில்லை தந்தையென நினைக்கவில்லை … Continue reading புது உலகைப் படைத்து விடு

பிறவி முதல் மரணம் வரை விடாத காமம்

முகநூலில் திரு கணேஷ்குமார் பதிவு செய்த கவிதை பாவப்பட்ட பெண்ணே!! கழிப்பறையில் கவனம்...! குளியறையில் கவனம்...! படுக்கையறையில் கவனம்...! பள்ளியறையில் கவனம்...! அலுவலகறையில் கவனம்...! கோவில் கருவறையில் கவனம்...! பேருந்து பயணத்தில் கவனம்...! இரயில் பயணத்தில் கவனம்...! பாலூட்டும் அறையில் கவனம்...! மருத்துவறையிலும் கவனம்...! ஆடை மாற்றும் அறையிலும் கவனம்...! நீ பெண் என்று தெரிந்து கொண்டால் தாயின் கருவறையிலும் கவனமாக இரு, பெண்ணே நீ கடந்து போகும் பாதையை கவனிப்பாயா...? சில காம வெறிநாய்களின் கண்களை … Continue reading பிறவி முதல் மரணம் வரை விடாத காமம்